கிட்டத்தட்ட ஏழு வருஷம் முன்னால் அருட்செல்வப் பேரரசனின் முயற்சி பற்றி கேள்விப்பட்டேன். அப்போது ஆதிபர்வத்தின் ஆரம்பத்தில் இருந்தார். அனேகமாக அவரைப் பற்றி முதலில் பதிவு செய்தது நானாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஜெயமோகன் கூட என் மூலம்தான் கேள்விப்பட்டார் என்று நினைவு. (என் நினைவு தவறாகவும் இருக்கலாம்.) நான் எழுதியதை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்பது வேறு விஷயம். 🙂
ஏழெட்டு வருஷம் அயராத உழைத்து இன்று முழுவதையும் மொழிபெயர்த்தும் முடித்துவிட்டார். அவரது தளராத முயற்சியைக் கண்டு பிரமிப்பாக இருக்கிறது. சிலிகன் ஷெல்ஃபில் நாலு நாளைக்கு ஒரு பதிவு போடவே நுரை தள்ளுகிறது, எந்தப் பிரச்சினை வந்தாலும் முதலில் நிறுத்துவது இங்கே எழுதவதைத்தான். பாருங்கள் அவர் முடித்து ஓரிரு மாதம் இருக்கும், இப்போதுதான் அவரை வாழ்த்தி இங்கே நாலு வரி எழுத முடிந்திருக்கிறது. அவரை எத்தனை பாராட்டினாலும் தகும். மஹானுபாவுலு!
இப்போது ஹரிவம்சத்தை மொழிபெயர்க்க ஆரம்பித்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
2013 மே மாதம் எழுதிய ஒரிஜினல் வரிகள் கீழே…
எனக்கு மகாபாரதம் அறிமுகமானது எனது பாட்டி மற்றும் அம்மா மூலமாகத்தான். அது ஒரு குழந்தைக்கேற்ப எளிமையாக்கப்பட்ட கதை. பதின்ம வயதில் ராஜாஜியின் சுருக்கத்தைப் படிக்கும்போதுதான் பிரமித்துப் போனேன். அப்புறம் வில்லிபாரதத்தைப் படித்தேன். அதில் இருந்த சின்னச் சின்ன மாற்றங்கள் தெரிந்தது. மூலத்தைப் படிக்க வேண்டும் என்று ஆர்வம் கிளம்பியது, ஆனால் சமஸ்கிருதம் தெரியாது. அங்கும் இங்குமாகப் பல பிரதி பேதங்களைப் படித்தேன். மனம் நிறைவு அடையவே இல்லை.
கிசாரி மோகன் கங்குலி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததுதான் மூலத்துக்கு மிகவும் நெருக்கமானது என்று கேள்விப்பட்டேன். இப்போது அருள் செல்வப் பேரரசன் என்பவர் இதை தமிழில் மொழிபெயர்த்து வருகிறார். இது வரை ஆதி பர்வத்தில் நூற்றி சொச்சம் அத்தியாயங்களை மொழிபெயர்த்திருக்கிறார். அவருக்கு ஒரு ஜே!
கங்குலின் மொழிபெயர்ப்பு இணையத்தில் கிடைக்கிறது ஆனால் படிக்க கை கூடி வரவில்லை. பிரச்சினை என்னவென்றால் அது எடிட் செய்யப்படாத ஒரு படைப்பு போல இருப்பதுதான். எக்கச்சக்க கூறியது கூறல், பிராமணர்களை வலிந்து புகழ்தல் எல்லாம் நிரடுகின்றன. இருந்தாலும் ஒரு நாள் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். எனக்கு எப்போதுமே தமிழில் படிப்பது ஆங்கிலத்தில் படிப்பதை விட ஒரு மடங்கு சுலபம். எனவே தனிப்பட்ட முறையிலும் அவருக்கு நன்றி!
தொகுக்கப்பட்ட பக்கம்: தொன்மங்கள்
முழு மஹாபாரதத்தைத் தங்கள் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தமைக்கு நன்றி திரு.ஆர்.வி. அவர்களே.
LikeLike
அருள் செல்வப் பேரரசன், உங்களுக்கு நாங்கள் அல்லவா நன்றி சொல்ல வேண்டும்!
LikeLike
nice
LikeLike
very nice …i want full book.(முழு மஹாபாரதம் )
LikeLike
This is my E-ID : rajumnanum@gmail.com send me to this ID
LikeLike
ராஜ், நீங்கள்தான் இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் முகவரிக்கு சென்று மகாபாரத மொழிபெயர்ப்பைப் படித்துக் கொள்ள வேண்டும்.
LikeLike
அவர் என்னுடைய தளத்தில் ஒரு பின்னூட்டத்தில் அவரது மொழிபெயர்ப்பை பற்றி கூறியிருந்தார். நானும்ப் பந்தாவாக வாழ்த்துக்கள் கூறியிருந்தேன். அப்போது அதன் உண்மையான மதிப்பு தெரியவில்லை. பின்னர் உண்மையில் வெட்கமாக இருந்தது. சும்மா பொழுது போகாத போது நாலு வரி எழுதும் உனக்கு என்ன அவ்வளவு கொழுப்பு என்று மன்சாட்சி கேட்டுக் கொண்டேயிருந்தது.
அனைத்தையும் கிண்டில் புத்தகங்களாகவும் வெளியிட்டுள்ளார். அதை வாங்கி வைத்துக் கொள்ளலாம். கும்பகோணம் பதிப்பே வீட்டில் தூங்குகின்றது என்ற யோசனை வேறு வருகின்றது.
LikeLike
// அனைத்தையும் கிண்டில் புத்தகங்களாகவும் வெளியிட்டுள்ளார். அதை வாங்கி வைத்துக் கொள்ளலாம். கும்பகோணம் பதிப்பே வீட்டில் தூங்குகின்றது என்ற யோசனை வேறு வருகின்றது. // 🙂 எனக்கும் புத்தகம் வைக்க இடம் பிரச்சினை…
LikeLike
🙂 பாதிக்கு மேற்பட்ட புத்தகங்களை சொந்த ஊரில் வைத்துவிட்டேன். ஒவ்வொரு முறை போகும் போதும் ஒரு பை நிறைய புத்தகம். அம்மா இனிமே கொண்டுவராதே இங்க இடமில்லை என்று சொல்லியிருக்கின்றார்கள். உண்மையில் மகாபாரதம் மட்டுமே பாதி இடத்தில் உள்ளது. கும்பகோணம் பதிப்பு & வெண்முரசு.
LikeLike
// உண்மையில் மகாபாரதம் மட்டுமே பாதி இடத்தில் உள்ளது. கும்பகோணம் பதிப்பு & வெண்முரசு. // ரெங்கா, இரண்டையும் வாங்க வேண்டும், வைக்கத்தான் இடமில்லை…
LikeLike