மாப்பசான் எழுதிய சிறுகதைகளில் இதுவே – Necklace (1884) – மிகவும் பிரபலமானது என்று நினைக்கிறேன். அருமையான கரு, திறமையான எழுத்தாளர் சேர்ந்தால் நல்ல சிறுகதை உருவாவதில் வியப்பில்லைதான்.
சாமர்செட் மாம் இதே கருவை வைத்து Mr. Know It All என்ற சிறுகதையை எழுதி இருக்கிறார்.
மாப்பசான் சிறுகதையின் தந்தை என்று புகழப்படுகிறார். சிறு வயதிலேயே, 42-43 வயதில் இறந்துவிட்டார். நூறு சிறுகதை எழுதி இருப்பாரோ என்னவோ. நான் படித்த வரைக்கும் நல்ல எழுத்தாளர்தான், ஆனால் என்னவோ குறைகிறது. எனக்கு செகாவ்தான் உசத்தி.
நேரம் இருந்தால் அவரது புகழ் பெற்ற இன்னொரு சிறுகதையையும் – Boule de Suif – படித்துப் பாருங்கள்!
நான் பெரிதாக விவரிக்கப் போவதில்லை. படித்துக் கொள்ளுங்கள்!
தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள்
2 thoughts on “மாப்பசானின் ‘நெக்லஸ்’”