1827-இல் தமிழ் பாடம்

1827-இல் வெளியிடப்பட்ட Sixth Book of Tamil Language-இலிருந்து ஒரு பகுதி. வெளியிட்டவர் ‘சென்னப்பட்டணம் கல்விச் சங்கத்து செக்கிரட்டரி’ ஹென்றி ஹார்க்னஸ்.

ஒரு சிறு பிள்ளை உண்டு. அவன் பேர் ராஜகோபாலன். அவன் தகப்பனாரும் தாயாரும் அனுப்பினார்கள, அவனைப் பள்ளிக்கூடத்துக்கு.  அப்புறம் ராஜகோபாலன் ஒரு நல்ல யுக்திசாலி. எந்நேரமும் தன் சுவடியின் பேரிலேயே ஆசையாய் இருந்தான். தன் வகுப்பிலே அவன் முதல் எண்ணில் வந்தான். ஆகையினாலே அவன் தாயார், ஒரு நாள் கோழி நேரத்திலே எழுந்திருந்து, வேலைக்காறிச்சி கருப்பாத்தாளை அழைத்து, கறுப்பாத்தே, நாம் ஒரு பருப்புத் தேங்காய் ராஜகோபாலனுக்காக சுட வேணும். ஏனென்றால் அவன் தன் சுவடியை மெத்த நன்றாய் கற்றுக் கொண்டிருக்கிறான் என்று சொன்னாள். கறுப்பாத்தாள் சொன்னாள், ஆம் அப்படியே நானும் நினைக்கிறேன் என்று.

அப்பிரகாரமே அவர்கள் பண்ணினார்கள் ஒரு நாணயமான பருப்புத் தேங்காய் அவனுக்காக. அது மெத்தப் பெரிசாய் இருந்தது. வேண்டிய மட்டும் நிறைய சம்பாரிக்கவும் திணிக்கவும் பட்டிருந்தது. திவ்விய திராக்ஷாப்பழம், முந்திரிப்பருப்பு, வாதுமைப்பருப்பு, கசகசா, லவங்கம், சாதிக்காய், சாபத்திரி, சுக்கு, ஏலரிசி, வெள்ளைச் சர்க்கரை, வெண்ணைய் இதுகளினாலே அதன் மேல்புறம் எங்கும் கல்கண்டினாலே பாகு செலுத்தப்பட்டிருந்தது. அது சிகரத்திலே பனியைப் போலே வெண்மையும் மழமழப்பும் உடையதாய் இருந்தது. அப்படியே இந்தப் பருப்புத் தேங்காய் அவன் படிக்கிற பள்ளிக்கூடத்துக்கு அனுப்பப்பட்டது.

அதை அந்த சின்ன ராஜகோபாலன் பார்த்த உடனே வெகு சந்தோஷப்பட்டான். ஆனந்தத்தினாலே குதித்தான். அதிலே ஒரு துணுக்கை அறுக்க சூரிக்கத்தியை எடுக்கிற மட்டும் பொறுக்கமாட்டான். தெப்பென்று அதை பற்களால் கடித்தான். அப்படியே பாடவேளை ஆனமட்டும் அவன் தின்றான். பாடவேளைக்குப் பிறகு மறுபடியும் தின்றான். அவன் படுக்கைக்குப் போனமட்டும் தின்றான். அல்லாமலும் அவன் தலைக்காணியின் கீழே அதை வைத்துக் கொண்டான். அர்த்தராத்திரியில் அதிலே கொஞ்சம் தின்ன எழுந்திருந்தான். இந்தப்படிக்கு அது எல்லாம் ஆய்ப்போன மட்டும் அவன் அதைத் தின்றான்.

ஆனால் வெகு சீக்கிரத்திலே இச்சிறுபையன் மெத்த நோவிலே விழுந்துவிட்டான். அவனவன் சொன்னான், ஆ,ஆ, ராஜகோபாலன் உடம்புக்கு என்ன முகாந்தரத்தினாலே நோவு வனதது, அவன் சுறவையாய் இருந்தானே, மற்ற பசங்களைப் பார்க்கிலும் சொஸ்தமா விளையாடிக் கொண்டிருந்தானே, இப்ப அவன் முகம் மினுமினுத்து மிகவும் பிணியாய் இருக்கிறான் என்று ஒருத்தன் சொன்னான். ராஜகோபாலனுக்கு ஒரு ஜம்பமான பருப்புத் தேங்காய் அகப்பட்டிருந்தது, அதையெல்லாம் அவன் வெகு துரையாய் சாப்பிட்டுப் போட்டான், அதுதான் இவனுக்கு நோவு உண்டாக்கினது என்று.

ஆகையினாலே அவர்கள் பரியாரியை அழைப்பித்தார்கள். அவன் கொடுத்தான் மருந்து அவனுக்கு. அப்ப, அப்ப, நான் அறியேன் அது எவ்வளவு கசப்பு உள்ளதோ. அளிய ராஜகோபாலனுக்கு அது எவ்வளவும் சம்மதியில்லை, ஆனால் அதைச் சாப்பிடும்படியாய் அவன் கட்டாயப்படுத்தப்பட்டான். இல்லாவிட்டால் இத்தனை நாள் அவன் செத்துப் போயிருப்பான் அறிவையா. ஆகையால் கடைசியிலே மறுபடியும் அவன் சொஸ்தப்பட்டான். ஆனால் அவன் தாயார் சொன்னாள், நான் இனிமேல் அவனுக்கு அனுப்பமாட்டேன் பணியாரங்கள் என்று.

சீனி. வேங்கடசாமியின் கட்டுரை ஒன்றில் – அந்தக் காலத்து ஐரோப்பிய நடை – இது காணப்படுகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: மொழி

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.