எழுத்தாளர் ஆர்வியின் சிறுகதை பரிந்துரைகள்

இந்த ஆர்வி நானில்லை. ஒரு காலத்தில் புகழ் பெற்ற எழுத்தாளர். கண்ணன் என்று சிறுவர் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர். போன தலைமுறைக்காரர்களுக்கு எழுத்தாளர் ஆர்வியைத் தெரிந்திருக்கும்.

அவர் 30-40களில் வெளிவந்த சிறுகதைகளில் தனக்கு பிடித்தவற்றை பரிந்துரைப்பதை இங்கே மற்றும் இங்கே பார்த்தேன். (பசுபதி சாரின் தளத்தில்தான்) இவற்றுள் சிலவற்றையே நான் படித்திருக்கிறேன். படித்தவரை எதுவும் என் பட்டியலில் இடம் பெறாது. ஆனால் அந்தக் காலகட்டத்துக்கு இந்தப் பரிந்துரைகள் ஒரு கண்ணாடியாக இருக்கின்றன.

வசதிக்காக இங்கே பட்டியலாக:

 1. வ.வே.சு. ஐயர்குளத்தங்கரை அரசமரம்
 2. கல்கிகேதாரியின் தாயார்
 3. எஸ்விவி – கோவில் யானை
 4. தீபன் – பாப்பாவும் மரப்பாச்சியும்
 5. கு.ப.ரா.திரைக்குப் பின்னே
 6. பிச்சமூர்த்திகவலை மாடு
 7. புதுமைப்பித்தன்ஸித்தி
 8. சிதம்பரசுப்ரமணியன்சசாங்கனின் ஆவி
 9. பி.எஸ். ராமையாபணம் பிழைத்தது
 10. த.நா. குமாரசாமிராமராயன் கோவில்
 11. தி.ஜ.ர.நொண்டிக்கிளி
 12. சி.சு. செல்லப்பாநொண்டிக் குழந்தை
 13. லா.ச.ரா.பச்சைக் கனவு
 14. கி. சந்திரசேகரன்வெள்ளையன்
 15. க.நா.சு.இரண்டாம் கல்யாணம்
 16. தி.ஜா.ரத்தப்பூ
 17. அ.கி. ஜயராமன் கண்ணம்மா
 18. கி.ரா.(A.K. ராமச்சந்திரன்)சொத்துக்குடையவன்
 19. குகப்ரியைரசியா
 20. கி. சரஸ்வதி அம்மாள்ஜரிகைச் சேலை
 21. புரசு பாலகிருஷ்ணன்பொன் வளையல்
 22. சாவித்திரி அம்மாள்பழைய ஞாபகங்கள்
 23. றாலி கண்டதும் காதல்
 24. எம்.வி. வெங்கட்ராம்வேதனா
 25. வல்லிக்கண்ணன்நல்லமுத்து
 26. ஆர். ஷண்முகசுந்தரம்கல்லினுள் தேரை
 27. கி.வா.ஜ.கலைச்செல்வி
 28. கா.ஸ்ரீ.ஸ்ரீ.மழையிடையே மின்னல்
 29. ஸேனாசண்டையும் சமாதானமும்
 30. ரா.ஸ்ரீ. தேசிகன்மழை இருட்டு
 31. கௌரி அம்மாள்தீர்மானம்
 32. அகிலன்காசு மரம்
 33. ஜி.எஸ். மணிஅலையும் அமைதியும்
 34. பி.வி.ஆர்.தழும்பு
 35. சோமுமுதல் குழந்தை
 36. ஆறுமுகம்களத்து மேடு
 37. ? – எங்கிருந்தோ வந்தான் (எழுதியவர் பேர் குறிப்பிடப்படவில்லை)
 38. குமுதினி – ? (சிறுகதையின் பெயர் ஆர்விக்கு மறந்துவிட்டதாம்)
 39. தேவன் – ? (சிறுகதையின் பெயர் ஆர்விக்கு மறந்துவிட்டதாம்)
 40. ஸ்ரீரங்கம் ராமகிருஷ்ணன் – ? (சிறுகதையின் பெயர் ஆர்விக்கு மறந்துவிட்டதாம்)

ஆர்வி எழுதிய ‘நிலா சிரித்தது‘ என்ற குறுநாவலை சமீபத்தில் படித்தேன், அதைப் பற்றி தனியாக எழுதுவதற்கில்லை. ஐம்பதுகளின் குடும்ப மெலோட்ராமா திரைப்படம் போல இருந்தது.

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

2 thoughts on “எழுத்தாளர் ஆர்வியின் சிறுகதை பரிந்துரைகள்

 1. ஐம்பத்தைந்தில் தொடங்கி ஏழெட்டு ஆண்டுகள் கண்ணன் என் இளம்வயது நண்பன். பத்திரிகை நின்றபோது ஒரு நண்பனின் இறப்பாக இருந்தது. ஆசிரியர் என்ற பொறுப்பில் தானும் எழுதி பல எழுத்தாளர்களுக்கும் ஆர்வி வாய்ப்புக்கொடுத்தார். சந்திரகிரிக்கோட்டையும் லீடர் மணியும் இப்போதும் நினைவில் இருக்கின்றன.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.