சில பல சொந்தப் பிரச்சினைகளால் இந்தத் தளத்தில் எழுதுவதை நிறுத்தி இருந்தேன். எழுதுவதை விடுங்கள், என் வாழ்வில் முதல் முறையாக படிப்பதே கூட நின்றுவிட்டது. கடவுள் என்று யாராவது இருந்தால் அவர் நம் போன்ற எறும்புகள் வாழும் புற்றுகளுக்குள் நடந்து செல்லும் மதயானைக் கூட்டம் மாதிரிதான் இருக்க வேண்டும். சாரமில்லாத வாழ்க்கை என்று ஒரு கவிஞன் எழுதியது பொருத்தமாக இருக்கிறது
Here we go round the prickly pear
Prickly pear prickly pear
Here we go round the prickly pear
At five o’clock in the morning.
ஆனால் என் வாழ்வின் முதல் கவிஞன், முதல் இலக்கியவாதி இப்படிச் சொல்கிறான்.
சென்றதினி மீளாது மூடரே, நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்; சென்றதனைக் குறித்தல் வேண்டா;இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்
எனக்குப் பிடித்த கவிதைதான். கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் முடியவில்லை. இன்று பிறந்த அந்தக் கிறுக்குப் பிடித்த கவிஞனாலும் முடிந்ததா என்று தெரியவில்லை. இருந்தாலும் ஏதாவது பொய் சொல்லி, அசட்டுத் தத்துவம் பேசினாலாவது கொஞ்சம் தெம்பு வருமா என்று பார்க்க வேண்டியதுதான். அந்தக் கிறுக்கனின் வாழ்க்கையைப் பார்த்தால் அவனும் அப்படித்தான் செய்தாற்போலத் தெரிகிறது.
கவிதை அலர்ஜி என்று அலட்டிக் கொள்ளும் எனக்கும் என் உணர்வுகளை பிரதிபலிக்க கவிதைதான் கடைசியில் கை கொடுக்கிறது!
தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்
Dear RV,
I am sorry that you are going through some tough times. I hope you find the strength, courage, and support to sail through this phase and come out strong. Wish to see you more of your blogs.
LikeLike
என்னவானாலும் காலம் அதைக்கடத்திவிடும் என்பது உமக்குத் தெரியாததல்ல பலவும் படிக்கும் நண்பரே.
உமக்கு ஆறுதாலாகும் என்னும் நம்பிக்கையில் சில மேற்கோள்கள்
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்
துன்பம் வரும் வேளையிலே சிரிங்க
வள்ளுவரு சொல்லி வச்சார் சரிங்க
பாம்பு வந்து துடிக்கையில் பாழுமுடல் துடிக்கையில்
யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு?
LikeLike