படிக்கும்போது நிறைவாக இருக்கிறது.
சில நேரங்களில் சில மனிதர்களின் sequel. குமுதத்தில் தொடர்கதையாக வந்தது.
கதை ஒன்றும் பெரும் சிக்கல்கள் நிறைந்தது இல்லை. பிரபு நொடிந்து போய் சென்னையை விட்டு ஓடிவிடுகிறான். தற்செயலாக தன் காரில் ஒரு பெண்ணை ஏற்றிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு செல்வது அவள் உயிரைக் காப்பாற்றுகிறது. அதில் ஞானோதயம் பெறும் அவன் தன் மேல்தட்டு வாழ்க்கையை விட்டுவிட்டு ஒரு மெக்கானிக்காக தன் வாழ்க்கையை மீண்டும் தொடங்குகிறான். எழுத்தாளர் ஆர்கேவி அவனைப் பற்றி ஒரு கதை எழுத கங்கா, பத்மா எல்லாரும் அவனை மீண்டும் கண்டுபிடிக்கிறார்கள். ரிடையர் ஆகும் கங்கா பிரபுவோடு தன் இறுதிக் காலத்தை கங்கைக் கரையில் கழிக்கிறாள்.
புத்தகம் முழுவதும் தெரிவது அன்பு. ஒருவரை ஒருவர் மாற்ற முயலாத, மாற்ற விரும்பாத, அவரவர் குற்றம் குறைகளோடு ஒருவரை ஒருவர் முழுவதும் ஏற்றுக் கொள்ளும் அன்பு. கங்கா, பத்மா, மஞ்சு, கங்காவின் அண்ணா, மன்னி, பிரபு, பிரபுவின் வளர்ப்பு மகன் பாபு என்று எல்லாரும் குறை உள்ளவர்களே. ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் நம்புகிறார்கள், ஏற்றுக் கொள்கிறார்கள், ஒருவரை ஒருவர் சப்போர்ட் செய்கிறார்கள். அது மிக நிறைவாக இருக்கிறது.
இந்த சீரிசைப் பற்றி ஜெயகாந்தனே சொல்கிறார்:
ஒரிஜினல் கதை ‘அக்கினிப் பிரவேசம் ‘ தான். அதன் முடிவை மாற்றினால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் பிறந்தது ‘சில நேரங்களில் சில மனிதர்கள் ‘. அந்த முடிவு பிடிக்காததால் அது முடிவு வரைக்கும் சென்று பார்ப்பது ‘கங்கை எங்கே போகிறாள் ‘. கங்கையில் போய் விட்டாள் என்றுதான் சொன்னேனே ஒழிய, அவள் இன்னொரு புறம் கரையேறியும் வரலாம். அவள் சுய தன்மையை அவள் இழந்ததாய் எனக்குத் தோன்றவில்லை. ‘ சில நேரங்களில் சில மனிதர்கள் ‘ இன் duration ஒரு வருஷம் தான். பனிரெண்டு வருஷத்திற்குப் பிறகு ஒரு வருஷம். ‘கங்கை எங்கே போகிறாள் ‘ அவளுடைய அறுபது வயது வரையில் செல்கிறது.
ஜெயகாந்தனின் பலமே அவர் உருவாக்கும் பாத்திரங்கள்தான். அவரது சாதனைகளில் இன்னொன்று.
தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன் பக்கம்
தொடர்புடைய பக்கங்கள்:
மறக்க முடியாத நாவல். ஜெயகாந்தனின் பாத்திரங்கள் நம்முடன் காலம் முழுவதும் வாழ்பவை.
LikeLike
பாஸ்கர், (நீங்கள் நட்பாஸ் இல்லையோ?) ஜெயகாந்தனின் பாத்திரப்படைப்பு பற்றி நீங்கள் சொல்வது மிகச்சரி.
LikeLike
சுந்தரகாண்டம் பற்றிய நினைவுப்பிழையை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. திருத்திக்கொள்கிறேன்
ஜெ
LikeLike
இல்லை நண்பரே. நான் மிசிகனில் உள்ள Detroit இல் உள்ளேன்.
LikeLike
https://siliconshelf.wordpress.com/2010/09/27/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0/ லிங்க் வேலை செய்யவில்லை.
LikeLike
பாண்டியன், சுட்டியை திருத்திவிட்டேன்.
LikeLiked by 1 person