ஆங்கிலக் கெட்ட வார்த்தைகளின் தர வரிசை

வாழ்க்கை பொருளற்றதாகத் தோன்றி இருக்கும் இரண்டாவது தருணம். கடவுள் என்று யாராவது இருந்தால் அவர் எறும்புப் புற்றுகளுக்குள் நடந்து செல்லும் மதயானைக் கூட்டம் மாதிரிதான் இருக்க வேண்டும்.

இதற்கு முன்னாலேயே கூட சிலிகன் ஷெல்ஃபில் எழுதுவது விரும்பி அல்ல, வெறும் பழக்கமாகத்தான் மாறிக் கொண்டிருந்தது. அதனால்தான் இடைவெளி விழுந்துவிட்டது. என்னவோ, இன்று இந்தக் கட்டுரையைப் பார்த்ததும் திட்டுவதற்கான பல வார்த்தைகளைத் தவற விட்டுவிட்டோமே என்று தோன்றியது. இங்கிலாந்தில் கெட்ட வார்த்தைகள் எவை ரொம்ப ஸ்ட்ராங்கனவை, எவை சுமார், எவை போகிறபோக்கில் சொல்பவை என்று வாக்கெடுப்பு நடத்தி தரம் பிரித்திருக்கிறார்களாம். சில வார்த்தைகளை (munter, clunge…) நான் கேள்விப்பட்டதே இல்லை.

முழு பட்டியலையும் இங்கே பார்க்கலாம். மிக மோசமானவை ‘cunt’, ‘fuck’, ‘motherfucker’ தானாம்.

நான் அடிக்கடி பயன்படுத்துபவை எல்லாம் mild கெட்ட வார்த்தைகள்தான் என்று தெரிந்துகொண்டேன். ‘Bloody’, ‘damn’, ‘goddamn’ இத்யாதி. அவை கெட்ட வார்த்தைகள் என்பதே இப்போதுதான் தெரிகிறது. ரொம்ப கோபம் வந்தால் ‘bastard’, ‘asshole’, ‘fuck’.

ஆங்கிலத்திலும் மகா கெட்ட வார்த்தை motherfucker – அதாவது ‘தாயோளி/தாயோழி’தானாம். ஹிந்தியிலும் மாதர்சோத்-தான் இந்தப் பெருமையைப் பெறும் என்று நினைக்கிறேன். ஆச்சரியமாக இந்தப் பட்டியலில் sisterfucker – வக்காளி/வக்காளஓழி/பெஹன்சோத்தைக் காணோம்.

தமிழில் இன்று அடிக்கடி பயன்படுத்தப்படுவது ‘ங்கோத்தா’வாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போதெல்லாம் ‘மயிரு’ கெட்ட வார்த்தையே இல்லை என்று நினைக்கிறேன். நான் தமிழகத்தில் வாழ்ந்த காலத்தில் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவது ஓரளவு தவறாகப் பார்க்கப்பட்டது. ஹாஸ்டல் வட்டாரங்களில் சர்வசாதாரணமாகக் கேட்கலாம். சென்னை போன்ற பெருநகரங்களில் ஓரளவு கேட்கலாம். ஆனால் பொதுவாகத் தவிர்க்கப்பட்டது. இப்போது டிவியிலேயே கூட கேட்க முடிகிறது. அதிலும் ‘நீ பெரிய ஹேரா’ என்று கேட்கும்போதோ இல்லை ‘நீ பெரிய’ என்று சொல்லிவிட்டு முடியைத் தொட்டுக் காட்டும்போதோ சிரிப்புதான் வருகிறது. பேசுவது என்று முடிவு செய்துவிட்டால் அப்புறம் என்ன போலித்தனம்?

தம்பிக்கு எந்த ஊரு திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் ‘Bastard-னு என்ன பாலிஷ்டா திட்டிட்டு போறான் பாத்தியா’ என்று வசனம் பேசுவார். ‘Bastard’-னா பாலிஷ்ட், ‘தேவடியா பையன்’ என்றால் லோ க்ளாசா என்று சிறு வயதில் நிறைய சிரித்திருக்க்கிறோம். ஆங்கிலத்தில் திட்டினால் ஹை க்ளாஸ் என்ற மனநிலை தமிழகத்தில் இன்னும் மாறவில்லை போலிருக்கிறது.

கெட்ட வார்த்தைகள் அனேகமாக பெண்ணைத்தான் குறி வைக்கின்றன. ‘Fatherfucker’ அல்லது ‘அண்ணனஓழி’ அல்லது ‘பாய்சோத்’ என்று ஏன் வார்த்தைகளே இல்லை?

நீங்கள் எப்படி? கெட்ட வார்த்தைகள் இன்று முன்பைவிட சரளமாகப் புழங்குகின்றன என்று உணர்கிறீர்களா? அன்றாடப் பேச்சு வழக்கில் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவீர்களா? ஆங்கிலத்திலா, தமிழிலா, இல்லை வேறு மொழியிலா? என்ன வார்த்தைகளைப் பயன்படுத்துவீர்கள்? நீங்கள் அடிக்கடி கேட்கும் கெட்ட வார்த்தை என்ன?

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

தொடர்புடைய பதிவு: ஆங்கிலக் கெட்ட வார்த்தைகளின் தர வரிசை