Skip to content

காமிக்ஸ் இலக்கியம் – கால்வினும் ஹாப்சும்

by மேல் ஜூலை 14, 2017

மீள்பதிப்பாக போட்டுத் தள்ளுகிறேன், மற்றுமொன்று. ஆறு வருஷங்களுக்கு முன் கால்வின்-ஹாப்ஸ் இலக்கியம் என்று எழுதி இருந்தேன், இன்றும் அப்படியேதான் நினைக்கிறேன். என் பெண்களுக்கும் எனக்குப் பிடித்த ஒரு படைப்பு பிடித்திருக்கிறது, அது ஒரு குட்டி சந்தோஷம்.

காமிக்ஸ்களுக்கு சில எல்லைகள் உண்டு. இரும்புக் கை மாயாவிக்கும் சூப்பர்மானுக்கும் ஏன் ஆஸ்டரிக்சுக்கும் டின்டினுக்கும் ஸ்னூப்பிக்கும் டில்பர்ட்டுக்கும் கூட ஒரு ஃபார்முலா உண்டு. அதைத் தாண்டி இலக்கியம் படைப்பது ரொம்ப கஷ்டம். எனக்குத் தெரிந்து அந்த எல்லைகளைத் தாண்டி வந்த ஒரே காமிக்ஸ் கால்வினும் ஹாப்சும் மட்டுமே. எழுதி வரைந்தவர் பில் வாட்டர்சன்.

எனக்கு மிகவும் பிடித்த காமிக்சும் இதுதான். கால்வின் ஆறு வயது சிறுவன். அவனுடைய கற்பனை உலகத்துக்கும் நிஜ உலகத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு அவனைப் பொறுத்த வரைக்கும் மிகவும் மெல்லியது. அவன் கனவுலகில் அவனுடைய சிறந்த நண்பன் ஹாப்ஸ், ஒரு புலி. நிஜ உலகத்தில் அது அவனுடைய பொம்மை. அப்புறம் அவனுடைய long-suffering அம்மா, குசும்பு பிடித்த அப்பா, அவனுடைய தோழி சூஸி எல்லாரும் துணை பாத்திரங்கள். அற்புதமான சித்திரங்கள். பெரியவர்கள் அவர்கள் லெவலிலும் சிறுவர்கள் அவர்கள் லெவலிலும் படிக்கலாம்.

இதைப் பற்றி எல்லாம் பேசுவதில் அர்த்தமில்லை. எனக்குப் பிடித்த ஒரு panel-ஐ இங்கே தந்திருக்கிறேன். (இணையத்தில் தேடியபோது முதலில் கண்ணில் பட்டது இதுதான்.)

என்னுடைய favorite quote:
Calvin’s Mom: How can kids know so much and still be so dumb?

இது வரை படிக்கவில்லை என்றால் நீங்கள் அதிர்ஷ்டக்காரர்கள். கட்டாயம் (இரவலாவது) வாங்கிப் படியுங்கள்.

Advertisements

From → World Fiction

9 பின்னூட்டங்கள்
 1. அருணா permalink

  RV2

  என்னோட all time favorite கார்ட்டூன் சித்திரம். இது வரை வந்த எல்லா சித்திரங்களும் 4 புத்தகங்கங்கள் தொகுப்பாக கிடைக்கிறது Costcoவில்!!. எல்லாவற்றயும் படிச்சிருக்கேன். பெரியவர்களுக்குமான whimsical, philosophical cartoon:)

  Like

  • அருணா
   அடடா, நம்ம வட்டத்தில் நான் மட்டும்தான் காமிக்ஸ் எல்லாம் படிக்கும் சின்னப் பிள்ளைன்னு நினச்சேன், போட்டிக்கு வரீங்களே!

   Like

 2. அருணா permalink

  என்ன ஆர்.வி இப்படி சொல்லிட்டீங்க. சிறுவயதில் ஆர்.கே லக்‌ஷ்மண் கார்ட்டூன் முழுசா படிச்சிருக்கேன். இங்கு வரும் டென்னிஸ் த மெனேஸ், பீனட் ஆகியவையும் பிடிக்கும். ஆனால் கால்வின் ஒரு கிளாசிக். குழந்தைகளின் எண்ணில்லா கற்பனையையும், அவர்களின் வாழ்வு பிறறால் கட்டுப்படுத்தபடுவதையும் மிக அழகாக சொல்வன.

  Like

 3. Feel permalink

  Calvin & Hobbes சித்திரத்துக்கு நன்றி. Foxtrot, Wizard of Id படித்துப் பாருங்கள். சங்கரின் ‘காந்தி யானை’யை மிஞ்சிய political cartoon-ஐ நான் இதுவரை கண்டதில்லை.

  Like

 4. Geep permalink

  Calvin and Hobbes சித்திரம் அருமையாக இருக்கிறது. Foxtrot, Wizard of ID படித்துப் பாருங்கள். உங்களுடைய (முந்தைய) மதன் பதிவு பற்றி நான் சொல்ல நினைத்த கருத்து: சங்கரின் “காந்தி யானை”யை மிஞ்சிய political cartoon நான் இது வரை கண்டதில்லை

  Like

  • Geep, எனக்கு சங்கரின் கார்ட்டூன்கள் மிக மங்கலாகத்தான் நினைவிருக்கின்றன. இணையத்தில் எங்காவது கிடைக்குமா?

   Like

 5. Geep permalink

  நான் சங்கரின் கார்ட்டூன் என்று குறிப்பிட்டது தவறு. அபு ஆப்ரஹாம் என்று இருக்க வேண்டும். சுட்டி இதோ:

  பனியா காந்தி
  by RV 2 October 2013

  Like

  • Geep, // நான் சங்கரின் கார்ட்டூன் என்று குறிப்பிட்டது தவறு. அபு ஆப்ரஹாம் என்று இருக்க வேண்டும். சுட்டி இதோ: பனியா காந்தி by RV 2 October 2013 // உங்கள் பதில் கலக்கல்!

   Like

Trackbacks & Pingbacks

 1. 2017 பரிந்துரைகள் | சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: