என் கல்லூரி நண்பன் கணேஷின் மகன் ஆதித்யன் கொஞ்சம் விசித்திரப் பேர்வழி. பதின்ம வயதில் கம்ப ராமாயணம், பாஞ்சாலி சபதம் என்று படிக்க விரும்புகிறான். கணேஷ் நல்ல உரை ஏதாவது இருந்தால் சொல்லு என்று என்னைக் கேட்டான். நானோ . இப்போதுதான் குறுந்தொகை, நற்றிணை என்று ஆரம்பித்திருக்கிறேன்.
சிலிகன் ஷெல்ஃப் தளத்தின் மூலம் எனக்குக் கிடைத்த பெரிய கொடை வாசகர்களின் நட்புதான். எனக்குத் ஒரு விஷயம் தெரியவில்லை என்றால் ஒரு பிரச்சினையுமில்லை, தெரிந்தவர்கள் நாலைந்து பேராவது இருப்பார்கள். உதாரணமாக நாஞ்சில் நாடன். அவர் கம்பராமாயணத்தை மும்பையில் ஒரு தமிழறிஞரிடம் பாடமாகப் படித்தவர். கம்பனின் அம்புறாத்தூணி என்று புத்தகமே எழுதியவர். ஜடாயு கற்பூர வாசனை தெரியாத எனக்கே கம்பராமாயணத்தில் கொஞ்சம் ஆர்வத்தை உருவாக்கியவர். விசு இரண்டு வருஷமாக கம்ப ராமாயணத்தை வரிவரியாகத் உரைகளின் உதவியோடு தானே படித்தவன். இவர்களிடம் கேட்டேன. விசு, ஜடாயுவிடம் கிடைத்த பதில்களை எல்லாருக்கும் பயன்படும் என்று ஒரு பதிவாகத் தொகுத்திருக்கிறேன்.
நாஞ்சில் ஒரு படி மேலேயே போய் என் நண்பனைக் கூப்பிட்டு 15 நிமிஷம் பேசி இருக்கிறார். மேன்மக்கள்! கணேஷும் ஆதித்யனும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள்.
- வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை – விசு, ஜடாயு இருவரும் பரிந்துரைக்கும் புத்தகம்
- கம்பன் கழகம் – அ.ச.ஞானசம்பந்தன் உரை இணையத்தில் கிடைக்கிறது – விசுவின் பரிந்துரை
- இணையத்தில் இன்னொரு உரை (ஜடாயு)
- ஜடாயு, ஹரிகிருஷ்ணன் இருவரும் உள்ள பெங்களூர் இலக்கிய அமர்வுகளின் வீடியோக்கள் – கம்பராமாயணம், சிலப்பதிகாரம், பாஞ்சாலி சபதம்
- பாஞ்சாலி சபதம், ஹரிகிருஷ்ணன் உரை
என் இளமைக்காலத்தில் தமிழகத்தில் கம்பனைப் பற்றி மூச்சுவிடாமல் பேசிக் கொண்டே இருப்பார்கள். காரைக்குடி கம்பன் கழகம் செயலாக இருந்தது. கவிதைகளில் ஆர்வமில்லாத நானே சா. கணேசன், மு.மு. இஸ்மாயில் என்று பலரும் கம்பன் பற்றி எழுதியதைப் படித்த நினைவு இருக்கிறது. கம்பன் கழகம் செயலாக இருந்ததும் கம்பன் விழா என்று ஒன்று நடந்ததும் மங்கலாக நினைவிருக்கிறது. இப்போதெல்லாம் அப்படி கம்பனில் ஊறித் திளைத்திருக்கும் தமிழறிஞர்கள் யாரும் இல்லையா?
தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்
RV நன்றி!. உங்களிடம் உரைபற்றி கேட்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் தயக்கம். ஜெயமோகன் சமீபத்திய 100 சிறுகதைகள் பற்றி உங்கள் போஸ்ட்டுக்கு Curiosity.
LikeLike
கார்த்திகேயன், ஜெயமோகனின் சமீபத்திய சிறுகதைகள் பற்றி எழுத வேண்டும்தான். கைவரவில்லை, எல்லாவற்றையும் இன்னும் படிக்கவும் இல்லை. நீங்கள்தான் எழுதுங்களேன், இங்கேயே பதித்துவிடலாம். எழுதுவதானால் என் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். rv dot subbu at gmail dot com
LikeLike
கம்பராமாயணத்தை வாசிக்க இன்று மிகச்சிறந்த நூல் என்பது கோவை கம்பன் அறநிலை வெளியிட்டான கம்பராமாயண பதிப்புதான். அதில் அ. அ. மணவாளன் அவர்களால் கிட்டத்தட்ட எல்லா உரைகளுமே தொகுக்கப்பட்டுள்ளன
LikeLike
பிரசாந்த், நன்றி! கோவை கம்பன் அறநிலை வெளியீட்டைத் தேடிப் பார்க்கிறேன்
LikeLike