பொருளடக்கத்திற்கு தாவுக

2019 – எழுத்தாளர்களுக்கான பத்மபூஷண், பத்மஸ்ரீ விருதுகள்

by மேல் ஜனவரி 28, 2019

குல்தீப் நய்யாருக்கு பத்மபூஷண் விருது கிடைத்திருக்கிறது. 4-5 மாதங்களுக்கு முன்னால்தான் இறந்தார். ஒரு காலத்தின் முக்கிய பத்திரிகையாளர். பல அபுனைவுகளை எழுதி இருக்கிறார்.

கீழே உள்ள எல்லாருக்கும் பத்மஸ்ரீ.

நர்சிங் தேவ் ஜம்வால் டோக்ரி மொழியில் பல நாடகங்களை எழுதி இருக்கிறாராம். காஷ்மீர்காரர்.

கைலாஷ் மத்பையா ஹிந்தி கவிஞராம். புந்தேல்கண்ட் பகுதியை சேர்ந்தவராம்.

நாகின்தாஸ் சங்கவி பத்திரிகையாளர். குஜராத்காரர்.

கீதா மேத்தா முன்னாள் ஒரிஸ்ஸா முதல்வர் பிஜு பட்நாயக்கின் மகள். இன்னாள் ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக்கின் அக்கா. சில புத்தகங்களை எழுதி இருந்தாலும் பதிப்பாளர் என்றே அறியப்படுகிறார். பத்மஸ்ரீ விருதை மறுத்துவிட்டாராம். இது பெரிய கௌரவம் என்றாலும் தம்பி பாஜகவின் தோழமைக் கட்சி ஒன்றுக்கு தலைமை வகிப்பதாலும், தேர்தல் அருகில் வருவதாலும், இந்த விருதை ஏற்பது இப்போது சரியாக இருக்காது என்று சொல்லி இருக்கிறார்.

முஹம்மது ஹனீஃப் கான் சாஸ்திரி – பேரே விசித்திரமாக இருக்கிறது – சமஸ்கிருத அறிஞர் போலிருக்கிறது. கீதை, காயத்ரி மந்திரம் பற்றி எல்லாம் புத்தகம் எழுதி இருக்கிறார்.

பிரிஜேஷ் குமார் சுக்லாவைப் பற்றி உத்தரப் பிரதேசத்துக்காரர் என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை.

தேவேந்திர ஸ்வரூப் வரலாற்று ஆராய்ச்சியாளராம். ஆர்எஸ்எஸ்காரர். நிறைய அபுனைவுகளை எழுதி இருக்கிறார். இவருக்கும் அவரது இறப்புக்குப் பிறகுதான் இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த முறை இலக்கியவாதிகள் பெரிதாக கௌரவிக்கப்படவில்லை. அசோகமித்திரன் போய்ச் சேர்ந்துவிட்டார். ராஜநாராயணனையாவது கவனிங்கப்பா!

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

தொடர்புடைய சுட்டி: 2019 பத்ம விருதுகள் முழு பட்டியல்

From → Awards

2 பின்னூட்டங்கள்
  1. Karthikeyan S permalink

    சென்னையிலிருந்து அன்புடன் வாசகன்.நான் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிய சமையம் எதர்ச்சியாக தங்களின் வலைப்பூவிற்கு வந்தேன்.Accidental Luck என்றுதான் சொல்ல வேண்டும்.என் வாசிப்புத் தரத்தை பெரிதாக மாற்றியதில் Siliconshelf ற்கு பெரும் பங்குண்டு.சுஜாதா மட்டுமே பெரிய எழுத்தாளர் என்றிருந்த எனக்கு பல நல்ல எழுத்தாளர்களையும்,புத்தகங்களையும் அறிமுகம் செய்துவைத்தது Siliconshelf. பல நாட்களாக தங்களுக்கு எழுத வேண்டுமென்று நினைப்பேன் ஆனால் காதலிக்கு எழுதிய கடிதத்தை கொடுப்பதற்கு தயங்கி கொடுக்காமல் வைப்பதைப்போல் இருந்துவிடுவேன்.தற்பொழுது MNC நிறுவனமொன்றில் பணியாற்றி வருகிறேன்.தொடர்ந்து Silicon shelf follow செய்து வருகிறேன்.நீங்கள் தெடர்ந்து எழுத வேண்டுமென்று கேட்டுகொள்கிறேன்.என்னைப்போன்ற இளைஞர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

    Like

    • கார்த்திக், ரொம்ப சந்தோஷம். ஆனால் நீங்கள் நினைக்கும் அளவுக்கு அவ்வளவு பெரிதாக நான் எதையும் கிழித்துவிட்டதாக எனக்குத் தெரியவில்லை. தவறாமல் ஜெயமோகன், எஸ்ரா போன்றவர்களின் பதிவுகளைப் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: