(மீள்பதிவு)
லிஸ்பெத் ஸலாண்டர் சீரிசில் சமீபத்திய புத்தகமான Girl Who Lived Twice (2019)-ஐ சமீபத்தில் படித்ததால் இதை மீள்பதிக்கிறேன். முதல் புத்தகமான Girl with a Dragon Tattoo அளவுக்கு வராது என்றாலும் படிக்கக் கூடிய பொழுதுபோக்கு புத்தகம்.
ஸ்லாண்டரின் ‘திறமைகள்’ – நினைத்தால் யாருடைய கம்ப்யூட்டரிலும் நுழைய முடிகிறது, கண்காணிப்பு காமிராக்களை அணைக்க முடிகிறது இத்யாதி – பல சமயம் என்னடா இது ரொம்ப ஓவராக இருக்கிறதே இன்று நினைக்க வைப்பதுதான் இந்த சீரிசில் எனக்கு கொஞ்சம் பிரச்சினை. இருந்தாலும் ஷெர்பா ஒருவரை உள்ளே கொண்டு வந்தது, அந்த ஷெர்பாவின் பின்னணி ஓரளவு பிடித்திருந்தது.
முந்தைய பதிவிலிருந்து:
ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு நல்ல த்ரில்லரைப் படித்தேன்.
ஸ்டேய்க் லார்சன் (Steig Larsson) எழுதிய புத்தகம் Girl with the Dragon Tattoo (2005). இது ஒரு trilogy-யின் முதல் பகுதி. Girl Who Played with Fire, The Girl Who Kicked the Hornets’ Nest இரண்டும் இந்த சீரிஸின் அடுத்தடுத்த நாவல்கள். லார்சன் ஸ்வீடன்காரர். இப்போது உயிரோடு இல்லை. ஸ்வீடிஷ் மொழியில் எழுதிய இந்த புத்தகங்கள் இப்போது மொழிபெயர்க்கப்பட்டு சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கின்றன.
Prologue-ஏ ஈர்க்கிறது. வருஷாவருஷம் ஒரு வயதானவருக்கும் ஒரு வயதான போலீஸ்காரருக்கும் வயதானவரின் பிறந்த நாளன்று ஃபிரேம் செய்யப்பட ஒரு பூ தபாலில் வருகிறது. அது ஒரு குற்றவாளி யாரென்று கண்டுபிடிக்க முடியாமல் போன கேஸ் சம்பந்தப்பட்டது. நாற்பத்து சொச்சம் வருஷமாக வருகிறது. யார் அனுப்புவது?
மைக்கேல் ப்ளோம்க்விஸ்ட் ஒரு பத்திரிகையாளர். குறிப்பாக கம்பெனிகள், பொருளாதாரம் பற்றி எழுதுபவர். மில்லனியம் என்ற பத்திரிகையில் அவருக்கும் கொஞ்சம் பங்குகள் இருக்கின்றன. கதை அவர் மேல் போடப்பட்ட அவதூறு வழக்கில் அவருக்கு ஜெயில் தண்டனை வழங்கப்படுவதோடு ஆரம்பிக்கிறது. கேஸ் போட்ட வென்னர்ஸ்ட்ராம் பில்லியனர். மில்லனியம் பத்திரிகையையே ஒடுக்க முயற்சிக்கிறார். பத்திரிகையிலிருந்து கொஞ்சம் விலகி இருப்பது நல்லது என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது வாங்கர் குடும்பத்தின் மூத்தவரான ஹென்றிக் வாங்கர் தன் குடும்பத்தில் ஒரு சோக சம்பவத்தை – அவருடைய அண்ணனின் பேத்தியான ஹாரியட் நாற்பத்து சொச்சம் வருஷங்களுக்கு முன்னால் காணாமல் போனாள் – துப்பறிய வா என்று மைக்கேலை கூப்பிடுகிறார். மைக்கேல் தயங்கினாலும், ஹென்றிக் பணம்+வென்னர்ஸ்ட்ராம் பற்றிய துப்பு தருகிறேன், நீ கண்டுபிடிப்பாய் என்று எனக்கு நம்பிக்கை இல்லைதான், இதை ஒரு கடைசி முயற்சியாகத்தான் செய்கிறேன் என்று சொல்லி மைக்கேலை ஏற்றுக் கொள்ள வைக்கிறார். வாங்கர் குடும்பம் ஒரு காலத்தில் பெரிய பிசினஸ் குடும்பம், இப்போது கொஞ்சம் கஷ்டத்தில் இருக்கிறது.
மைக்கேலுக்கு உதவியாக லிஸ்பெத் சலாண்டர் என்று பெண்ணும் – இவள்தான் டிராகனை பச்சை குத்திய பெண் – சேர்ந்துகொள்கிறாள். லிஸ்பெத் ஒரு கம்ப்யூட்டர் ஜீனியஸ் (ஹாக்கர்). சமூகத்தில் பழகக் கூடியவள் இல்லை. வாங்கர் குடும்பம் ஒரு தீவில் வாழ்கிறது. ஹாரியட் காணாமல் போன அன்று தீவுக்கு வெளியே போக இருக்கும் பாலத்தில் பெரிய விபத்து. தீவில் இருக்கும் யாரோதான் ஹாரியட்டை கொன்று உடலை மறைத்துவிட்டார்கள் என்று ஹென்றிக் சந்தேகப்படுகிறார். ஹாரியட் என்ன ஆனாள், வாங்கர் குடும்பத்தின் ரகசியம் என்ன, வென்னர்ஸ்ட்ராமை கணக்கு தீர்க்க முடிந்ததா என்பதை வெள்ளித்திரையில் காண்க!
கதையின் பெரிய பலம் லிஸ்பெத் சலாண்டர் பாத்திரம். லிஸ்பெத்தை பாலியல் வன்முறை செய்பவரை லிஸ்பெத் கையாளும் சீன் திருப்தியாக இருந்தது!
சுவாரசியமான புத்தகம். பாதி புத்தகம் வரை பில்டப்தான். திடீரென்று பார்க்கிறேன், ஒன்றுமே நடக்கவில்லை, பாதி புத்தகம் முடிந்துவிட்டது. ஆனால் அப்படி ஒன்றுமே நடக்கவில்லை என்பது கூட தெரியாமல் கதையில் மூழ்கி இருக்கிறேன்!
கதையின் வீக்னஸ் என்று பார்த்தால் அது லிஸ்பெத் செய்யும் கம்ப்யூட்டர் சாகசங்கள்தான். லிஸ்பெத் செய்யும் எல்லாமே plausible-தான். ஆனால் டூ மச் சேஸ்தாரண்டி! இன்னும் கொஞ்சம் திறமையாக எடிட் செய்திருந்தால் கதையின் நீளத்தை குறைத்திருக்கலாம்.
2010-இன் நூறு சிறந்த புத்தகங்களில் ஒன்றாக இதை நியூ யார்க் டைம்ஸ் தேர்ந்தெடுத்திருக்கிறது. இன்னும் ஒரு வருஷத்தில் திரைப்படமாகவும் வருகிறதாம். திரைப்படம் வந்துவிட்டதாம். (ஜடாயுவுக்கு நன்றி!)
படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.
அடுத்த இரண்டு புத்தகங்களும் – Girl Who Played with Fire (2006), The Girl Who Kicked the Hornets’ Nest (2007) – சுவாரசியமானவைதான், ஆனால் அவை சலாண்டரின் வாழ்க்கையைப் பற்றி. சலாண்டரின் அப்பா ஒரு கொடுமைக்காரன், பனிரண்டு வயதில் வேறு வழி இல்லாமல் சலாண்டர் அவனை தாக்குகிறாள். அதற்காக பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் அடைக்கப்படுகிறாள். அவள் நார்மல் இல்லை, அவளுக்கு எப்போதும் ஒரு கார்டியன் வேண்டும் என்று ஸ்வீடனின் சட்டம் தீர்மானிக்கிறது. சலாண்டர் எப்படி சாதாரண வாழ்க்கைக்கு திரும்புகிறாள், எப்படி பழி வாங்குகிறாள், அவள் அப்பாவின் வாழ்க்கை மர்மம் என்ன என்று போகின்றன. டாக்டர் டெலிபோரியனை கோர்ட்டில் விசாரிக்கும் காட்சி ரசிக்கும்படி இருந்தது.
இப்போது டேவிட் லாகர்க்ரான்ட்ஸ் இதன் தொடர்ச்சியாக 3 புத்தகங்களை – Girl in the Spider’s Web (2015), Girl Who Takes an Eye for an Eye (2017), Girl Who Lived Twice (2019) – எழுதி இருக்கிறார். எதுவும் முதல் புத்தகம் அளவுக்கு வரவில்லைதான் என்றாலும் படிக்கக் கூடிய பொழுதுபோக்கு நாவல்கள்.
தொடர்புடைய சுட்டி:
சொல்வனத்தில் இன்னும் விலாவாரியான ஒரு அலசல் (ஜடாயுவுக்கு நன்றி!)
// இன்னும் ஒரு வருஷத்தில் திரைப்படமாகவும் வருகிறதாம். //
எப்பவோ படமா வந்தாச்சு.. ஜூலை-2010ல் விமானத்தில் வரும்போது பார்த்தேன். சீராக, அமைதியாக ஓடும் படம். மிக நேர்த்தியாக எடுக்கப் பட்டிருந்தது.. நான் கதையைப் படிக்கவில்லை, படம் மட்டும் தான் பார்த்தேன்.
சொல்வனம் முந்தைய இதழ் ஒன்றில் இந்த நாவல்கள் முன்வைக்கும் அரசியல், சமூக விமர்சனம் பற்றி ஒரு நல்ல கட்டுரை வந்திருந்தது.
LikeLike
ஜடாயு, என்னது இந்திரா காந்தி செத்துட்டாங்களா என்று குரல் கொடுக்கும் நிலைமையில் இருக்கிறேனே! 🙂 சொல்வனம் கட்டுரைக்கும் இப்போது லிங்க் கொடுத்துவிட்டேன்.
LikeLike
atlast i too read this novel last week…i liked it 🙂
My Review
Also the English version of the movie is not yet released…its releasing some time in 2011…only the swedish version has been released…
LikeLike
சுரேஷ், கேர்ள் வித் தி டிராகன் டாட்டூ உங்களுக்கும் பிடித்திருப்பது மகிழ்ச்சி!
LikeLike
“The girl who played with fire” புத்தகத்தை இப்பொழுது பாதிவரை படித்துவிட்டு “முஜே பச்சாவ்… முஜே பச்சாவ்” என்று முனகிக் கொண்டிருக்கிறேன். தாங்கள் எப்படி?
LikeLike
பாலாஜி, மூன்றையும் படித்திருக்கிறேன். எனக்கு முதல் புத்தகம்தான் பெஸ்ட் என்று தோன்றியது. இரண்டாவதுதான் இருப்பதிலேயே கொஞ்சம் போர் என்றும் தோன்றியது. 🙂
LikeLike