திரைப்படமான புத்தகம்: Crazy Rich Asians

இரண்டு வருஷத்துக்கு முன்னால் வெளியான இந்தப் படம் சக்கைப்போடு போட்டது. 3 கோடி டாலர்கள் செலவழித்து எடுக்கப்பட்ட படம் கிட்டத்தட்ட 24 கோடி டாலர்கள் வரவு கண்டது. ஆஸ்கர் விருது வாங்கும் திரைப்படங்களைத் தவிர பிறவற்றைப் பற்றி அவ்வளவு பிரக்ஞை இல்லாத நான் கூட இதன் பேரைக் கேட்டிருந்தேன். ஒரு முறை விமானத்தில் பார்க்கவும் பார்த்தேன்.

திரைப்படம் ஒன்றும் நன்றாக இல்லை. எனக்கு திரைப்படத்தின் மூலம் புத்தகமாக இருந்தால் அந்தப் புத்தகம் நன்றாக இருக்கும் என்று ஒரு (மூட) நம்பிக்கை உண்டு. மோசமான புத்தகத்தை யாரும் திரைப்படமாக எடுக்கமாட்டார்கள் என்று ஒரு குருட்டு நம்பிக்கை. சரி, எப்போதாவது கையில் வந்து விழுந்தால் படிக்கலாம் என்று நினைத்திருந்தேன்.

என் துரதிருஷ்டம், கையில் வந்து விழுந்துவிட்டது. அந்தக் காலத்து மணியன் கதைகளை விட மோசமாக இருந்தது. நாவல் முழுவதும் Brand name dropping மட்டுமே. அவன் ஆஸ்டன் மார்ட்டின் காரை ஓட்டினான், இவள் இந்த டிசைனர் கைப்பையை வாங்கினாள் என்று பக்கத்துக்கு இரண்டு brand name.Brand name-இல் ஆர்வம் உடையவர்களுக்கு இந்த நுண்விவரங்கள் சுவாரசியமாக இருக்கலாம். நான் எனக்குப் பிடித்த புத்தகங்களைக் கூட நான் அனேகமாக பழைய புத்தகக் கடையில்தான் வாங்குபவன், எனக்கு போர்தான் அடித்தது.

கதையோ ஐம்பது அறுபதுகளின் தமிழ் சினிமாவிலேயே பழையதாகிவிட்ட கதை. சிங்கப்பூரில் அதிபணக்காரக் குடும்பத்தில் பிறந்த – டாடா பிர்லா அம்பானி ரேஞ்ச் – நாயகன். மேல் மத்தியதர வர்க்க நாயகியைக் காதலிக்கிறான். அவன் பெரிய பணக்காரன் என்று அவளுக்குத் தெரியாது. வா சிங்கப்பூர் போகலாம் என்று அழைத்துக் கொண்டு போகிறான். பணம், அந்தஸ்து பிரிக்கிறது, பிறகு சேர்ந்துவிடுகிறார்கள்…

எனக்கு ஒரு அசட்டுப் பழக்கம். எத்தனை மோசமான புத்தகத்திலும் ஐம்பது பக்கம் படித்துவிட்டால் தம் கட்டி படித்துவிடுவேன். அதே போல ஒரு சீரிசை ஆரம்பித்துவிட்டால் முடித்தாக வேண்டும். Sunk Cost Fallacy. அதனால் இதன் தொடர்ச்சியான China Rich Girlfriend (2015), Rich People Problems (2017) இரண்டையும் வேறு படித்துத் தொலைத்தேன். இந்த வருஷமாவது இந்த அசட்டுப் பழக்கத்தை தலை முழுக வேண்டும்.

புத்தகங்களை எழுதியவர் கெவின் க்வான். அவருடைய சொந்த அனுபவங்களை அடிப்படையாக வைத்து எழுதினாராம்.

தவிருங்கள். திரைப்படம், புத்தகங்கள் எல்லாவற்றையும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: புனைவுகள்

2 thoughts on “திரைப்படமான புத்தகம்: Crazy Rich Asians

  1. ஒரு சீரிசையே படித்துவிட்டு தவிருங்கள் என்று பரிந்துரைக்கிரீர்களே. தலைப்பு உங்களுக்கும் பொருந்துமென தோன்றுகிரது! Crazy rich (அமெரிக்க) Asian😉

    Like

    1. அதுதான் சார் அசட்டுப் பழக்கம் என்று குறிப்பிட்டேன்! Crazy, Asian எல்லாம் சரிதான் Rich இன்றைக்கில்லாவிட்டால் நாளைக்காவது ஆகிவிட முடியாதா?

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.