சாதாரணமாக நான் அரசியலைப் பற்றி எல்லாம் எழுதமாட்டேன். இருக்கிற வெட்டிவேலை போதாதா என்ன?
ஆனால் ஃபேஸ்புக்கில், வாட்ஸப் குழுமங்களில் மோதி விளக்கேற்றச் சொன்னதைப் பற்றி மிகக் கீழ்த்தரமான எதிர்வினைகளைப் (உதாரணம்: தரப் போவதில்லை) பார்க்கிறேன். முட்டாள் நண்பர்கள் சிலர் எங்கே எல்லார் கண்ணிலும் படாமல் போய்விடப் போகிறதே என்று இதை ஃபார்வர்ட் செய்துகொண்டும் அவர்களுக்கு எதிர்வினை ஆற்றிக் கொண்டும் இருக்கிறார்கள். நண்பர்களுக்கு ஒரே ஒரு ஆலோசனைதான் – எத்தனை எரிச்சல் வந்தாலும் எந்த கீழ்த்தரமான எதிர்வினையையும் பகிராதீர்கள், பகிர்ந்துகொண்டு அதற்கு எதிர்வினை ஆற்றாதீர்கள். அடிமுட்டாள்கள் திருந்தப் போவதில்லை, அவர்கள் மேல் வெளிச்சமாவது அடிக்காமல் இருங்கள்.
என்ன பிரச்சினை உங்களுக்கு? இது ஒரு symbolic gesture. எல்லா ஊரிலும், எல்லா நாட்டிலும், எல்லா அமைப்புகளிலும் நடப்பதுதான். கழக உறுப்பினர்கள் ஏன் கரை வேட்டி அணிகிறார்கள்? வீரமணி ஏன் கறுப்பு சட்டை போடுகிறார்? எதற்காக புது வருஷம் அன்று கோவிலுக்குப் போகிறோம்? தீபாவளி அன்று புதுத்துணி எதற்கு? காது கிழியுமாறு மைக் வைத்து கூவினால்தான் தொழுகைக்கு வருவார்களா? ஈ.வே.ரா. சிலைக்கு மாலை போடுபவர்கள் எதற்கு முருகன் சிலைக்கு அர்ச்சனை செய்வதைப் பற்றி வாயைத் திறக்கிறீர்கள்? காந்தி ஜயந்தி அன்று மதுக்கடைகளை மூடுவது போன்ற போலித்தனம் உண்டா? எல்லாம் ஒரு தளத்தில் வெறும் gesture மட்டுமே.
இது உங்களுக்கு பயனற்ற செய்கையாக, empty gesture ஆகத் தெரிகிறதா? நகர்ந்துவிடுங்கள். எதிர்க்கருத்து இருக்கிறதா? தாராளமாகப் பதிவு செய்யுங்கள். நீங்கள் விளக்கை ஏற்றப் போவதில்லையா? மோதி உட்பட யாரும் உங்கள் மேல் பாயப் போவதில்லை. கேலி செய்ய வேண்டுமா? உங்கள் உரிமை. ஆனால் அதற்கும் சில எல்லைகள் இருக்க வேண்டும். மோதி மீது எனக்கு பல விமர்சனங்கள் உண்டு. ஆனால் எந்த ஒரு அமைப்பின் தலைவருக்கும் – அதுவும் சிக்கலான தருணங்களில் – அமைப்பு தன் மீது நம்பிக்கையுடன் இருக்கிறதா, சிக்கலை அவிழ்த்துவிடலாம் என்று நினைக்கிறதா – என்று தெரிந்து கொள்ள விரும்புவார். அது அவருக்கு மேலும் ஆற்றலை, உத்வேகத்தை அளிக்கும்.
இது போன்ற ஒரு காலம் இது வரை வந்ததில்லை. இந்தியாவின் பஞ்சங்களும் ப்ளேக் போன்ற கொடிய நோய்களும், சுனாமிகளும், பூகம்பங்களும் கூட மாகாண அளவில், மாவட்ட அளவில்தான் பாதித்திருக்கின்றன. ஆக்கபூர்வமான யோசனைகள் இருந்தால் பகிருங்கள். இல்லாவிட்டால் வாயை மூடிக்கொண்டாவது இருங்கள்.
தொகுக்கப்பட்ட பக்கம்: அரசியல்
Reblogged this on Biking. Adventure. Nostalgia. and commented:
My thoughts exactly. I don’t agree with Mr. Modi on everything. I have put that in one of my earlier blogs. Why do we have to stoop so low even to venture an opinion (on lighting lamps) ? Beats me
LikeLike
காவேரிபாக், உங்களுக்கும் மோதி-விளக்கு பற்றிய எண்ணங்களில் இசைவிருப்பது மகிழ்ச்சி!
LikeLiked by 1 person
Hi Sir
I just commented on your blog வீழ்ச்ச்சி. I mentioned that I wrote about the brahmin hate to Mr. Jeyamohan and did receive any reply. Normally he replies to questions promptly. This is the email I wrote to him. Would like to know your thoughts.
‘அன்புள்ள ஜெ உங்கள் பார்வை உங்கள் தெரிவு – கடந்த சில ஆண்டுகளில் நான் படித்ததிலிலே எனக்கு பிடித்த வாக்கியமாக இதை நான் கருதுகிறேன்.
இந்த ஈமெயில் உங்களுக்கு வந்த கடித்ததைப் பற்றியது அல்ல. உங்கள் பதிலைப்பற்றிய எனது ஐயங்கள். சிறிது விளக்கமளித்தால் மகிழ்ச்சி அடைவேன். முதலில் என்னடைய பின்னணி. நான் சிறுவயதில் கிராமத்தில் அக்ரஹாரத்தில் வளர்ந்தவன். பஞ்சாயத்து தொடக்கப் பள்ளியில் பயின்றவன். அந்த நாட்களிலேயே – பாம்பையும் பார்ப்பாபனையும் பார்த்தால் முதலில் பார்ப்பானை அடி, பார்ப்பான் படி அரிசி —-ன் போன்ற சொற்களை கேட்டவன். ஆனால் அதைப்பற்றி எனது பாட்டியிடம் (எங்களை வளர்த்தவர்) கேடட்டதில்லை. எனது பாட்டி சிறிது முற்போக்கான எண்ணமுடையவர். அவரைப்பற்றி நான் எழுதிய வலையேற்றம் இங்கே -https://kaveripak.com/2017/09/23/the-family-autocrat-tribute-to-my-grandma/ எனது தந்தை சாதி என்கிற வார்த்தையை வாழ்நாளில் உபயோகித்து நான் கேட்டதில்லை. எங்கள் குடுமத்திலிருந்து பலர் வேறு சாதியிலும் வேறு மதத்திலிலும் மணமுடித்திருக்கிறார்கள் (வெளிநாட்டவரையும் கூட).
நான் இட ஒதுக்கீடை தீவிரமாக ஆதரிப்பவன்.
நாங்கள் சென்னைக்கு 1974ல் குடிவந்த போது எனக்கு மூன்று நண்பர்கள் கிடைத்தார்கள். நால்வரில் (என்னையும் சேர்த்து) மூன்று பேர் பிராமணர். இந்த 45 வருடங்களில் ஒருமுறையேனும் நாங்கள் சாதியைப் பற்றி பேசியதில்லை.
நான் கல்லூரி படிப்புக்குப் பிறகு தமிழ் நாட்டில் வசிக்கவில்லை. நான் வசித்த எந்த நகரத்திலும் சாதி ஒரு discussion topic ஆக மாறியதில்லை. நான் பணிபுரிந்த பல பன்னாட்டு நிறுவனங்களில் ‘உன்னுடைய சாதி என்ன?’ என்று யாரும் என்னைக் கேட்டதில்ல்லை – நானும் யாரையும்… என்னுடைய நிலை – அவரவர்க்கு அவரது மதமும் சாதியும் உயர்ந்தது. அதைப்பற்றி பேசுவதோ விவாதிப்பது தேவையற்றது. யாரும் மதத்தையோ சாதியையையோ தேர்ந்தெடுப்பதில்லை. அதிலே பிறந்து வளர்க்கிறார்கள். ஒரு கொள்கையைப் பற்றியோ (மார்க்சிசம்) ஒரு கட்சியைப் (காங்கிரஸ்) பற்றியோ விவாதிக்கலாம். அது உங்களது கொள்கை அல்லது விருப்பம்.
எனது எண்ணம்/ஐயம் பெருநகர்களில் சாதி அவ்வளவு முக்கியமான ஒரு பிரச்சினையாக கருதப்படுவதில்லை என்பது என் எண்ணம். எனது நண்பன் நாகா (வியாபாரம் செய்பவர், பல தரப்பட்ட மனிதர்கள் சந்திப்பவர்) இதை ஒத்துக்கொள்ள மறுக்கிறார். நீங்கள் சொன்ன மாதிரி ‘கருத்துக்கள் பொதுவாக சொந்த அனுபவங்களை பொதுமைப்படுத்தி அடையப்படுபவை.’ ஆனால் பெருநகரங்களில் சாதி ஒரு பொருட்டாக இருப்பதில்லை என நான் நினைக்கிறேன் – சரியா?
நல்ல சிந்தனையாளர்கள் இதைப் பற்றி பேசாமல் எழுதாமல் இருந்தால் சாதிக்கு அளிக்கப்படும் அங்கீகாரம் குறைந்துவிடும். இந்த தலைமுறையின் சிறந்த எழுத்தாளராக பலரால் அறியப்படும் நீங்கள், ஏன் இந்த சப்ஜெக்ட்டைப் பற்றி எழுதுகிறீர்கள் – உங்கள் வலைத்தளத்தில் விவாதிக்கிறீர்கள்? Can you not just ignore it?
எனக்கு புரியாத கடைசி விஷயம் – பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் தமிழ் நாட்டில் இருக்கிறார்களா? எல்லோரும் ஏதோ ஒரு வேலையைத்தேடி, தமிழ் நாட்டில் உள்ள நகரங்களுக்கோ, இல்லை வேறு மாநிலங்களுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ சென்றுவிட்டார்கள். எஞ்சிய சிலரால் யாருக்கு என்ன கெடுதல் செய்துவிட முடியும்?
இன்றைய ஆட்சி முறையில் அதிகாரம் ஒன்று ஆட்சியாளர்கள் கையில் இருக்கிறது ஆல்லது அதிகாரிகளின் கையில். தமிழ் நாட்டில் இந்த இரண்டிலும் பிராமணர்கள் எங்கே இருக்கிறார்கள்? பிராமணர்களே இல்லாதபோது – நான் பிராமணீயத்தை எதிர்க்கிறேன் என்று எதற்க்காக கூப்பாடு?
நான் முன்பு சொன்னதுபோல், நான் இட ஒதுக்கீடை ஆதரிப்பவன். திராவிட கட்சிகள் மீது நான் வைத்திருக்கும் மரியாதை அவர்கள் social equalityக்கு எடுத்த முயற்சிகளால்தான். தமிழ் நாட்டின் பரந்த முன்னேற்றத்திற்கு இது காரணமாக அமைந்தது. ஆனால் சமத்துவ நிலை அடைவதற்கு நாளும் பொழுதும் சாதி பற்றிய சர்ச்சை தேவையா?
அன்புடன்
ரமேஷ்’
Regards Ramesh
>
LikeLike