Skip to content

பிடித்த சிறுகதை – கு. அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’

by மேல் மார்ச் 18, 2017

அழகிரிசாமியின் எழுத்து மிக இயல்பானது. அதில் புதுமைப்பித்தனின் கொஞ்சம் ஆர்ப்பாட்டமாகவே வெளிப்படும் மெல்லிய கசப்பையோ, அசோகமித்திரனின் எப்போதும் கதைக்கு வெளியே இருந்துதான் எழுத்தாளன் கதை சொல்ல வேண்டும் என்ற விழைவையோ, லா.ச.ரா.வின் தன்னுள் ஆழ்ந்திருக்கும் நிலையையோ (self-absorption), ஜெயகாந்தனின் உரத்த தொனியையோ, ஜெயமோகனின் ஆக்ரோஷத்தையோ, ஏன் அவருக்கு மிக நெருங்கிய நண்பரும் அவருடைய ஊர்க்காரருமே ஆன கி.ரா.வின் புத்திசாலித்தனத்தையோ (cleverness) காண முடியாது. எனக்குத் தெரிந்து அந்த மாதிரி இயல்பாக எழுதிய இன்னொருவர் தி.ஜா. மட்டுமே.

ஆனால் அப்படி இயல்பாக சென்று கொண்டிருக்கும் சிறுகதையில் திடீரென்று மிக நுட்பமான மனித உறவு ஒன்றைக் காட்டிவிடுவார். அப்படி பல கதைகள் இருந்தாலும் எனக்கு மறக்க முடியாத கதைகள் என்பது தரிசனம், இருவர் கண்ட ஒரே கனவு, ராஜா வந்திருக்கிறார் மற்றும் அன்பளிப்புதான். எல்லாவற்றிலுமே எனக்கு அன்பளிப்புதான் மிகவும் உசத்தியாக இருக்கிறது. கல்கி சொன்னது போல ‘சாரங்கனை அழைத்து வந்து ஏதேனும் ஒரு புத்தகத்தில் அன்பளிப்பு என்று எழுதிக் கொடுக்க நம் உள்ளம் துடிதுடிக்கிறது’.

அழகிரிசாமியின் இந்தச் சிறுகதை ஜெயமோகனின் சிறுகதைத் தேர்வுகளிலும் எஸ்ராவின் சிறுகதைத் தேர்வுகளிலும் இடம் பெறுகிறது.

அன்பளிப்பு சிறுகதையை இது வரை படிக்கவில்லை என்றால் கட்டாயம் படித்துவிடுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: அழகிரிசாமி பக்கம்

Advertisements
4 பின்னூட்டங்கள்
  1. அன்பளிப்பு என்றுதான் படித்தேன். எனக்கென்னவோ, ராஜா வந்திருக்கின்றார் கதைதான் பெஸ்ட் என்று தோன்றுகின்றது. ராஜா வந்திருக்கின்றார் அளவிற்கு இது குழந்தைகளை காட்டவில்லை. இறுதிப் பகுதி நன்றாக இருந்தாலும், நடுவில் கொஞ்சம் அலைகின்றது.

    Like

  2. எஸ் கே என். permalink

    ‘குமாரபுரம் ஸ்டேஷன்’ என்னுடைய டாப்

    Like

  3. எஸ் கே என், எனக்கு குமாரபுரம் ஸ்டேஷன் சுமார்தான். 🙂 ரெங்கா, நானும் ராஜா வந்திருக்கிறாருக்கு பெரிய ரசிகன் தான். அன்பளிப்புக்கு சமமான ஒரு ஆங்கில சிறுகதை – Katherine Mansfield’s A Cup of Tea.

    Like

Trackbacks & Pingbacks

  1. புல்லட்டின் போர்ட் (அண்மைய பதிவுகளுக்கு கீழே scroll செய்யவும்) | சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: