Skip to content

இந்தியாவுக்கு அணு ஆயுதங்கள் தேவையா? – அமிதவ் கோஷின் “Countdown”

by மேல் மே 1, 2017

(மீள்பதிப்பு)

இந்தியா பாகிஸ்தானின் அணு ஆயுத ப்ரோக்ராம்களைப் பற்றி. 1998 மே மாதத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை வெடித்து பரிசோதனை செய்த காலகட்டத்தில் எழுதப்பட்டது.

என்ன சொல்கிறார்?

  1. 74 பொக்ரான் சோதனைகளுக்குப் பிறகு அக்கம்பக்க கிராமங்களில் கான்சர் உட்பட்ட பல நோய்கள். கோஷ் கேடோலாய் (Khetoloi) என்ற கிராமத்துக்குப் போயிருக்கிறார், அங்கே எல்லாரும் மகா ஆத்திரத்தில் இருக்கிறார்கள். அங்கே ஒரு ஆஸ்பத்திரி கூட இல்லை. 98 சோதனைகளும் பொக்ரானில்தான்.
  2. இந்தியா அணு ஆயுதப் பரிசோதனைகளை நடத்தியது சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளால் நமக்கு அபாயம் என்ற எண்ணத்தால் இல்லை. வல்லரசுக் கனவுதான் காரணம். இதை கே. சுப்ரமண்யம் – ராணுவ நிபுணர் – உறுதி செய்திருக்கிறார். அந்நியர்களிடம் அடிமைப்பட்டிருந்த இந்தியா மீண்டும் தன் பலத்தை உலகுக்குக் காட்ட வேண்டும் என்ற ஆசை ஒரு முக்கிய காரணம். (அன்றைய பா.ஜ.க. அரசுக்கு ஆங்கிலேயர் மட்டும் அன்னியர் இல்லை)
  3. அன்றைய ராணுவ மந்திரி ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ். 74 பொக்ரான் சோதனைகளை எதிர்த்த வெகு சிலரில் ஃபெர்னாண்டசும் ஒருவர். அவருக்கு இன்னும் தயக்கங்கள் இருந்தன. ஃபெர்னாண்டசின் “பேட்டி” மிகவும் பிரமாதம், அவரது ஆளுமையைக் காட்டுகிறது.
  4. சியாசென் பனி ஆறு பக்கம் ஃபெர்னாண்டஸ் கோஷையும் கூட்டி கொண்டு போயிருக்கிறார். மிகுந்த செலவில் சியாசெனில் இந்திய ராணுவம் தனது இருப்பைத் தொடர்கிறது. ஏன்? National prestige.
  5. கோஷ் பாகிஸ்தானுக்குப் போய் அங்கும் பலரை சந்தித்திருக்கிறார். பாகிஸ்தான் இந்தியாவின் அணு ஆயுதங்களை எப்படிப் பார்க்கிறது? பெருத்த அபாயமாகத்தான்.
  6. மொத்தத்தில் அணு ஆயுதங்களால் இந்தியர்களுக்கும் பாகிஸ்தானியர்களுக்கும் பைசா பிரயோஜனமில்லை. ஆனால் national prestige இடிக்கிறது.

கோஷின் கருத்துகளோடு நான் அனேகமாக இசைகிறேன். அணு ஆயுதங்களின் பயனைப் பற்றி இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு முன்பே எனக்கு உறுதியான கருத்துகள் உண்டு. அணு ஆயுதங்கள் இந்தியாவுக்கு தேவை என்று நினைப்பவர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய கருத்துக்கள். ஆயுதம் கீயுதம் பற்றி எல்லாம் அக்கறை இல்லாதவர்களும் படிக்க சுவாரசியமான புத்தகம். குறிப்பாக ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அஸ்மா ஜஹாங்கீர் பற்றிய பக்கங்கள். pdf சுட்டியை இணைத்திருக்கிறேன். சின்னப் புத்தகம். நூறு பக்கம் இருந்தால் அதிகம். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

கோஷ் எழுதிய Great Derangement (2016) என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். சுனாமி, பூகம்பம், வெள்ளம் ஆகியவை அவ்வப்போது ஏற்படுத்தும் பெரும் அழிவுகளுக்கு மும்பை, நியூ யார்க், எந்தப் பெருநகரமும் தயாராக இல்லை, உலகம் வெப்பமயமாவது இந்தப் பேரழிவுகளின் சாத்தியத்தை அதிகப்படுத்துகிறது என்கிறார். புதிய விஷயம் எதுவுமில்லை, சுவாரசியமாகவும் இல்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய அபுனைவுகள்

தொடர்புடைய சுட்டி: Countdown மின்னூல்

Advertisements
6 பின்னூட்டங்கள்
  1. Mahesh permalink

    First,Thanks for the great contribution to the Tamil Literature lovers.In the hell lot of blogs there are hardly fews sites like yours for Literature and Books.Today is Aadhavan’s 25th Death Anniversary;It would be great if you post an article as a tribute to the writer.It would also will help for anyone to enter into his works as only very few know about Aadhavan.The best way to commemorate a dead author is to read his works.

    Like

    • Mahesh,

      FYI

      ஆதவனின் புனைவுலகம்…

      http://solvanam.com/?p=21223

      Like

    • மகேஷ், ஆதவன் பற்றி எழுதவேண்டும்தான். ஆனால் எப்போது முடியும் என்று எனக்கே தெரியாது. நீங்கள்தான் எழுதுங்களேன்! எழுதிவிட்டு rv டாட் subbu அட் ஜிமெயில் என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

      Like

  2. அருணா permalink

    ஆர். வி – சுவாரசியமான புத்தகம் குறிப்பாக நீங்கள் சொல்வது போல் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அஸ்மா ஜஹாங்கீர் பேட்டிகள். 1998ல் இதை விட ஆபத்தான நிலையை அடைய முடியாது என பாகிஸ்தானிய அரசியல் / செயலாளர்கள் சொல்கிறார்கள். அதற்குப் பின் பின் லாடன், புட்டோ கொலை என பல அங்கே நடந்து விட்டது.

    அமிதாவ் கோஷ் மிகச் சிறந்த பேட்டியாளர் என சொல்லத் தோன்றுகிறது. ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் அளிக்கும் பதில்களின் நேர்மையை எல்லா பேட்டியாலும் வெளிக்கொணர முடியாது என நினைக்கிறேன். நாம் அன்றாட செய்திகளில் இருந்து அறியும் தகவல்களுக்கும் இப்பேட்டி முன்னிறுத்தும் சிக்கலான அரசியல் நடைமுறை சார்ந்த ஒத்திசைவு அளிக்கும் சித்திரத்திற்க்குமான தூரம் அதிகம் என நினைக்கிறேன். அருமையான புத்தகம் கண்டெடுத்து pdf சுட்டிகொடுத்ததற்க்கு நன்றி.

    Like

    • அருணா, // அமிதாவ் கோஷ் மிகச் சிறந்த பேட்டியாளர் என சொல்லத் தோன்றுகிறது. // ஆமோதிக்கிறேன்.

      Like

Trackbacks & Pingbacks

  1. புல்லட்டின் போர்ட் (அண்மைய பதிவுகளுக்கு கீழே scroll செய்யவும்) | சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: