ஏப்ரல் 1 சிறுகதை: Gimpel the Fool

Gimpel the Fool எனக்குப் பிடித்த சிறுகதைகளில் ஒன்று. ஆனால் அது ஏன் பிடித்திருக்கிறது என்று என்னால் தெளிவாக சொல்ல முடிந்ததே இல்லை. அது தொன்மக் கதைகளின் சாயல் கொண்டிருப்பதாலா? நானும் ஓரளவு அப்பாவி, கிம்பலில் என்னையே காண்கிறேனா? நானே அப்பாவிதான் என்றாலும் கிம்பல் மீது நடத்தப்படும் குரூரமான pranks-இல் நானும் பங்கு பெற்றிருக்க முடியும் என்று உணர்வதாலா? எத்தனைதான் ஏமாந்தாலும் கிம்பலின் அடிப்படை நல்ல குணம் மாறாமல் இருப்பதாலா? ஒரு கோணத்தில் பார்த்தால் மிகவும் சிம்பிளான, குழந்தைக் கதைதான். ஆனால் எங்கோ சென்று இது என் இதயத்தை தொடுகிறது!

எழுதியவர் 1978-இல் நோபல் பரிசு வென்ற ஐசக் பாஷவிஸ் சிங்கர். 1945-இல் எழுதப்பட்டது. சிங்கர் யூதர். போலந்தில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர். யிட்டிஷ் மொழியில் மட்டுமே எழுதினார். ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் 1976-இல் நோபல் பரிசு வென்ற சால் பெல்லோ!

சிறுகதையை இணைத்திருக்கிறேன். காப்பிரைட் பிரச்சினை வந்தால் எடுத்துவிடுவேன். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம், எழுத்துக்கள்

தொடர்புடைய சுட்டி: எழுத்தாளர் பாவண்ணன் இந்த சிறுகதையை அலசுகிறார்.

The Equation That Couldn’t Be Solved

நான் இந்தப் பதிவையும் தமிழில் எழுத முயற்சி கூட செய்யப் போவதில்லை.

I wrote about Men of Mathematics recently. One of my favorite chapters in that book is about Evariste Galois.

Galois’s life was a tragedy, but simply wonderful. He died as a 20 year youth. He couldn’t have worked on math for more than 3-4 years. In that short period, he made an impact that is still being felt. The theories he developed are still fruitful.

Galois’s life is the perfect illustration of Murphy’s law. Whatever could go wrong, went wrong for him. A brilliant student, he got fascinated by mathematics and started ignoring other subjects. His genius was recognized and he was encouraged to try to join Ecole Polytechnique, the premier French “college”, where Cauchy and Fourier taught. He was rejected, apparently because he did much of the solving in his mind and skipped several steps in answering questions. He was encouraged to submit a paper outlining his revolutionary ideas, Fourier takes the paper home and dies. The paper was lost. He re-submits the paper, this time Cauchy takes the paper, Cauchy is impressed, but mysteriously, no further progress. He re-re-submits his paper, this time Poisson takes it, but he couldn’t understand the paper and rejects it. Then Galois gets into politics, goes to jail, comes back, fights a duel and dies.

I will be honest. Galois’s life was just fascinating. But I couldn’t understand Galois’s math from that book. All I could get was that he developed Group theory, with which he proved that quintic equations and equations of higher degree couldn’t be solved by a formula. How? It was not clear at all.

Once I went to college, I had access to some books that explained Group theory. I even had a class in M.Tech. about groups and fields. But it was all about the “How” and “What” about of Group theory, not about “Why”. In other words, I got lecture after lecture (or chapter after chapter) about what a group is, how to test for groups, what a field is, what a normal subgroup is, what a maximal subgroup is and so on. I had no clue about why I am learning about this. If I had found a chapter (or lecture) about how this is being used to proved a quintic equation couldn’t be solved by a formula, that would have been enough. The books/professor were all about the theory, that’s it. I had serious, probably unjustified, doubts about whether my professor even knew how to use group theory to solve non-textbook problems.

And I stumbled on this book a couple of weeks back – The Equation That Couldn’t Be Solved – by Mario Livio. Livio was fascinated by Galois and set out to explain Galois’s work and his impact. I knew some of it from my theoretical classes, but to me the takeaway is the connection between quintic equation and group theory.

Livio does a decent job of explaining how math progressed from quadratic/cubic/quartic equations to the struggles with quintic. He has a chapter on Abel, who first proved that quintic equations cannot have a formulaic answer. Then Galois’s life is covered in a chapter. And then he explains the basics of group theory, how symmetry can be described by groups, and several applications.

I have to admit – I still don’t understand the proof 100%. There is a jump from a step to another which has gaps for me. But I am happy! I am nearer to understanding a problem that I gave up years ago!

You can get the ebook here. Recommended for people who want to understand one of achievements of math…

Category: Math

தமிழறிஞர் வரிசை – பெ.நா. அப்புசாமி

என் பதின்ம வயதுகளில் Men of Mathematics என்றால் ஏழெட்டு வயதில் பெ.நா. அப்புசாமி விஞ்ஞானிகள் பற்றிய எழுதிய இரண்டு தொகுப்புகள். அந்தக் காலத்தில் என் வயதுப் பையன்களிடம் நீ பெரியவனாகி என்ன ஆகப்போகிறாய் என்று கேட்டால் கலெக்டர், டாக்டர், அரசு வேலை, 4 figure salary, கிரிக்கெட் வீரன், நடிகன் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் மட்டும் விஞ்ஞானி ஆகப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அறிவியல் பற்றிய பிரக்ஞையை உருவாக்கியவர் அப்புசாமிதான். (எனக்கு ஒரு பிம்பமும் இருந்தது – குறுந்தாடியோடு கண்ணாடியும் வெள்ளை நிற ஏப்ரனும் அணிந்து டெஸ்ட் ட்யூப்களில் வண்ண வண்ண திரவங்களை கலந்து கொண்டிருப்பதுதான் விஞ்ஞானிக்கு முக்கிய அடையாளம், டெஸ்ட் ட்யூப்களிலிருந்து புகை வர வேண்டியது மிக அவசியம்)

பெ.நா. அப்புசாமியின் இரண்டு வால்யூம் புத்தகங்களையும் ஏழெட்டு வயதில் கிராம நூலகத்திலிருந்து எடுத்துப் படித்தது எனக்கு இன்றும் அழியாத நினைவுதான். இன்னும் எந்த அத்தியாயத்தில் யாரைப் பற்றி எழுதினார் என்பது கூட நினைவிருக்கிறது. அரிஸ்டாட்டில் (நான்காவது அத்தியாயம்), கேலன் (ஆறாவது அத்தியாயம்), வெசாலியஸ் (ஒன்பதாவது அத்தியாயம்), ராபர்ட் ஹூக் (17-ஆவது அத்தியாயம்?), நியூட்டன் (18ஆவது அத்தியாயம்) பற்றி எழுதியவை இன்னும் நினைவிருக்கின்றன. எனக்கு அறிவியலில், கணிதத்தில் ஆர்வம் பிறந்ததற்கு முக்கியமான காரணம் இந்தப் புத்தகங்கள். முக்கியமான விஷயம், ஏழெட்டு வயது பையனுக்கு எல்லாம் புரிந்துவிடவில்லை, ஆனால் நிறைய புரிந்தது. அதனால் அறிவியலில் ஆர்வம் வலுத்தது.

அப்புசாமி அசப்பில் என் பெரியப்பா பி.எஸ்.ஒய். நாராயணன் போல இருப்பார். அதுவும் அவரது கவர்ச்சிக்கு ஒரு காரணம்.

பிற்காலத்தில் நினைத்ததுண்டு – இந்தப் புத்தகங்கள் நூலகங்களில் ஆயிரம் பிரதிகள் இருந்திருக்குமா? இரண்டாயிரம் பேர் படித்திருப்பார்களா? 100 பேருக்காவது அறிவியலில் ஆர்வம் பிறந்திருக்குமா? 100 பேர் வாழ்க்கையை தன் புத்தகங்கள் மூலம் மாற்றினார் என்றால் அது எத்தனை பெரிய சாதனை!

அவரைத் தவிர அந்தக் காலத்தில் “கல்வி” கோபாலகிருஷ்ணன் என்று ஒருவரும் அறிவியல் பற்றி எழுதினார். குறிப்பாக ஒரு விஞ்ஞானியின் மகன் ஏதோ மாத்திரையை சாப்பிட்டுவிட்டு மினியேச்சர் சிறுவனாக மாறி மனித உடலுக்குள் சென்று ரத்தம், குடல், பாக்டீரியாவைப் பார்ப்பது என்று போகும். ஆனால் அவர் சிறுவர்களுக்காக எழுதுகிறார் என்பது அந்த வயதிலேயே தெளிவாகவே தெரியும். அவ்வப்போது குழந்தைத்தனமாக இருக்கும். அப்புசாமி வேறு லெவலில் இருந்தார். அவர் எழுதியது சிறுவர்களுக்காக அல்ல, ஆனால் சிறுவர்களாலும் புரிந்து கொள்ள முடியும்.

இவற்றைத் தவிர தினமணி ஆசிரியர் ஏ.என். சிவராமன் எழுதிய “அப்போலோ கண்ட விண்வெளி விஞ்ஞானம்” என்ற புத்தகமும் என் கனவுகளைத் தூண்டியது. நாசாவைப் பற்றிய புத்தகம், நிறைய புகைப்படங்கள். அன்றைய விலை பத்து ரூபாய்!

தமிழில் அறிவியலை கொண்டு வந்தே தீர வேண்டும் என்று வாழ்க்கை முழுவதும் முனைந்தவர் அப்புசாமி. வேறு சில புத்தகங்களையும் படித்திருக்கிறேன். கலைக்கதிர் என்ற அறிவியல் பத்திரிகைக்கும் ஆசிரியராக இருந்தார் என்று நினைவு. அவருக்கு எத்தனை ஜே போட்டாலும் தகும்.

சீனிவாச கோபாலனின் மறுமொழியிலிருந்து: (அவருக்கு நன்றி!)

தமிழிணையம் இணைய நூலகத்தில் இவரது நூல்கள் கிடைக்கின்றன. தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தொகுதிகள் மூன்றும் ரயிலின் கதை நூலும் கிடைக்கின்றன. அப்புசாமிக்குப் பெரியப்பா அ. மாதவையா. பெரியப்பா சொல்லி எழுதத் தொடங்கினாராம். அப்படி அவர் எழுதிய முதல் கட்டுரையின் தலைப்பே வசீகரமானது. பிரபஞ்சத்தில் மனிதன் தனித்திருக்கிறானா?. வசனமும் கவிதையும் என்ற பெயரில் அமெரிக்க இலக்கிய வரலாறும் எழுதியிருக்கிறார். சில நூல்களை மொழிபெயர்க்கவும் செய்துள்ளார். விஞ்ஞானமும் விவேகமும் என ஜேம்ஸ் கோனன்ட் நூலின் மொழியாக்கமும் தமிழிணையத்தில் கிடைக்கிறது. இலக்கியப் பூந்துணர் என பாடப்புத்தகத்துக்கு படைப்புகளைத் தொகுத்திருக்கிறார். அதில் அவரது தேர்வுகள் அவரது ஆளுமைக்குச் சான்று பகர்கின்றன. நினைவுகூர்ந்து போற்ற வேண்டிய அறிவியல் தமிழ் முன்னாடி.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள்

Men of Mathematics (E.T. Bell)

நான் இந்தப் பதிவை தமிழில் எழுத முயற்சி கூட செய்யப் போவதில்லை.

In my teens, I came across a book called Men of Mathematics by Eric Temple Bell, a minor mathematician. I spent countless hours reading and re-reading that book.

I was a tolerably good student at that time, especially good at high school level math. But while I could easily and frequently score 100 marks in calculus and algebra tests, I just could not understand how one can cancel some terms involving delta-x because it is close to zero but not others; or how one can divide by delta-x that is almost close to zero.

I really had trouble during my +1 year. My math teacher was one K.V. Srinivasan or KVS, an old school teacher (He had a B.A. in math, not B.Sc.) at St. Joseph’s, Chengalpattu. I repeatedly asked him about the delta-x issue and he couldn’t give me a satisfactory explanation. His explanations looked very weak to me – I am sure he was as tired of my questions as I was tired of his answers.

Similarly, just wtf is an imaginary number? I mean, what number, when squared, yields a negative number? I was able to use them well, without really understanding it. Or even the negative numbers – why in the world would multiplying two negative numbers yield a positive number? I was used to thinking about negative numbers as debt – but why would multiplying one debt by another give me a profit? I didn’t have any teacher, any book, any resource that could answer such fundamental questions. I also couldn’t see any use for trigonometry. Algebra – which was my favorite branch of math at that time – felt like just symbol manipulation. Geometry was one branch I never truly liked – primarily because my drawing skills were very poor – I couldn’t draw a circle even with a compass, my circles would never close. But also, I just couldn’t see the point of opposite angles of intersecting lines being equal or the artificial distinction between but equilateral and isosceles triangles and so on. I remember asking in 6th or 7th grade where all the theorems about isosceles angles are all used in real life and getting a huge scolding from my teacher.

I can keep going on. Basically, higher level math – anything beyond simple arithmetic – felt like just a load of useless, impractical, theoretical garbage.

Aside: Algebra was my favorite branch because I had discovered formulae like a^2-b^2 = (a-b) * (a+b) by myself independently. That was my first intellectual achievement ever. My only clue was the observation that the difference between successive squares differ by 2. I was writing up squares of all numbers upto 32 as part of my classwork and noticed that 24^2=576, 25^2=625, 26^2=676; i.e. 25^2-24^2 = 49 and 26^2-25^2=51 and noticed that the pattern can be extended forever i.e. 27^2-26^2 = 53, 28^2-27^2 = 55 and so on. I was 11 or 12 around that time. And it took me around 4-5 months of thinking and thinking about this pattern before I came up with the formula. I didn’t know algebra at that time, I actually expressed it in terms of words, Tamil words at that 🙂 Something like:

ஒரு வர்க்கத்திலிருந்து இன்னொரு வர்க்கத்தை கழித்தால் கிடைக்கும் எண் அவற்றின் வர்க்கமூலங்களின் வித்தியாசத்தை வர்க்கமூலங்களின் கூட்டலால பெருக்கினால் கிடைக்கும் எண்ணுக்கு சமம்

When I came across algebra in 9th standard (I think), it felt great! I suddenly had a language to think about these kind of things. But 2-3 years later, I had come to think of algebra as rote manipulation of symbols according to certain predefined rules, just useless theory.

Then I came across Bell’s book. Bell made math come alive for me. Suddenly, I understood limits after reading the chapters on Fermat and Newton. In fact, it made perfect sense. Though I didn’t expect to use it myself, I suddenly saw why calculus is useful; not just useful, but necessary to understand the laws of physics. I suddenly saw imaginary numbers in terms of a co-ordinate plane and things just clicked. Multiplication of one negative number by another? Just a directional change along the number line.

When I read about Descartes, suddenly geometry became a discipline that I could master, by coming from a different angle. I got pretty decent at co-ordinate geometry, and I attribute that to entirely Bell’s effect. In fact, I had a voice at the back of my mind going that I could have done this, I could have invented co-ordinate geometry myself, Decartes’ achievements aren’t that great. That feeling that I could have created analytical geometry myself was enough to hook me onto math forever.

I read about Poncelet and the romantic account of his discovery of Projective geometry from prison, it made great sense. I desperately wanted a textbook on projective geometry and couldn’t get one. When I joined engineering, that one chapter gave me a fundamental understanding of engineering drawing class. I was still pretty bad at drawing, but I could clearly understand and in fact even go beyond what was taught in class. One chapter – just 10 pages or so – made a discipline real for me.

Of course, there were things I didn’t quite understand as well e.g. Fourier series, Analysis in general, Ellipitic integrals, Group theory, Riemann Hypothesis, chapters on Hermite and Poincare, but it just didn’t matter. I still don’t understand many of these topics. But I found enough to fascinate me. Cantor’s infinities, the Dedekind cut, Zeno’s paradoxes, Weirstrauss’s continuous but non-differentiable curve, Non-Euclidean geometries (The instant I was told to imagine a sphere, I could see how the fifth axiom is not valid any more), Fermat’s Last Theorem, the list goes on.

I didn’t see the point of of several of these topics as well e.g. I didn’t think Hamilton’s quarternions would ever find any use. But now I was confident that somewhere there must be a use for it. I read that number theory didn’t have much practical use, but I found it the most fascinating of all branches of math. Now of course, primes are crucial in cryptography…

Bell had a habit of combining the biography with tantalizing bits of math. For instance, he just mentioned Wilson’s Theorem in passing and would make a remark like a high school student can prove it. I think I spent 3-4 months thinking about it before I came up with a proof of my own. I can still vividly remember the thrill when I realized that every number has an inverse in modulo arithmetic. Wilson’s theorem was one of my rare successes, though. I probably failed in trying to prove 90% of what I attempted. No matter. I don’t think I had that much fun learning, just trying to figure out things before and after those 12-15 months in my teens.

I also spent hours ranking the mathematicians in that book in my mind. Gauss was always the #1. Descartes never got a high ranking from me because I felt that if a high school student like me can derive analytical geometry, then Descartes doesn’t deserve lot of credit. But I remember ranking Archimedes, Fermat, Newton, Leibniz, Euler, Abel, Galois, Riemann and Cantor as the top mathematicians.

One of my great regrets is that I couldn’t convey my enthusiasm for the book to my daughters – or for that matter, anybody else. I even bought a copy for Jeyamohan, but I doubt whether he actually opened the book any time. 🙂

Later I came to know that Bell would now and then exaggerate to make the biography more interesting. I couldn’t care a rat’s ass. He had done his job – kindled a life long fascination with math in a govt school kid brought up mostly in villages. I just wish I had gone beyond the dilettante stage and actually learned math. I would have enjoyed working on number theory!

Aside: When my daughter went for a familiarization tour to her college (UC Santa Barbara), Yitang Zhang – one of the romantic stories of math today – was giving an introductory lecture on the prime gap. I think I was the only one who was listening; I was actually thrilled with that lecture! My wife and daughters still make fun of my asking questions at the end of the lecture. I could see how his proof that the prime gap is less than 70 million ties in with Goldbach conjecture, and I was remembering Bell gratefully…

Bell has written other books e.g. The Last Problem is supposedly about Fermat’s Last Theorem; too much history and too little math for my taste…

Category: Math

மார்டின் க்ரஸ் ஸ்மித்: ஆர்கடி ரென்கோ நாவல்கள் சீரிஸ்

இன்று என் பிறந்த நாள். என்ன வயது என்று சொல்லப் போவதில்லை. பிறந்த நாள் அன்று ஏதாவது தத்துவம், பொன்மொழி எதையாவது உதிர்க்க வேண்டும். எங்கே போவது?

ஆர்கடி ரென்கோ நாவல்கள் எனக்கு பிடித்தமானவை. இந்த சீரிசில் சமீபத்தில் வெளிவந்த ரென்கோ நாவலான Siberian Dilemma (2019) நாவலைப் படித்தேன். சோகம் என்னவென்றால் நாவல் பெரிதாக சுகப்படவில்லை. ஆனால் Dilemma-வின் விளக்கம் மிக நன்றாக இருந்தது, வாழ்க்கைக்கு சரியான ஒன்று. கைகொடுத்த மார்டின் க்ரஸ் ஸ்மித் வாழ்க!

என் paraphrasing:

சைபீரியாவின் உறைந்த ஏரிகளில் ஐஸ் மீது நடந்து மீனவர்கள் மீன் பிடிக்க செல்வதுண்டு. சில சமயம் ஐஸ் உடைந்துவிடும், தண்ணீரில் விழுந்துவிடுவார்கள். தண்ணீரிலிருந்து வெளியே வந்தால் மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு நிமிஷத்திற்குள்ளாக உடல் உறைந்துவிடும், thermal shock-இல் இறந்துவிடுவார்கள். தண்ணீருக்குள் இருந்தால் ஐந்து நிமிஷத்தில் hypothermia-வில் இறப்பார்கள். எது பெட்டர்?

The question really is this: is it better to live with the status quo even if the situation is horrible, or is it better to try something, howsoever hopeless the situation is? In my younger days, I would have definitely said given that both situations are hopeless, choose the one that gives you a longer time. I now think that action, howsoever hopeless it is, is a much better option.

அதாவது வெளியே வருவதுதான் பெட்டர். ஏதாவது நடக்கலாம் ஒரு சின்ன வாய்ப்பாவது இருக்கிறது. ஒரு வேளை அவர்கள் ஓடினாலோ அல்லது வேறுவிதமாக உடலை இயக்கினாலோ அல்லது மருத்துவ வசதிகள் இருந்தாலோ பிழைக்க ஒரு minuscule வாய்ப்பிருக்கிறது. தண்ணீருக்குள் இருந்தால் மரணத்தை தடுக்க எந்த வாய்ப்புமில்லை.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஒரிஜினல் பதிவு கீழே…

Martin Cruz Smith உருவாக்கிய ஆர்கடி ரென்கோ (Arkady Renko) எனக்கு பிடித்த காரக்டர்களில் ஒருவர். கம்யூனிஸ்ட் ரஷியாவில் உயர்மட்ட ஜெனரலின் மகன். சீரிஸ் ஆரம்பிக்கும்போது அவர் மாஸ்கோ போலீசில் முக்கிய அதிகாரி. நேர்மையானவர், யாருக்கும் வளைந்து கொடுக்கமாட்டார். வளைந்து கொடுப்பது என்று இல்லை, வேண்டுமென்றே அதிகாரத்தில் உள்ளவர்களை தான் துப்பறியும் கேசுக்காக எதிர்த்துக் கொள்வார். அதாவது ஜெயலலிதா மேல் கேஸ், இவர் துப்பறிகிறார் என்றால் சரியான சமயத்தில் வேறு பக்கம் திரும்பிக் கொள்ள மாட்டார், வேண்டுமென்றே குடைச்சல் கொடுப்பார்.

ஆர்க்கடியின் பாத்திரப் படைப்பு சில cliche-க்கள் உள்ளது. இருந்தாலும் ரசிக்கக் கூடியது. அவருக்கு ரஷியா மேல் இருக்கும் உண்மையான பற்று, அவருடைய உயர்ந்த மனிதத்தன்மை (noble nature), முக்கியமாக விடாக்கண்டனாக இருப்பது இந்தக் கதைகளை உயர்த்துகிறது. ஒரே ஒரு கதை படிக்க வேண்டுமென்றால் போலார் ஸ்டார் கதையை சிபாரிசு செய்வேன். இரண்டு கதைகள் என்றால் கார்க்கி பார்க் மற்றும் போலார் ஸ்டார்.

இந்த சீரிஸில் வந்த நாவல்களைப் பற்றி கீழே.

Gorky Park, 1981: ஆர்க்கடி ஏற்கனவே ஒரு கேஜிபி கர்னலை முறைத்துக் கொண்டிருக்கிறார். இப்போது மாஸ்கோவில் நல்ல பனிக்காலத்தில் ஒரு பார்க்கில் மூன்று பிணங்கள். ஏதோ கேஜிபியோடு தொடர்பு இருப்பது தெரிகிறது. விடாக்கண்டன் போலத் துப்பறிகிறார். திருமணம் முறிகிறது. காதல் ஏற்படுகிறது. ஒரு powerful அமெரிக்கனை எதிர்க்கிறார். அவரது திமிர்+நேர்மை அவருக்கு எதிரியாக இருந்த கேஜிபி கர்னலையே அவருக்காக வாதிட வைக்கிறது. நல்ல த்ரில்லர். வில்லியம் ஹர்ட் நடித்து திரைப்படமாகவும் வந்தது.

Polar Star, 1989: எனக்கு மிகவும் பிடித்த நாவல் இதுதான். ரென்கோவை போலீசிலிருந்து தூக்கிவிட்டார்கள். அவர் இப்போது ஆர்க்டிக் கடலில் மீன் பிடிக்கும் கப்பல் ஒன்றில் மீனை சுத்தம் செய்யும் வேலை. கப்பலில் ஒரு கொலை, ரென்கோ துப்பறிய வேண்டி இருக்கிறது. மனிதர் கலக்குகிறார்! கொஞ்சம் கூட அதிகாரமே இல்லாத நிலை, ஆனால் எப்போதும் தான் கண்ட்ரோலில் இருப்பது போலவே நடந்து கொள்கிறார்.

Red Square, 1992: சோவியத் யூனியன் கவிழ்ந்துவிட்டது. ஆர்க்கடிக்கு மீண்டும் மாஸ்கோ போலீசில் வேலை. ஒரு கறுப்பு மார்க்கெட் ஆளைத் தேடும்போது மலேவிச் வரைந்த ரெட் ஸ்க்வேர் என்ற ஓவியத்தைப் பற்றி க்ளூ கிடைக்கிறது. தன் காதலியோடு இணைகிறார். ஆனால் ட்ராஜடியாக கதை முடிகிறது.

Havana Bay, 1999: இந்தக் கதை நடப்பது க்யூபாவில். பெரிதாக விவரிக்க முடியவில்லை, படித்துக் கொள்ளுங்கள்.

Wolves Eat Dogs, 2004: இந்தக் கதை நடப்பது அணு உலை வெடித்த செர்னோபிலில். ரஷியாவின் புதிய பில்லியனர்களில் ஒருவன் தற்கொலை செய்து கொள்கிறான். அதற்கான விடை செர்னோபில் அணு உலை விபத்தில் இருக்கிறது.

Stalin’s Ghost, 2005: ஸ்டாலின் ஆவி மாஸ்கோ ரயில் நிலையங்களில் தோன்றுகிறது! துப்பறியப் போகும் ஆர்க்டி செசன்யா போரில் சண்டை போட்டவர்கள், பல கொலைகள் எல்லாவற்றுக்கும் உள்ள தொடர்பைக் கண்டுபிடிக்கிறார்.

3 Stations, 2010: சுமார்தான். ஆர்கடிக்கு பேருக்கு மட்டும் மாஸ்கோ போலீசில் வேலை. அவரது மேலதிகாரி எப்படி இந்த ஆளை வேலையை விட்டு தூக்கலாம் என்று பார்க்கிறார். ஒரு 15 வயதுப் பெண், விபசார விடுதியிலிருந்து தன் 3 வார குழந்தையோடு தப்பி வருகிறாள். மாஸ்கோவுக்கு வரும்போது அவள் குழந்தை திருட்டுப் போய்விடுகிறது. அவளுக்கு துணையாக ஜென்யா. குரூரமான ஒரு கொலை நடந்திருக்கிறது. கேசை மூடுங்கப்பா என்று எல்லாரும் சொன்னாலும் ஆர்கடி அதை விடாமல் துப்பறிகிறார். ஒரு பில்லியனர் சூதாட்ட விடுதி முதலாளி தர்ம ஸ்தாபனம் என்று சொல்லி பணத்தை திருடிக் கொண்டிருக்கிறான். ஆர்கடி எல்லாவற்றையும் தீர்த்து வைக்கிறார்.

Tatiana, 2013:சுமார்தான். இந்த முறை மாஃபியா கும்பல் தலைவன் இறக்கிறான்; ஒரு மொழிபெயர்ப்பாளன் இறக்கிறான்; ஒரு crusading பத்திரிகையாளர் “இறக்கிறாள்”. எல்லாவற்றுக்கும் என்ன தொடர்பு என்று ஆர்கடி கண்டுபிடிக்கிறார்.


தொகுக்கப்பட்டம் பக்கம்: த்ரில்லர்கள்

ஆல்டைம் – மிகச் சிறந்த 10 புத்தகங்கள்

ஸ்டீஃபன் கிங், நார்மன் மெய்லர், டாம் வுல்ஃப் உள்ளிட்ட 125 எழுத்தாளர்கள் தேர்ந்தெடுத்த 10 ஆல்டைம் கிரேட் புத்தகங்கள் என்று ஒரு பட்டியல் கண்ணில் பட்டது. வசதிக்காக பட்டியல் கீழே.

1. Anna Karenina (டால்ஸ்டாய்)
2. Madame Bovary (ஃப்ளாபெர்ட்)
3. War and Peace (டால்ஸ்டாய்)
4. Lolita (நபோகோவ்)
5. Adventures of Huckleberry Finn (ட்வெய்ன்)
6. Hamlet (ஷேக்ஸ்பியர்)
7. Great Gatsby (ஃபிட்ஸ்ஜெரல்ட்)
8. In Search of Lost Time (ப்ரௌஸ்ட்)
9. Short Stories (செகாவ்)
10. Middlemarch (ஜார்ஜ் எலியட்)

எனக்கு இந்தப் பட்டியலில் இசைவில்லை. இந்தியா/தமிழை கணக்கிலே எடுத்துக் கொள்ளவே இல்லை என்றாலும் ஒரு நிமிஷம் கூட யோசிக்காமல் Moby Dick, Les Miserables, Crime and Punishment, One Hundred Years of Solitude, All Quite on the Western Front, To Kill a Mockingbird, Old Man and the Sea, Animal Farm, Pride and Prejudice, Death of a Salesman, Glass Menagerie, Doll’s House, Ceaser and Cleopatra என்று பல நினைவு வருகின்றன. ஷேக்ஸ்பியரில் கூட நான் Macbeth-ஐ ஒரு மாற்று அதிகமாக மதிப்பிடுவேன். இந்தப் பட்டியலில் நான் டால்ஸ்டாயின் பெருநாவல்களைப் படித்ததில்லை (என் வாசிப்பில் அது ஒரு பெரிய ஓட்டை). மிச்ச எட்டில் Huckleberry Finn மற்றும் செகாவை மட்டும்தான் சேர்த்துக் கொள்வேன்.

அதனால் என்ன? அவரவருக்கு ஒரு பட்டியல் போட்டுக் கொள்ளலாம். அதில்தான் மஜா. உங்கள் பட்டியல் என்ன? தவறாமல் எழுதுங்கள்!

பின்குறிப்பு அதே 125 எழுத்தாளர்களின் ஆல்டைம் கிரேட் எழுத்தாளர்கள் பட்டியல்:
1. டால்ஸ்டாய்
2. ஷேக்ஸ்பியர்
3. ஜேம்ஸ் ஜாய்ஸ்
4. நபோகோவ்
5. டோஸ்டோவ்ஸ்கி
6. ஃபாக்னர்
7. டிக்கன்ஸ்
8. செகாவ்
9. ஃப்ளாபெர்ட்
10. ஜேன் ஆஸ்டென்

தொகுக்கப்பட்ட பக்கம்: பட்டியலகள்

பெர்னார்ட் கார்ன்வெலின் ஆல்ஃப்ரெட் நாவல்கள் (சாக்சன் சீரீஸ்)

இந்த சீரிசின் அடுத்த நாவலான Sword of the Kings (2019) -ஐப் படித்தததால் மீள்பதித்திருக்கிறேன்.

Sword of the Kings மற்ற நாவல்களைப் போலவேதான் இருக்கிறது. அதே மாதிரி கொஞ்சம் வரலாற்றுப் பின்னணி, சில பல போர்க்காட்சிகள், அதே மாதிரி நல்ல மசாலா நாவல். வித்தியாசமாக எதுவுமில்லை. என்ன வரலாறு? ஆல்ப்ரெடின் மகன் எட்வர்ட் இறந்துவிட வாரிசு சண்டை. அதெல்ஸ்டான் தென் இங்கிலாந்தின் மன்னனாகிறான். ஆல்ஃப்ரெடின் கனவு – ஆங்கிலம் பேசும் எல்லாரையும் ஒரே ராஜ்ஜியத்தில் இணைக்க வேண்டும் – கிட்டத்தட்ட நிறைவேறிவிட்டது. இன்னும் வட இங்கிலாந்துதான் (இன்றைய யார்க்‌ஷையர் பகுதி) பாக்கி.

bernard_cornwellராஜா ஆல்ஃப்ரெட் ஒன்பதாம் நூற்றாண்டில் தென் இங்கிலாந்தை ஆண்ட மன்னன். இன்று நாம் இங்கிலாந்து என்று குறிப்பிடும் நிலப்பரப்பு அன்று வேல்ஸ், வெஸ்ஸெக்ஸ், மெர்சியா, கிழக்கு ஆங்கிலியா, நார்த்தம்பர்லாண்ட் என்று பலவாகப் பிரிந்து கிடந்தது. (தமிழ்நாடு சேர, சோழ, பாண்டிய நாடுகளாக இருந்த மாதிரி). இவற்றை எல்லாம் இங்கிலாந்து என்ற ஒரே ராஜ்ஜியமாக இணைத்தது ஆல்ஃப்ரெட். இந்த நாவல் சீரிசைப் படித்த பிறகு ஆல்ஃப்ரெட் அவற்றை எல்லாம் ஒன்றிணைக்கும் வேலையை ஆரம்பித்தாலும் அப்படி ஒன்றாக இணைய இன்னும் இரண்டு தலைமுறை ஆனது என்று தெரிய வருகிறது. அந்தக் காலகட்டத்தில் டென்மார்க், ஸ்காண்டிநேவிய நாடுகளிலிருந்து சாரிசாரியாக வீரர்கள் வந்து ஆல்ஃப்ரெட் மற்றும் பல மன்னர்களோடு போரிட்டிருக்கிறார்கள். சில ராஜ்ஜியங்களை கைப்பற்றியும் இருக்கிறார்கள். சோழர்களும் சாளுக்கியர்களும் போரிட்டுக் கொண்டே இருந்த மாதிரி.

கார்ன்வெல்லே விளக்குகிறார் – ஆங்கிலேயர்கள் – குறிப்பாக இளைஞர்கள் – இங்கிலாந்து எப்போதுமே இருந்த ஒரு அமைப்பு என்று எண்ணுகிறார்கள், இங்கிலாந்து எப்படி உருவானது என்ற சரித்திரப் பிரக்ஞை அவர்களுக்கு இல்லை. அந்தப் பின்புலத்தை விளக்கவே இந்த நாவல்களை எழுதினாராம்.

கார்ன்வெல் வழக்கம் போல இவற்றை ஒரு போர் வீரனின் பார்வையிலிருந்து விவரிக்கிறார். இந்த முறை அந்த வீரனின் பேர் உத்ரெட். உத்ரெட் சின்ன வயதில் டேனிஷ் பிரபு ராக்னாரால் கைப்பற்றப்படுகிறான். சின்னப் பையனாக இருந்தாலும் அவன் தைரியத்தை கண்டு வியக்கும் ராக்னார் உத்ரெட்டை தன் மகன் போலவே வளர்க்கிறான். உத்ரெட் கிறிஸ்துவனாகப் பிறந்தவன். ராக்னார் தோர், ஓடின் போன்ற ஸ்காண்டிநேவியக் கடவுள்களை வழிபடுபவன். டேனிஷ் மதம் வாழ்க்கையை அனுபவி, போரிடு, இறந்தால் வீர சொர்க்கம் போவாய், அங்கே மற்ற வீரர்களோடு போரிட்டு காலத்தைக் கழிக்கலாம், சுருக்கமாக என்ஜாய் என்கிறது. கிறிஸ்துவ மதமோ எல்லாமே பாவம், ஏசு மட்டுமே உன்னை ரட்சிக்க முடியும் என்கிறது. உத்ரெட் ராக்னாரை தன் அப்பா ஸ்தானத்தில் வைத்திருக்கிறான், டேனிஷ் மதத்தைத்தான் கடைப்பிடிக்கிறான். ஆனால் அவன் வாழ்க்கை முழுவதும் அவன் கிறிஸ்துவ ராஜ்ஜியங்களுக்காக, டேனிஷ் படைகளை எதிர்த்துப் போராடி அவர்களை மீண்டும் மீண்டும் தோற்கடிக்கிறான். ஆனால் அவனுக்குக் கிடைக்க வேண்டிய பட்டம் பதவி எல்லாம் அவன் கிறிஸ்துவன் இல்லை என்பதால் அவனுக்கு முழுதாகக் கிடைப்பதில்லை. உள்ளுணர்வின்படி டேனிஷ்காரனான உத்ரெட் டேனிஷ் படைகளை வென்று கிறிஸ்துவ அரசை நிலைநிறுத்தும் முரண்பாடுதான் இந்த நாவல்களின் அடிநாதம்.

இந்த முறை ஒன்பது 12 நாவல்கள் வந்திருக்கின்றன. Last Kingdom (2004), Pale Horseman (2005), Lords of the North (2006), Sword Song (2007), Burning Land (2009), Death of Kings (2011), Pagan Lord (2013), Empty Throne (2014), Warriors of the Storm (2015), Flame Bearer (2016), Warrior of the Wolf (2018), Sword of the Kings (2019)

இவை எவையும் இலக்கியம் அல்ல. சரித்திர அடிப்படை கொண்ட சாகசக் கதைகளே. இவற்றின் முக்கியக் குறை என்று நான் கருதுவது ஒன்பது நாவல்களும் ஒரே நாவலைத் திருப்பி திருப்பி எழுதியது போல இருக்கிறது என்பதுதான். ஒரு வேளை நான் ஆங்கிலேயனாகப் பிறந்திருந்தால் எனக்கு அப்படி தோன்றாமல் இருக்குமோ என்னவோ. (சாண்டில்யன் நாவல்கள் எல்லாம் எனக்கு வேறு வேறாகத்தான் தெரிகின்றன.)

ஆனால் பிரமாதமான மசாலா கதைகள். அவற்றின் ஊடாக ஒரு மெல்லிய நகைச்சுவை ஓடிக் கொண்டே இருக்கிறது. (மெர்சியாவின் அரசியாக ஏதல்ஃப்ளாட் பதவி ஏற்கும் காட்சி, ஆல்ஃப்ரெட்டின் அறிமுகக் காட்சியில் தன் பெண் பித்தின் ‘பாவச்சுமையை’ ஆல்ஃப்ரெட் உணரும் விதம், மறைந்த புனிதர்களின் அடையாளச் சின்னங்களைத் தேடும் கிறிஸ்துவ மதம் (வாந்தி எடுத்து துடைத்த துணி எல்லாம் புனிதச் சின்னமாகக் கருதப்படுகிறது). கார்ன்வெல்லின் ட்ரேட்மார்க்கான நம்பகத்தன்மை உள்ள போர்க்காட்சிகள் நிறைந்திருக்கின்றன. உத் ரெட்டின் துணைவர்களாக வருபவர்கள் (ஐரிஷ்காரனான ஃபினன், பெரும் பலசாலியான ஸ்டீபா, அவனது சின்ன வயது வாத்தியாரான மதகுரு பியோக்கா, ஆல்ஃப்ரெடின் முறைதவறிப் பிறந்த மகன் ஆஸ்ஃபெர்த், உத்ரெடின் மகனான உத்ரெட்) எல்லாரும் உயிருள்ள பாத்திரங்கள்.

இந்தக் கதைகளில் ஆல்ஃப்ரெட் அரசனாகிறான். போர்த்திறமைக்கு மட்டுமல்ல, படிப்பறிவு, சட்டம், நிர்வாகம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தருகிறான். கிறிஸ்துவ மதத்தில் முழு நம்பிக்கை உள்ளவன். அது மதகுருக்களின் மீதும் நம்பிக்கையாகப் பரிணமித்திருக்கிறது. உத்ரெட் செய்யும் சேவைகளுக்கு அவன் தான் இறக்கும் தருணம் வரை முழுவதாக பரிசு, பட்டம் வழங்கவில்லை. உத்ரெட்டின் போர்த்திறமை எல்லாருக்கும் தெரிந்திருந்தும், மதகுருக்களின் எதிர்ப்பினால் ஆல்ஃப்ரெட் அவனை தன் தளபதி ஆக்கவில்லை. அவன் மகள் ஏதல்ஃப்ளாடுக்கும் உத்ரெட்டிற்கும் ஏற்படும் உறவு ஆல்ஃப்ரெட்டுக்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. உத்ரெட் தன் போர்த் திறமையால் மீண்டும் மீண்டும் டேனிஷ் படைகளை வெல்கிறான். ஆர்தரின் பேரனான ஏதல்ஸ்டானை உத்ரெட் வீரனாக வளர்க்கிறான். தனிப்பட்ட கதைகள் முக்கியமே அல்ல, ஆனால் அவை ஒன்றாகச் சேர்ந்து நல்ல படிக்கும் அனுபவத்தை ஏற்படுத்துகின்றன.

சாகசத்துக்காகப் படிக்கலாம், சரித்திரத்துக்காகவும் படிக்கலாம். நான் இரண்டு காரணங்களுக்காகவும் படித்தேன், படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பெர்னார்ட் கார்ன்வெல் பக்கம்

கொத்தமங்கலம் சுப்பு

சமீபத்தில் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் கொத்தமங்கலம் சுப்புவை நினைவு கூர்ந்து ஃபேஸ்புக்கில் எழுதி இருந்தார். அவரது பதிவுக்கு ஐம்பது அறுபது மறுமொழிகள் வந்தன. எனக்கு ஆச்சரியம்தான், இத்தனை பேர் கொ. சுப்புவை நினைவில் வைத்திருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர்களில் எத்தனை பேர் ஐம்பது வயதுக்கு இளையவர்களாக இருப்பார்கள் என்று தெரியவில்லை. அதனால் அவரை நினைவு வைத்திருப்பவர்களுக்கு நாஸ்டால்ஜியா என்ற எண்ணம் இன்னும் மாறவில்லை.

Aside: ஒரு காலத்தில் – அறுபது-எழுபதுகளில் என்று நினைக்கிறேன் – அமுதசுரபியின் பப்ளிஷராக இருந்த பி.எஸ். விஸ்வநாதன் என்னுடைய தங்கையின் மாமனார்.  அப்போதெல்லாம் விக்ரமன் ஆசிரியராக இருந்தார் என்று நினைவு…

thiruppur_krishnanகிருஷ்ணனின் மதிப்பீட்டில் இருந்து நான் மாறுபடுகிறேன். என் கண்ணில் தி. மோகனா நல்ல நாவல் அல்ல, ஆனால் ஆவண முக்கியத்துவம் உள்ள வணிக நாவல். இன்று தி. மோகனா நினைவிருப்பதே அதன் திரைப்பட வடிவத்தால்தான் என்றே கருதுகிறேன். அதனால் என்ன? என் தலைமுறையினருக்கு சுஜாதாவின் லாண்டிரி லிஸ்டையும் ஒரு காலத்தில் படிக்கத் தயாராக இருந்தது போல, அடுத்த தலைமுறையினருக்கு பாலகுமாரன் மீது ஒரு soft corner இருப்பதைப் போல, தி. மோகனா வெளிவந்த காலத்தில் அடுத்த விகடன் இதழ் எப்போது வரும் என்று காத்திருந்தவர் அனேகர். அவர்களின் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் இந்த மதிப்பீடு முக்கியமானது.

கிருஷ்ணனின் மதிப்பீடும் என் ஒரிஜினல் பதிவும் கீழே.

திருப்பூர் கிருஷ்ணனின் வார்த்தைகளில்:

கொத்தமங்கலம் சுப்பு என்றதும் உடனே நினைவுக்கு வருகிற படைப்பு தில்லானா மோகனாம்பாள். ஆனந்த விகடன் வாசகர்களின் மனங்களைக் கொள்ளைகொண்ட நாவல் அது.

நடனமணி மோகனாம்பாள், நாதஸ்வரக் கலைஞன் சண்முக சுந்தரம் இருவரின் காவியக் காதலைச் சொன்ன அந்த நாவல், கூடவே நம் பாரம்பரியக் கலைகளான நாட்டியம், சங்கீதம் போன்றவற்றின் உன்னதங்களையும் சேர்த்துச் சொல்லிற்று. தமிழ் வாசகர்களைப் பித்துப் பிடித்துப் படிக்கச் செய்த தொடர் அது.

பிரபல நாவலாசிரியை வசுமதி ராமசாமி அவர்களிடம் ஒருமுறை பேட்டியெடுக்கச் சென்றிருந்தேன். அவரது நாவலான காப்டன் கல்யாணம் பற்றி அவரிடம் கேட்டேன்.

“என்னுடைய அந்த நாவல் விகடனில் தொடராக வந்தபோது கூடவே தில்லானா மோகனாம்பாள் நாவலும் வந்தது. அதைப் பல்லாயிரக்கணக்கான பேர் ரசித்து வாசித்தார்கள். அதே இதழில் என் தொடர்கதை வந்ததால் அதை வாசித்த அத்தனை வாசகர்களும் என் கதையையும் வாசித்தார்கள் என்பதில்தான் எனக்குப் பெருமை. நான் கொத்தமங்கலம் சுப்பு எழுத்துக்களின் தீவிர ரசிகை!” என்று பண்பட்ட அடக்கத்துடன் தெரிவித்துக் கொண்டார் அவர்.

கலைஞர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் செம்மொழி மாநாடு விமரிசையாக நடைபெற்றது. அதில் தமிழறிஞர் சாலமன் பாப்பையா தலைமையில் ஒரு பட்டிமன்றம் ஏற்பாடாகியிருந்தது. பட்டிமன்றத்தில் நான் ஓர் அணியில் கலந்துகொண்டு பேசினேன்.

அப்போது தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள் பலரைப் பற்றிக் குறிப்பிட்டபோது தில்லானா மோகனாம்பாள் புகழ் கொத்தமங்கலம் சுப்பு பெயரையும் குறிப்பிட்டேன்.

பட்டிமன்றம் முடிந்தபிறகு என்னை ஏராளமான பேர் தொலைபேசியில் அழைத்து நான் கொத்தமங்கலம் சுப்பு பெயரைச் சொன்னது பற்றிக் கூறி, அதன் பொருட்டாகவே என்னைப் பாராட்டினார்கள். நானும் அவரது ரசிகன்தான் என்றாலும் அவருக்கு எத்தனை ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்தேன்.

விமர்சகர்கள் வலியத் தூக்கிப் பிடித்து நிறுத்துகிற எழுத்தாளர்கள் கொஞ்சம்பேர் உண்டு. கால வெள்ளத்தில் மக்களால் அவர்கள் மறக்கப்பட்டு விடுவார்கள். தன் எழுத்தின் வலிமையை நம்பாமல், விமர்சகர்களது வாதத்தின் வலிமையை நம்பி இலக்கியம் படைப்பவர்களுக்கு அந்த கதி நேர்வது ஆச்சரியமல்ல.

ஆனால் எழுத்தின் தரத்திலேயே முக்கிய கவனம் செலுத்தி, சமுதாய உணர்வோடு எழுத்தைப் படைத்து, அதன்பொருட்டு வாசகர்களின் ரசனையை மட்டுமே நம்பி வேறு செல்வாக்கைத் தேடாத எழுத்தாளர்களும் சிலர் இருக்கிறார்கள். அவர்களை மக்கள் என்றும் மறப்பதில்லை. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் கொத்தமங்கலம் சுப்பு. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வாசகர்கள் ஒருபோதும் அவரை மறக்க மாட்டார்கள்.

தமிழில் எழுதப்பட்ட ஓர் எழுத்து திரைப்படமாகவும் வந்து, எழுத்து பெற்ற அதே வெற்றியைப் பெற்றது என்றால் அந்தப் பெருமை தில்லானா மோகனாம்பாள் நாவலுக்கு மட்டும்தான் உண்டு என்று தோன்றுகிறது. நாட்டியப் பேரொளி பத்மினியையும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனையும் மோகனாம்பாளாகவும் சண்முகசுந்தரமாகவுமே மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

தில்லானா மோகனாம்பாளின் இன்னொரு பெருமை கோபுலுவின் கண்ணைக் கட்டி நிறுத்தும் அழகிய சித்திரங்கள். ராவ்பகதூர் சிங்காரம், பந்தநல்லூர் பாமா போன்ற கொத்தமங்கலம் சுப்புவின் மற்ற நாவல்களுக்கும் கோபுலுவே ஓவியம் வரைந்தார் என்றாலும், தில்லானா மோகனாம்பாள் நாவலில் கோபுலு பெற்ற புகழ் அலாதியானது.

என்னதான் சிறப்பாக இருந்தாலும் தில்லானா மோகனாம்பாள் நாவல் நீண்டுகொண்டே போகிறதே என்று ஒரு வாசகர் சாவியிடம் கேட்டாராம். அதற்கு சாவி சொன்ன பதில்:

“குரங்குக்கு வால் நீளமாக இருந்தால் சங்கடம். மயிலுக்குத் தோகை நீளமாக இருந்தால் அழகுதானே? எவ்வளவு வாரம் வருகிறதோ அவ்வளவு வாரங்களும் ரசியுங்களேன்!”

தமிழ் நாவல் வரலாற்றில் தில்லானா மோகனாம்பாள் ஒரு மைல்கல். இந்த ஒரு மைல்கல் மட்டுமல்ல, இன்னும் கவனிக்கப்படாத எத்தனையோ மைல்கற்கள் கொத்தமங்கலம் சுப்பு இலக்கியத்தில் உண்டு. அவற்றில் ஒன்றுதான் அவரது தமிழ் நயம் கொஞ்சும் கவிதைகள்.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை ஆகியோரைப் போல எல்லோருக்கும் புரிகிற எளிய வார்த்தைகளையே சுப்பு தம் கவிதைகளில் பயன்படுத்தினார். இன்னும் சொல்லப் போனால், நாட்டுப்புற மக்கள் பேசுகிற பேச்சு வழக்கு வார்த்தைகளையெல்லாம் அவர் தம் கவிதைகளில் கையைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு வந்து உலவவிட்டார்.

பேச்சு வழக்கு என்பது உரைநடையில்தான் இருக்க வேண்டுமா என்ன? கவிதையிலும் இருக்கலாம்தானே? ஒரு குறத்தி பேசுகிற தமிழ், இலக்கணத் தமிழாகவாக இருக்கும்? கவிதையில் குறத்தியைக் கொண்டு வருகிறபோது கொஞ்சம் அவள் வழியாகப் பேச்சுத் தமிழையும் கொண்டு வந்தால்தானே அவளது பாத்திரப் படைப்பு ஜீவனோடு இருக்கும்? இப்படி யோசித்தார் குற்றாலக் குறவஞ்சியை எழுதிய திரிகூட ராசப்பக் கவிராயர்.

தலைவி பார்வதிக்குக் குறி சொல்ல வந்த குறத்தி, மாலையில் தலைவன் சிவபெருமான் வருவான் என்பதைச் சொல்லி “கைந்நொடியில் பொன்னிதழி மாலை வரும்காண் அப்போ கக்கத்தில் இடுக்குவையோ வெக்கத்தை அம்மே?” என்று சொல்வதாக அமைத்து “அப்போ, கக்கம்” முதலிய பேச்சு வழக்குச் சொற்களை இலக்கணம் பிசகாமல் மரபுக் கவிதையில் இணைத்தார். மரபுக் கவிதையில் பேச்சு வழக்குச் சொற்களைக் கொண்டுவந்த முன்னோடிக் கவிஞர் திரிகூட ராசப்பக் கவிராயர்தான்.

அவர் மரபைத்தான் பின்பற்றினார் கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு. தம் மரபுக் கவிதைகள் பலவற்றில் மிக இயல்பாகப் பேச்சு வழக்கைக் கலந்து அவற்றைப் பரிமளிக்க வைத்தார். இலக்கணம் பிசகாத சந்தக் கவிதைகள் தான். ஆனால் பேச்சு வழக்குச் சொற்கள் சுப்புவுக்குக் கைகட்டிச் சேவகம் செய்தன.

அவர் மேடையில் தாம் எழுதிய காந்தி மகான் கதையை வில்லுப்பாட்டாகப் பாடிய போது பல்லாயிரக்கணக்கான பாமரர்களும் அதை வியந்து ரசித்தார்களே, அதற்குக் காரணம் அதில் இழையோடிய மக்களின் பேச்சு மொழிதான். அந்தப் பேச்சுமொழி அவர் கவிதையோடு பாமரர் முதல் பண்டிதர் வரை எல்லோருக்கும் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியது.

பழந்தமிழை அதிகம் பயலப் பயில எளிமையாக எல்லோருக்கும் புரியும் நடையில் எழுதும் ஆற்றல் வரும்! இது முரண்பாடாய்த் தோன்றலாம். ஆனால் இதுதான் உண்மை. பழந்தமிழ்ப் பயிற்சி தமிழின் ஜீவன் எது என்பதை இனங்காட்டும். பழந்தமிழ்ப் புலவர்கள் எழுதிய தமிழ் அந்தக் காலப் பேச்சுத் தமிழாகத் தான் இருந்திருக்க வேண்டும்.

உண்மையான தமிழ்ப் பண்டிதர்கள் எளிய தமிழைத்தான் பயன்படுத்துவார்கள் என்பதற்கு எடுத்துக் காட்டு தமிழ்த் தாத்தா உ.வே.சா.! அவரை மிஞ்சிய பண்டிதர் உண்டா? பழந்தமிழ்ப் புதையலை நமக்குத் தோண்டியெடுத்துத் தந்தவரே அவர் தானே?

ஆனால் அவரது என் சரிதம் நூலைப் படித்தால் தெரியும், தமிழை எத்தனை எளிமையாக அவர் கையாண்டிருக்கிறார் என்பது. பண்டிதர்களுக்கு மட்டுமே புரியக் கூடிய வார்த்தையாக ஒன்று கூட அதில் இருக்காது.

கொத்தமங்கலம் சுப்புவின் கவிதைகளின் சிறப்பு அவர் கையாண்ட தமிழ் நடையில் உள்ள எளிமை. எந்தச் சொல்லையும் அகராதியைப் பார்க்காமல் எட்டாம் வகுப்பு மாணவன் கூடப் புரிந்து கொள்ள முடியும். உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும். பாரதி வாக்கு மெய்தான். கொத்தமங்கலம் சுப்புவின் உள்ளத்து ஒளி அவர் வாக்கில் பளிச் பளிச் என மின்னுகிறது.

ராதா ஜயலட்சுமி சகோதரிகள் பாடி, மோட்டார் சுந்தரம் பிள்ளை திரைப்படத்தில் இடம்பெற்று எம்.எஸ். விஸ்வநாதன் இசையால் பெரும்புகழ்பெற்ற மனமே முருகனின் மயில்வாகனம் என்ற பாடலை யாரும் மறந்திருக்க இயலாது. அந்தப் பாடல், கொத்தமங்கலம் சுப்பு இயற்றியதுதான். திரையில் ஒலித்தது பாடலின் முதல் நான்கு வரிகள் மட்டுமே. அந்த நான்கு வரிகளைத் தாண்டியும் முழுக் கவிதையில் இன்னும் அற்புதமான பல வரிகள் உண்டு.

கொத்தமங்கலம் சுப்புவின் ரத்தத்தில் ஊறிய தேச பக்தி, அவரது பேனா வழியே காகிதத்தில் ஊறாதிருக்குமா? “இந்நாட்டு மன்னவனே என்மகனே தாலேலோ” என்கிற தாலாட்டுப் பாடலில் அவர் குழந்தையை எப்படியெல்லாம் தாலாட்டுகிறார் பாருங்கள்:

“ஆளடிமையாய் நாங்கள் அன்னியனின் கால்வருடி
காலம் கழிக்கிறப்போ கருவாக வெறுத்தாயோ?
அடிமை முறிகிழித்து அன்னியனைச் சிறகொடித்து
குடிமை நிமிர்ந்த பின்னே குலந்தழைக்க வந்தாயோ?

திலகர் பிறந்தாரோ சிதம்பரனார் வந்தாரோ
செந்தமிழ் பாரதிதான் திரும்ப வந்து பிறந்தாரோ?
ஆதியாய்த் தன் மைந்தன் ஆளுவதைக் கண்காண
மோதிலால் நேரு வந்து முன்னே பிறந்தாரோ?

தன்னரசு நாடாகி தமிழ் முரசு கொட்டுவதை
தன்னுடைய கண்காண சத்தியமூர்த்தி வந்தாரோ?`
கோட்டையதன் மேலே கொடிக்கம்பத் துச்சியிலே
நாட்டிவைத்த கொடிகாண நம் குமரன் வந்தானோ?”

தன்னுடைய ஆற்றல் சார்ந்த கர்வத்தின் சின்ன ரேகை கூடக் கொத்தமங்கலம் சுப்புவிடம் இருந்ததில்லை. அவர் எழுத்தில் எங்குமே கர்வம் தென்பட்டதில்லை. கர்வமே இல்லாமல் வாழ்ந்த கு. அழகிரிசாமி, வல்லிக்கண்ணன் போன்றோர் வரிசையில் வைக்க வேண்டிய இன்னொரு மகான் அவர்.

என் ஒரிஜினல் பதிவு.

இது கொத்தமங்கலம் சுப்புவின் நூற்றாண்டாம். (நவம்பர் 1910-இல் பிறந்திருக்கிறார்.) 64 வயதில், 1974-இல் மறைந்திருக்கிறார்.

அவர் வாழ்ந்த வீடு – லாயிட்ஸ் ரோடு என்கிற அவ்வை சண்முகம் சாலையில்தான் இருக்கிறது என்று நினைவு, என் அபார்ட்மெண்டிலிருந்து ஒரு நடை போகும்போது எப்போதோ பார்த்திருக்கிறேன். இப்போது அதுவும் அடுக்குமாடி குடியிருப்புதான். அன்றைய எஸ்.எஸ். வாசனின் வீட்டிலிருந்து (ம்யூசிக் அகடமி எதிரில் இருந்தது, இன்று அது ஒரு பளபளக்கும் அலுவலகக் கட்டிடம்) அரை மைல் தூரம்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

சுப்பு ஜெமினி படங்களில் பல பணிகளை வகித்திருக்கிறார் – நடித்திருக்கிறார், படங்களை இயக்கி இருக்கிறார், கதை-வசனம்-பாடல்கள் எழுதி இருக்கிறார். வில்லுப்பாட்டை உயிர்ப்பித்தவர் அவர்தான் என்று கேள்வி. காந்தி மகான் கதை என்ற வில்லுப்பாட்டு மிகவும் பிரபலமாக இருந்தது. பத்மஸ்ரீ விருது கிடைத்திருக்கிறது. ஆனால் சிலிகான் ஷெல்ஃபில் அவர் படைப்புகளைப் பற்றி மட்டும்தான் பேசமுடியும்.

தில்லானா மோகனாம்பாள் என்ற ஒரே ஒரு நாவலால்தான் அவர் தமிழ் இலக்கிய வரலாற்றில் கொஞ்சமாவது நினைவு வைத்துக்கொள்ளப்படுவார் என்று நான் கருதுகிறேன். அதுவும் என் தலைமுறையிலேயே நாவலை விட சினிமாதான் நினைவிருக்கிறது.

தி. மோகனாம்பாள் அப்படி ஒன்றும் பிரமாதமான நாவல் இல்லை. வளவளதான். ஆனால் நாவல் தொடர்கதையாக வந்த காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சிக்கல் ஷண்முகசுந்தரம் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையை மூலமாக வைத்து உருவாக்கப்பட்டதாம். இன்றைக்கு ராஜரத்தினம் பிள்ளையே நமது பிரக்ஞையில் இல்லைதான், ஆனால் அன்று அந்த விஷயம் கதையின் கவர்ச்சியை அதிகரிக்கத்தான் செய்திருக்கும்.

தி. மோகனாம்பாள் காட்டும் உலகம் – தாசி என்ற ஒரு பாரம்பரியம், கலைகளை ஆதரித்த சந்தடி சாக்கில் தாசிகளோடு ஜாலியாக இருக்கும் பெரும் பண்ணையார்கள், கர்னாடக இசையை ரசித்த சாதாரண மக்கள், நாதசுரம், பரதம் இல்லை இல்லை சதிர், திருவிழாக்கள், தஞ்சாவூர் பின்புலம் எல்லாம் கொஞ்சம் அன்னியமாகத்தான் தெரிகிறது. ஆனால் படித்தால் அதற்காகத்தான் படிக்க வேண்டும்.

இன்று தி. மோகனாம்பாளைப் படிப்பவர்கள் நாஸ்டால்ஜியா, சினிமாவால் வந்த curiosity, அந்தக் கால mores பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம், எந்த மாதிரி நாவல்கள் வெற்றி பெற்றன என்று ஆராய்ச்சி மாதிரி காரணங்களுக்காகத்தான் படிக்க வேண்டும்.

தி. மோகனாம்பாள் உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை 250 ரூபாய்.

தி. மோகனாம்பாளை ஜெயமோகன் தமிழின் சிறந்த சமூக romance-களில் ஒன்றாக மதிப்பிடுகிறார். எனக்கு இதை அந்த அளவில் வைப்பது கஷ்டம்.

சுப்பு எழுதிய மிஸ் ராதா என்ற ஒரு நாவல், மஞ்சிவிரட்டு என்ற சிறுகதைத் தொகுப்பும் படித்திருக்கிறேன். எதுவும் சுகப்படவில்லை. மஞ்சிவிரட்டு சிறுகதைத் தொகுப்பை வ.ரா. ஆஹா ஓஹோ என்று புகழ்ந்திருக்கிறார். வ.ரா.வின் ரசனை பற்றி சந்தேகமாக இருக்கிறது. 🙂

ராவ்பகதூர் சிங்காரம் என்ற நாவலும் வெற்றி பெற்றது என்று கேள்வி. அது சிவாஜி கணேசன் நடித்து விளையாட்டுப்பிள்ளை என்று சினிமாவாகவும் வந்ததாம்.

நண்பர் விஜயன் தி. மோகனாம்பாள் பின்புலத்தை பந்தநல்லூர் பாமா என்ற புனைவிலும் வைத்து எழுதி இருக்கிறார் என்று தகவல் தருகிறார்.

என் கண்ணில் தமிழ் இலக்கிய வரலாற்றில் கொத்தமங்கலம் சுப்பு ஒரு footnote அளவுக்கு வந்தால் அதிகம். காலாவதியாகிவிட்ட எழுத்து என்றுதான் கணிக்கிறேன்.

தொடர்புடைய சுட்டி:
தில்லானா மோகனாம்பாள் திரைப்பட விமர்சனம்
சுப்புவின் ஒரு கட்டுரை
தென்றல் மாத இதழில் சுப்பு பற்றி (Registration Required)

தமிழில் பெண் எழுத்தாளர்கள்

(மீள்பதிவு)

நான் சின்ன வயதில் குமுதம் விகடன் படித்து வளர்ந்தவன். அப்போதெல்லாம் பெண் எழுத்தாளர்களின் கதைகள் என்று ஒரு genre அவற்றில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருந்தது. குடும்பச் சச்சரவுகள், மாமியார்-மருமகள் சண்டை, நாத்தனார் கொடுமை, வரதட்சிணை கேட்கும் “கோழைகள்”, வேலைக்குப் போகும் பெண்களின் பிரச்சினைகள் என்று பெண்களின் உலகத்தைப் பற்றி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவற்றை விரும்பிப் படிக்கும் பெண்கள் நிறைய பேர் இருந்தார்கள். எனக்கோ இந்தக் கதைகள் அப்பீல் ஆனதே இல்லை. ஆனால் அவற்றைப் படித்து பக்கத்து வீட்டுப் பெண்களிடமும் எதிர் வீட்டுப் பெண்களிடமும் கடலை போட வேண்டிய தேவை இருந்தது. அதுவும் சிவசங்கரி எழுதிய ஒரு தொடர்கதையில் அருண் என்று ரொம்ப நல்லவன் ஒருவன் வருவான். தான் விரும்பும் பெண்ணை அவள் விரும்பும் தன் நண்பனுக்கு மணம் முடித்து வைப்பது என்ன, நண்பனுக்கு தன் கம்பெனியிலேயே வேலை போட்டுத் தருவது என்ன, நண்பனுக்கு விபத்து நேர்ந்ததும் அந்தப் பெண்ணுக்கு வேலை போட்டுத் தருவது என்ன என்று ரொம்ப நல்லவனாக இருப்பான். கடுப்பாக இருக்கும். ஆனால் இந்தப் பெண்கள் எல்லாம் ஆஹா அருண் ஓஹோ அருண் என்று புகழும்போது தலையை மட்டும் ஆட்டிவிடுவேன். 🙂

என் காலத்தில் சிவசங்கரிதான் இந்த genre-இன் ராணி. இந்துமதி கொஞ்சம் மேல்தட்டு குடும்பங்களைப் பற்றி எழுதி பிரபலமாக இருந்தார். (லக்ஷ்மிக்கு ஒரு பெரிய வாசகர் கூட்டம் இருந்தது. ஆனால் மெதுமெதுவாக அவரது பாணி கதைகள் கலைமகளுக்குப் போய்க் கொண்டிருந்தன.) அப்போது சூடுபட்டதால் பொதுவாக தமிழ் பெண் எழுத்தாளர்களைத் தவிர்த்தே வந்திருக்கிறேன். ஆர். சூடாமணி, அனுத்தமா, ராஜம் கிருஷ்ணன், திலகவதி போன்றவர்களை நான் இன்னும் படிக்காததற்கு அதுதான் காரணம். ஒரே ஒரு விதிவிலக்கு அம்பை. நான் விரும்பிப் படிக்கும் ஒரே பெண்ணிய எழுத்தாளர் அவர்தான். அவர் பெண்களைப் பின்புலத்தில் வைத்து இலக்கியம் படைக்கிறார். இருபத்து சொச்சம் வயதில் முதன்முறையாக “வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” சிறுகதைத் தொகுப்பைப் படித்தபோது உண்மையிலேயே அது ஒரு revelation ஆக இருந்தது. (கிருத்திகா, ஹெப்சிபா ஜேசுதாசன் போன்றவர்களை எல்லாம் நான் பெண் எழுத்தாளர்கள் என்று கோடு போட்டுப் பிரிப்பதே இல்லை. அவர்கள் எழுத்தாளர்கள், அவ்வளவுதான். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால் எனக்குப் பூமணி தலித் எழுத்தாளர் அல்ல, தலித் பின்புலத்தை வைத்து எழுதி இருக்கும் எழுத்தாளர்.)

குங்குமம் தோழி தளத்தில் அப்படி என்னை வெறுப்படைய வைத்த genre சிறுகதைகள் பலவற்றையும் தொகுத்துப் போட்டிருக்கிறார்கள். இதைப் பற்றி முன்பும் குறிப்பிட்டிருந்தேன். சிறுகதைகளை ஒன்றாகப் படிக்கும்போது சமுக மாற்றங்கள் (கார்த்திகை சீர் செய்யாததால் வாழாவெட்டியாக இருக்கும் பெண்!) தெரிகிறது. காலத்தால் பழைய கதைகள் எல்லாம் பிராமணக் குடும்பங்களின் கதைகள். மாற்றங்களை இந்த சிறுகதைகள் பிரதிபலிப்பது சுவாரசியமாக இருக்கிறது.

குங்குமம் தோழி தளத்தினரின் criterion பெண் எழுத்தாளர்கள் எழுதி இருக்க வேண்டும் என்பதுதான், சிறுகதைகளின் தரம் அல்ல. அதனால் முக்கால்வாசி சிறுகதைகள் தண்டம். ஆனால் வேறு எங்கே குகப்ரியை, கோமகள், கு.ப. சேது அம்மாள் (கு.ப.ரா.வின் சகோதரி), கமலா விருத்தாசலம் (புதுமைப்பித்தனின் மனைவி), கீதா பென்னட், ஜோதிர்லதா கிரிஜா எழுத்துக்களை எல்லாம் படிக்க முடியும்? (உஷா சுப்ரமணியனையும் கமலா சடகோபனையும் இன்னும் காணோம். உ. சுப்ரமணியனின் ஒரு சிறுகதை – காபரே பார்த்துவிட்டு அந்த வேகத்துடன் குண்டு மனைவியுடன் சுகிக்கும் ஒரு தொழிலதிபர் – தரமானது என்று எனக்கு மங்கலாக ஒரு நினைவு)

எனக்கு இன்னும் படிக்க வேண்டும் என்று தோன்ற வைத்தது வை.மு. கோதைநாயகி அம்மாளும், குமுதினியும்தான். Fluff-தான். ஆனால் வை.மு.கோ. ஒரு முக்கியமான முன்னோடி என்று தோன்றுகிறது. குமுதினியின் எழுத்தில் என்னவோ ஒரு special charm இருக்கிறது. இலக்கியத் தரம் வாய்ந்த சிறுகதை வேண்டுமென்றால் அம்பையின் “வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” மட்டும்தான்.

ஒன்றாகப் படித்துப் பாருங்கள், ஒரு genre எப்படி எல்லாம் உருமாற்றம் பெற்றிருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம்.


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
வை.மு. கோதைநாயகி அம்மாள்
குமுதினியின் சில்லறை சங்கதிகள் லிமிடெட்
குமுதினியின் “அந்தப்புர தபால்”

லீ சைல்டின் ஜாக் ரீச்சர் நாவல்கள்

சமீபத்தில் வெளிவந்த Blue Moon புத்தகத்தைப் படித்ததால் மீள்பதித்திருக்கிறேன்.

Blue Moon ஜாலியான மசாலா கதை. ரொம்ப லாஜிக் எல்லாம் பார்க்கக் கூடாது. பயணத்தில் படிக்க ஏற்றது. வழக்கம் போல தனி மனிதனான ஜாக் ரீச்சர் ஊரில் போட்டி போடும் இரண்டு மாஃபியா கும்பல்களையும் அழிக்கிறான். க்ளிண்ட் ஈஸ்ட்வுட் நடித்த For a Few Dollars More திரைப்படத்தை கொஞ்சம் நினைவுபடுத்தியது. விஜய், அஜித் எல்லாம் இதை மூலக்கதையாக வைத்து படம் எடுக்கலாம், கொஞ்சம் பெட்டராக இருக்கும்.

லீ சைல்ட் (Lee Child) ஒரு த்ரில்லர் எழுத்தாளர். அவர் கதைகளின் ஹீரோ ஜாக் ரீச்சர் (Jack Reacher). ஜாக் ஒரு எக்சென்ட்ரிக். முன்னாள் ராணுவ வீரன். கை சண்டை, துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றில் எக்ஸ்பர்ட். ஜாக் எந்த ஊரிலும் வாழ்வதில்லை, அட்ரசே கிடையாது. கால் போன போக்கில் போவான். போகிற இடத்தில் எல்லாம் பிரச்சினை வரும், துப்பறிந்து, சண்டை போட்டு தீர்ப்பான். டைம் பாஸ் நாவல்கள், ப்ளேனில் படிக்க ஏற்றவை.

ரீச்சரை ஒரு விதத்தில் வெஸ்டர்ன் ஹீரோ என்று சொல்லலாம். எங்கிருந்தோ வரும் ஒருவன் ஊரில் உள்ள குற்றச் சூழ்நிலையை ஒழிக்கும் கருவைத்தான் மீண்டும் மீண்டும் எழுதுகிறார். எதுவும் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய கதை இல்லை. டிபிகல், ஆனால் கொஞ்சம் புத்திசாலித்தனமான, த்ரில்லர் எழுத்து. Pulp fiction. ஆனால் அந்த எங்கிருந்தோ வரும் வெஸ்டர்ன் ஹீரோ இமேஜில் ஒரு கவர்ச்சி இருக்கிறது.

jack_reacherஒவ்வொரு கதைக்கும் கதைச்சுருக்கம் எழுதும் அளவுக்கு முக்கியமானவை இல்லை. ஒரே ஒரு கதை படிக்க வேண்டுமென்றால் One Shot என்ற கதையை பரிந்துரைப்பேன். ஐந்து கொலைகளில் குற்றம் சாட்டப்பட்டவன் மீண்டும் மீண்டும் சொல்வது – “நான் குற்றமற்றவன், Get me Jack Reacher” ஆனால் ரீச்சர் அவன் குற்றவாளி என்று நினைக்கிறான். என்னாகிறது என்பதுதான் கதை. இது திரைப்படமாகவும் வரப்போகிறது வந்துவிட்டது, டாம் க்ருய்ஸ் நடிக்கப் போகிறார் நடித்திருக்கிறார்.

Killing Floor என்ற கதையையும் படிக்கலாம். இதுதான் முதல் நாவல். தற்செயலாக ஒரு சின்ன ஊரில் ரீச்சர் இறங்குகிறான். Of course, ஊரில் பெரிய சதி நடந்து கொண்டிருக்கிறது. ரீச்சர் கொலை செய்துவிட்டான் என்று கைது செய்யப்படுகிறான். ஜெயிலில் நடக்கும் சண்டைக்காட்சிகள் திரில்லிங் ஆக இருக்கும். வெளியே வந்த பிறகு அவனுக்கு இறந்தவன் தன் அண்ணன் என்று தெரிகிறது. பிறகு வழக்கம் போல சண்டை, எல்லா வில்லனையும் ஒழித்துக் கட்டுகிறான்.

சிறந்த வில்லன் – ஹுக் ஹோபி – வருவது Tripwire என்ற கதையில். ஹோபி ரீச்சரையும், ரீச்சரின் முன்னாள் பாஸ் கார்பரின் மகள் ஜோடியையும் கொல்ல முயற்சி செய்கிறான்.

சமீபத்திய கதைகளை – Sentinel, Better off Dead – தன் தம்பி ஆண்ட்ரூ சைல்டோடு இணைந்து எழுதி இருக்கிறார்.

இது வரை 27 நாவல்கள் வந்திருக்கின்றன.

 1. Killing Floor, 1997
 2. Die Trying, 1998
 3. Tripwire, 1999
 4. Running Blind, 2000
 5. Echo Burning, 2001
 6. Without Fail, 2002
 7. Persuader, 2003
 8. The Enemy, 2004
 9. One Shot, 2005
 10. The Hard Way, 2006
 11. Bad Luck and Trouble, 2007
 12. Nothing to Lose, 2008
 13. Gone Tomorrow, 2009
 14. 61 Hours, 2010
 15. Worth Dying For, 2010
 16. Affair, 2011
 17. A Wanted Man, 2012
 18. Never Go Back, 2013
 19. Personal, 2014
 20. Make Me, 2015
 21. Night School, 2016
 22. No Middle Name, 2017
 23. Midnight Line, 2017
 24. Past Tense, 2018
 25. Blue Moon, 2019
 26. Sentinel, 2020
 27. Better off Dead, 2021

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

தொடர்புடைய சுட்டி: லீ சைல்டின் தளம்