எனக்கு அசோகமித்ரன் ஆதர்ச புருஷன். அவருக்கு? அவருக்கு இலக்கியத்தில் ஆர்வம் வந்தது எப்படி, யார் அவரை வழி நடத்தினார்கள், யாரைப் பார்த்து அவர் வியப்புறுகிறார் (அவருடைய பள்ளி/கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் அவரது அப்பா அவரை ஆரம்பத்தில் வழி நடத்தி இருக்கிறார்கள்; க.நா.சு.வை மேதை என்கிறார்) என்றெல்லாம் இந்தக் கட்டுரையில் பேசுகிறார். கட்டாயம் படியுங்கள்!
தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்ரன் பக்கம
நீங்கள் தந்த சுட்டியில் (அசோகமித்ரனின் Times of India பேட்டியில்) ‘வட்டார வழக்கு வாசகர்களை விரட்டுமளவுக்கு இருக்கக்கூடாது’ என்று படித்ததிலிருந்து, அவர் எனக்கும் ஆதர்ச எழுத்தாளர் ஆகி விட்டார். (‘ஆழி சூழ் உலகு’ படிக்க நான் பட்ட பாடு! ஜோ டி குருஸின் தூத்துக்குடியில், நாள்தோறும், பரவர் மொழி கேட்டு வளர்ந்த எனக்கே படிக்கக் கடினமான நடை)
LikeLike
என்னங்க Geep இப்படி சொல்லிட்டீங்க? ஆழிசூழ் உலகு எனக்குப் பிடித்தமான நாவல் – https://siliconshelf.wordpress.com/2011/09/13/ஜோ-டி-க்ரூஸின்-ஆழிசூழ்-உல/
LikeLike
ஆர்வி,
அப்படீன்னா இந்த வருடம் Faulkner (not short stories), Updike, Joyce, Wolf படிக்கத் தயாராயிட்டதாச் சொல்லுங்க! 😀
LikeLike
Geep, ஃபாக்னரின் சிறுகதைகள் எனக்கு பிடித்தமானவை. இதைப் பாருங்கள் – https://siliconshelf.wordpress.com/category/william-faulkner/
Wolf யாரென்று தெரியவில்லையே? Tobias Wolff-ஆ?
LikeLike
Sorry, Woolf, Virginia!
LikeLike