க.நா.சு. எழுதிய அசுரகணம்

ka.naa.su.க.நா.சு. எழுதிய அசுரகணம் குறுநாவல் பற்றி நண்பர் கேசவமணி எழுதியதைப் படித்ததிலிருந்து இதைப் படிக்க வேண்டும் என்று ஆசை. கேசவமணி, ரெங்கசுப்ரமணி, வெறும் சுப்ரமணி (நாந்தேன்) மூவருக்கும் ஏறக்குறைய ஒத்த ரசனை. பற்றாக்குறைக்கு தமிழ் ஸ்டுடியோ அருண் எழுதிய கட்டுரை வேறு இன்னும் ஆர்வத்தைத் தூண்டியது.

ஆனால் முதல் வாசிப்பில் ஏமாற்றமே மிஞ்சியது. என்னதான் பிரச்சினை கதாநாயகன் ராமனுக்கு? சுய பச்சாதாபத்தில் காரணமே இல்லாமல் ஆழ்ந்து கிடக்கும் self-centered மனிதனாகத்தான் எனக்குத் தெரிகிறான். அவனுடைய மன ஓட்டங்கள், எண்ணங்கள், பகல் கனவுகள் எதுவும் சுவாரசியப்படவில்லை.

குறுநாவலை சிலாகிக்கும் கேசவமணியே

கதையில் விவரணத்திலும் மட்டுமே அப்போதைய நாவல்கள் கவனம் செலுத்தின. இதுவோ முழுக்க முழுக்க மனதின் ஓட்டங்களைப் பிரதிபலிக்கும் நாவல்… அந்தக் காலகட்டத்தில் இந்த நாவல் புதுமையானதாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று அப்படி நினைக்கக் காரணமில்லை

என்று ஒத்துக் கொள்கிறார். முன்னோடி முயற்சி என்பது சரியாக இருக்கலாம். ஆனால் காலாவதியாகிவிட்ட முன்னோடி முயற்சி என்றுதான் தீர்ப்பு சொல்ல வேண்டி இருக்கிறது.

ஆனால் பொய்த்தேவு நாவலைப் பற்றி நான் இப்படி எழுதி இருந்தேன்.

ஒரு கோணத்தில் பார்த்தால் இதில் ஒன்றுமே இல்லை. பெரிய சிக்கல்கள் இல்லை, பிரமாதமான கதைப் பின்னல் இல்லை. இதில் என்ன இருக்கிறது என்று கேட்டால் விவரிப்பது கஷ்டம். ஒன்று உங்களுக்கு இதில் ஒரு தரிசனம் கிடைக்கும் இல்லாவிட்டால் போரடிக்கும். இரண்டுக்கும் நடுவில் ஒரு ஸ்டேஜ் இல்லை.

இந்த குறுநாவலும் அப்படித்தானோ என்று தோன்றுகிறது. கேசவமணிக்கு தரிசனம் கிடைத்திருக்கிறது, எனக்குத்தான் எட்டவில்லையோ என்னவோ. மீண்டும் ஒரு முறை வாசித்துப் பார்க்க வேண்டும்…

தொகுக்கப்பட்ட பக்கம்: க.நா.சு. பக்கம்

5 thoughts on “க.நா.சு. எழுதிய அசுரகணம்

 1. பொய்ததேவு , சோமு என்கிற சாத்தனுர் மேட்டுத்தெரு சிறுவனின் வாழ்க்கை. ஒன்றுமேயில்லாத நிலையில் ஆரம்பித்துச் சோமு முதலியார் என்கிற பொருளாதார லௌகிக
  மேல் நிலையை அடைந்து முடிவில் ஒன்றுமில்லை எனத் தத்துவார்த்த மகிழ் முடிவு.
  சர்மாவின் உயில், எழுதுவதை லட்சியமாகக் கொண்டு வாழும் சிவராமன், சில ஏமாற்றங்கள். முடிவில் தன்னுடைய குடும்பச் சம்பவங்களை வைத்து எழுதிய நம் குடும்பம் நாவலின் வெற்றியும் அதைத்தொடர்ந்து ஸ்வாமிமலையிலேயே சந்தோஷத்துடன் வாழ்க்கை பிரயாணத்தைத் தொடர்கிறார், இறுதியில் ஒரு மகிழ் முடிவு.
  மூன்றாவது ஒரு நாள். இந்தக் கதை மனதிற்கு ஒட்டவேயில்லை , அது வேறு விஷயம். க்ரிஷ்ணமுர்த்தி என்கிற மேஜர் மூர்த்திச் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஜெர்மனிக்கு சென்று ஹிட்லரின் தாத்பரியத்தில் கட்டுண்டு இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்டுப் பின்னர்ச் சுபாஷ் சந்திரபோஸின் செயல்களில் மயங்கி இத் தே ராவில் சேர்ந்து போஸின் மறைவுக்குப் பிறகு இந்திய வருகிறார். சிற்சில விசேஷ பாராட்டுகளைத் தவிர்த்துக் கிடைத்தது ஏமாற்றம். என்ன செய்யலாம் என்று நினைக்கும் தருவாயில் சாத்தனுரிலிருந்து மாமாவின் அழைப்பு. மாமவின் வீட்டில் ஒரு நான் ஜாகை. அவ்வொருநாளில் நிகழும் தெருவாசிகளின் அறிமுகமும் அதையொட்டி உரையாடலும் முடியில் மங்களம் வழியாகத் தோன்றும் மனமாற்ற மங்கள மகிழ் முடிவு. நிற்க. கேள்வியென்னவெனில் இம்மூன்றுகதைகளிலும் கதையின் முடிவில் வாசகனுக்கு மகிழ்ச்சியான நிறைவை தரவேண்டும் என்னும் ஒரு பாணி என்று சொல்லலாமா?

  Like

 2. கநாசு எழுதியதிலேயே பொய்த்தேவு மட்டும் தான் கொஞ்சம் பொருட்படுத்தத் தகுந்த நாவல் என்பது என்னுடைய அபிப்ராயம். மற்ற நாவல்கள் எல்லாம் வெற்று முயற்சிகள். அதுவும் அவரின் கடைசி காலத்தில் அவர் தினமணிக்கதிரில் எழுதிய கோதை சிரிதாள் எல்லாம் வாசிக்காமல் இருப்பதே நல்லது. ரசனையான விமர்சகர்கள் நல்ல படைப்பாளியாக இருக்க வேண்டியதில்லை என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் கநாசு அவர்கள். அவர் அவருடைய விமர்சனங்களுக்காகத் தான் பேசப்படுவார்; படைப்பிலக்கியங்களுக்காக அல்ல

  Like

 3. சௌகந்தி மற்றும் சுப்புராஜ்,

  பொய்த்தேவு வேற லெவல் என்பதில் எனக்கும் எந்த சந்தேகமுமில்லை. ஆனால் நளினி, வாழ்ந்தவர் கெட்டால் போன்ற சில குறுநாவல்களும் எனக்குப் பிடித்திருந்தன. அவரது புத்தக அறிமுகமான ‘படித்திருக்கிறீர்களா’ எனக்கு ஒரு seminal புத்தகம்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.