பொருளடக்கத்திற்கு தாவுக

நாட்டுடமையாக்கப்பட்ட எழுத்து 1: ஏ.கே. வேலன்

by மேல் மே 28, 2018

தமிழ் நாட்டில் ஒரு பழக்கம் இருக்கிறது. திடீரென்று நினைத்துக் கொண்டு எழுத்தாளர்கள்/தமிழறிஞர்களின் எழுத்துக்களை நாட்டுடமை ஆக்குவது. சாதாரணமாக முதல்வராக இருப்பவரின் whims and fancies-ஐ அடிப்படையில்தான் இது நடக்கிறது. 2009-இல் அப்படி நாட்டுடமை ஆக்கப்பட்டவர்களைப் பற்றிய குறிப்புகளை மறைந்த சேதுராமன் எழுதினார். அப்போதிலிருந்தே அப்படி நாட்டுடமை ஆக்கப்பட்ட எல்லா எழுத்துக்களையும் பற்றி எழுத வேண்டும் என்று எனக்கொரு ஆசை.

சில முறை தரமற்ற எழுத்தாளர்களின் படைப்புகளையும் நாட்டுடமை ஆக்கிவிடுகிறார்கள். அதுவும் கட்சி சார்ந்தவர், தெரிந்தவர், எழுத்து எத்தனை குப்பையாக இருந்தாலும் சரி, செய்துவிடுவோம் என்று தோன்றிவிடுகிறது என்று நினைக்கிறேன். ஏ.கே. வேலன் அந்த ரகம்.

ஏ.கே. வேலன் சினிமாக்காரர். தை பிறந்தால் வழி பிறக்கும், காவேரியின் கணவன் மற்றும் சில படங்களைத் தயாரித்தவர். சொந்தமாக ஸ்டுடியோ வைத்திருந்தாராம். வணங்காமுடி, குறத்தி மகன், மாட்டுக்கார வேலன் திரைப்படங்களின் கதை இவருடையதுதானாம். கரந்தை தமிழ்ச் சங்கத்தில் கட்டிடங்கள் கட்டிக் கொடுத்திருக்கிறார்.

திராவிட இயக்கத்தில் இருந்திருக்கிறார். அண்ணா, கருணாநிதியோடு சிறை சென்றிருக்கிறாராம். பிற்காலத்தில் அனுமார் அனுபூதி என்றெல்லாம் புத்தகங்களும் எழுதி இருக்கிறார். காஞ்சி மகா பெரியவரின் பக்தராம்.

இரண்டு நாடகங்களை – காவேரிக் கரையினில், மீனாட்சி நாடகத் தமிழ் – படித்தேன். தண்டமாக இருந்தது. காவேரிக் கரையினில் ஐம்பது அறுபதுகளில் திரைப்படமாக வந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும். இவர் எழுதியதை எல்லாம் நாட்டுடமை ஆக்க ஒரு முகாந்தரமும் இல்லை. கருணாநிதி தமக்குத் தெரிந்தவர், திராவிட இயக்கத்தில் இருந்தவர் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் இதை செய்திருக்க வேண்டும். இந்தக் கொடுமை எல்லாம் என்றுதான் நிற்குமோ தெரியவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டுடமை ஆக்கப்பட்ட எழுத்துக்கள்

7 பின்னூட்டங்கள்
 1. As usual, you have taken a dig at Karunanithi. He is not CM now; and, also, not active If he had taken a decision to dedicate a corpus of a writer to the government, the incumbent Government of TN can undo it. You can take up with them. Otherwise too, the Government is not friendly with DMK; they’re friendly only with BJP. So, they can undo all the acts or proposals of Karunanithi.

  Whether a writer’s work is to be owned by the government is the government’s own decision. Like giving away awards to writers. More often than not, the awards go to unmerited We can’t do anything about it. If at all we can create our awards and give away to whomsoever according to, to use your idiom, our whims and fancies.

  About A K Velan, I know nothing. But I can say a few words on such acts.

  When government proposes to own all works of a writer, it does not do so autocratically. It gives financial compensation to the next of the kin of the writer Always the owning of the work of the writer is posthumously. Many decades after his death, TN Govt owned Bhartiiyar’s work. In some cases, the family itself comes forward to make the request so that the copyright rests with the government for ever safely. And every publisher does not earn using the work w/o giving anything to the kin. Sometimes,the family objects for their own reason In the case of Uu Ve Sa, it happened. His family is rich enough to set up their own publishing house and they own the copyright of all Uv Ve Sa’s work. They’re publishing them. You can see their stall in Chennai book fair. They get income. It doesn’t go to anyone outside the family.

  When Karunanithi proposed to make government own the copyright of all his work, the family objected. Respecting their sentiments Karunanithi let the matter go. Bharatiyar’s family didn’t object to it when the government proposed The proposal came too late. It should have come immediately after his death and the compensation would have helped the family L his wife and a small daughter much in their poverty. When it did, the mother was dead for many decades; and the two daughters became grandmothers well settled – out of poverty.

  As a matter of fact, there was a proposal that came from different quarter: a friend of Bhratiayar asked Chellamaal to give all her husband’s books – past and unpublished – to him, he could edit them thoroughly or get them edited and publish them using his own resources and she get some amount out of it, which could pull them out of poverty. She was willing but she had a notorious elder brother Appadurai. The man felled the proposal. She died in poverty Her daughter cursed her mama – for this and many other acts She even called him Throhi (If you need authority, I can give you).

  So, there are many sides to an issue of which only one – that is your favorite side of condemning the people you dislike, for your own reasons – gets displayed in this blog post.

  Like

  • விநாயகம்,

   நான் ஏ.கே. வேலனின் எழுத்துக்களை படித்துப் பார்த்தேன். அவற்றை முழுவதுமாக நிராகரிக்கிறேன். அவர் எழுத்துக்களை இலக்கியம் என்றோ, அல்லது வரலாற்று முக்கியத்துவம் உள்ளவை என்றோ கருதவில்லை. அப்படிப்பட்ட எழுத்தை நாட்டுடமை ஆக்குவது என் கண்ணில் கேலிக்கூத்தே. அதைப் பதிவு செய்கிறேன்.

   ஏ.கே. வேலனின் எழுத்துக்களை நீங்கள் படித்ததே இல்லை, ஆனால் கருணாநிதியைக் குறை சொல்லப் பதிவு எழுதி இருக்கிறேன் என்று முடிவு எடுக்கிறீர்கள். சம்பந்தமே இல்லாமல் இன்று கருணாநிதி முதல்வராக இல்லை என்கிறீர்கள். அவர்தான் இன்றைய முதல்வர் என்று யார் சொன்னது? சூரியன் கிழக்கே உதிக்கும் போன்ற மணியான கருத்துகளையும் அடுத்தபடி எழுதுவீர்களா? அரசின் முடிவு என்கிறீர்கள். அரசு என்ன வெற்றிடத்திலா இயங்குகிறது? அரசின் முடிவை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விதியா? நம்மால் ஒன்றும் செய்யமுடியாது என்கிறீர்கள். என்னால் முடிந்ததை நான் செய்கிறேன், உங்களால் ஒன்றும் செய்ய முடியாவிட்டால், அல்லது என் செயல்களில் பயனில்லை என்று நீங்கள் கருதினால் அதற்கு நான் என்ன செய்ய?

   உங்கள் நடை பார்த்த மாதிரி இருக்கிறது. நீங்கள்தான் ஜோ அமலனோ? ஜோ அமலன் போன்றே முதலில் முடிவெடுத்துவிட்டு அதற்கப்புறம் அதற்கான வாதங்களத் தேடுகிறீர்கள்…

   Like

   • I’ve explained to you how the Government declares a corpus of a writer as Government-owned. I’ve also given instances of Bharatiar and Uv Ve Sa.

    There’s a department for Tamil language and culture in TN set up when Karunanidhi was CM and is being continued now. It’s that department which does all work relating to writers. Of course, the CM has the hand in it if he is interested in language and literature. Karunanidhi was. I hope you’ll agree at least that he is interested in Tamil literature. 🙂 Now EPS as CM has no interest. The department recommends writers for approval of CM and CM signs on the dot as for EPS, literature ended when he left his school. He leaves all to that department. So, it was Karunanidhi who took personal interest in recommendations. Government does not put up such proposals before the public for such recommendation. If they do, you can register your strong protest against A K Velan or whosoever you have a strong prejudice against. Recently, Modi Govt has decided that it is going to ask the public to suggest names for Padma Awards. TN Govt should follow the example.

    In TN, writers and readers are like politicians: or, modern literature is seriously politicised. I’ve written an article on this subject in Thinnai. Some writers or friends of such writers rate the merits of a writer based on such considerations as ”Does he or she belongs to my caste or religion? or, Does he or she has sympathies with my caste and religion?

    So putting up the aforesaid proposals before the general public will open a can of worms. No one will agree with other. Like in social media, there will be grouping and false ‘like votes’. TN is already riven with caste and religious hatred and should the Government itself add one more catalyst to divide people ?

    About A K Velan, I said that, like you there may be so many who don’t want anyone to be elevated to any honor if that person or writer is even remotely connected to Dravidian movement or policies. Like Jayamohan, you summarily reject all writers who have any association with Dravidian movement. (If not, tell me a single such writer you like)

    The only yardstick to become a meritorious writer is the writer shouldn’t have any connection with such movement and policies. Jayamohan rejects Communist writers and all writers who have sympathy with Dravidian or left movement. It obviously means Bharatidasan is rejected.

    So personal prejudices rooted in caste and religion are vile bases on which we like or dislike a writer. You cannot like all that Karunanithi has written – as you said in your earlier blog post – merely because he is in your hate list of Dravidian writers. It’s your right to hate. But can we base our judgement of a writer on personal hate?

    It is okay to reject A K Velan but it is one side of the coin. There’s the other side, as said earlier. i.e. others who do like such writers to be honored. Whether the govt should honor them too, yes, it should. The same Jayamohan has also said that a writer will be correctly adjudged only after 50 years. (I don’t exacly remember whether he mentioned five or ten decades) So, whether you or I or Jayamohan, likes or dislikes a writer, all likes and dislikes are like words written on water. The posterity will decide – when Dravidian movement is lost in limbo and the scene is clear of all prejudices and predilections.

    It is your blog; so it is normal to register your dislike.

    As said, I’ve not read A K Velan. I cannot make any remark about his calibre as a writer.

    Like

 2. Many years ago, when I started writing, it was the nick you mentioned here. Now in my oriignal name. In Tamlhindu, I write with the nick BSV (the short form for my full name). I don’t gain or lose anything with nicks. Hopefully, you, too.

  Like

 3. பாலசுந்தர வினாயகம்,

  உங்கள் எதிர்வினையைப் படிக்கும்போது அயர்ச்சிதான் ஏற்படுகிறது. இப்படியா அடிப்படை புரிதல்கள் இல்லாமல் எழுதுவீர்கள்? அனேக பெண் எழுத்தாளர்கள் கூட என் கண்ணில் முழுத் தோல்விகள்தான். நான் பெண்களை வெறுக்கிறேன், அதனால் பெண் எழுத்தாளர்களை நிராகரிக்கிறேன் என்றா பொருள் கொள்வீர்கள்? மடத்தனத்துக்கும் ஒரு எல்லை இருக்கிறது.

  ஏ.கே. வேலன் எழுதிய ஒரு எழுத்தைக் கூடப் படிக்காமல் ஏ.கே. வேலனை இந்த கௌரவத்துக்கு தேர்ந்தெடுத்தது சரியே என்று எப்படித்தான் பேசிக் கொண்டே போகிறீர்கள் என்று எனக்கு கொஞ்சமும் புரியவில்லை.

  // About A K Velan, I said that, like you there may be so many who don’t want anyone to be elevated to any honor if that person or writer is even remotely connected to Dravidian movement or policies. //
  இலக்கியத்தின் தரம் இயக்கச் சார்பினால் நிர்ணயிக்கப்படுவதில்லை. இதையெல்லாம் கூடவா விளக்க வேண்டும்? கேனத்தனமாக இருக்கிறது. திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தால்தான் – இலக்கியத் தரம் மோசமாக இருக்கிறது என்பதற்காக அல்ல – ஏ.கே. வேலன், கருணாநிதி போன்றவர்களின் எழுத்தை நிராகரிக்கிறேன் என்று நீங்கள் கருதுவது உங்கள் கருத்து சுதந்திரம். உங்கள் கருத்தை சுத்தப் பிதற்றல் என்று நிராகரிக்கும் கருத்து சுதந்திரம் எனக்கும் உண்டு என்பதையாவது உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

  // If not, tell me a single such writer you like // For the record, அண்ணாதுரை ஒருவரைத் தவிர இலக்கியத்தின் அருகே கூட வரும் எந்த திராவிட இயக்கத்தைச் சேர்ந்த புனைவெழுத்தாளரையும் நான் இது வரை படித்ததில்லை. அண்ணாதுரையின் ஓரிரவு நாடகத்தைப் பற்றி புகழ்ந்து இதே தளத்தில்தான் எழுதி இருக்கிறேன், நீங்கள் படிக்கவில்லை என்பதற்கெல்லாம் நானா பொறுப்பேற்க முடியும்? நீங்கள் குறிப்பிடும் ஜெயமோகன் மட்டுமே கருணாநிதி, தென்னரசு ஆகியோரின் பெயர்களையாவது தன் seminal பட்டியலில் குறிப்பிட்டிருக்கிறார். (அவர் அப்படி குறிப்பிட்டதற்கு நான் கடுமையாக எதிர்வினை புரிந்திருக்கிறேன்.). அண்ணாதுரை பற்றி எனக்கிருக்கும் ஓரளவு நல்ல அபிப்ராயம் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. சரி எங்கள் இருவருக்கும்தான் தெரியவில்லை, திராவிட இயக்கச் சார்புடையவர்கள் எழுதிய நல்ல இலக்கியப் படைப்புகளை நீங்கள்தான் சுட்டிக் காட்டுங்களேன்!

  Like

Trackbacks & Pingbacks

 1. நாட்டுடமையாக்கப்பட்ட எழுத்து 1: ஏ.கே. வேலன் – TamilBlogs
 2. நாட்டுடமை ஆக்கப்பட்ட எழுத்து 2: என்.வி. கலைமணி | சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: