முக்கூடற்பள்ளு

பள்ளியில் படித்த செய்யுள்களில் இன்னும் நினைவிருக்கும் ஒன்று.

ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி
மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே
நேற்றும் இன்றும் கொம்பு சுற்றி காற்றடிக்குதே
கேணி நீர்ப்படு சொறித்தவளை கூப்பிடுகுதே
சேற்று நண்டு சேற்றில் வளை ஏற்றடைக்குதே
மழை தேடி ஒரு கோடி வானம் பாடி ஆடுதே
போற்று திருமாலழகர்க்கேற்ற மாம்பண்ணைச்
சேரிப் பள்ளிப் பள்ளர் ஆடிப் பாடித் துள்ளிக் கொள்வோமே

முக்கூடற்பள்ளு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. 17-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. எழுதியவர் யார் என்று தெரியவில்லை. ஏட்டுச்சுவடியிலிருந்து புத்தகமாகப் பதித்தவரும் யார் என்று தெரியவில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கூடல் என்ற ஊரில் பண்ணையாரிடம் வேலை செய்யும் பள்ளன், அவனது இரு மனைவிகள் வாழ்வை, உழவுத் தொழிலை விவரிக்கிறதாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்