15 சிறந்த பாலியல் நாவல்கள்

இப்படி ஒரு பட்டியல் கண்ணில் பட்டது. இதில் ஒன்றைக் கூட படித்தத்தில்லை என்று ஒத்துக் கொள்ள வெட்கமாகத்தான் இருக்கிறது. படிச்சிட்டாலும்… என்று மைண்ட வாய்ஸ் வேறு கேட்கிறது. படிப்பதை விடுங்கள், இரண்டு புத்தகங்களைப் பற்றித்தான் கேள்வியே பட்டிருக்கிறேன். Lady Chatterley’s Lover, Tropic of Cancer.

நீங்கள் எதையாவது படித்திருக்கிறீர்களா? படித்திருந்தால் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்!

வசதிக்காக பட்டியல் கீழே.

 1. Story of the Eye by Georges Bataille (1928)
 2. Tropic of Cancer by Henry Miller (1934)
 3. The Story of O by Pauline Réage aka Anne Desclos (1954)
 4. Delta of Venus by Anaïs Nin (1977)
 5. Bad Behavior by Mary Gaitskill (1989)
 6. Baise-Moi by Virginie Despentes (1999)
 7. The Sexual Life of Catherine M. by Catherine Millet (2002)
 8. Lost Girls, Vols. 1-3 by Alan Moore and Melinda Gebbie (2006)
 9. Wetlands by Charlotte Roche (2008)
 10. House of Holes by Nicholson Baker (2011)
 11. Les Liaisons Dangereuses (Dangerous Liaisons) by Pierre Choderlos de Laclos
 12. The Lover by Marguerite Duras
 13. Venus in Furs by Leopold von Sacher-Masoch
 14. Call Me by Your Name by André Aciman
 15. Lady Chatterley’s Lover by D.H. Lawrence

தொகுக்கப்பட்ட பக்கம்: பட்டியல்கள்

4 thoughts on “15 சிறந்த பாலியல் நாவல்கள்

 1. D.H. Laurence அவரின் LCL ஒரு ஷேக்ச்பீர்யன் கரு. பாத்திரங்களின் குணச்சித்திரங்கள், படித்து 27 வருடங்களுக்கு பிறகும், பசுமை.
  சமூகதிலிருந்து விலகிய ஒரு பண்னை வீடு, ஒரு பணக்கார தம்பதி(கணவன் பாலியல் ஊனமுற்றவன்), ஒரு பண்னை வேலைக்காரன். கணவணே மனைவியின் பாலியலுக்கு மட்டும் ஒரு கணவனை ஏற்பாடு பண்னும் கதை.
  இது பாலியல் கதை அல்ல.

  குணசித்திரமும், வசனங்களும், இதை ஒரு தத்துவ நூலாய் மாற்றுகின்றன.

  Like

 2. இர்விங் வாலஸின் The Seven Minutes பாலியல் கதையைப் பற்றிய மிகப்பெரிய புனைவு.

  அருமையான புத்தகம்.

  ஒரு புத்தகத்தை பாலியல் புத்தகம் என்று தடை விதிக்கிறது அரசாங்கம். வக்கீல் ஹீரோ அதை எதிர்த்து நீதிமன்றத்தில் போராடி வெற்றி பெறுவதை விளக்குவதே அந்தக் கதையின் கரு.

  அதில் நீங்கள் குறிப்பிட்டுள்ள அத்தனை புத்தகங்களைப் பற்றிய குறிப்புகளும் வரும்.

  அதில் என்றைக்கும் மறக்க முடியாத காட்சி ஒன்று.

  அரசு வக்கீல் ஒரு சராசரி அமெரிக்கருக்கு என்னென்ன குணங்கள் இருக்கவேண்டும் என்று இரண்டு பக்கத்திற்கு விளக்கி அவை அனைத்தும் பொருந்துகின்ற ஒரு நபரை சாட்சியாக வரச் சொல்லி, அவர் அந்த புத்தகத்தை மிகவும் ஆபாசமான புத்தகம் என்று கூறும்படி ஏற்பாடு செய்திருப்பார்.

  நமது ஹீரோ அந்த சராசரி மனிதர் எது ஆபாசம் என்று சொல்லத்தெரிந்தவரா என்று சோதிக்க நான்கு புத்தகங்களிலிருந்து மேற்கோள்களைப் படிப்பார்.

  முதல் மூன்று மேற்கோள்களை ‘கொஞ்சம் ஆபாசம், ஆனால் பரவாயில்லை என்று சொன்ன அவர் நான்காவது மேற்கோள் மிகவும் ஆபாசம் அந்தப் புத்தக்கத்தைத் தடை செய்ய வேண்டும்’ என்றும் சொல்வார்.

  நமது ஹீரோ பிறகு கூறுவார்:

  ‘முதல் மூன்று மேற்கோள்களும் ஏற்கனவே தடை செய்யப்பட்ட புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. அந்த நான்காவது மேற்கோள் ‘புனித பைபிளிலிருந்து’ எடுக்கப்பட்டது என்று கூறுவார்.

  நீதி மன்றமே அதிரும்.

  Like

 3. சுந்தரராஜன் சார், என்றாவது Seven Minutes-ஐ திரும்பிப் படிக்க வேண்டும். டேவிட் ராஜேஷ், டி.ஹெச். லாரன்சை தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கிறேன், படிக்க வேண்டும்…

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.