படிப்புக்கும் அலெக்ஸ் ட்ரெபெக்குக்கும் நேரடி தொடர்பு இல்லைதான். இருந்தாலும் அவருக்கு ஒரு அஞ்சலிக் குறிப்பு எழுத விரும்புகிறேன். சில சமயம் அப்படித்தான். (எஸ்பிபிக்கும் எழுத வேண்டும் என்று தோன்றியது, ஆனால் எஸ்பிபி மறையவில்லை என்று என்னை நானே ஏமாற்றிக் கொள்ள விரும்புகிறேன்.)
அமெரிக்க டிவியில் நான் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சி Jeopardy. இது ஒரு வினாடிவினா (quiz) நிகழ்ச்சி. 1984-இலிருந்து இறக்கும் வரை இந்த நிகழ்ச்சிக்கு அவர்தான் நடத்துனர் (anchor). திங்களிலிருந்து வெள்ளி வரை தினமும் ஏழிலிருந்து ஏழரை வரை. அலுவலகலத்திலிருந்து திரும்பி வந்து அப்பாடா என்று உட்கார்ந்து இந்த நிகழ்ச்சியை தினமும் சில ஆண்டுகளாவது பார்த்திருக்கிறேன். என்றாவது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று ஆசை உண்டு. அவரும் இந்த நிகழ்ச்சியும் அமெரிக்க பிரக்ஞையில் பிரிக்க முடியாதவை. கோபிநாத்தும் நீயா நானா நிகழ்ச்சியும் போல.
நெட்ஃப்ளிக்சும் அமேசான் ப்ரைமும் வந்த பிறகு இது போன்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்பதே நின்று போய்விட்டது. ட்ரெபெக்கின் நினைவுக்காகவாவது மீண்டும் பழைய நிகழ்ச்சிகளைப் பார்க்க வேண்டும்.
தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்