புறநானூற்றிலிருந்து ஒரு கவிதை

வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்
தன்னோர் அன்ன இளையர் இருப்பப்,
பலர்மீது நீட்டிய மண்டையென் சிறுவனைக்
கால்வழி கட்டிலிற் கிடப்பித்
தூவெள் ளறுவை போர்ப்பித்திலதே

– ஔவையார், புறநானூறு, திணை கரந்தை

வெள்ளாட்டு மந்தையைப் போன்ற இளைஞர் கூட்டம் சூழ்ந்திருக்க, தலைவன் பலரது தலைக்கு மேலாக என் சின்ன வயது மகனை நோக்கி நீட்டிய கள் மொந்தை அவனை இப்போது தூய வெள்ளாடையால் போர்த்தி இந்த காலில்லாத கட்டிலில் கிடத்திவிட்டது.

விடுதலைப் புலிகளாகட்டும், ஜிஹாதி போராளிகளாட்டும், இளைஞர்களும் இளைஞிகளும் பதின்ம வயதினரும் “எதிரிகளைத்” தாக்கி தங்களை மாய்த்துக் கொண்டார்கள் என்று செய்திகளைப் படிக்கும்போதெல்லாம் இந்தக் கவிதையைத்தான் நினைத்துக் கொள்வேன். எத்தனை poignant கவிதை!

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்