சு. வெங்கடேசனுக்கு இயல் விருது

2019-க்கான இயல் விருது சு. வெங்கடேசனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

வெங்கடேசன் தனது காவல் கோட்டம் புத்தகத்துக்காக 2011-இல் சாஹித்ய அகடமி விருது வென்றவர். புத்தகத்தை பாதி படித்தேன், வீடு மாற்றும்போது எங்கே வைத்தேன் என்று தெரியவில்லை, தேட வேண்டும். படித்த வரையில் மிகவும் பிடித்திருந்தது.

பசுபதி, ஆதி நடித்து வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அரவான் (2012) திரைப்படம் காவல் கோட்டத்தின் ஒரு சிறு பகுதியை அடிப்படையாகக் கொண்டது.

வெங்கடேசன் கம்யூனிச கட்சிக்காரர். இப்போது எம்.பி.யாகவும் இருக்கிறார்.

வெங்கடேசனுக்கு வாழ்த்துக்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்