அசுரன் திரைப்படத்தின் அடிப்படை – பூமணியின் “வெக்கை”

(மீள்பதிப்பு)

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்திருக்கும் அசுரன் திரைப்படம் வெக்கையை அடிப்படையாகக் கொண்டதாம். அதனால்தான் இந்த மீள்பதிவு.

புத்தகம் தரும் அனுபவத்தை கெடுத்துவிடுவார்களோ என்று கொஞ்சம் பயம் இருந்தாலும், இந்த மாதிரி முயற்சிகளை வரவேற்கத்தான் வேண்டும். வெற்றிமாறனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

வெக்கை எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் ஒன்று.

ஒரு கொலையோடு ஆரம்பிக்கிறது கதை. ஒரு சிறுவன் தன அண்ணனைக் கொன்ற ஒருவனை போட்டுத் தள்ளுகிறான். அப்புறம் கதை பூராவும் அவனும் அவன் அப்பாவும் ஓடி ஒளிவது மட்டும்தான். கதையில் வேறு ஒன்றுமே கிடையாது.

ஆனால் கதை பூராவும் தெரிவது அன்பு. அப்பாவுக்கும் பையனுக்கும், பையனுக்கும் அண்ணனுக்கும், சித்திக்கும் பையனுக்கும், மற்ற உறவினர்களுக்கும் எல்லாருக்கும் இடையில் இருக்கும் பந்தம் மட்டுமே பெரிதாகத் தெரிகிறது. குடும்பம், சுற்றம், உறவினர்கள், பங்காளிகள், சாதி சனம் என்றால் இப்படி இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் ஆதரவு; வாழ்க்கையின் தவிர்க்க முடியாத சமரசங்களின் ஊடாகவும் தெரியும் அன்பு. ஒரு கொலை, பழி வாங்குதலை foreground-இல் வைத்து அதில் அன்பை மட்டும் காட்டி இருப்பது பூமணியின் சாதனை.

சுவாரசியத்துக்கும் குறைவே இல்லை. கதை பூராவும் ஒளிந்து வாழும்போது என்ன சாப்பிடுகிறார்கள், என்ன சமைக்கிறார்கள் என்றுதான் – ஆனால் கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாது.

தமிழின் சாதனைகளில் ஒன்று. இதை மொழிபெயர்ப்பது கஷ்டம், ஆனால் சரியானபடி மொழிபெயர்த்தால் உலகம் முழுதும் பேசப்படும்.

ஜெயமோகன் இந்த நாவலை தன் இரண்டாம் பட்டியலில் – பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகள் – சேர்க்கிறார். எஸ்.ரா. நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.

பூமணி தமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். தலித் எழுத்தாளர் என்று நினைக்கிறேன். அவருடைய தலித்தியம் பிரச்சார நெடி அடிக்காத தலித்தியம். அவருடைய பிறகு நாவல் இன்னொரு குறிப்பிட வேண்டிய படைப்பு. (எனக்கு வெக்கைதான் டாப்.)

கட்டாயம் படியுங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பூமணி பக்கம்

14 thoughts on “அசுரன் திரைப்படத்தின் அடிப்படை – பூமணியின் “வெக்கை”

 1. இடைப்பட்ட ஏழு நாட்களில், தந்தைக்கும் மகனுக்கும் நடக்கும் சம்பாஷணை, அண்ணணை பற்றிய நினைவு, உறவுகளின் அன்பு மற்றும் கரிசல் மண்ணின் வாசனை என்னும் ஓரு மறவா ஞாபக பிரயாணத்தைத் திருப் பூமணி மனதில் வடிகிறார். 

  I read it after you shared it last week. Thanks for sharing!

  Like

  1. சௌகந்தி, வெக்கையைப் பற்றி உங்கள் என்ணங்களை எழுதுங்களேன்! நீங்கள் விரும்பினால் இங்கேயே கூட பதித்துவிடலாம். எழுதினால் என் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் – rv dot subbu at gmail dot com

   Like

 2. எழுத்தாளர் பூமணி, தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்.
  தலித் எழுத்தாளர் அல்ல, மண்ணின் கதைகளை வாழ்வியலை சொல்லுபவர்!

  Like

 3. காட்டின் சித்தரிப்பு, உறவுகளின் பாசம், நினைவுகளின் வழியேஅண்ணணை இழந்தசோகம்,அடக்குமுறை,அதிகார
  சுரண்டல் ஆகியவை நாவலின் பலம்.
  சிதம்பரத்தின்அம்மாவிற்கும்,அத்தைக்கும் இன்னும் இடம் கொடுத்திருக்கலாம்.
  நகரத்தில் வளர்ந்த எனக்கே கரிசல் மண் கண் முன் விரிகிறது.
  ஓங்கி அடித்ததைச் சொல்லுவதைவிட காயத்தின் தீவிரத்தைக் காட்டி வலியின் வேதனையைச் சொல்வது நாவலின் பலமாக நினைக்கிறேன். 200பக்கங்களுக்குள் இதை நிகழ்த்தியிருப்பது சாதனைதான்.

  Like

 4. நேற்றுதான் உங்களது இந்த தளம் என் கண்ணில் பட்டது. இப்பொழுதுதான் உங்கள் கட்டுரைகள் ஒவ்வொன்றாக படித்துகொண்டிருக்கிறேன். பொதுவாக உங்களது கட்டுரைகள் படிக்க சுவாரசியமாக இருக்கின்றன.வரலாற்று நாவல்களை நீங்கள் விமர்சித்த விதம் எனக்கு சிரிப்பை அடக்க முடியாத சிரிப்பை வர வைத்தது, அதிலும் வந்தியத்தேவன் வாள் குறிந்து விமர்சித்தது “ஹா ஹா ஹா”,நான் எம்ஜிஆர் ரசிகன் என் தந்தை காலத்திலிருந்து, அதனால் அது குறித்த சிறிய எதிமறை விமர்சனமாயினும் அதை மனம் ஏற்கவில்லை, உங்களது
  பழைய கட்டுரைகள் ஒவ்வொன்றாக படிக்க வேண்டியுள்ளது,

  நன்றி

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.