கல்கியின் நகைச்சுவை கட்டுரைகள் – “ஏட்டிக்கு போட்டி”

(மீள்பதிப்பு)

நீங்கள் ஒரு முப்பது வருஷத்துக்கு முன் ப்ளஸ் டூ, கலைக் கல்லூரிகளில் படித்தவரா? ஜெரோம் கே ஜெரோம், ஈ.வி. லூகாஸ், ஸ்டீஃபன் லீகாக் போன்றவர்களின் எழுத்துகளை அப்போது பாடமாக படித்திருக்கலாம். சில சமயங்களில் புன்னகை செய்யலாம். டைம் பாஸ் எழுத்துதான், ஆனால் லீகாக்கின் சில கட்டுரைகள் இலக்கியத்துக்கு அருகிலாவது வரும். ஜெரோமின் Three Men in a Boat ஒரு க்ளாசிக் என்று கருதப்படுகிறது.

கல்கி, தேவன், எஸ்.வி.வி., நாடோடி, துமிலன், சாவி மாதிரி சிலர் அந்த மாதிரி எழுத முயற்சித்திருக்கிறார்கள். என் கண்களில் வெற்றி பெற்றவர்கள் கல்கியும், எஸ்விவியும், தேவனும் மட்டுமே.

ஏட்டிக்குப் போட்டி அவர் விகடனில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு என்று நினைக்கிறேன். அவரது எல்லா படைப்புகளிலும் இழையோடும் மெல்லிய நகைச்சுவை இங்கு நன்றாகவே வெளிப்படுகிறது. அதுவும் “பூரி யாத்திரை” என்ற கட்டுரையில் பூரியின் பண்டா ஒருவர் இவர் கோஷ்டியிடம் பணம் வாங்க படாத பாடு படுகிறார். என்னவெல்லாமோ சொல்லிப் பார்க்கிறார். இவர்கள் கோஷ்டியில் இருக்கும் பந்துலு லேது லேது என்றே சொல்லிக்கொண்டிருக்கிறார். பண்டா கடைசியில் ஒரு புரோ நோட்டில் கையெழுத்து போட்டு கொடுக்க சொல்கிறார். யாருக்கு புரோ நோட்டு? பூரி ஜகன்னாதருக்கு! கையில் பணம் இல்லை என்றால் பரவாயில்லை, ஊருக்கு போய் இருபது ரூபாய் அனுப்புகிறேன் என்று பூரி ஜகன்னாதரிடம் கடன் சொல்லு என்கிறார் பண்டா. பார்த்தார் பந்துலு. பக்கத்தில் இருக்கும் ஒரு ராவை முன்னால் தள்ளி இவரிடம் பணம் திருட்டு போய்விட்டது, நீங்கள் ரயில் செலவுக்கு உதவமுடியுமா என்று பண்டாவை பணம் கேட்கிறார்! பண்டா பிடித்தார் ஓட்டம்!

வாழ்க்கையின் அபத்தங்கள் அவருக்கு கண்ணில் நன்றாக படுகிறது – கண்ணகி நாடகத்தில் அங்க தேச பந்து சித்தரஞ்சன் தாஸ் இறந்து போனதைப் பற்றி கோவலன் பாட வேண்டி இருக்கிறது!

சமயத்தில் கல்கி ஜெரோம் கே. ஜெரோம் போன்றவர்களை காப்பியே அடிப்பார் என்று டோண்டு ராகவன் எழுதுகிறார். இந்த தொகுப்பில் அவர் சொன்ன கட்டுரையைத் தவிர வேறு ஏதாவது காப்பி கீப்பி உண்டா தெரியாது.

இன்றே படிக்க முடிகிறது என்றால் கட்டுரைகள் வந்த 1930-களில் இவை பெருவெற்றி பெற்றிருக்கும். பூரி யாத்திரை கட்டுரையை இணைத்திருக்கிறேன். பத்து பக்கம்தான். முழு புத்தகத்தையும் இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம். (ஒரத்தநாடு கார்த்திக்குக்கு நன்றி!) கல்கியின் படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டிருப்பதால் எந்த விதமான சட்டப் பிரச்சினையும் இல்லை. கட்டாயம் படியுங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கல்கி பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:

 • கல்கி – ஒரு மதிப்பீடு
 • கல்கி காப்பி அடித்தது
 • 5 thoughts on “கல்கியின் நகைச்சுவை கட்டுரைகள் – “ஏட்டிக்கு போட்டி”

  1. வல்லவரயன் வந்தியத்தேவனின் பாத்திரப் படைப்பே அலெக்ஸாண்டர் த்யூமாவின் Three Musketeers-ன் D’Artagnan-ன் பாதிப்புதான் என்றும், சிவகாமியின் சபதத்தில் வரும் பரஞ்சோதி தன் வீட்டிலிருந்து புறப்படும் சீனும் D’Artagnan தனது இடத்திலிருந்து புறப்பட்டு செல்லும் சீனின் பாதிப்பு என்று கூறுபவரும் உளர்.

   கல்கி பல ஆங்கில நாவல்களை எடுத்துக் கையாண்டிருப்பார் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆனால் இதையெல்லாம் ரசிக்கும் முறையில் செய்தார் என்பதே முக்கியம்.

   அப்படிப் பார்த்தால் ஷேக்ஸ்பியரே பல ஏற்கனவே இருந்த கதைகளைக்த்தான் நாடகமாக்கம் செய்துள்ளார் என்றும் ஒரு கோஷ்டி கூறுகிறது.

   அன்புடன்,
   டோண்டு ராகவன்

   Like

   1. டோண்டு, // கல்கி பல ஆங்கில நாவல்களை எடுத்துக் கையாண்டிருப்பார் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆனால் இதையெல்லாம் ரசிக்கும் முறையில் செய்தார் என்பதே முக்கியம். // உண்மை. அதை ஒத்துக்கொண்டும் இருக்கலாம், அவர் அதை செய்ததாகத் தெரியவில்லை. முக்கியமில்லை என்று நினைத்திருக்கலாம்.

    Like

  2. எழுத்து உலகில் அவர் சாதித்த சாதனைகள் பல. 1930 களில் அவர் ‘ஆனந்த விகடன்’ வார ஏட்டில் அவர் இணைந்த காலம். முதல் முதலாக ‘ஏட்டிக்கு போட்டி’ என்று எழுதியதை, ‘கல்கி’ என்ற பெயரில் எழுதினார். அவர் பல பெயர்களில் எழுதி இருக்கிறார். அதை அவரே சொல்கிறார். ‘குகன் – அகத்தியன் – கர்நாடகம் – லாங்கூலன் – எமன் – விவசாயி – பெற்றோன் – ஒரு பிராமண இளைஞன், தமிழ்மகன் – இரா.கி. என்றும் எழுதிக் குவித்தார்.

   இத்தனையும் தீட்டி இருக்கின்ற கல்கி அவர்களின் முதல் சிறுகதை, ‘விஷ மந்திரம்’ கடைசியாக அவர் எழுதிய 119 ஆவது சிறுகதை, ‘திருடன் மகன் திருடன்’

   Like

  மறுமொழியொன்றை இடுங்கள்

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

  Google photo

  You are commenting using your Google account. Log Out /  மாற்று )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

  Connecting to %s

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.