இந்தப் பட்டியலை எங்கே பார்த்தேன் என்று நினைவில்லை. தொகுத்தவருக்கு நன்றி!
- பாரதியாரின் ஆறில் ஒரு பங்கு, தடை எப்போது நீக்கப்பட்டது என்று தெரியவில்லை.
- பாரதியாரின் ஸ்வதேச கீதங்கள் 1928-இல் தடை செய்யப்பட்டது. 1929-இல் தடை நீக்கப்பட்டது.
- பாரதிதாசன் எழுதிய இரணியன் அல்லது இணையற்ற வீரன் தடை செய்யப்பட்டது , தடை எப்போது நீக்கப்பட்டது என்று தெரியவில்லை.
- அண்ணா எழுதிய ஆரிய மாயை, கம்பரசம் தடை செய்யப்பட்டன, தடை எப்போது நீக்கப்பட்டது என்று தெரியவில்லை.
- என்.வி. கலைமணி எழுதிய திருப்புகழ் ரசம் தடை செய்யப்பட்டது. தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டதால் இலங்கையில் 1947-இல் பிரசுரித்தார்களாம். கம்பரசத்தால் inspire ஆகி இதை கலைமணி எழுதினாராம். இவரது படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டன என்று நினைவு, அதனால் இப்போது தடை இருக்காது என்று நினைக்கிறேன்.
- புலவர் குழந்தை எழுதிய ராவண காவியம் 1948-இல் தடை செய்யப்பட்டது. 1971-இல் தடை நீக்கப்பட்டது. இவரது படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டன என்று நினைவு.
- தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய முதலிரவு தடை செய்யப்பட்டது. காந்தி தனது மனதின் மீதும் உடலின் மீதும் இருந்த கட்டுப்பாட்டை பரிசோதிக்க சில இளைஞிகளுடன் நிர்வாணமாக படுத்து உறங்குவாராம். இந்த நாவல் அந்தப் பரிசோதனைகளை பின்புலமாக வைத்து எழுதப்பட்டதாம். இவரது படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டன, அதனால் இப்போது தடை இருக்காது என்று நினைக்கிறேன்.
- குழந்தை ராயப்பன் எழுதிய மதுரை வீரனின் உண்மை வரலாறு புத்தகம் 2013-இல் தடை செய்யப்பட்டது.
- கே. செந்தில் மள்ளர் எழுதிய மீண்டெழும் பாண்டியர் வரலாறு தடை செய்யப்பட்டு பிறகு நீதிமன்றத்தால் தடை நீக்கப்பட்டது.
- பெருமாள் முருகனின் மாதொருபாகன் தடை செய்யப்பட்டு பிறகு நீதிமன்றத்தால் தடை நீக்கப்பட்டது.
- ம. நவீன் எழுதிய பேய்ச்சி மலேசிய அரசால் தடை செய்யப்பட்டது
தொகுக்கப்பட்ட பக்கம்: பட்டியல்கள்
இந்த புத்தகங்கள் அனைத்தும் இந்து அல்லது இந்தியா என்கிற கருத்தாக்கங்கலுக்கு எதிராக எழுதப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். விதிவிலக்கு பாரதியார் மற்றும் பாரதிதாசன் புத்தகங்கள்.
LikeLike
சந்திரசேகர், // இந்து அல்லது இந்தியா என்கிற கருத்தாக்கங்கலுக்கு எதிராக எழுதப்பட்டிருக்கிறது // அப்படியும் பார்க்கலாம். இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மத நம்பிக்கைகளைத் தாக்கி தமிழில் புத்தகங்கள் வருவதில்லை என்றூ புரிந்து கொள்ளலாம். ஏனென்றால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட Satanic Verses, Da Vinci Code போன்ற புத்தகங்களை நமது அரசுகள் தடை செய்தது வரலாறு.
LikeLike