ஷெல்டன் போலக் சமஸ்கிருத விற்பன்னர். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். Clay Sanskrit Library என்ற அமைப்பின் எடிட்டராகப் பணியாற்றி ராமாயணம், மஹாபாரதம், காளிதாசனின் நாடகங்கள் போன்ற பல புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் Murty Classical Library அமைப்பின் எடிட்டராகவும் இருக்கிறார்.
நான் போலக்கின் எந்தப் புத்தகத்தையும் இது வரை படித்ததில்லை. அங்கும் இங்குமாக போலக்கைப் பற்றி படித்தபோது அவருடைய கருத்துக்கள் பலவற்றையும் நான் மறுப்பேன் என்றுதான் தோன்றுகிறது. உதாரணமாக சமஸ்கிருதம் ஆதிக்க மொழி என்கிறாராம். சமஸ்கிருதம் ஆதிக்கம் செய்தவர்களின் கருவியாகப் பயன்பட்டிருக்கலாம்தான். ஆங்கிலத்தில் பேசினாலும் எழுதினாலும் இன்றும் கூட உங்கள் வார்த்தை எடுபடத்தான் செய்கிறது. அது ஆங்கிலத்தின் குறை அல்ல. Information asymmetry எப்போதும் விஷயம் தெரிந்தவனுக்குத்தான் சாதகமாக இருக்கும் என்பது அடிப்படையான உண்மை. அதை போலக் புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது.
இருந்தாலும் போலக்கின் இந்தப் பேட்டியைப் படித்தபோது அவர் உண்மையான scholar என்ற எண்ணம் உறுதிப்பட்டது. அவருடைய கருத்துக்கள் out of context ஆக மேற்கோள் காட்டப்படுகின்றனவோ என்று தோன்றியது. உதாரணமாக:
every document of civilisation is at the same time a document of barbarism. A thing of beauty often rests on the foundations that are very ugly. The job of the scholar is to pay attention to both.
சரிதானே? தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டுவதால் ஏற்பட்ட வரிச்சுமையை அன்றைய விவசாயிகள் எதிர்த்தார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
நீங்கள் போலக் எழுதிய புத்தகம்/கட்டுரை படித்திருக்கிறீர்களா? எதையாவது பரிந்துரைப்பீர்களா? சுட்டி ஏதாவது கொடுத்தால் இன்னும் சிறப்பு…
பேட்டியைப் படித்துப் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: Scholars
Have you heard of Wendy Doniger another scholar employed by a prestigious university. Frankly I wouldn’t pay attention to either one of them. As my friend would say, Opinions are like ……..,, everyone has one. It is like the five blind men describing an elephant:-)
LikeLike
இவர் வடமொழி படித்தவர் . படித்து ஆராய்ந்து பிறகு தன் கருத்துக்களை
சொல்கிறார் .
போலாக் சொல்வது இதுதான் .
வடமொழிக்கு எழுத்துக்கள் இல்லை .எழுத்து பின்னாளில் வந்தது .
வடமொழி சாமானியர் மொழி இல்லை –
உ -ம் பெண்கள் வடமொழியில் பேசவில்லை
வடமொழி பண்டிதர் மட்டும் பேசினர் .
வடமொழி இந்தியா முழுவதும் பயன்படுத்தப்பட்டது .
இது ஒரு செத்த மொழி – ஆயிரம் ஆண்டுகளாக இலக்கியம் என்று இல்லை
ஆராய்ச்சியில் அவர் சொல்வதை மறுத்து பேச நிறைய
தெரிந்திருக்க வேண்டும் . இதை வாதம் என்பர்
இன்னொரு விதமாகவும் வாதம் வரும் .
ஜலப்பை என்று சொல்வார்கள் . தன் கருத்து ஒன்றுதான் சரி .
எதிராளியை வாதத்தில் பேச விடாமல் தன் கருத்து ஒன்றுதான் சரி
என்று சாதிக்க வேண்டும் . அப்புறம் எதிராளிக்கு என்ன தெரியும் ? etc etc
போலாக் இஸ் யூஸ்லெஸ் –
இதை வடமொழியில் சொல்ல தெரியாதவர்கள் சொல்வது
LikeLike
ரீடர்,
பல்கலைக்கழகப் பதவி இருந்தால் அது ஒரு அங்கீகாரம். ஐராவதம் மகாதேவன், நாகசாமி போன்றவர்கள் எந்தப் பல்கலைகழகத்திலும் பதவியில் இல்லை. அதனால் அவர்கள் அறிஞர்கள் இல்லை என்றாகிவிடுமா என்ன?
மெய்ப்பொருள், போலக் என்ன சொல்கிறார் என்று விளக்கியதற்கு நன்றி
LikeLike
http://www.caravanmagazine.in/culture/literature/what-does-sita-really-say-in-valmikis-ramayana
Here is an interesting article. It will always we hard for a westerner to get the Indian point of view. Please see Sheldon Pollack’s admission in this article. He will never get the essence of the culture and religion, There are stories and there are deeper meanings to the stories.
LikeLike
If women didn’t speak Sanskrit, what language did they speak?
Gargi was a noted woman scholar. From a Kalki article published many years ago
LikeLike
பெண்கள் சம்ஸ்க்ரிதம் பேசா விட்டால் என்ன மொழியில் பேசினார்கள் ?
பிராகிருதம் . இது பேச்சு மொழிக்கு பெயர் .
பிராகிருதம் என்று மூன்று மொழிகள் இருந்தன என தெரிகிறது .
வேத காலத்தில் சம்ஸ்க்ரிதம் தெரிந்த பெண்களும் இருந்தனர் .
அது போல வேதத்தில் பிராமணர் அல்லாதவர்களும் வருகிறார்கள் .
விஸ்வாமித்திரர் அரசனாக இருந்தவர் .
வால்மீகி வேடனாக இருந்தவர் .
வேதத்தை தொகுத்த வியாசர் மீனவ பெண்ணிடம் பிறந்தவர்
LikeLike