பொருளடக்கத்திற்கு தாவுக

சுஜாதாவின் அந்தக் காலத் தொடர்கதை – “பத்து செகண்ட் முத்தம்”

by மேல் செப்ரெம்பர் 11, 2017

(சிறு திருத்தங்களுடன் மீள்பதிப்பு)

கொஞ்சம் வயதானவர்களுக்கு 1982 ஏஷியாட் நினைவிருக்கலாம். அந்தக் காலத்தில் அது ஒரு பெரிய நிகழ்ச்சி. அதைப் பின்புலமாக வைத்து சுஜாதா எழுதி இருக்கும் கதை. குமுதத்தில் தொடர்கதையாக வந்தது. என்று நினைவு.

அவரது வழக்கமான பலம் – சுவாரசியமான நடை இருக்கவே இருக்கிறது. சுஜாதா டச்களும் – இரண்டு மூன்று பாராவில் நாயகி (தமிழ)ரசியின் குடும்பப் பின்னணியைப் புரிய வைத்தல், ரசியின் சக ஓட்டப் பந்தயப் போட்டியாளர்களின் மனநிலை, அன்றைய டெல்லி, அந்த டெல்லியில் ஏஷியாட் கொண்டு வந்த மாற்றங்கள் என்று பல விஷயங்களை தத்ரூபமாக கொண்டு வருதல் – நிறைய இருக்கின்றன.

கொஞ்சம் முரட்டுத்தனமான, ஓட்டம் மட்டுமே வாழ்க்கையான கோச் ராஜ்மோகன். அவருக்கு வேண்டியதெல்லாம் பத்து செகண்டில் நூறு மீட்டர் ஓட முடியும் ஒரு பெண், உலக சாதனை. (இன்னும் கூட யாரும் பத்து செகண்டில் ஓடவில்லை என்று நினைக்கிறேன்.) அவரிடம் ஓட்டம் பயிலும் அவருடைய சொந்த அக்கா மகள் (தமிழ)ரசி. சின்னப் பெண், உலகம் தெரியாது, மாமாவின் கட்டுப்பாட்டுக்குள் மொத்தமாக இருக்கும் பெண். ஏஷியாடில் ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது. அவளை பேட்டி காண விரும்பும் பத்திரிகையாளன் மனோ. அவனை கோச் கவனம் கலைந்துவிடக் கூடாது என்பதற்காக மூர்க்கமாகத் தவிர்க்கிறார். மனோவும் கோச்சும் முறைத்துக் கொள்கிறார்கள். ரசி நூறு மீட்டர் ஓட்டத்தில் வெல்கிறாள். வென்ற பிறகு சந்தோஷத்தில் இது கொண்டாட வேண்டிய நேரம், கவனம் சிதறும் என்ற பிரச்சினை எல்லாம் இல்லை, நீயும் நாலு பேரோடு பழகு என்று பழைய கோபத்தை மறந்து மாமாவே ரசியை மனோவோடு பார்ட்டிக்கு அனுப்புகிறார். ரசிக்கு அங்கே யாரோ ஜின் ஊற்றிக் கொடுத்துவிட, மாமாவுக்கு திரும்பி கோபம் எகிறுகிறது. ரசியை ஏறக்குறைய சிறைப்படுத்தி வைக்கிறார். மனோ போலீஸ் உதவி கொண்டு ரசியை விடுவிக்கிறான். பிறகு கொஞ்சம் ரொமான்ஸ். மாமா நீ என்னை விட்டு விலகினாலும் பரவாயில்லை, ஓட்டப் பந்தயத்தை விடாதே என்று ரசியிடம் கெஞ்சுகிறார். ரசி மீண்டும் உங்களிடம் வர முடியாது, ஓட்டப் பந்தயத்தையும் விட்டுவிடலாம் என்று யோசிக்கிறேன் என்று சொல்லிவிட மாமா தற்கொலை செய்துகொள்கிறார். ரசி மீண்டும் ஓட்டமே வாழ்க்கை என்ற மன நிலைக்குத் திரும்புகிறாள்.

பத்து செகண்டில் ஓட வேண்டும் என்ற ஒரே நோக்கம் கொண்ட கோச்சின் பாத்திரம் மிக நன்றாக வந்திருக்கிறது. விவரம் தெரியாத பெண்ணாக ரசியும் ஓரளவு நன்றாக வந்திருக்கிறது.

அவரது நல்ல குறுநாவல்களில் ஒன்று. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

From → Sujatha

5 பின்னூட்டங்கள்
 1. பத்து செகண்ட் முத்தம் 1983 ல், இந்தியாவில், டில்லியில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்த சமயத்தில் எழுதியது. இதன் தலைப்பினைப் பார்த்து, இது ஏதோ முழு காதல் கதை என்று எண்ணிக் கொள்ள வேண்டாம். காதல் இருக்கிறது. கடமையிலிருந்து, சாதனையிலிருந்து ஒரு திறமையுள்ள பெண்ணின் கவனத்தைக் கலைக்க, அவளை நிதானப்படுத்த, ஒரு நல்லாசிரியன் உயிர்த் தியாகம் செய்யவேண்டியுள்ளது.

  Like

  • பத்து செகண்ட் முத்தம் பற்றிய விவரங்களுக்கு நன்றி, ஸ்ரீனிவாஸ்!

   Like

 2. இந்த கதை நான் நூலகத்தில் எடுத்து படிச்சுருக்கேன்…ரொம்பவே விறுவிறுப்பான நாவல்..ரசி பாத்திரம் ரெண்டுகெட்டான் ..அந்த தாய்மாமா கோச் ராஜ்மோகன் கடைசியில் தற்கொலை பண்ணிக்கும்போது கண்கலங்கிட்டேன்..அருமையான எனக்கு பிடிச்சது கோச் கதாபாத்திரம் தான்..ராஜ்மோஹனை ரசி சரியா புரிஞ்சுக்கலயோனு நாவல் படிச்சுட்டு யோசிச்சு கூட பார்த்துருக்கேன்..நன்றி நினைவுகளை தட்டிவிட்டதுக்கு…

  Like

Trackbacks & Pingbacks

 1. ஜாக் லண்டன் எழுதிய “எ பீஸ் ஆஃப் ஸ்டேக்” – எனக்குப் பிடித்த சிறுகதைகள் சீரிஸ் « சிலிகான் ஷ

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: