அந்தக் காலத்தில் பிராமணப் பெண்களின் திருமண வயது

நம்மில் அனேகருக்கு மாயூரம் வேதநாயகம் பிள்ளைதான் தமிழின் முதல் நாவல் என்று கருதப்படும் பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதியவர் என்று தெரிந்திருக்கும். வே. பிள்ளை சுகுணசுந்தரி சரித்திரம் என்ற இன்னொரு நாவலையும் எழுதி இருக்கிறார். நாவலுக்கு historical curiosity என்பதைத் தவிர வேறு மதிப்பு எதுவும் இல்லை. இதை எல்லாம் இந்தக் காலத்து சின்னப் பிள்ளைகள் கூட காது கொடுத்துக் கேட்கமாட்டார்கள்.

ஒரு அம்புலி மாமா கதையை சட்டமாக வைத்து அதில் நல்லொழுக்கம், பொறாமை, இளமையில் திருமணம் என்று பல விஷயங்களைப் பற்றி சொற்பொழிவு. அவரே பல அத்தியாயங்களின் ஆரம்பத்தில் சொற்பொழிவு என்று சொல்லிவிடுகிறார். 🙂 மு.வ. 1800-களில் எழுதிய “நாவல்” போல இருக்கிறது.

பிறகு எதற்காக இந்த புத்தகத்தைப் பற்றி எழுதுகிறேன் என்று யோசிக்கிறீர்களா? புத்தகத்தின் ஒரே ஒரு சுவாரசியமான விஷயம் – பார்ப்பனர்கள் மட்டும்தான் அந்தக் காலத்தில் சின்னக் குழந்தைகளுக்கு கல்யாணம் செய்து வைப்பார்கள் போலிருக்கிறது. ‘மிகு இளமை மணமறுப்பு‘ என்ற தலைப்பில் நாயகி சுகுணசுந்தரி செய்யும் சொற்பொழிவிலிருந்து சில வரிகள்:

இந்த நாட்டில் பார்ப்பனர் முதலானவர்களுக்குள்ளாக நடக்கும் மிகு இளமை மணமானது மிகவும் வெறுக்கத் தக்கதாய் இருக்கிறது.

இந்த நாட்டிலும் பார்ப்பனர் முதலிய சிலரைத் தவிர மற்றை எந்தப் பிரிவினரிலும் மிகு இளமை மணமே இல்லை. இந்த நாட்டிலே கிறித்துவர்களும் மகமதியர்களும் இன்னும் பல பிரிவினரும் ஆணுக்கும் பெண்ணுக்கும் தகுந்த காலம் வந்த பிறகுதான் திருமணஞ் செய்கிறார்கள்.

வே. பிள்ளை இதை 1880, 1890 வாக்கில் எழுதி இருக்க வேண்டும். அப்போதெல்லாம் என்ன வயதில் திருமணம் நடக்கும்? பாரதியாருக்கு 12, 13 வயதில் ஏழு வயது செல்லம்மாவோடு திருமணம் என்று நினைவு.

பெண் ருதுவானதும் அவளை மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்து செல்லும் நிகழ்ச்சி பல புனைவுகளில் வருகிறது என்று நினைவு. பி.ஏ. கிருஷ்ணனின் புலிநகக் கொன்றையில் பெண்ணுக்கு வயது வருவதற்கு முன் திருமணம் செய்ய வேண்டும் என்ற வழக்கம் பேசப்படுகிறது என்று ஒரு மங்கலான ஞாபகம். ராஜம் ஐயரின் கமலாம்பாள் சரித்திரத்திலும் சிறு வயது திருமணங்கள் பற்றி வரும் என்று நினைக்கிறேன். ஜே.ஆர். ரங்கராஜுவின் ராஜாம்பாள் நாவலில் ராஜாம்பாளுக்கு வயது 13-தான். ஆனால் ராஜாம்பாள் பிராமணத்தியா என்று நினைவில்லை. 13 வயதுதானா என்று யாராவது பொங்கி எழுவதற்கு முன் ஜூலியட்டுக்கு வயது 12-தான் என்று நினைவுபடுத்துகிறேன்!

யாருக்காவது தெரியுமா? 1875-1925 காலகட்டத்தில் பிராமணக் குடும்பங்களில் எத்தனை வயதில் திருமணம் செய்வது பழக்கமாக இருந்தது? பிற ஜாதிகளில்?

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள்

6 thoughts on “அந்தக் காலத்தில் பிராமணப் பெண்களின் திருமண வயது

 1. “தியாக பூமி” யில் வரும் சாவித்திரியும் சிறு வயதிலேயே மணம் முடித்துக் கொடுக்கப் படுகிறாள் என்று தான் நினைவு.

  Like

  1. பிருந்தாபன், ஜீப், சரியாக நினைவில்லை என்றாலும் தியாகபூமி, பாலங்கள் இரண்டிலும் சிறு வயது மணங்களைப் பற்றி குறிப்பிட்டிருக்க வாய்ப்புண்டுதான்.

   Like

 2. தமிழ்த் தாத்தா உ வெ சா பிறந்தது – பிப்ரவரி 19, 1855. அவருக்கு திருமணம் நடந்தது – ஜூன் 16, 1868. அப்போது கலியாண பெண்ணான மதுராம்பிகையாருக்கு வயது 7 நிரம்பி 8. ‘எனக்கு அப்போது பதினான்காம் பிராயம் நடந்து வந்தது. கல்யாணப் பெண்ணின் பிராயம் எட்டு’. (என் சரித்திரம், பக்கம் 126).

  இன்னொரு தகவலும் இப்புத்தகத்திருந்து கிடைக்கிறது. அப்போது பிள்ளை வீட்டார் கலியாண செலவு அத்தனையும் பெண் வீட்டாருக்கு கொடுத்து விடுவார்கள் போலும். பிள்ளையைப் பெற்றவர் தான் கலியாணத்தை குறித்து கவலைப் படுவார் என்று தெரிகிறது. பெண்ணைப் பெற்றவர் பெரும்பாலும் ‘எவனாவது ஒருவன் வந்து பெண்ணைக் கல்யாணம்’ செய்து கொள்வான் என்று நம்ப்இ வந்தார்கள். இதைப் பற்றி உ வெ சா வே எழுதுகிறார். (பார்க்க ‘விவாக முயர்ச்சி’ என்னும் அத்தியாயம்).

  Male female ratio would have favored females at that time. I dont see any other explanation. Also, it must have been true only of the Brahmin community.

  Hope this helps.

  Like

 3. பிராமணர் அல்லாத குடும்பங்களில் மிகு இளமைத் (குழந்தைப் பிராய) திருமணங்கள் நடந்ததே இல்லை என்று நிச்சயமாக சொல்லலாம். பிராமணர் அல்லாத குடும்பங்களிலும் 14,15 வயது பெண்னுக்கு திருமணம் நடந்துள்ளது. 1900 ஆரம்ப வருடங்களில் என்னுடைய அப்பாயி, மற்றும் 1960,70 களில் அத்தான் மகள், சித்தப்பா மகள் மற்றும் அத்தையின் பேத்தி, இந்த நால்வருக்குமே 14,15 வயது நடக்கும்போது நடந்த திருமணங்கள்தான். பருவம் அடைந்த பெண்ணை வீட்டில் நீண்ட காலம் வைத்திருக்கக் கூடாது என்ற வழக்கம் அப்போது சமூகத்தில் ஊறிப் போயிருந்தது. அனாவசியமாக தாமதம் செய்யாமல் சட்டு புட்டென்று திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.இதே மாதிரி தான் ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் இருந்தது. இப்போதெல்லாம் இவ்வகை திருமணங்கள் அநேகமாக இல்லை என்றே சொல்லிவிடலாம். இருப்பினும், இப்போதும் இம்மாதிரி திருமணங்கள் காதும், காதும் வைத்தாற்போல நடந்து வரலாம்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.