பத்மாவதி – Visual Spectacular

ஹிந்துத்துவா தரப்பிலிருந்து இத்தனை எதிர்ப்பு எழுந்திராவிட்டால் இந்தத் திரைப்படத்தை அரங்கத்தில் சென்று பார்த்திருக்கமாட்டேன். பார்த்த பிறகு ஹிந்துத்துவர்களுக்கு – குறிப்பாக கார்னி சேவா போன்ற fringe elements-களுக்கு அறிவே கிடையாது – என்ற எண்ணம் உறுதிப்பட்டது. ரொம்ப நாட்களுக்கு முன்னால் ஏதோ ஒரு பெங்களூர் பத்திரிகை ‘Mohammad the Idiot‘ என்ற பேரில் ஏதோ ஒரு கதையை வெளியிட்டது. கதையின் முகம்மதுக்கும் முகம்மது நபிக்கும் சம்பந்தமே இல்லாதபோதும் ஒரு லும்பன் கும்பல் கிளம்பி வந்து பத்திரிகை கட்டிடத்தை இடித்ததோ என்னவோ சரியாக நினைவில்லை. இது வரை அதுவே மதப்பற்று முட்டாள்தனமாக மாறுவதின் உச்சம் என்று நினைத்திருந்தேன். கார்னி சேவாக்காரர்கள் அவர்களையும் மிஞ்சிவிட்டார்கள்.

இந்தத் திரைப்படத்தைக் கண்டு சில over-sensitive முஸ்லிம்கள் வருத்தம் அடையலாம். அலாவுதீன் கில்ஜி ஏறக்குறைய ஒரு barbarian – நாகரீகம் இல்லாத ஒரு காட்டுமிராண்டியாக – சித்தரிக்கப்படுகிறார். மாலிக் கஃபூரோடு ஓரினச் சேர்க்கை கொள்பவராக காட்டப்படுகிறார். (இப்படிக் காட்டுவது வரலாற்று உண்மையாக இருக்கலாம், ஆனால் நம்மூரில் இன்னும் ஓரினச் சேர்க்கை என்றால் offend ஆக வாய்ப்பிருக்கிறது.) over-sensitive முஸ்லிம்கள் வருத்தம் அடையலாம் என்றால் கார்னி சேவாக்காரர்கள் ஹை ஜாலி என்று குஷிப்படாமல் இந்தத் திரைப்படத்தை தடை செய் என்று கிளம்பினது எத்தனை மடத்தனம்!

சரி பின்புலம் எல்லாவற்றையும் விடுவோம், மேட்டருக்கு வரலாம். ஒரே வரியில் சொல்வதென்றால் திரைப்படம் ஒரு visual spectacular, அரங்கத்தில் பெரிய ஸ்க்ரீனில் சென்று பாருங்கள்!

உடைகள், காட்சி அமைப்புகள், பத்மாவதி ரத்தன் சிங்குக்கு சிகிச்சை அளிக்கும் குகை, சித்தூர் கோட்டை, அரண்மனை, அந்தப்புரம், டெல்லி தர்பார், பத்மாவதி டெல்லி செல்லும்போது போகும் பாதை என்று சொல்லிக் கொண்டே போகலாம். கூமர் கூமர் பாட்டு படமாக்கப்பட்டிருக்கும் விதம் பிரமாதம்! ப்யார் கியா தோ டர்னா க்யாவுக்குப் பிறகு இத்தனை ரிச்சாக பார்த்த பாடல் இதுதான்.

திரைப்படத்தில் ஒரு விஷயம் உறுத்தியது. சித்தூரிலும் உருது வார்த்தைகள் நிறையப் புழங்குகின்றன. அலாவுதீனின் தர்பாரிலேயே பாரசீகம்தான் அப்போது புழங்கி இருக்கும் என்று நினைக்கிறேன். (தவறாக இருக்கலாம்.) எனக்குத் தெரிந்த வரை அலாவுதீனின் சபையில் இருந்த அமீர் குஸ்ரூதான் உருதுவை முதன் முதலாக இலக்கியம் படைத்தவர். அவருக்கு முன் உருது அரசு மொழியாக இருந்திருக்க வாய்ப்பில்லை. அலாவுதீனும் ரத்தன் சிங்கும் மொழிபெயர்ப்பாளர் இல்லாமல் நேரடியாகப் பேசி இருக்க முடியுமா என்று எனக்கு சந்தேகம்தான். வரலாறு தெரிந்தவர்கள் என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்!

பத்மாவதி வரலாற்று நிகழ்ச்சி அல்ல. அலாவுதீன் கில்ஜி சித்தூரின் ரத்தன் சிங்கைத் தோற்கடித்து தனக்கு கப்பம் கட்ட வைத்தாராம். சித்தூரில் அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனாராம். ஆனால் பத்மினி/பத்மாவதி இருந்ததாகத் தெரியவில்லை. படுகொலையை விவரிக்கும் அமீர் குஸ்ரூ பத்மாவதியைப் பற்றி ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அலாவுதீன் கில்ஜி இறந்து 200-300 வருஷங்களுக்குப் பிறகு – 1540இல் – மாலிக் முஹம்மது ஜயசி என்ற சூஃபி கவிஞர் எழுதிய காவியம்தான் பத்மாவதி கதையை முதலில் சொல்கிறது. ஜயசி தன் காவியத்தில் இது என் கற்பனை என்று சொல்லி இருக்கிறாராம். அவருக்குப் பின்னால் பல ராஜபுதன கவிஞர்கள் இதை மீண்டும் பாடி இருக்கிறார்களாம் – குறிப்பாக ஹேமரதனின் கோரா பாதல் பத்மினி சௌபல். ஆர்வம் இருப்பவர்கள் ஜயசியின் காவியத்தின் மொழிபெயர்ப்பை இங்கே படிக்கலாம்.

சித்தூர் ராணி பத்மினி என்று தமிழிலும் சிவாஜி, பத்மினி நடித்து ஒரு திரைப்படம் வந்தது. அதில் அலாவுதீன் பத்மினியை நேரடியாகப் பார்க்காமல் கண்ணாடியில் அவள் உருவத்தைப் பார்ப்பதாக வரும். ஜயசி அப்படித்தான் எழுதினாரோ என்னவோ தெரியவில்லை.

திரைப்படத்தை அரங்கில் சென்று கட்டாயம் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

2 thoughts on “பத்மாவதி – Visual Spectacular

  1. இந்த கலாட்டக்கள் எல்லாம் படத்தினரே செய்திருப்பார்களோ என்று சந்தேகம் வருகின்றது. படத்திற்கு எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் வந்திருந்தால் இஸ்லாமியர்களிடமிருந்தும்,இடதுசாரி, போலி இடதுசாரி, மதச்சார்பற்ற கும்பலிடமிருந்து கடும் எதிர்ப்பை சந்தித்திருக்கலாம், அதை தவிர்க்கவே இந்த நாடகம் என்று தோன்றுகின்றது. படத்தை எதிர்த்தவர்களை எதிர்த்து கருத்து சுதந்திர முழக்கம் எழுப்பிய பின், இப்போது திருடனுக்கு தேள் கொட்டியது போல கமுக்கமாக அமர்ந்திருக்கின்றார்கள். படத்தை எதிர்த்தவர்கள் சத்தம் படம் வெளிவந்தவுடன் காணவில்லை.

    Like

  2. // ந்த கலாட்டக்கள் எல்லாம் படத்தினரே செய்திருப்பார்களோ // ரெங்கா, நீங்கள் சொல்வதும் சரிதான். இத்தனை முட்டாளாக இருப்பார்களா என்று சந்தேகமாகத்தான் இருக்கிறது.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.