வாழ்க்கை பொருளற்றதாகத் தோன்றி இருக்கும் இரண்டாவது தருணம். கடவுள் என்று யாராவது இருந்தால் அவர் எறும்புப் புற்றுகளுக்குள் நடந்து செல்லும் மதயானைக் கூட்டம் மாதிரிதான் இருக்க வேண்டும்.
இதற்கு முன்னாலேயே கூட சிலிகன் ஷெல்ஃபில் எழுதுவது விரும்பி அல்ல, வெறும் பழக்கமாகத்தான் மாறிக் கொண்டிருந்தது. அதனால்தான் இடைவெளி விழுந்துவிட்டது. என்னவோ, இன்று இந்தக் கட்டுரையைப் பார்த்ததும் திட்டுவதற்கான பல வார்த்தைகளைத் தவற விட்டுவிட்டோமே என்று தோன்றியது. இங்கிலாந்தில் கெட்ட வார்த்தைகள் எவை ரொம்ப ஸ்ட்ராங்கனவை, எவை சுமார், எவை போகிறபோக்கில் சொல்பவை என்று வாக்கெடுப்பு நடத்தி தரம் பிரித்திருக்கிறார்களாம். சில வார்த்தைகளை (munter, clunge…) நான் கேள்விப்பட்டதே இல்லை.
முழு பட்டியலையும் இங்கே பார்க்கலாம். மிக மோசமானவை ‘cunt’, ‘fuck’, ‘motherfucker’ தானாம்.
நான் அடிக்கடி பயன்படுத்துபவை எல்லாம் mild கெட்ட வார்த்தைகள்தான் என்று தெரிந்துகொண்டேன். ‘Bloody’, ‘damn’, ‘goddamn’ இத்யாதி. அவை கெட்ட வார்த்தைகள் என்பதே இப்போதுதான் தெரிகிறது. ரொம்ப கோபம் வந்தால் ‘bastard’, ‘asshole’, ‘fuck’.
ஆங்கிலத்திலும் மகா கெட்ட வார்த்தை motherfucker – அதாவது ‘தாயோளி/தாயோழி’தானாம். ஹிந்தியிலும் மாதர்சோத்-தான் இந்தப் பெருமையைப் பெறும் என்று நினைக்கிறேன். ஆச்சரியமாக இந்தப் பட்டியலில் sisterfucker – வக்காளி/வக்காளஓழி/பெஹன்சோத்தைக் காணோம்.
தமிழில் இன்று அடிக்கடி பயன்படுத்தப்படுவது ‘ங்கோத்தா’வாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போதெல்லாம் ‘மயிரு’ கெட்ட வார்த்தையே இல்லை என்று நினைக்கிறேன். நான் தமிழகத்தில் வாழ்ந்த காலத்தில் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவது ஓரளவு தவறாகப் பார்க்கப்பட்டது. ஹாஸ்டல் வட்டாரங்களில் சர்வசாதாரணமாகக் கேட்கலாம். சென்னை போன்ற பெருநகரங்களில் ஓரளவு கேட்கலாம். ஆனால் பொதுவாகத் தவிர்க்கப்பட்டது. இப்போது டிவியிலேயே கூட கேட்க முடிகிறது. அதிலும் ‘நீ பெரிய ஹேரா’ என்று கேட்கும்போதோ இல்லை ‘நீ பெரிய’ என்று சொல்லிவிட்டு முடியைத் தொட்டுக் காட்டும்போதோ சிரிப்புதான் வருகிறது. பேசுவது என்று முடிவு செய்துவிட்டால் அப்புறம் என்ன போலித்தனம்?
தம்பிக்கு எந்த ஊரு திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் ‘Bastard-னு என்ன பாலிஷ்டா திட்டிட்டு போறான் பாத்தியா’ என்று வசனம் பேசுவார். ‘Bastard’-னா பாலிஷ்ட், ‘தேவடியா பையன்’ என்றால் லோ க்ளாசா என்று சிறு வயதில் நிறைய சிரித்திருக்க்கிறோம். ஆங்கிலத்தில் திட்டினால் ஹை க்ளாஸ் என்ற மனநிலை தமிழகத்தில் இன்னும் மாறவில்லை போலிருக்கிறது.
கெட்ட வார்த்தைகள் அனேகமாக பெண்ணைத்தான் குறி வைக்கின்றன. ‘Fatherfucker’ அல்லது ‘அண்ணனஓழி’ அல்லது ‘பாய்சோத்’ என்று ஏன் வார்த்தைகளே இல்லை?
நீங்கள் எப்படி? கெட்ட வார்த்தைகள் இன்று முன்பைவிட சரளமாகப் புழங்குகின்றன என்று உணர்கிறீர்களா? அன்றாடப் பேச்சு வழக்கில் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவீர்களா? ஆங்கிலத்திலா, தமிழிலா, இல்லை வேறு மொழியிலா? என்ன வார்த்தைகளைப் பயன்படுத்துவீர்கள்? நீங்கள் அடிக்கடி கேட்கும் கெட்ட வார்த்தை என்ன?
தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்
தொடர்புடைய பதிவு: ஆங்கிலக் கெட்ட வார்த்தைகளின் தர வரிசை
சாருவின் “கெட்டவார்த்தை”.
2008-2009 காலத்தில் அவருடைய இணையதளத்தில் கட்டுரைகளை தொகுப்பாக உயிர்மையில் வெளியிடப்பட்ட புத்தகம். வழக்கம் போல கட்டுரை நெடுகிலும் அவருடைய ஜீரோ டிகிரி & ராசலீலவை சிலாகிக்கிறார். கொஞ்சம் பீற்றிகொள்ளும் பகுதிகளை ஒதுக்கிவிட்டு பார்த்தால் ஜனரஞ்சகமான எழுத்து. கெட்டவார்த்தை ஒரு பொழுதுபோக்கு புத்தகம். உலகிலேயே பஞ்சாபிகள்தான் அதிக கெட்டவார்த்தை பயன்படுத்துகிறார்கள் என்பது இவரின் கருத்து.
எனக்கு என்னவோ அலுவலகத்தில் என்பக்கத்தில் அமர்ந்திருக்கும் சிங்கை’சீனர் தான் அதிகமா கெட்டவார்த்தை உபயோகிப்பவராக இருக்கும் என்கிற எண்ணம்.. காலையில் வேலையை ஆரம்பிக்கும் போதே Ka Ni Na என்றுதான் ஆரம்பிப்பார். (அர்த்தம் தெரிந்துகொள்ள விரும்பும் நபர்கள் இவ்விணையத்தில் தெரிந்துகொள்ளலாம் http://www.youswear.com/index.asp?language=Hokkien+
LikeLike
Jesus Christ
கெட்ட வார்த்தையா ?
LikeLike
சௌகந்தி, திட்ட இன்னொரு சொற்றொடரைக் சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி!
பெருமாள் முருகன், நீங்கள் இந்தத் தளத்தைப் பார்த்தது பெரிய மகிழ்ச்சி! உங்கள் பேரில் இங்கே உள்ள பக்கத்தையும் பார்த்தால் இன்னும் மகிழ்ச்சி அடைவேன். உங்கள் புத்தகப் பித்தும் ‘நிழல் முற்றம்’ புத்தகமும் என் உள்ளம் கவர்ந்தவை.
‘Jesus Christ’ swear word ஆகப் பயன்படுத்தப்படுகிறதுதான். ஆனாலும் கெட்ட வார்த்தை இல்லைதான். கெட்ட வார்த்தை என்று ‘swear word’-ஐ மொழிபெயர்த்திருப்பது என் குறைபாடேதான். இதை விட நல்ல மொழிபெயர்ப்பு இருந்தால் சொல்லுங்களேன்!
LikeLike
தேனி, சங்கரன் கோவில் கலப்பு என்பதால் அடிக்கடி சில வார்த்தைகள் வரும். மயிறு, தாயளி. இதை என்னுடைய அண்ணன் அலுவலகத்தில் பேசிவிட அருகிலிருந்த காரைக்குடி ஆளுக்கு பலத்த அதிர்ச்சி. மயிறு என்பதை ஒரு மிகப்பெரிய கெட்ட வார்த்தையாக சென்னைக்காரர்கள் கருதுவது சிரிப்பாக வரும்.
LikeLike
ரெங்கா, // மயிறு என்பதை ஒரு மிகப்பெரிய கெட்ட வார்த்தையாக சென்னைக்காரர்கள் கருதுவது சிரிப்பாக வரும். // அது சரி. 🙂
LikeLike