சுப்ரமணிய சிவாவும் காந்தியும்

சுப்ரமணிய சிவா வ.உ.சி.யுடன் சிறை சென்று மீண்ட பிறகு பத்து பதினைந்து வருஷம் வாழ்ந்திருக்கிறார்.

நோய் அவரை முழுதாக முடக்கிவிடவில்லை. கிராமம் கிராமமாக நடந்து சென்று சுதந்திரத்தைப் பற்றி பேசி இருக்கிறார். புரட்சிகரமான பேச்சுக்காக ஆங்கிலேய அரசு அவர் மீது மீண்டும் மீண்டும் வழக்கு தொடுக்குமாம். சிவா கூலாக நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்பாராம், இனி மேல் இப்படி பேசமாட்டேன் என்று உறுதி அளிப்பாராம், விட்டுவிடுவார்களாம். அடுத்த கிராமத்துக்கு நடந்து போவாராம், மீண்டும் பேச்சு, வழக்கு, மன்னிப்பு, அடுத்த ஊர். (தொழுநோய் இருப்பதால் ரயிலில் போக அவருக்கு அனுமதி கிடையாது.) ஒரு நீதிமன்றத்தில் நடப்பது அடுத்த நீதிமன்றத்துக்கு தெரிவது அந்த நாளில் சிரமமாக இருந்திருக்க வேண்டும்.

வெ. சாமிநாத சர்மா சிவா அவ்வப்போது திரு.வி.க.விடம் வந்து ஐந்து பத்து ரூபாய் கடன் கேட்பார் என்று “நான் கண்ட நால்வர்” புத்தகத்தில் சொல்கிறார். “என்ன சொல்கிறார் உங்கள் விளக்கெண்ணெய் முதலியார்?” என்று கேட்பாராம். திரு.வி.க.வின் மிருதுவான அணுகுமுறை அவருக்கு ஒத்து வந்திருக்காது.

ஆனால் நான் வ.உ.சி. காலத்துக்குப் பிறகு சிவாவின் அரசியல் செயல்பாடுகள் under the radar ஆகத்தான் இருந்திருக்கின்றன என்று நினைத்திருந்தேன். பசுபதி சாரின் தளத்தில் பார்த்த ஒரு பதிவின் மூலம் அவர் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு பெற்று சிறை சென்றார் என்று தெரிந்தது. சிவாவால் சிறையில் உட்கார முடியவில்லை. தன் வழக்கமான மன்னிப்பு டெக்னிக்கை பயன்படுத்த எண்ணி இருக்கிறார். விடுதலை செய்தால் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று எழுதிக் கொடுத்திருக்கிறார். ஆனால் அரசே அவர் உடல் நலம் சரியில்லாதாதல் நிபந்தனை அன்றி விடுதலை செய்திருக்கிறது.

சிவா தன் அரசியல் செயல்பாடுகளை மீண்டும் தொடர்ந்திருக்கிறார். ஆனால் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று எழுதிக் கொடுத்திருக்கிறாரே? காந்தியிடம் யாரோ போட்டுக் கொடுத்துவிட்டார்கள். காந்தி சொன்னது சொன்னதுதான், கொடுத்த வாக்கை மீறக்கூடாது என்கிறார். சிவா அரசு தான் அரசியலில் ஈடுபடக்கூடாது என்று நிபந்தனை விதிக்காமல் விடுதலை செய்திருக்கிறது, அதனால் அரசியலில் ஈடுபடலாம் என்கிறார். அன்னிய, அநியாய அரசுக்கு வாக்குறுதி கொடுத்தே இருந்தாலும், இது போர், இதெல்லாம் தன்னைக் கட்டுப்படுத்தாது என்பது அவர் நிலை. கிழவர் நிலை என்னவாக இருந்திருக்கும் என்பது தெரிந்ததுதான். சிவா கதர் பிரசாரம் போன்ற ஆக்க வேலைகளில் ஈடுபடலாம் என்று யோசனை சொல்லி இருக்கிறார்.

ஆச்சரியம் என்னவென்றால் சிவா காந்தியின் ஆலோசனையை ஏற்றிருக்கிறார். அதற்குப் பிறகு அவர் தீவிரமாக அரசியலில் ஈடுபடவில்லை. ஆனால் அதற்கப்புறமும் இரண்டு மூன்று வருஷம் கிராமம் கிராமமாக சென்று பிரச்சாரம் செய்திருக்கிறார். அன்னிய அரசைத் தாக்காமல் கதர் பிரசாரம்தான் செய்திருப்பார் என்று யூகிக்கிறேன்.

இது போன்ற தியாகிகளுக்கு நல்ல வாழ்க்கை வரலாறு நூல் கிடையாது. சிதம்பரம் பிள்ளைக்கு ம.பொ.சி. கிடைத்ததால் பிழைத்தார். (ம.பொ.சி. பிள்ளைக்கு காங்கிரஸ் அலுவலகத்தில் சிலை வைக்க படாதபாடு பட வேண்டி இருந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.) சிவா ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து சிறை சென்றார் என்பதே இப்படி தற்செயலாகத்தான் தெரிய வருகிறது. (வ.உ.சி. ஒத்துழையாமை இயக்கத்தை கடுமையாக எதிர்த்தார் என்று நினைவு.)

பசுபதி சாருக்கு மிக்க நன்றி!

சிவா போன்றவர்களின் அர்ப்பணிப்பு ஆச்சரியப்படுத்துவது. மனிதர் 40 வயதுதான் வாழ்ந்திருக்கிறார். அதில் ஒரு பதினைந்து வருஷமாவது கொடுமையான நோயுடன். ஆனால் கடைசி வரை போராடி இருக்கிறார். அவரைப் போன்ற மகத்தான ஆளுமைகளையும் தன் சொல்லால் கட்டிப்போட்ட கிழவரைப் பற்றி என்னதான் சொல்வது! வாழ்க நீ எம்மான்!

தொகுக்கப்பட்ட பக்கம்: சுதந்திரப் போராட்டம்

3 thoughts on “சுப்ரமணிய சிவாவும் காந்தியும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.