பொருளடக்கத்திற்கு தாவுக

அஞ்சலி: க்ரேசி மோகன்

by மேல் ஜூன் 10, 2019

நான் வளர்ந்தது கிராமங்களில். அங்கே நாடகம் என்றால் வருஷத்துக்கு ஒரு முறை நடக்கும் கூத்து, பள்ளி ஆண்டு விழாவில் எப்போதும் நடிக்கப்படும் சாக்ரடீஸ் நாடகம் அவ்வளவுதான். என்றாலும் விடுமுறைக்கு சென்னையில் பெரியம்மா, அத்தை, மற்ற உறவினர் வீடுகளுக்கு வரும்போது அவர்கள் தயவில் சில நாடகங்களைப் பார்த்திருக்கிறேன்.

அந்தக் காலத்தில் சென்னை சபா சர்க்யூட்டில் தமிழில் நகைச்சுவை, பொழுதுபோக்கு நாடகங்களின் கை ஓங்கிக் கொண்டிருந்தது. க்ரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம் நாடகத்தை மயிலாப்பூர் ஆர்.ஆர். சபாவில் ஒரு முறை, சென்னையில் வருஷாவருஷம் நடக்கும் பொருட்காட்சியில் ஒரு முறை பார்த்திருக்கிறேன். அந்த நாடகத்தை எழுதித்தான் மோகன் க்ரேசி மோகன் ஆனார். அந்த நாடகத்தில் அவரும் கடத்தப்படும் சிறுவனின் அப்பாவாக ஒரு முக்கிய பாத்திரத்தில் அப்போதெல்லாம் நடிப்பார். பிறகு எஸ்.வி. சேகர் தனியாக நாடகம் நடத்தி கொடி கட்டிப் பறந்தார். ஆனால் அந்த வயதிலேயே கூட மோகனின் நகைச்சுவை, வார்த்தை விளையாட்டு எல்லாம் இன்னும் நயமாக இருந்ததை கவனித்திருக்கிறேன்.

ஆள் மாறாட்டம் என்று வந்துவிட்டால் மோகனை கையில் பிடிக்க முடியாது. அசத்திவிடுவார். அவரை விட சிறப்பாக இந்தக் கருவை கையாளக் கூடியவர் பி.ஜி. வுட்ஹவுஸ் ஒருவரே.

நல்ல நடிகர்கள் கிடைத்துவிட்டால் அவரது படைப்புகள் இன்னும் உச்சத்திற்கு சென்றுவிடுகின்றன. மைக்கேல் மதனகாமராஜன், காதலா காதலா, வசூல் ராஜா எம்பிபிஎஸ் பார்த்து சிரிக்காதவர் யார்?

இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன்பு வரை க்ரேசி மோகனின் படைப்புகள் என் கண்ணிலேயே பட்டிருக்காது என்பதை ஒத்துக் கொள்கிறேன். அது மேட்டிமை மனநிலையோ, blind spot-ஓ நானறியேன். என் மூத்த பெண் பள்ளியில் King Stag (1762) என்ற நாடகத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தாள். அந்த நாடகத்தைப் படித்தபோது க்ரேசி மோகனின் நாடகங்கள், தனிப்பட்ட முறையில் நான் விரும்பும் சங்கரதாஸ் ஸ்வாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் எழுதியவை இதை விட ஒரு மாற்று உயர்ந்தவை என்றுதான் தோன்றியது. Arsenic and Old Lace, Blithe Spirit ஏன் Pirates of Penzance போன்றவற்றுக்கும் சபாபதி, க்ரேசி தீவ்ஸ், டெனன்ட் கமாண்ட்மெண்ட்ஸ் போன்றவற்றுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

எங்கோ ஒரு புள்ளியில் கேளிக்கை எழுத்து இலக்கியமாகிவிடுகிறது. Arms and the Man, Importance of Being Earnest போன்றவை அந்தப் புள்ளியை தாண்டி இருக்கின்றன. க்ரேசி மோகன் அந்தப் புள்ளியைத் தாண்டவே இல்லை. தாண்ட முயற்சி செய்யவும் இல்லை. சுருக்கமாகச் சொன்னால் அவர் இலக்கியம் படைக்கவில்லை. அவரது நாடகங்கள் பொழுதுபோக்கு எழுத்து மட்டுமே. ஆனால் அதனால் அவருக்கு ஒரு குறைவும் இல்லை. அவர் பாணி எழுத்துக்கு என்றும் தேவை இருக்கிறது, இருக்கும். எத்தனையோ முறை சிரிக்க வைத்தவருக்கு மன்மார்ந்த நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்

தொடர்புடைய சுட்டி: க்ரேசி மோகனின் இலக்கிய மதிப்பு

From → Obituaries

One Comment
  1. க்ரேஸி மோகன், நகைச்சுவை நாடக ஆசிரியர்தான். அவரால் உரையாடல் நகைச்சுவையை வெகு சிறப்பாக கையாள முடியும். வார்த்தையை வைத்து விளையாடுவது, சிலேடை விளையாட்டு என்று.. நாடகங்களில் சில டெம்ப்ளேட் காட்சிகள் மட்டுமே கடுப்பாக்கும், எஸ்.வி.சேகர் நாடகங்களைவிட இவரது நாடகங்கள் கொஞ்சம் நன்றாகவே இருக்கும்.

    திரைப்படங்களில் அவர் நகைச்சுவையுடன் அல்லாதா காட்சிகளிலும் சிறப்பாகவே செய்திருக்கின்றார். அவரது நகைச்சுவை கமலுடன் சேரும் போது மேலும் வளர்கின்றது, கமல் இல்லாமலும் அடித்து தூள் கிளப்பிய படங்களும் உண்டு.

    அஞ்சலிகள்

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: