அருணகிரிநாதர் போட்ட சலாம்

திருப்புகழில் இப்படி ஒரு வரியைப் பார்த்தேன்.

சுராதிபதி மாலயனும் மாலொடு சலாமிடு
சுவாமிமலை வாழும் பெருமானே!

15-ஆம் நூற்றாண்டிலேயே சலாம் தமிழுக்குள் வந்துவிட்டது!

அருணகிரிநாதர் சலாம் மட்டுமல்ல சபாஷும் போட்டிருக்கிறார்.

கற்பகம் திருநாடுயர் வாழ்வுற
சித்தர் விஞ்சையர் மாகர் சபாஷென
கட்ட வெங்கொடு சூர்கிளை வேரற
– விடும் வேலா

பிறகு சீனி. வேங்கடசாமி தயவில் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரரும் சலாம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கிறார் என்று தெரிந்தது.

குறவர் மகட்கு சலாமிடற்கு ஏக்கறு
குமரனை முத்துக்குமரனைப் போற்றுதும்

வேறு யாராவது – தாயுமானவர், காளமேகப் புலவர்… – இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்களா?

தொகுக்கப்பட்ட பக்கம்: மொழி