பாரதிதாசன் பாரதியின் – இல்லை இல்லை ஐயரின் – பரமபக்தர் என்பது தெரிந்ததே. பாண்டிச்சேரியில் பாரதி வாழ்ந்த காலத்தில் “செந்தமிழ் நாடென்னும் போதினிலே” என்ற கவிதையை எழுதி இருக்கிறார். கவிதை எப்படிப் பிறந்தது என்று பாரதிதாசன் விவரிக்கிறார்.
தமிழ்நாட்டைப் பற்றித் தமிழ்ப்பாக்கள் தந்தால்
அமைவான பாட்டுக்களிப்போம் பரிசென்று
சான்ற மதுரைத் தமிழ்ச்சங்கத்தார் உரைத்தார்தேன்போற் கவி ஒன்று செப்புக நீர் என்று
பல நண்பர் வந்து பாரதியாரை
நலமாகக் கேட்டார்: அதற்கு நம் ஐயர்
என் கவிதான் நன்றாய் இருந்திடினும் சங்கத்தார்
புன்கவி என்றே சொல்லிப் போட்டிடுவார், போட்டால்தான்
சங்கத்தில் சர்க்கார் தயவிருக்கும், ஆதலினால்
உங்களுக்கு வேண்டுமெனில் ஓதுகின்றேன் என்றுரைத்தார்
அந்தவிதம் ஆகட்டும் என்றார்கள் நண்பரெலாம்“செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே” என்று
அழகுத் தமிழ்நாட்டை அப்படியே நெஞ்சால்
எழுதி முடித்தார் இசையோடு பாடினார்காதினிக்கும் நல்ல கருத்தினிக்கும் பாட்டிந்நாள்
மேதினியிற் சோதி விளக்கு.
பாரதியின் கவிதை:
செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலேவேதம் நிறைந்த தமிழ்நாடு – உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு – நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் – இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடுகாவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி – என
மேவிய யாறு பலவோடத் – திரு
மேனி செழித்த தமிழ்நாடுமுத்தமிழ் மாமுனி நீள்வரையே – நின்று
மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு – செல்வம்
எத்தனை உண்டு புவி மீதே – அவை
யாவும் படைத்த தமிழ்நாடுநீலத் திரைக்கடலோரத்திலே – நின்று
நித்தம் தவஞ்செய் குமரி எல்லை -வட
மாலவன் குன்றம் இவற்றிடையே – புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடுகல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு – நல்ல
பல்விதமாயின சாத்திரத்தின் – மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடுவள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – நெஞ்சை
அள்ளும் சிலப்பதிகாரமென்றோர் – மணி
யாரம் படைத்த தமிழ்நாடுசிங்களம் புட்பகம் சாவகம் – ஆகிய
தீவு பலவினுஞ் சென்றேறி – அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் – நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடுவிண்ணை இடிக்கும் தலை இமயம் – எனும்
வெற்பை அடிக்கும் திறனுடையார் – சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் – தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடுசீன மிசிரம் யவனரகம் – இன்னும்
தேசம் பலவும் புகழ் வீசிக் – கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும் – மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு
தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்
“நெஞ்சை அள்ளும்” அற்புதமான, மிகப்பொருத்தமான சொற்றொடர்!
LikeLike