மீள்பதிப்பாக போட்டுத் தள்ளுகிறேன், மற்றுமொன்று. ஆறு வருஷங்களுக்கு முன் கால்வின்-ஹாப்ஸ் இலக்கியம் என்று எழுதி இருந்தேன், இன்றும் அப்படியேதான் நினைக்கிறேன். என் பெண்களுக்கும் எனக்குப் பிடித்த ஒரு படைப்பு பிடித்திருக்கிறது, அது ஒரு குட்டி சந்தோஷம்.
காமிக்ஸ்களுக்கு சில எல்லைகள் உண்டு. இரும்புக் கை மாயாவிக்கும் சூப்பர்மானுக்கும் ஏன் ஆஸ்டரிக்சுக்கும் டின்டினுக்கும் ஸ்னூப்பிக்கும் டில்பர்ட்டுக்கும் கூட ஒரு ஃபார்முலா உண்டு. அதைத் தாண்டி இலக்கியம் படைப்பது ரொம்ப கஷ்டம். எனக்குத் தெரிந்து அந்த எல்லைகளைத் தாண்டி வந்த ஒரே காமிக்ஸ் கால்வினும் ஹாப்சும் மட்டுமே. எழுதி வரைந்தவர் பில் வாட்டர்சன்.
எனக்கு மிகவும் பிடித்த காமிக்சும் இதுதான். கால்வின் ஆறு வயது சிறுவன். அவனுடைய கற்பனை உலகத்துக்கும் நிஜ உலகத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு அவனைப் பொறுத்த வரைக்கும் மிகவும் மெல்லியது. அவன் கனவுலகில் அவனுடைய சிறந்த நண்பன் ஹாப்ஸ், ஒரு புலி. நிஜ உலகத்தில் அது அவனுடைய பொம்மை. அப்புறம் அவனுடைய long-suffering அம்மா, குசும்பு பிடித்த அப்பா, அவனுடைய தோழி சூஸி எல்லாரும் துணை பாத்திரங்கள். அற்புதமான சித்திரங்கள். பெரியவர்கள் அவர்கள் லெவலிலும் சிறுவர்கள் அவர்கள் லெவலிலும் படிக்கலாம்.
இதைப் பற்றி எல்லாம் பேசுவதில் அர்த்தமில்லை. எனக்குப் பிடித்த ஒரு panel-ஐ இங்கே தந்திருக்கிறேன். (இணையத்தில் தேடியபோது முதலில் கண்ணில் பட்டது இதுதான்.)
என்னுடைய favorite quote:
Calvin’s Mom: How can kids know so much and still be so dumb?
இது வரை படிக்கவில்லை என்றால் நீங்கள் அதிர்ஷ்டக்காரர்கள். கட்டாயம் (இரவலாவது) வாங்கிப் படியுங்கள்.