ஈஸ்டருக்காக

சிறு வயதில் சில கிறிஸ்துவப் பள்ளிகளில் படித்திருக்கிறேன். தாம்பரம் கார்லி மேல்நிலைப் பள்ளியில் சில சமயம் காலையில் சில கிறிஸ்துவப் பாடல்களைப் பாடுவோம். எல்லாரும் – கிறிஸ்துவ மாணவர்கள் உட்பட – வாத்தியார் பார்க்காதபோது கண்டபடி மாற்றிப் பாடுவோம் என்பது வேறு விஷயம்.

அப்படிப்பட்ட பாடல்களில் இன்னும் மறக்காதது ‘தேவபிதா எந்தன் மேய்ப்பனல்லோ‘. சக மாணவர்களுடன் சேர்ந்து கிண்டல் அடித்த காலத்திலும் மனதைக் கவர்ந்த பாடல். மாணவனாக இருந்த காலத்தில் காலை எழுந்து குளித்து பேயை ஓட்டு, பிசாசை அண்டவிடாதே, அடியிலிருந்து முடி வரை காக்க காக்க, டகுடகுடிகுடிகு டங்கு டிங்குகு என்று பாடாவிட்டால் காப்பி கிடைக்காது. கடவுளுக்குத் தெரியாதா நமக்கு என்ன தேவை என்று, இது என்ன கேனத்தனமாக அதைக் கொடு இதைக் கொடு என்று பிரார்த்தனை, வட்டக் குதத்தைக் காப்பதை விட வல்வேலுக்கு வேறு வேலை இல்லையா என்ற மாதிரி அந்த வயதுக்கே உரிய சில பல புரட்சிகர சிந்தனைகள் தோன்றிக் கொண்டிருந்த காலம். காப்பிக்காக மட்டுமே கந்த சஷ்டி கவசம் சொல்ல ஆரம்பித்திருந்த காலம். அப்போது கடவுளிடம் எதையும் கேட்காத, நல்ல வழியில் நடத்துவதற்கு நன்றி சொல்லும் பாடல் மனதைக் கவர்ந்தது. ஆங்கிலத்தில் படித்த்ததும் மனதைக் கவர்ந்தது. அப்போது வந்த ஆர்வத்தினால்தான் பைபிள் படித்தேன். (பைபிளிலும் குறை கண்டுபிடித்தது தனிக்கதை.)

ஆங்கிலத்தில் படிக்கும்போது தமிழின் கவர்ச்சி அதன் மெட்டுதான் என்பதை உணர்ந்தேன்.  ‘Lord is my shepherd; I shall not want.’ என்பதில் உள்ள கவித்துவம் ‘தேவபிதா எந்தன் மேய்ப்பனல்லோ சிறுமை தாழ்ச்சி அடைகிலனே‘ என்பதில் இல்லை. யூத அரசனான டேவிட் இதை எழுதியதாக கூறப்படுகிறது

மேலே வளர்த்தாமல் Psalm 23 மற்றும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே

Lord is my shepherd
I shall not want

He make me to lie down in green pastures
He leads me beside the still waters.

He restores my soul
He leads me in the paths of righteousness for His name’s sake.

Yea, though I walk through the valley of the shadow of death,
I will fear no evil
For Thou art with me
Thy rod and Thy staff they comfort me.

Thou prepare a table before me in the presence of mine enemies
Thou anoint my head with oil
My cup runneth over.

Surely goodness and mercy shall follow me all the days of my life
And I will dwell in the house of the Lord for ever.

தேவபிதா எந்தன் மேய்ப்பனல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே
ஆவலதாய் என்னை பைம்புல் மேல்
அவர் மேய்த்தமர் நீர் அருளுகின்றார்

ஆத்துமந்தன்னை குளிரப் பண்ணி
அடியேன் கால்களை நீதி என்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார்

தேவபிதா எந்தன் மேய்ப்பனல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே

சாநிழல் பள்ளத்திரங்கிடினும்
சற்றும் தீங்கு கண்டஞ்சேனே
வானபரன் என்னோடிருப்பார்
வலைதடியும் கோலுமே தேற்றும்

தேவபிதா எந்தன் மேய்ப்பனல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே

பகைவற்கெதிரே ஒரு பந்தி
பாங்காய் எனக்கே ஏற்படுத்தி
சுக தைலம் கொண்டென் தலையை
சுபமாய் அபிஷேகம் செய்குவார்

தேவபிதா எந்தன் மேய்ப்பனல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே

ஆயுள் முழுவதும் என் பாத்திரம்
அருளும் நலமுமாய் நிரம்பும்
நேயன் வீட்டில் சிறப்போடே
நெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன்

தேவபிதா எந்தன் மேய்ப்பனல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

4 thoughts on “ஈஸ்டருக்காக

  1. சீர்காழி எனும் தமிழ்நாட்டு ஊரில் பிந்திய 70 கள் வரை 4 உயர்நிலைப்பள்ளிகள். ஊரின் அதன் சுற்றுவட்டாரத்தில் 30 விழுக்காடு முஸ்லிம் தமிழர்கள். இந்து மாணவர்கள் 50 %, 50% , படித்தது லுத்தரன்/இந்து பள்ளிகளில். கேத்தலிக், முஸ்லிம் மாணவர்கள் 90 % படித்தது இந்து பள்ளிகளில். நான் படித்த இந்து உ. பள்ளியில் காலை பிராத்தனையில் பாடுவது ‘மாசில் வீணையும் ‘. முன்னின்று சில முஸ்லிம் மாணவர்களும் பாடியதுண்டு. பெரிய விடயமாக யாரும் பேசியதில்லை. இயல்பான நிகழ்வு…. கனவோ என ஐயமுண்டு, தற்போது.

    Like

  2. ‘தேவபிதா எந்தன் மேய்ப்பனல்லோ’ இனிமையான துதிப் பாடல். அதற்கு மேல் ஆராயத் தெரிந்திருக்கவில்லை முன்பு. இன்று உங்கள் இடுகையைப் படிக்கும் போது தான் புரிகிறது அது தாவீதின் சங்கீதம் என்பது. தமிழ் மொழிபெயர்ப்பு… வெகு அற்புதம்.

    Like

  3. முத்துசாமி, வாசன் பிள்ளை, இமா க்றிஸ், இந்தப் பாடலை நீங்களும் நினைவு கூர்வது மகிழ்ச்சி

    Like

முத்துசாமி இரா -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.