அசோகமித்ரன் மறைவு

அசோகமித்ரனை நான் சந்தித்ததில்லை. சந்திக்க முயன்றது கூட இல்லை. முன்னே பின்னே தெரியாதவர்கள் வந்து தொந்தரவு கொடுப்பதை மரியாதைக்காக வெளியே சொல்லாமல் சகித்துக் கொள்வார் என்று நினைப்பு. ஆனால் அவரைத்தான் என் மனதுக்கு நெருக்கமான எழுத்தாளராக எப்போதும் உணர்ந்திருக்கிறேன். இன்று பெரும் இழப்பு ஏற்பட்ட மாதிரி உணர்கிறேன்.

அவரை எனக்குப் பிரியமானவராக உணர்ந்த கணம் நன்றாக நினைவிருக்கிறது. என் சிறு வயதில் – அசோகமித்ரனைப் பற்றி எந்தவிதப் பிரக்ஞையும் இல்லாத வயதில் – குமுதத்தில்? (இல்லை வேறு ஏதாவது வாரப் பத்திரிகையா?) ஒற்றன் நாவலின் ஒரு பகுதியைப் படித்தேன். மனிதர் டென்வரில் இருந்து சான் ஃப்ரான்சிஸ்கோ போக பஸ் பிடிக்க வேண்டும். நண்பர் பஸ் ஸ்டாண்டில் இறக்கிவிட்டுப் போய்விட்டார். ஏழு மணிக்கோ என்னவோ பஸ். பஸ்ஸைக் காணோம். சான் ஃப்ரான்சிஸ்கோவுக்கு நேரத்துக்குப் போகவில்லை என்றால் எல்லா திட்டங்களும் பாழாகிவிடும். நண்பர்களுக்கு நிறைய சிரமம் ஏற்படும். இறக்கிவிட்ட நண்பரோ போய்விட்டார். புது இடம், என்ன செய்வது? ஏழு மணிக்கு லாரி மாதிரி ஒரு வண்டி வருகிறது. ட்ரைவர் பஸ்ஸுக்காக காத்திருக்கிறாயா, இதுதான் பஸ் என்கிறார். அவ்வளவுதான் கதை. இதெல்லாம் ஒரு கதையா என்ற கடுப்பு ஏற்பட்டது. என் இருபத்தைந்து வயதில் பீஹார் மாகாணத்தில் தன்பாதிலிருந்து சிந்திரிக்கு செல்ல பஸ்ஸுக்கு காத்திருந்த போது பெரிய ட்ராக்டர் மாதிரி ஒரு வண்டி வந்து இதுதான் பஸ் என்று எனக்குப் புரிந்த அதே கணத்தில்தான் இந்தக் கதை புரிந்தது. என்றோ எப்போதோ படித்த கதை அப்போது சரியாக நினைவு வந்து புரியவும் புரிந்தது எனக்கே அதிசயமாகத்தான் இருக்கிறது. இந்தக் கணத்தைத்தான் கதையாக எழுதி இருக்கிறார் என்று தெரிந்தபோது இத்தனை நுணுக்கமாக, நுட்பமாக ஒருவர் வாழ்க்கையைப் பார்த்திருக்கிறார் என்று ஏற்பட்ட பிரமிப்புதான் எனக்கும் அவருக்கும் உள்ள ‘உறவின்’ தொடக்கப் புள்ளி.

அவருடைய பிரபலம் ஆகாத பல கதைகளுக்கு நான் பரம ரசிகன். திருப்பம் கதையில் கிராமத்தானுக்கு நகரத்தில் கார் ஓட்டும் கலை கைவரும் அந்த ஒரு கணத்தைப் பற்றி எழுதி இருப்பார். என் வாழ்விலும் அப்படி ஒரு கணம் உண்டு. அப்படி சில பல திறமைகள் கைகள் வந்த ஆறேழு கணங்கள் எனக்கு உண்டு. இருவர் என்ற குறுநாவல் எனக்கு மிகவும் பிடித்தமானது. வைத்தீஸ்வரன் கோவில் தாசிக்கும் அவளை வைத்திருந்தவன் மகனுக்கும் உள்ள பந்தம் பற்றிய கதை.

புகழ் பெற்ற பிரயாணம் கதையின் கடைசி வரியின் தாக்கம் என்றைக்கும் மறக்கப் போவதில்லை. ‘வாத்யாரே, நீ மேதை!’ என்று தோன்றிய கணம்.

எனக்கு இப்போது எழுதவே பிடிக்கவில்லை. என் வருத்தத்தை யாருக்காக ஆவணப்படுத்திக் கொண்டிருக்கிறேன்? வாத்யாரே, நீ மேதை என்பதோடு முடித்துக் கொள்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்ரன் பக்கம், அஞ்சலிகள்

5 thoughts on “அசோகமித்ரன் மறைவு

 1. ஆமாம்… நம் அஞ்சலியை யாருக்காக தெரியப்படுத்த வேண்டும்? அப்படியே தெரியப்படுத்தினாலும் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. என்றைக்கோ வாங்கி வைத்த ‘தண்ணீர்’ நாவலை எடுத்துப் படித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கென்னமோ இதுவே அவருக்குச் செய்யும் சரியான அஞ்சலியாகத் தோன்றுகிறது.

  Like

   1. நன்றி R.V! நான் கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக சிலிகான் ஷெல்ப்பின் silent watcher :). உங்களின் பரந்த வாசிப்புத் தன்மையைப் பார்த்து பிரமித்திருக்கிறேன்…பிரமிக்கிறேன். இது போன்ற உந்துதனினால் தான் இப்பொழுது இந்த blog ஆரம்பித்து எழுத ஆரம்பித்திருக்கிறேன். baby steps 🙂

    ‘தண்ணீர்’ பற்றி இங்கே எழுதியுள்ளேன் – https://pkreadings.com/2017/03/27/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.