பொருளடக்கத்திற்கு தாவுக

தமிழறிஞர் வரிசை 24: பெரியசாமி தூரன்

by மேல் ஏப்ரல் 14, 2019

தூரனைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. சிறு வயதில் அவர் தொகுத்த கலைக்களஞ்சியத்தை புரட்டிப் பார்த்திருக்கிறேன். அது ஒரு சாதனை. ஆனால் இணைய யுகத்தில் என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா கூட அவ்வளவு முக்கியமான புத்தகம் இல்லை. அவர் எழுதிய சிறுவர் பாடல்கள் சில படித்து, பாடி, கேட்டிருக்கிறேன். அவ்வளவுதான் தெரியும்.

விக்கியிலிருந்து அவருக்கு பத்மபூஷன் விருது தரப்பட்டது என்று தெரிகிறது. தகுதியானவருக்கு தரப்பட்ட விருது. எப்படி இவர் பேர் சிபாரிசு செய்யப்பட்டது என்றுதான் புரியவில்லை. 🙂

சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள் எல்லாம் எழுதி இருக்கிறார். மாயக்கள்ளன் போன்ற நாவல்கள் – (விக்கிரமாதித்தன்-வேதாளம் ஃபார்முலா) நினைவிருக்கின்றன. அவற்றின் தரம் சொல்லும்படி இருந்ததாக நினைவில்லை.

இன்று யோசித்துப் பார்த்தால் கலைக்களஞ்சியத்துக்குப் பின்னால் இருந்த உழைப்பு அசர வைக்கிறது. இவரைப் போன்றவர்களை நாம் ஏன் கொண்டாடுவதில்லை? சரி இவர் பேராவது இன்னும் சில பேர் நினைவில் இருக்கிறது. இவருடைய டீமில் யார் யார் இருந்தார்கள், அவர்களும் எவ்வளவு உழைத்திருப்பார்கள்? அவர்கள் பேர் கூடத் தெரியவில்லையே!

பாரதியாரை பல வகையாக பிரித்து தொகுத்திருக்கிறார். எடுத்துக்காட்டாக ‘பாரதியும் உலகமும்‘ பாரதி உலக நாடுகளைப் பற்றி எழுதிய கவிதைகள், கட்டுரைகளின் தொகுப்பு. பாரதியின் வீச்சு அந்தக் காலத்துக்கு மிகப் பெரியது. துருக்கி, சீனா, பாரசீகம், ரூஸ்வெல்ட் என்று பல நாடுகள், அரசியலைப் பற்றி நிறைய எழுதி இருக்கிறார்.

சரி இந்தத் தளத்தைப் படிப்பவர்களில் சிலராவது தூரனைப் பற்றி தெரிந்தவர்களாக இருக்க மாட்டார்களா, ஏதாவது சொல்ல மாட்டார்களா என்ற ஆசையில்தான் இந்தப் பதிவை எழுதுகிறேன்.

பிற்சேர்க்கை:
விஜயன் “பிரிக்கப்படாத சென்னை ராஜதானியின் கல்வி மந்திரியாயிருந்த T.S. அவினாசிலிங்கம் செட்டியார் அவர்களின் பெருமுயற்சியினால் தமிழில் கலைக்களஞ்சியம், குழந்தைகளுக்கான கலைக்களஞ்சியம், காந்தியின் அனைத்து படைப்புகளும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு 19 volumeகளாக வந்தன. குழந்தைகள் கலைக்களஞ்சிய பணி பெரியசாமி தூரனிடம் ஒப்படைக்கப்பட்டது” என்று தகவல் தருகிறார்.

தூரனின் சாகித்யங்கள் எதையும் நான் கேட்டதில்லை. ஜீவா, பி.ஆர். ஹரன், ஜெயமோகன் பதிவுகளில் அவர் சாகித்யங்களைப் பற்றி எழுதி இருக்கிறார்கள்.

ரா.கி. ரங்கராஜன் ”பெ.தூரன் ஒரு கலைக்களஞ்சியம்” என்று ஒரு அற்புதமான நூலை எழுதியிருக்கிறார் என்று ரமணன் தகவல் தருகிறார்.

தூரனின் கலைக்களஞ்சியம் இங்கே கிடைக்கிறது. கிண்டிலில் சில நூல்கள் கிடைக்கின்றன. தகவல் தந்த ஸ்ரீனிவாச கோபாலனுக்கு நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
தமிழ் விக்கி, ஆங்கில விக்கி
ஜெயமோகன் பதிவு
தென்றல் மாத இதழில் தூரன் பற்றி (அவரது புனைவுகளின் லிஸ்ட் கிடைக்கிறது) – Registration Required
தூரன் பற்றி பசுபதி தளத்தில் பகுதி 1, பகுதி 2
தமிழ் ஹிந்து தளத்தில் பி.ஆர். ஹரன்
ஜீவா எழுதிய பதிவு (தூரன் எழுதிய சாகித்யங்களைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ளலாம்)
தூரனைப் பற்றி ஒரு புத்தகம் (சனிமூலை தளம்)

From → Tamil Scholars

16 பின்னூட்டங்கள்
 1. knvijayan permalink

  பிரிக்கபடாத சென்னை ராஜதானியின் கல்வி மந்திரியாயிருந்த திரு.T .S .அவினாசிலிங்கம் செட்டியார் அவர்களின் பெருமுயற்சியினால் தமிழில் கலை களஞ்சியம்,குழந்தைகளுக்கான கலை களஞ்சியம் ,காந்தியின் அனைத்து படைப்புகளும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு 19 volume களாகவும்,வந்தன.குழந்தைகள் கலை களஞ்சிய பணி பெரியசாமி தூரனிடம் ஒப்படைக்கப்பட்டது.இத்தனை வருடங்களுக்கு பிறகும் அதன் மறு பதிப்போ அல்லது அதை update செய்யவோ இல்லை.செட்டியார் அவர்கள்தான் தமிழை பாட மொழியாக்கியவர்.தூரனை போல செட்டியார் அவர்களும் மறக்கபட்டவர்தான்.தமிழன் நன்றி இல்லாதவன்.

  Like

 2. இசைப் பேரறிஞர் பெ.தூரன் பிறந்தநாள் நூற்றாண்டு http://isaiinbam.blogspot.com/2008/07/blog-post.html

  Like

 3. விஜயன், முதலில் புத்தகம் கிடைக்க வேண்டும் இல்லையா? எழுபதுகளில்தான் நான் இந்தப் புத்தகத்தை கடைசியாகப் பார்த்திருக்கிறேன். மறுபதிப்புகள் வந்த மாதிரியே தெரியவில்லை. எப்படி நினைவிருக்கும்? அவினாசிலிங்கம் செட்டியார், தூரன் போன்றவர்கள் உலகம் எங்கும் மறக்கத்தான் படுகிறார்கள் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது, இது தமிழனின் பாரம்பரியம் மட்டும் இல்லை…
  சிமுலேஷன், உங்கள் சுட்டிக்கும் இப்போது இணைப்பு தந்திருக்கிறேன்.

  Like

 4. http://www.jeyamohan.in/?p=725

  பெ தூரனின் நூல்களில் இப்போது அச்சில் கிடைப்பது அவரது கானகத்தின் குரல் மட்டுமே என நினைக்கிறேன். மிக அற்புதமாக மொழி பெயர்க்கப்பட்ட நூல்.

  Like

 5. பெரியசாமி தூரன்: தமிழகத்தின் உண்மையான பெரியார்

  http://www.tamilhindu.com/2009/10/periyasamy-thooran-a-tribute/

  Like

 6. ரா.கி.ரங்கராஜன் ”பெ.தூரன் ஒரு கலைக்களஞ்சியம்” என்று ஒரு அற்புதமான நூலை எழுதியிருக்கிறார். தமிழிசைக்குச் சேவை செய்த தூரனை ”தமிழ்.. தமிழ்” என்று போலியாகக் கூவித் திரிந்த எந்த அரசும் சரியாகக் கண்டு கொள்ளவில்லை. சரியான கௌரவமும் அளிக்கவில்லை. தமிழிசை வளர்த்த தூரனை, குழந்தை இலக்கியம் வளர்த்த வாண்டுமாமாவை இது போன்ற இன்னும் பல கலைஞர்களை அரசு மட்டுமல்ல; சமூகமும் சரியாகக் கவனிக்கவில்லை. கௌரவப்படுத்தவில்லை. நோபல் பரிசு எனக்கே என்று பிதற்றித் திரிபவர்களுக்கே இன்று வசந்த காலமாக இருக்கிறது.
  😦

  Like

 7. Bandhu permalink

  பெரியசாமி தூரன் என்றவுடன் அவர் எழுதிய புண்ணியம் ஒரு கோடி.. என்ற பாடல் நினைவிற்கு வருகிறது. அற்புதமான பாடல்..

  Like

 8. இசையுலகில் சந்தானம் தூரனை தொடர்ந்து முன்வைத்தார். ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன் போன்றவர்கள் பெரும்பாலும் தூரனின் ஒரு பாடலையாவது பாடிவிடுகிறார்கள். இசைமேடைகளில் அவரும் சுத்தானந்த பாரதியும் இன்றும் வாழ்கிறார்கள்

  ஜெ

  Like

 9. இது வரை தூரன் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களில் கிடைத்த தகவல்களையும் சேர்த்துவிட்டேன். ஏதாவது விட்டுப் போயிருந்தால் சொல்லுங்கள்.

  மறுமொழி எழுதிய அனைவருக்கும் நன்றி!

  Like

 10. Srinivasa Gopalan permalink

  தூரனின் பொது கலைக்களஞ்சியம் மற்றும் குழந்தைகள் கலைக்களஞ்சியம் இணையப் பல்கலைக்கழகத்தில் உள்ளது. இணைப்புகள்,
  http://www.tamilvu.org/library/kalaikalangiyam/lkk00/html/lkk00hom.htm
  http://www.tamilvu.org/library/kulandaikal/lku00/html/lku00hom.htm

  Like

 11. Srinivasa Gopalan permalink

  தூரன் நூல்கள் சில கிண்டிலில் கிடைக்கின்றன.
  http://bit.ly/PeriasamyThooran

  Liked by 1 person

 12. ஸ்ரீனிவாச கோபாலன், இந்த தகவலையும் சுட்டியில் இணைத்துவிட்டேன்.

  Like

 13. Thank You so much Mr. R V. I could not recall the name of this encyclopedia nor the author’s name. I have read this in Mahabalipuram in 1973 and wanted to mention about the influence these 10 volumes made during my childhood, in a blog about Mahabalipuram. Thank You so much once again.

  I also request you and the readers if some one can help me trace another great book titled உலகப் பெரியார்கள். I must have read this book a hundred times. It introduced me to some of the greatest leaders of the world from Alexander to Mahatma, from Napoleon to Nelson from Joan of Arc to Josef Garibaldi.

  I am an avid reader of your blog. Sorry for writing the post in English. Ramesh http://www.kaveripak.com

  Like

Trackbacks & Pingbacks

 1. மாநில சுயாட்சியா, திராவிடஸ்தானா? | சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: