அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை: மலையாளி அச்சுதனும் கார்ல் லின்னேயசும்

Aravindan_Neelakandanஅரவிந்தன் நீலகண்டன் நான் மதிக்கும் “எதிர்முகாம்”காரர்களில் ஒருவர். கூர்மையாக சிந்திப்பவர். விசாலமான படிப்பு உடையவர். தீவிர ஹிந்துத்துவர். அவரது அரசியல் நிலை அவருக்கு சில blind spot-களை ஏற்படுத்தி இருக்கின்றன என்று நான் கருதுகிறேன். நான் சிந்திக்கும் வகையிலேயே அவரும் சிந்திக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை, எனக்கு பல blind spot-கள் இருக்கின்றன என்று அவர் கருதலாம்.

அ.நீ.யின் பழைய கட்டுரைஅச்சுதன் முதல் ஜானகி வரை – ஒன்று கண்ணில் பட்டது. கார்ல் லின்னேயஸ் உயிரினங்களை பாகுபடுத்தும் கோட்பாடுகளை உருவாக்கியவர் என்று கருதப்படுகிறார். அவருக்கும் முந்தைய முன்னோடிகள், இந்தியர்களின் பங்களிப்பு, காலனிய மனப்பான்மை எப்படி இந்தப் பங்களிப்பை இயல்பாக ஒதுக்கியது ஆகியவற்றை இந்தக் கட்டுரையில் விவரிக்கிறார். எல்லாவற்றையும் ஏற்கனவே கண்டுபிடித்தாயிற்று, வேதங்களில் இல்லாத கண்டுபிடிப்பு இல்லை வகை கட்டுரை இல்லை. அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி என்று ஒரு கவிதையில் வருவதால் தமிழர்கள் nuclear fission பற்றி அறிந்திருந்தார்கள் வகை கட்டுரையும் இல்லை. கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

அதே சமயத்தில் அ.நீ.யின் கருத்துகளோடு எனக்கு வேறுபாடும் உண்டு. அன்றைய மேலை நாட்டவருக்கு மட்டுமே இப்படி ஒரு நூலை தொகுக்க முடியும் என்று தோன்றி இருக்கும். அச்சுதனும் அவரது ஆசிரியர் பரம்பரையும் இப்படி ஒரு நூலைத் தொகுக்க வேண்டும், நமது பாரம்பரிய அறிவை ஆவணப்படுத்த வேண்டும் என்று தானாக முயலவில்லை. என்ன செய்ய வேண்டும் என்பதை அச்சுதன் தீர்மானித்திருக்க மாட்டார். அச்சுதனின் பங்களிப்பு தன் அனுபவ அறிவால் செய்ய விரும்பும் காரியத்தை இப்படி செய்தால் இன்னும் சுலபமாக, பொருத்தமாக இருக்கும் என்று காட்டியதுதான். அது முக்கியப் பங்களிப்பு என்பதில் மாற்றெண்ணம் இருக்க முடியாதுதான். In engineering lingo, Achuthan is similar to the experienced technician who makes it possible to actually fulfil the given constraints – without whom the project would fail – but such a person is almost never the product owner. Such a person wouldn’t have designed the iphone, but without him iphone’s specs couldn’t have been implemented.

வேறுபாடுகள் இருந்தால் என்ன? இப்படி தேடிப் பிடித்து எழுதுபவருக்கு ஒரு ஜே!

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்