(மேம்படுத்தப்பட்ட மீள்பதிப்பு)
பிக்பாஸ் நிகழ்ச்சி அமெரிக்காவில் ஹாட்ஸ்டாரில் வருவதில்லை. வந்தாலும் பார்ப்பேனா என்பது சந்தேகம்தான், கேள்விப்படுவதிலிருந்து செயற்கைத்தனமும் வலிந்து புகுத்தப்படும் தகராறுகளும் வியாபித்திருக்கின்றன என்று தோன்றுகிறது.
ஆனால் கமல் வெண்முரசைப் பரிந்துரைத்தார் என்று தெரிந்தது, அது பெரிய மகிழ்ச்சி. ஆயிரம் பேர் படிப்பார்கள், இரண்டாயிரம் பேர் ஆரம்பிப்பார்கள், பத்தாயிரம் பேர் அங்கும் இங்குமாகப் படிப்பார்கள், ஐம்பதினாயிரம் பேருக்காவது தெரிய வரும். லட்சக்கணக்கானவர் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரபல நடிகர் பரிந்துரைப்பது வெண்முரசுக்கு மிகப் பெரிய மார்க்கெட்டிங். கமலுக்கு ஒரு பெரிய ஜே!
அவர் இந்தப் புத்தகங்களையும் பரிந்துரைத்தார் என்று தெரிந்தது. வசதிக்காக பட்டியல் கீழே.
இந்தப் பட்டியலில் நான் தில்லைராஜன் (தொடுவானம் தேடி) பற்றி கேள்விப்பட்டதில்லை. ரா.கி.ர.வின் “அடிமையின் காதல்” புத்தகத்தைப் பற்றியும் கேள்விப்பட்டதில்லை.
- ஆல்பர்ட் காமு எழுதிய ப்ளேக்
- சாதத் ஹாசன் மாண்டோ எழுதிய ஹடக் (Humiliation)
- ஜெயமோகனின் வெண்முரசு
- ப. சிங்காரம் எழுதிய புயலிலே ஒரு தோணி
- தொ. பரமசிவன் எழுதிய அழகர்கோவில்
- மிகைய்ல் நெய்மா (லெபனான் எழுத்தாளர்) எழுதிய Book of Mirdad
- ரா.கி. ரங்கராஜன் எழுதிய அடிமையின் காதல்
- கி. ராஜநாராயணன் எழுதிய கோபல்லபுரத்து மக்கள்
- வண்ணநிலவன் சிறுகதை – எஸ்தர்
- ஏ. தில்லைராஜன் எழுதிய தொடுவானம் தேடி
- ஜி. நாகராஜன் எழுதிய நாளை மற்றொரு நாளே
- சுந்தர ராமசாமி எழுதிய ஜேஜே சில குறிப்புகள்
- அசோகமித்ரன் எழுதிய கரைந்த நிழல்கள்
- பெருமாள் முருகன் எழுதிய கூளமாதாரி
- மனோகர் தேவதாஸ் மற்றும் தேனி சீருடையான் எழுதிய நிறங்களின் மொழி
- செல்வேந்திரன் எழுதிய வாசிப்பது எப்படி?
பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் முடிவடையவில்லை. ஏற்கனவே சொன்னது போல நிகழ்ச்சியை என்னால் சுலபமாகப் பார்க்க முடியாது. கமல் வேறு ஏதாவது புத்தகத்தைப் பரிந்துரைத்தால் மறக்காமல் எனக்கு சொல்லுங்கள்! ஏதாவது விட்டுப் போயிருந்தால் சொல்லுங்கள்!
தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து விட்டது.
LikeLike