எழுதுவது எப்படி? – ஜெயமோகன் கற்றுத் தருகிறார்

(மீள்பதிவு)

எப்படி எழுதுவது என்பது சரியாகப் பிடிபடாவிட்டாலும் எழுத ஆசை உள்ள நிறைய பேர் இருக்கிறோம். அமெரிக்காவில் Stock Market for Dummies, Wine for Dummies, Programming for Dummies என்று புத்தகம் போடுவார்கள். அந்த மாதிரி யாராவது Writing for Dummies என்று ஒரு புத்தகம் போட்டால் தேவலை. இப்போதைக்கு ஜெயமோகன் தளத்திலிருந்து சில கோனார் நோட்ஸ்களை இங்கே தொகுத்திருக்கிறேன்.

 1. சிறுகதை எழுதுவது எப்படி?
 2. சிறுகதையில் என்ன நடக்கிறது?
 3. தமிழ்ச் சிறுகதை , இன்று
 4. கதை தொழில் நுட்பம் – ஒரு பயிற்சி
 5. கதைக்கான கரு
 6. படைப்பியக்கம்
 7. எழுதுவதின் ரகசியம்
 8. எழுதப் போகிறவர்கள்
 9. கட்டுரை எழுதுவது எப்படி?
 10. நாவல் எழுதுவது எப்படி? (இப்போது எதுவும் தெரியவில்லை, ஆனால் தொழில் நுட்பப் பிரச்சினை சரி செய்யப்படும் என்ற நம்பிக்கையில்)

பிற்சேர்க்கை: வசந்தகுமார் இந்த சுட்டிகளைத் தருகிறார் – சுட்டி 1, சுட்டி 2, சுட்டி 3, சுட்டி 4

தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள், படிப்பு

தொடர்புடைய சுட்டிகள்:
அம்மாவுக்கு புரியாது கதையை ஜெயமோகன் விமர்சிக்கிறார்

24 thoughts on “எழுதுவது எப்படி? – ஜெயமோகன் கற்றுத் தருகிறார்

 1. ஒரு ஐயம்.

  நீங்கள் பதிவோடையைக் குறுக்கி விட்டது போல் தெரிகிறதே? ரீடரில் முழு பதிவையும் படிக்க முடியவில்லை. ஏதேனும் விசேட காரணம் இருக்கிறதா?

  எவ்வளவு தரமான வலைக்குறிப்பாக இருந்தாலும் பதிவோடையை முழுதாகத் தராதவர்களைப் படிப்பதில்லை என்று கொள்கை வைத்திருக்கிறேன் (அ முத்துலிங்கம் மட்டும் விதிவிலக்கு). இப்போது நீங்கள் இப்படி செய்கிறீர்கள், நாஞ்சில் நாடன் வலைக்குறிப்பை நடத்துபவரும் இப்படி செய்கிறார். இது எங்கே போய் முடியும் என்று கவலையாக இருக்கிறது.

  நீங்கள் சுட்டி கொடுத்திருக்கிற ஜெயமோகன் அவர்களே முழு பதிவோடையையும் தருகிறார் என்பது கவனிக்கத்தக்கது. அழியாச் சுடரும் இப்போது புல் பீடாக வருகிறது.

  Like

  1. பாஸ்கர் (நட்பாஸ்), நீங்கள் சொல்வதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு தொழில் நுட்ப அறிவு இல்லை. முந்தி ஒரு முறை கை தவறுதலாக geotagging-ஐ ஆன் செய்துவிட்டு அதை விலக்க மிகவும் கஷ்டப்பட்டேன். பக்ஸ், உனக்கு பிரச்சினை, அதற்கு தீர்வு ஏதாவது புரிகிறதா?

   என்னடா கேனத்தனமாக கேட்கிறானே என்று எரிச்சல் அடையாதீர்கள். பதிவோடையை குறுக்குவது என்றால் என்ன? சில சமயம் பொறுமை இருந்தால் பதிவுக்கு ஒரு சுருக்கம் (வோர்ட்ப்ரச்சில் இதை நறுக்கு என்கிறார்கள்) தருவதுண்டு. ஆர்.எஸ்.எஸ்.சில் அந்த சுருக்கம் தெரியும், கிளிக்கினால் முழுவதும் வரும் என்று நினைக்கிறேன். அதைத்தான் சொல்கிறீர்களா?

   முடிந்தால் இந்த தொழில் நுட்ப சமாசாரங்களை எல்லாம் ஆங்கில வார்த்தைகளை வைத்து எழுதுங்களேன்!

   முத்துலிங்கம் பதிவுக்கு ஆர்எஸ்எஸ் ஃபீட் கிடைக்கிறதா? என்ன முகவரி?

   Like

 2. பிரச்சனை புரிவது போல் தெரிகிறது. தீர்வு நிச்சயமாக தெரியவில்லை. தெரிந்தால் சரி செய்ய முயல்கிறேன்.

  பதிவுவைப் பற்றி – நல்ல வேளை செய்தாய். நான் இந்த சுட்டிகளில் சில வற்றை புக் மார்க் செய்திருந்தேன். ஆனால் எது எதை குறிப்பிடுகிறது என்று குழப்பமாக இருக்கிறது. இனிமேல் இந்த பதிவு உதவியாக இருக்கும்.

  Like

 3. பாஸ்கர் (நட்பாஸ்), மறுமொழிகளை சென்சார் செய்ய மிக வலிமையான காரணம் வேண்டும் என்று நினைப்பவன் நான். மேலும் ஜெயமோகனே கூட தன்னைத் தாக்கி வரும் மறுமொழிகளை பிரசுரிப்பது உண்டு. ஆனால் அவரைத் தாக்கி வருவதை அவர் பிரசுரிப்பது வேறு, நான் பிரசுரிப்பது வேறு. அதே நேரத்தில் அவர் ஒரு பப்ளிக் ஃபிகர். பப்ளிக் ஃ பிகர்களைப் பற்றிப் பேசுவதில் – குற்றமே சாட்டினாலும் கூட – என்ன தவறு என்றும் தோன்றுகிறது. அவர் மீது பெருமதிப்பு வைத்திருக்கும் நானே கூட அவரை இங்கே ஒரு பதிவில் கிண்டல் அடித்திருந்தேன். மொத்தத்தில் அப்படியும் தோன்றுகிறது, இப்படியும் தோன்றுகிறது. இப்படி குழப்பிவிட்டுவிட்டீர்களே! 🙂

  Like

 4. கல்கி ‘சுமி சூப்பர் மார்க்கெட்’ (9-8-98)
  ————————————————————-
  லாஸ்ட் வீக் மவுண்ட் ரோடு எல்.எல்.ஏ.. பில்டிங் மீட்டிங் ஹால்-ல ஒரு புஸ்தக விமர்சனக் கூட்டத்துக்குப் போயிருந்தேன். விமர்சிக்கப்பட்ட புஸ்தகம் — ஜெயமோகனோட ‘விஷ்ணுபுரம்’ நாவல்.எழுதின ஆளை எதிரே உட்கார வைச்சிட்டு, புஸ்தகத்தை நார் நாரா கிழிக்கற நவீன கலாச்சாரத்தை அங்கே பார்த்தேன். ஒரு கோஷ்டி காரசாரமா குறைகளை மட்டும் அள்ளி வீச, இன்னொரு கோஷ்டி, ‘இது நாவலே இல்லை; அதுக்கும் மேலே; காவியம்’னு ப்ரூவ் பண்ண மஹா கஷ்டப்பட்டுட்டு இருந்தாங்க. இந்த இரண்டு கட்சியோடவும் சேராம பிரபஞ்சன், ‘இது விமர்சனமில்லை’ன்னு சொல்லிட்டு ஜெயமோகனை ஒரு நாலு பக்கம் வாழ்த்திட்டுப் போயிட்டார்.

  கொஞ்ச நாளா பார்க்கறவங்க எல்லாருமே கேக்கற விஷயம் ‘விஷ்ணுபுரம்’ படிச்சியா ?’

  ரொம்பப் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிற இந்த எழுநூத்தி சொச்சம் பக்கம் உள்ள இந்த நாவலை நான் ஒரு தரம் படிச்சிட்டேன். ஏதாவது அபிப்ராயம் சொல்லணும்னா, இன்னொரு தரம், இன்னும் கொஞ்சம் ஆழமா படிச்சப்புறம்தான் முடியும். இந்த மாசக் கடைசிக்குள்ள படிச்திட்டு, அடுத்த மாசத்துக்குள்ள கொஞ்சம் விரிவா எழுதறேன்.

  (பி.கு: ஒரு இலக்கியக் கூட்டத்துக்கு சுமார் நூத்தம்பது பேர் வந்திருந்த அதிசயத்தை போன ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தக் கூட்டத்தில் முதல் முறையா பார்த்தேன்.)

  –சுமி

  http://www.udumalai.com/?prd=vishnupuram&page=products&id=1143

  Like

 5. @ நட்பாஸ்

  //உங்கள் வீட்டுக்குள் வந்து நான் உங்கள் விருந்தாளியை வைதால் நீங்கள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவீர்களா, இல்லை வேடிக்கை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பீர்களா?//

  ரொம்ப நியாயமான கேள்வி. ஆனா பாருங்க இப்போ பால்ஹனுமான் அவர்களோட பின்னூட்டத்தை எந்த கேடகரில சேர்ப்பீங்க? இதை ஒத்துக்கற நீங்க அதையும் ஏத்துக்கத்தான் வேணும்.

  என் மதிப்பிற்கும் அபிமானத்திற்கும் உரிய டாக்டர்.ருத்ரன், இதை குசும்பு’ன்னு சொல்லலாமா’ன்னு தெரியல இருந்தாலும் சொல்லிக்கறேன் தப்பா இருந்தா க்ஷமிக்கணும், இது போல குசும்புப் பின்னூட்டங்களைத் தவிர்க்கலாம்.

  எப்படியோ, ருத்ரன் அவர்களும் இந்தத் தளத்திற்கு ஒரு விருந்தினர்தானே? நம்முடைய குரு வந்தனை குறித்து நம் வீடுவரும் விருந்தினர்கள் சில நேரங்களில் கிண்டல் கருத்துக்களைத் தெரிவிப்பதில்லையா? (என்னய்யா இந்த ஆளா உன்னோட ஆன்மீக குரு? இவர் செஞ்ச செயலை பாத்தியா’ன்னு ஏதாவது அவங்ககிட்ட இருக்கற கருத்து/செய்தியை சொல்லுவாங்க) புடிச்சா எடுத்துக்கங்க, இல்லையா விட்டுடுங்க.

  Like

 6. ஜெயமோகன் சிறுகதை எழுதுவது எப்படின்னு கிண்டல் அடிச்சு ஒரு பதிவு எழுதினா அதையும், சிறுகதை எழுதக் கற்றுத் தரும் கட்டுரைன்னு லின்க் கொடுத்தா எப்படி சார்?

  Like

  1. ஜ்யோவ்ராம், நீங்கள் இந்தப் பக்கம் வந்தது மகிழ்ச்சி! உங்களால்தான் முதல் முறை கதையை என் இரண்டு நண்பர்களுக்கு வெளியே அனுப்பினேன்.

   // சிறுகதை எழுதுவது எப்படின்னு கிண்டல் அடிச்சு… // எதைக் கிண்டல் என்று சொல்கிறீர்கள்?

   Like

   1. ஜ்யோவ்ராம், உங்களுக்கு இருக்கும் நகைச்சுவை உணர்ச்சி எனக்கிலையோ என்னவோ…

    Like

 7. அறம்

  எதற்கும் அசையாத
  எம்பெருமான் விஷ்னு
  கருவறை துறந்து
  உற்சவ மூர்த்தியாய்
  உலா வருதல்
  உனக்காக அல்ல தனக்காக

  ஸ்வாமி ஏள்றார் என
  தரைவீழும் மனுஷா கேள்

  பொன்முலாமின் உள்ளிருக்கும்
  காரியார்த்தக் கல்மனிதனைக் காண்

  Like

  1. விமலாதித்த மாமல்லன்,

   உங்களைப் போன்ற நல்ல எழுத்தாளர்கள் இந்தப் பக்கம் வருவது மகிழ்ச்சி! அழியாச்சுடர்கள் தளத்தில் உங்கள் இலை மற்றும் போர்வை சிறுகதைகளை படித்திருக்கிறேன், இரண்டும் நன்றாக இருந்தன. சிறுமி கொண்டு வந்த மலர் ஏதோ ஒரு சிறுகதைத் தொகுப்பில் இருக்கிறது, தேடிப் பார்க்க வேண்டும். இப்போது முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் கதையையும் படிக்க ஆவல். மின்பிரதி இருந்தால் பதியுங்களேன், இல்லை அனுப்புங்களேன்!

   ஜெயமோகன் உற்சவம் வருவது எனக்காக இல்லை அவருக்காக என்று பொருள் படும்படி ஒரு “கவிதை” எழுதி இருக்கிறீர்கள். எனக்காக உற்சவம் வர நான் என்ன அவருக்கு மாமனா மச்சானா? அவர் இவ்வளவு தூரம் நேரம் செலவு செய்து பதிவு எழுதுவதும் மறுமொழி எழுதுவதும் பெரிய விஷயம். அதற்கு அவரது சுயநலமே காரணம் என்று நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது என் போன்ற வாசகர்களுக்கு முக்கியம் இல்லை. அவரது உழைப்புக்கும் நேரத்துக்கும் யார் வேண்டுமானாலும் அவரை என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்க அனுமதிப்பதற்கும் அதற்கு பொறுமையாக பதில் சொல்வதற்கும் மனப்பூர்வமான நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்(றேன்).

   ஏள்றார் என்ற வார்த்தையை கேட்டு எத்தனையோ வருஷமாயிற்று. 🙂

   உங்கள் குற்றச்சாட்டு பற்றி நீங்களும், அவரும், இரண்டையும் படித்தவர்களும்தான் சொல்ல முடியும். படிக்காதவன் என்ன சொல்வது? சர்ச்சைகளை பெரிதுபடுத்த எனக்கு இஷ்டமில்லை. இந்தத் தளம் சர்ச்சைக்கானதும் இல்லை. உங்கள் கதைக்கும், அந்தப் பகுதிக்கும் ஒற்றுமை இருந்தால் அது ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்று நினைக்கிறேன், அவ்வளவுதான். (அசோகமித்திரன், அம்ப்ரோஸ் பியர்ஸ் ஆகியோரின் கதைகளுக்குள்ளே உள்ள ஒற்றுமையை நானே ஆவணப்படுத்தி இருக்கிறேன்.)

   யூகம், speculation என்றால் இவற்றை சொல்கிறேன். நான் பழகிய வரையில் ஜெயமோகன் உண்மையான மனிதர்; ஒரே ஒரு கதையை, அதுவும் இணையத்தில் மட்டுமே பிரசுரித்திருக்கும் நான் எழுதி வைத்திருக்கும் கதைகளில் ஒன்று கீதா பென்னட் எழுதிய ஒரு கதைக்கருவோடு ஒத்துப் போகிறது. இன்னொன்று ஜெயமோகனே எழுதிய ஒரு கதையோடு ஒத்துப் போகிறது. இவற்றை நான் காப்பி அடிக்கவில்லை, “மூலக்கதையை” நான் எழுதியதற்கு பின்னால்தான் படித்தேன் என்று எப்படி நிரூபிக்க முடியும்? அற்ப எழுத்தாளன் எனக்கே இப்படி என்றால் அவருக்கும் இந்த மாதிரி கஷ்டம் அவருக்கும் இருக்கலாம். புகாரின் என்ற ஆவணப்படுத்தப்பட்ட நிஜ மனிதர் இருக்கும்போது, அவருக்கு உங்கள் சிறுகதையைப் படித்து மூலக்கரு கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. அதுவும் நெருக்கடி நிலையில் ஒடுக்கப்பட்டு குடிகாரன் ஆனவன் டைரி என்கிறீர்கள், அது பி.தொ.நி. குரலின் மையச்சிக்கல் இல்லையே? சுஜாதா காயத்ரி என்ற நாவலில் பழைய பேப்பர் கடையில் கிடைக்கும் ஒரு டைரியை படித்துத்தான் வசந்தும் கணேஷும் காயத்ரியை கண்டுபிடிக்கிற மாதிரி எழுதி இருப்பார், அது உங்கள் கதைக்கு மூலக்கரு, மையச்சிக்கல் ஆகாதல்லவா?

   மேலே உள்ள பாரா முழுவதும் circumstantial evidence, யூகங்கள் மட்டுமே. உங்களுக்கும் அது போல யூகங்கள் இருக்கலாம். எழுத்தாளனுக்கு முக்கியமாக வேண்டியது recognition. அது கட்டாயமாக நடக்க வேண்டும். உண்மையில் பார்க்க வேண்டியது அந்த டைரிக்கும் வீரபத்ரப் பிள்ளையில் டைரிக்கும் எவ்வளவு ஒற்றுமை இருக்கிறது என்றுதான். நிறைய ஒற்றுமை இருந்தால் – அது ஒரு தற்செயல் நிகழ்ச்சியாக இருந்தாலும் – அது ஆவணப்படுத்தப்பட வேண்டும். உங்களைப் போன்ற நல்ல எழுத்தாளருக்கு ஜெயமோகனைத் தெரியாதா என்ன? ஃபோன் செய்தே கேட்கலாமே?

   அப்புறம் இருபது பக்க சிறுகதை என்கிறீர்கள், அதிலும் நாலு பாகம், அதிலும் நான்காவது பாகம்தான் மூலக்கரு என்கிறீர்கள். பத்து பக்கம் உள்ள அந்த மூலக்கருவை வைத்து ஆயிரம் பக்கம் நாவல் எழுதினார் என்றால் அது பெரிய சாதனைதான்.

   நானெல்லாம் பக்கா சுயநலவாதி. இந்த நிகழ்ச்சி உங்களை மேலும் எழுதத் தூண்டினால் என் போன்றவர்களுக்கு லாபம்!

   Like

 8. உங்கள் பதிவில் இடைபுகுந்தமைக்காக முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

  மன்னிப்பு கேட்கத் தகுந்த ஒரு விஷயத்தை செய்யும் முன்பு செய்யக் கூடாது என்பது அறியாத சிறு பிள்ளையா?

  என்னுடைய ’அறம்’ இங்கே வரக் காரணம்

  natbas
  //என் வீட்டில் சேற்றை வாரித் தூற்றிக் கொண்டிருப்பது என்பது வேறு, அடுத்தவர் வீட்டுக்குப் போய் அதை செய்வது என்பது வேறு. அதுவும் இன்னொருத்தர் வாரி இறைத்த சேற்றை வேலை மெனக்கெட்டு சுமந்து கொண்டு போய் கொட்டுவது என்பது வேறு//

  இது மட்டும் இல்லையெனில் நான் இங்கு வந்திருக்கவும் மாட்டேன் பஸ்ஸில் எழுதியதை இங்கு பதித்திருக்கவும் மாட்டேன்.

  ருத்ரன் சுட்டி கொடுத்தது ஒருவருக்குத் தவறெனப் பட்டால் ருத்ரனை விமர்சிக்கலாம்.

  நான் எழுப்பும் கேள்வியை ’சேறு’ என சொன்னதாலேயே இங்கே இது பதிப்பிக்கப் பட்டது.

  என் கதை உங்களுக்குப் பிடித்திருந்ததில் எனக்கு சந்தோஷமும் நன்றியும்.

  நான் இணையத்தில் எழுதத் தொடங்கியது ஆகஸ்ட் 26 முதல்.

  //அப்புறம் இருபது பக்க சிறுகதை என்கிறீர்கள், அதிலும் நாலு பாகம், அதிலும் நான்காவது பாகம்தான் மூலக்கரு என்கிறீர்கள். பத்து பக்கம் உள்ள அந்த மூலக்கருவை வைத்து ஆயிரம் பக்கம் நாவல் எழுதினார் என்றால் அது பெரிய சாதனைதான்//

  அரிச்சுவடிப் பாடம். ஒரு கதையின் குவி மையம் மட்டுமே கதை அல்ல. 86ல் எழுதிய முடவன்…’சிறுகதை’ என்று நானெங்கே சொன்னேன்.

  பரவாயில்லை நீங்களும் பெரிய இலக்கியவாதிதான் விமர்சகர்தான். முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் பற்றி படிக்காமலேயே காப்பி காப்பி இல்லை எல்லாம் பேச ஆரம்பித்து அப்புறம் கதையைக் கேட்கிறீர்கள் மின்னஞ்சலில்.

  அழியாச்சுடர்களில் வந்திருப்பது இலையும் போர்வையும் மட்டுமே. என் வலைப்பூவில் 10க்கும் மேற்பட்ட கதைகள் உள்ளன. நேரமும் விருப்பமும் மூடப்படாத மனமும் இருந்தால் – கட்டுரை படிக்கமுடிந்தவர் – கதைகளையும் படித்து என்னையும் ஒரு ஆளாக்கி கைதூக்கி விடுங்கள் சார்.

  இதெல்லாம் தயவு செய்து தமாஷாக எடுத்துக் கொள்ளவும். உங்களைக் காயப்படுத்துவது என் நோக்கமில்லை.

  கண்டிப்பாக உங்கள் வலைத்தளம் வருவேன். இது விஷயமாக அல்ல. எனக்குத் தோன்றுவதைப் பகிர்ந்து கொள்ளத் தூண்டும் அளவிற்கு உங்கள் எழுத்து இருந்தால்.

  அப்படி உங்கள் எழுத்து இருக்க நீங்கள் முனைய வேண்டும் என்பது என் ஆசை.

  நான் உங்களுக்கும் உங்களைப் போன்றவர்களுக்கும் ’யாரோ ஒரு மனுஷன்’ அல்லது ஏதோ ஒன்று என்ற போதிலும்.

  Like

  1. விமலாதித்த மாமல்லன்,

   // உங்கள் பதிவில் இடைபுகுந்தமைக்காக முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். // மன்னிப்பு கின்னிப்பு என்றெல்லாம் சம்பிரதாயப் பேச்சுகளை தவிர்ப்போமே! மன்னிப்பு கேட்கும்படி நீங்கள் என்ன செய்துவிட்டீர்கள், நான் என்ன மன்னிப்பது?

   // ஒரு கதையின் குவி மையம் மட்டுமே கதை அல்ல. 86ல் எழுதிய முடவன்…’சிறுகதை’ என்று நானெங்கே சொன்னேன். // குவிமையம் என்றால் focus-ஆ? பெரும் நாவலின் ஒரு பகுதி என் கதையிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது, நாவலுக்கே இதுதான் மூலம் என்று சொல்லவில்லை என்கிறீர்களா? முடவன்… சிறுகதை என்றே நினைத்திருந்தேன், இல்லை என்று நீங்கள் சொன்னால் சரிதான்.

   // பரவாயில்லை நீங்களும் பெரிய இலக்கியவாதிதான் விமர்சகர்தான். முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் பற்றி படிக்காமலேயே காப்பி காப்பி இல்லை எல்லாம் பேச ஆரம்பித்து அப்புறம் கதையைக் கேட்கிறீர்கள் மின்னஞ்சலில். // நீங்கள் சொல்வது சரியே. என் யூகங்களை நான் எழுதி இருக்கக் கூடாது. விஷயம் தெரியாதபோது என்ன வெட்டி speculation வேண்டிக் கிடக்கிறது? அதை பாஸ்கர் (நட்பாஸ்) சொல்வது போல எடிட் செய்துவிடலாமா என்று யோசித்தேன். ஆனால் எனக்கு வேறு விதமாகத் தோன்றுகிறது. இதை நான் எடிட் செய்துவிட்டால் என்னவோ நான் தவறே செய்யாத உத்தமன், நீங்கள் வீணாக என்னைக் காய்ச்சுகிறீர்கள் என்று நாலு மாதம் கழித்து இதைப் படிப்பவருக்கு தோன்றலாம். அதற்காக அவற்றை இப்படியே விட்டுவைக்கப் போகிறேன். நான் யூகங்களை எழுதி இருக்கக் கூடாது என்பதை வேறு எந்த முறையாலாவது காட்டலாம் என்று உங்களுக்குத் தோன்றினால் சொல்லுங்கள், செய்துவிடலாம். (பாஸ்கர், நீங்களும் நான் நினைப்பதைப் போலவே நினைக்க வேண்டும் என்று ஒரு அவசியமும் இல்லை, எடுத்துவிடு என்றால் நீக்கிவிடுகிறேன்.)

   // அழியாச்சுடர்களில் வந்திருப்பது இலையும் போர்வையும் மட்டுமே. என் வலைப்பூவில் 10க்கும் மேற்பட்ட கதைகள் உள்ளன. // ரொம்ப சந்தோசம், படித்துவிடலாம்.

   // நேரமும் விருப்பமும் மூடப்படாத மனமும் இருந்தால் – கட்டுரை படிக்கமுடிந்தவர் – கதைகளையும் படித்து என்னையும் ஒரு ஆளாக்கி கைதூக்கி விடுங்கள் சார். // ரொம்ப வாருகிறீர்களே? 🙂

   // இதெல்லாம் தயவு செய்து தமாஷாக எடுத்துக் கொள்ளவும். உங்களைக் காயப்படுத்துவது என் நோக்கமில்லை. // எனக்கு கொஞ்சம் எருமைத்தோல், உங்கள் மனதுக்குப் படுவதை தயக்கம் இல்லாமல் எழுதுங்கள்.

   // கண்டிப்பாக உங்கள் வலைத்தளம் வருவேன். இது விஷயமாக அல்ல. எனக்குத் தோன்றுவதைப் பகிர்ந்து கொள்ளத் தூண்டும் அளவிற்கு உங்கள் எழுத்து இருந்தால். அப்படி உங்கள் எழுத்து இருக்க நீங்கள் முனைய வேண்டும் என்பது என் ஆசை. // எனக்கும் ஆசைதாங்க!

   // நான் உங்களுக்கும் உங்களைப் போன்றவர்களுக்கும் ’யாரோ ஒரு மனுஷன்’ அல்லது ஏதோ ஒன்று என்ற போதிலும். // எதற்கு நீங்களே உங்களை மட்டமாக சொல்லிக் கொள்கிறீர்கள்? அதுவும் திறமையும் சாதனைகளும் இருக்கும்போது? என்றாவது போர்வை தரத்தில் என்னால் ஒரு கதை எழுத முடிந்தால் நான் பீத்திக் கொள்வது கொஞ்சநஞ்சமாக இருக்காது!

   Like

 9. //பாஸ்கர், நீங்களும் நான் நினைப்பதைப் போலவே நினைக்க வேண்டும் என்று ஒரு அவசியமும் இல்லை, எடுத்துவிடு என்றால் நீக்கிவிடுகிறேன்//

  அப்பாடா! ரொம்ப நன்றி சார்.

  என் பின்னூட்டங்கள் பதிவில் உள்ள விஷயங்களுக்குக் கூடுதல் தகவல் தருவதாக இல்லை. பதிவு எதைப் பற்றிப் பேசுகிறதோ அது குறித்து பார்வையை ஆழப்படுத்துவதாகவோ அகலப்படுத்துவதாகவோ இல்லை. சொல்லப்போனால் பதிவின் நோக்கத்தைத் திசை திருப்புவதாக இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக என் தொனி நானே படிக்கும்போது வெட்கப்படுவதாக உள்ளது.

  அதனால் இந்தப் பதிவை ஒட்டிய என் பின்னூட்டங்கள் அனைத்தையும் நீக்கி விட்டீர்களானால் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

  நன்றி.

  Like

 10. //அடப் பாவமே! முதல் கட்டுரையே அப்படியானதுதானே. ஒரு வேளை ஜெமோவுக்குச் சரியா நகைச்சுவை வரலியோ 🙂
  //

  ஜிவோவ் , எல்லாத்தையும் இப்படித்தான் படிக்கறீங்களா ? என்ன கொடுமை

  Like

 11. மாமல்லன் , நீண்ட இலக்கிய உறக்கத்தில் இருந்து எழுந்து வந்து பார்க்கும் போது இலக்கிய உலகம் உங்களை கடைக்கண் கூட காணாததை கண்ட உங்கள் துக்கத்தை புரிந்துகொள்கிறேன் 🙂

  நான் உங்கள் முடவன் வளர்த்த வெள்ளைபுறாவையும் படித்துள்ளேன் , ஜெயமோகனின் பின் தொடரும் நிழலின் குரலையும் படித்துள்ளேன் ,

  ஒரு நாலு வரி தவிர இரண்டுக்கும் எந்த ஒற்றுமையுமே கிடையாது , உங்கள் கதையின் கிடைசிக்கு முந்தைய பக்கத்தை மட்டும் படித்து ஜெ 600 பக்கம் எழுதிவிட்டாராக்கும் ?

  எந்த படைப்பூக்கமும் இல்லாத உங்கள் நெடுங்கதை வெகுசுமார் .

  பின் தொடரும் நிழலின் குரலை படித்தால் இன்னொரு முறை இதை சொல்ல உங்கள் வாய் வராது , ஆனால் அதை படிக்குமளவிற்க்கு நீங்கள் உழைப்பீர்கள் என நான் நம்பவில்லை .

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.