(மீள்பதிவு)
ஆனந்த விகடன் ஜோக்ஸ் அவற்றோடு சேர்ந்த சித்திரங்களுக்கு ஒரு பாரம்பரியம் இருந்தது. நாற்பதுகளில் மாலியிலிருந்து ஆரம்பித்த அந்த பொற்காலத்தின் கடைசி கண்ணி மதன். என் தலைமுறையினர் பலருக்கு விகடன் என்றால் சுஜாதா தொடர்கதை மற்றும் மதன் ஜோக்ஸ், கார்ட்டூன்கள்தான்.
மதன் எழுதிய இன்னொரு சுவாரசியமான புத்தகம் வந்தார்கள் வென்றார்கள். என்னைக் கேட்டால் சரித்திரப் பாடப் புத்தகங்களுக்கு பதிலாக இதை எல்லாம் பள்ளிகளில் படிக்கலாம். எல்லாரும் வரலாற்றை விரும்பிப் படிப்பார்கள்! Enough said.
ஆனால் மனிதனுக்குள் ஒரு மிருகம் எல்லாம் வன்முறையை sensationalize செய்யும் தண்டப் புத்தகம்.
பாஸ்டன் பாலாவின் தளத்தில் பார்த்த பழைய பதிவுகளிலிருந்து (பதிவு 1, பதிவு 2). வசதிக்காக இங்கே ஜோக்குகளை கட்-பேஸ்ட் செய்திருக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: காமிக்ஸ்
தொடர்புடைய சுட்டி: ரெங்கசுப்ரமணியின் மதன் ஜோக்ஸ் தொகுப்பு
ரெட்டை வால் ரெங்குடு, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு, முன்ஜாக்கிரதை முத்தண்ணா மூவரையும் அடித்துக் கொள்ள முடியாது. அதிலும் முதலிடம் ரெங்குடுவுக்குத்தான்!
LikeLike
சிறந்த நகைச்சுவைப் பதிவு
தொடருங்கள்
LikeLike
மதன் ஜோக்குகளில் இருக்கும் முகங்களின் பாவங்கள் எதிலும் இருப்பதில்லை. அந்த தலைவரின் முகத்தை பாருங்கள் !!.என்னிடமும் சில தொகுப்புகள் இருக்கின்றது
http://rengasubramani.blogspot.in/2012/12/blog-post_2714.html
LikeLike
மிகவும் அருமை சார் .
LikeLike
ரெட்டை வால் ரெங்குடு ஒரு விதத்தில் Dennis the Menace பாதிப்பு என்று சொல்லலாம் (மதனின் திறமையை குறைத்து மதிப்பிடவில்லை).. டென்னிஸ்-ன் Hank Ketchum கார்ட்டூன்கள் அற்புதமானவை. தொகுப்புகளாகக் கிடைக்கின்றன.
LikeLike
ஸ்ரீராம், ராஜ், ரெங்கசுப்ரமணி, யால்பாவாணன், பரமசிவம்,
மதன் ஜோக்சுக்கு இத்தனை ரசிகர்கள் இருப்பது சந்தோஷம்!
// ரெட்டை வால் ரெங்குடு ஒரு விதத்தில் Dennis the Menace பாதிப்பு // என்று ராஜ் சொல்வது சரியே. ஆனால் ரெங்குடு டென்னிசை விட மனதுக்கு நெருக்கமானவனாக இருக்கிறான்.
ரெங்கசுப்ரமணி, உங்கள் பதிவுக்கும் சுட்டியை இணைத்திருக்கிறேன்.
LikeLike