சுத்தானந்த பாரதியார்

சுத்தானந்த பாரதியை நான் முதன்முதலாக கேள்விப்பட்டது ‘மாலை மயங்குகின்ற நேரம்‘ என்ற திரைப்படப் பாடலின் மூலம்தான். மிகவும் அருமையான பாடல்.

suddhanandha_bharathi
suddhanandha_bharathi

பிறகு அவர் எழுதிய சில புத்தகங்கள் தமிழ் டிஜிடல் லைப்ரரி தளத்தின் மூலம் கிடைத்தது.

அகஸ்தியர் யாத்திரை ஜாலியாக படிக்க எழுதப்பட்ட புத்தகம். அகஸ்தியர் லண்டனுக்குப் போய் பெண்களுடன் நடனமாடுகிறார், மாமிச உணவை புறம் தள்ளுகிறார். மேலை நாகரிகம் பற்றி ரேடியோவில் லெக்சர் அடிக்கிறார். The ambience of this book is charming.

அகஸ்தியர் யாத்திரை புத்தகம் கிளப்பிவிட்ட curiosity-ஆல் இவரைப் பற்றி மேலும் தேடினேன். நாகரிகப் பண்ணை என்ற சிறுகதைத் தொகுப்பு கிடைத்தது. சகிக்க முடியாத எழுத்து. ஹரிஜன் நாடகம் வெறும் பிரசாரம் மட்டுமே. ஆறுமுக நாவலர், முத்துத்தாண்டவர், முத்துசாமி தீட்சிதர் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை எழுதி இருக்கிறார். ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டும், அதன் மூலம்தான் தமிழை வடநாட்டில் பரப்ப முடியும் என்று வாதாடி இருக்கிறார். பெரியோர் வரலாறு, தமிழ் உணர்ச்சி என்று புத்தகங்களை எழுதி இருக்கிறார். Les Miserables உள்ளிட்ட பல நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். ‘எப்படி பாடினரோ‘ போன்ற சாஹித்தியங்களை இயற்றி இருக்கிறார்.

நிறைவாழ்வு வாழ்ந்திருக்கிறார், 1897-இல் பிறந்தவர் 1990-இல்தான் இறந்திருக்கிறார். ஊர் ஊராக சுற்றி இருக்கிறார். ஆனால் என்ன செய்வது, எப்படி தன் வாழ்வை பொருளுள்ளதாக ஆக்கிக் கொள்வது என்று தவித்திருக்கிறாரோ என்று தோன்றுகிறது. அவரைப் பற்றிய பல விவரங்களை இங்கே காணலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்