கி.ரா. கலந்துரையாடல்

எனக்கு சில quirks உண்டு. வீடியோக்களை, யூட்யூப் உரைகளைப் பார்க்கும் பொறுமை கிடையாது. வரி வடிவம் கிடைத்தால் விரைவாகப் படித்துவிடலாமே என்று தோன்றும். கிண்டிலிலோ, மின்பிரதிகளையோ படிக்கப் பிடிக்காது. காகிதப் புத்தகம்தான் பிடிக்கும். வேறு வழியில்லாத போதுதான், அதுவும் அவ்வப்போதுதான் மின்பிரதிகளைப் படிக்கிறேன். இன்று வரை கிண்டில் வாங்கவில்லை. அவ்வளவு ஏன், தமிழில் சீர்திருத்த எழுத்துக்களைப் படிக்கும்போது கூட லேசாக உறுத்தும். இத்தனைக்கும் “லை”, “ளை” போன்றவற்றின் புதிய வரிவடிவம்தான் உத்தமம் என்று பதின்ம வயதிலேயே புரிந்திருந்தது. (இந்தத் தலைமுறை அந்தப் பழைய வரி வடிவத்தைப் பார்த்தே இருக்காது. அவர்களுக்காக இது)
.

இந்த வருஷமாவது மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன். வருஷமே முடியப் போகிறது! சரி, பார்த்து வைப்போம் என்று ஜெயமோகன் தளத்தில் வெளியான கி.ரா. கலந்துரையாடல் நிகழ்ச்சியைப் பார்த்தேன்.

கி.ரா.வைப் பார்ப்பதே நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. 97 வயதாம். என் வீட்டு பெரிசு போலவே உணர்ந்தேன். அவ்வப்போது ramble ஆனாலும் கோர்வையாகத்தான் பேசுகிறார். உண்மையில் அவர் ramble ஆகும்போது இன்னும் நெகிழ்ச்சியாக இருந்தது. அ. முத்துலிங்கம் உங்கள் எழுத்து வேகம் தடைப்படுமா, எப்படி மீள்வீர்கள் என்று கேட்டால் அவர் தான் பொற்கொல்லர் (ஆசாரி) ஜாதியினரின் கண்டனத்துக்கு உள்ளானதை, அதனால் ஏற்பட்ட மன வருத்தத்தைப் பற்றி பேசுகிறார். ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை.

சின்னச் சின்ன பிற சந்தோஷங்கள் வேறு. அ. முத்துலிங்கம், ஜெயமோகன் இருவரும் கலந்து கொண்டது, ஜாஜாவைப் பார்த்தது…

பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன். இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்துக்கு வாழ்த்துக்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: கி.ரா. பக்கம்

2 thoughts on “கி.ரா. கலந்துரையாடல்

  1. எனக்கும் இந்த வீடியோ, ஆடியோ புத்தகங்கள் ஒத்து வருவதில்லை. பொறுமை இல்லை. வரிவடிவம் மனதில் பதிவது போல், ஒலிகள் மனதில் பதிவதில்லை. சில விஷயங்களை நமக்கான வடிவத்தில் இன்டர்ப்ரெட் செய்து, நமது மெமரியில் ஸ்டோர் செய்யும் வசதி, இந்த ஒலி வடிவத்தில் இல்லை. என் அலுவலகத்தில் ஒருவர் ஒலிப் புத்தகங்களைத்தான் இப்போது வாங்குகின்றார், அவருக்கு அது வசதியாக உள்ளதாம். ஆவரணா நாவலை ஒலி வடிவில் கேட்டு இருக்கின்றார். என்னால் அதை யோசிக்கவே முடிவதில்லை.

    ஆனால் கிண்டில் ஒரு விஷயத்தை சுலபமாக்கியுள்ளது, உடனே வாங்க முடிவது, விலை குறைவு, அன்லிமிட்டட். அஞ்ஞாடி புத்தகம் 1000, ஆனால் கிண்டில் 500. அதோடு அன்லிமிட்டடில் கிடைக்கின்றது. சில புத்தகங்கள் எல்லாம் அதிகவிலை கொடுத்து படித்த பின்னர் மூக்கால் அழுவதற்கு இது கொஞ்சம் பரவாயில்லை, உதாரணம் பா.ராவின் இறவான். அச்சுபுத்தகம் 285, கிண்டிலில் 100+ற்கு வாங்கினேன்.

    எனக்கு ஆங்கில புத்தகங்கள் படிக்க மிகவும் உதவியாக உள்ளது. என்னுடைய ஆங்கில அறிவு குறைவு, உடனடியாக அர்த்தம் பார்க்கும் வசதி எல்லாம் மிக உதவியாக உள்ளது. ஆனால் கிண்டில் எளிதில் டிஸ்ட்ராக்ட் செய்கின்றது, நாய்க்கு முன்னால் பத்து தட்டி பத்து பதார்த்தத்தை வைத்தால் அனைத்தையும் நக்குவது போல சில சமயக் ஆகிவிடுகின்றது, ஒரே சமயத்தில் பத்து நிமிடம் ஒரு புத்தகம், அடுத்த பத்து நிமிடம் இன்னொன்று என்று போகின்றது.

    Liked by 1 person

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.