மறக்க முடியாத வரிகள்

81 Staggering Lines என்ற ஒரு கட்டுரை கண்ணில் பட்டது. ஷேக்ஸ்பியர் இல்லாமல் எப்படி 81 வரிகளைத் தொகுத்தார் என்று புரியவில்லை. இருந்தாலும் சில தேர்வுகள் என் மனதிலும் பதிந்தவைதான். சிலவற்றை பதிவின் கடைசியில் கொடுத்திருக்கிறேன்.

ஆனால் இந்தப் பதிவு அந்தக் கட்டுரையைப் பற்றி அல்ல. தமிழ் புனைவுகளில் அப்படி என்ன வரிகள் மனதில் பதிந்திருக்கின்றன? எனக்கு ஒன்றே ஒன்றுதான் சட்டென்று தோன்றியது.

கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே, இதுதானய்யா பொன்னகரம்!

வேறு ஒரு வரியும் தோன்றவில்லை. உங்களுக்கு ஏதாவது தோன்றுகிறதா? நினைவில் கொள்ளுங்கள், அந்த வரி கதைக்கு முக்கியமா என்பதை வைத்து தேர்வு செய்யாதீர்கள். அந்த வரி அதன் மட்டிலுமே striking ஆக இருக்க வேண்டும். எதிர்மறை உதாரணமாக ‘எனக்கு டகர் பாயிட் வருங்க. என் பேரே டகர் பாயிட் காதர்தானுங்க’ என்பது முக்கியமான வரிதான். ஆனால் அந்த வரியை மட்டுமே பார்த்தால் ஒன்றும் பிரமாதமில்லை. தமிழ் நாவல்களிலும் சிறுகதைகளிலும் இல்லாமல் போகாது, என் மரமண்டைக்குத்தான் நினைவு வரமாட்டேன் என்கிறது.

முகின்? பாலாஜி? விசு? சுந்தரேஷ்? பக்ஸ்? ராஜன்? ராஜ் சந்திரா?

உதாரணங்கள் கீழே:

Pride and Prejudice:
It is a truth universally acknowledged that a single man in possession of a good fortune must be in want of a wife.

A Tale of Two Cities:
It was the best of times, it was the worst of times, it was the age of wisdom, it was the age of foolishness, it was the epoch of belief, it was the epoch of incredulity, it was the season of Light, it was the season of Darkness, it was the spring of hope, it was the winter of despair.

Glass Menagerie:
Time is the longest distance between two places.

Gone With the Wind:
My dear, I don’t give a damn.

Fellowship of the Ring:
All we have to decide is what to do with the time that is given us.

Anna Karenina:
All happy families are alike; each unhappy family is unhappy in its own way.

One Hundred Years of Solitude:
Many years later, as he faced the firing squad, Colonel Aurelio Buendía was to remember that distant afternoon that his father took him to discover ice.

1984:
It was a bright cold day in April, and the clocks were striking thirteen.

தொகுக்கப்பட்ட பக்கம்: பட்டியல்கள்

4 thoughts on “மறக்க முடியாத வரிகள்

 1. Great lines that separate great writers from mere storytellers! More likely to be found when the writer uses his/her narrative voice.

  “பரசுராமன் – அவதாரம்; மனோகரன் – மனிதன்” திரைப்பட வசனம்தான். இருந்தாலும் குறிப்பிட வேண்டிய வரிகள்

  Like

 2. சுஜாதா வின் அப்பா அன்புள்ள அப்பா சிறுகதையில் வரும் வரிகள் “வில்லியம் ஹன்ட்டரின் கட்டுரை ஞாபகம் வருகிறது.If i had strength enough to hold a pen i would write how easy and pleasant it is to die. பொய்!

  Like

  1. சினிமா வசனம் என்றாலும் மணந்தால் மகாதேவவி இல்லையேல் மரண தேவி.
   நீ இல்லைன்னா செத்துருவேன்னு கதாநாயகன் சொல்வதை விட இது கெத்தாக படுகிறது.ஒரு வேளை இப்படி சொன்னா அந்தப்பெண் ஒத்துக்குமோ என்னமோ.இப்பவெல்லாம் மகாதேவின்னு பெயர் வைப்பதில்லை😒😏

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.