மதனகாமராஜன் கதை

என் சிறு வயதில் பெரிய எழுத்து விக்ரமாதித்தன் கதை, மதனகாமராஜன் கதை, மரியாதைராமன் கதை என்று சில தொன்மக் கதைகள் கிடைக்கும். அனேகமாக ரத்தின நாயக்கர் சன்ஸ் பதித்திருக்கும். தஞ்சாவூர் ஓவியங்கள் பாணியில் ஓவியங்கள் இருக்கும். நம்மூர் ஆயிரத்தொரு இரவுகள். ஆனால் எழுபது எண்பதுகளிலேயே அவற்றின் மவுசு குறைந்து கொண்டிருந்தது.

கதைகளில் இளவரசிகள், ஜீவகசிந்தாமணி பாதியில் சகட்டுமேனிக்கு அந்த இளவரசிகளை மணக்கும் இளவரசர்கள், அவர்களுக்கு உதவும் மந்திரிகுமாரர்கள், பேய் பிசாசுகள், திடீர்திடீரென்று பிரசன்னமாகி வரம் தரும் சிவபெருமான் அல்லது காளி, நினைத்தைத் தரும் அலாவுதீன் விளக்கு போன்ற வஸ்துக்கள், கற்புக்கரசி மனைவிகள், ஏமாற்றும் மனைவிகள் எல்லாரும் வருவார்கள். அகோ வாரும் பிள்ளாய் பாணியில் பேசுவார்கள். ஆறு சாஸ்திரம், அறுபத்து நான்கு கலைகளை அறிந்திருப்பார்கள். அன்று சுவாரசியமாக இருந்தவை இன்று கொஞ்சம் அலுப்பு தட்டுகின்றன. ஆனால் ஆயிரத்தொரு இரவுகள் போலவே இவையும் பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணங்கள்.

சுருக்கமாக கதை: குருவின் மகள் இளவரசன் மீது காமம் கொள்கிறாள், இளவரசன் மறுக்க அவன் மீது பொய்ப்பழி சாட்டி அவனைத் துரத்திவிடுகிறாள். இளவரசனும் மந்திரிகுமாரனும் தப்பிக்கிறார்கள். இளவரசன் ஒரு பெண்ணின் ஓவியத்தைக் கண்டு அவளை விரும்புகிறான். மந்திரி குமாரன் அவளைத் தேடிச் செல்கிறான். அவளை மணக்கும்படி சூழ்நிலையில் ஒரு சுமங்கலியை வைத்து அவளுக்கு தாலி கட்டுகிறான். உறவு கொள்வதைத் தவிர்க்க அவளுக்கு 12 இரவு 12 கதை சொல்கிறான். அப்புறம் உண்மையை சொல்லி, ராஜகுமாரனுக்கு மணம் செய்து வைத்து, ராஜ்ஜியத்தை மீண்டும் கைப்பற்றி…

இந்தக் கதைகள் பழைய தொன்மக் கதைகளை தொகுக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு சட்டகம்தான். அதாவது 12 தொன்மக் கதைகளை மந்திரிகுமாரன் இரவில் சொல்கிறான், அவற்றை சொல்வதற்காக ஒரு சாக்குதான் கதையே. எத்தனை பழைய படங்களில் இந்தக் கதைகளின் கருக்கள் கையாளப்பட்டிருக்கின்றன என்பதுதான் வியப்பு. ஜெமினி தயாரித்து ரஞ்சன் நடித்த மங்கம்மா சபதம் (1943) மந்திரி குமாரன் இரவில் சொல்லும் ஒரு கதைதான். பி.யூ. சின்னப்பா நடித்த கற்புக்கரசி (1949) மந்திரி குமாரன் இரவில் சொல்லும் இன்னொரு கதைதான். ரம்பையின் காதல் (3 முறை தயாரிக்கப்பட்டது, கடைசியாக இந்திரலோகத்தில் நா. அழகப்பன் என்று), மணாளனே மங்கையின் பாக்கியம், பாதாளபைரவி என்று பல திரைப்படங்களில் இந்தக் கதைகளின் கருக்கள் வருகின்றன. கிரீஷ் கார்னாட் எழுதிய் நாகமண்டலா நாடகம் மந்திரிகுமாரனால் இரவில் சொல்லப்படும் ஒரு கதைதான். 1941-இல் ஜெமினி தயாரிப்பில் மதனகாமராஜன் கதையே திரைப்படமாகவும் வந்தது.

இவை எல்லாம் கொஞ்சம் கிறுக்கர்களுக்குத்தான். ஆனால் கிரீஷ் கார்னாட் போல இவற்றை மறுவாசிப்பு செய்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தொன்மங்கள்

தொடர்புள்ள பக்கம்: தமிழ் இணைய நூலகத்தில் மின்பிரதி

தமிழறிஞர் வரிசை – வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார்

வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார் பேரை கேள்விப்பட்டிருந்தாலும் அவரது பங்களிப்பு என்ன என்று எனக்கு சரியாகத் தெரியாது. இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில் சி. சுப்ரமணியம் என்பவர் எழுதிய புத்தகத்தை வைத்து கொஞ்சம் தெரிந்தது.

முதலியார் 19-ஆம் நூற்றாண்டில் – 1857-இல் பிறந்தவர். கிட்டத்தட்ட தொண்ணூறு வயது வரை வாழ்ந்திருக்கிறார். செல்வச் செழிப்பான குடும்பம். தமிழில் ஆர்வம். மரியாதைக்காக அரசு உத்தியோகம், கால்நடைத் துறையில். சில கால்நடை மருத்துவ நூல்களை தமிழில் எழுதி இருக்கிறார். ராவ்சாகிப், தாலுகா போர்ட் உறுப்பினர் என்று பதவிகள். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. பிறகு தமிழில் இறங்கி இருக்கிறார். கம்பராமாயண சாரம், அகலிகை வெண்பா என்று எழுதி இருக்கிறார். அகலிகை வெண்பாதான் புதுமைப்பித்தனின் சாபவிமோசனம் சிறுகதைக்கு inspiration என்று எங்கோ படித்திருக்கிறேன். மில்டனின் Paradise Lost புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

அவரது முக்கியப் பங்களிப்பு என்பது தமிழில் ஆர்வம் உள்ள ஒரு கூட்டத்தை தழைக்கச் செய்ததுதான் – குறிப்பாக, நெல்லை வட்டாரத்தில் தழைக்கச் செய்ததுதான் என்று தோன்றுகிறது. டி.கே.சி.க்கு முந்தைய தலைமுறை.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள்

நாமார்க்கும் குடியல்லோம் – ஜெயமோகன்

இந்தப் பதிவை ஃபிப்ரவரி 2021-இல் எழுத ஆரம்பித்தேன். எழுதி முடிக்கவே கைவரவில்லை. அதுவும் ஜெயமோகனே தன்னைப் பற்றி “நாமார்க்கும் குடியல்லோம்” என்று மார்ச்சிலோ என்னவோ சொல்லிக் கொண்டார். நான் அவரை சரியாகவே கணித்திருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டேன், அப்படியும் எழுதி முடிக்கவே கை வரவில்லை.

ஜெயமோகன் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். மேதை. ஆனால் பத்மஸ்ரீ விருதை மறுத்தார். ஞானபீட விருது கிடைத்தால் ஏற்கமாட்டேன் என்கிறார். இத்தனைக்கும் சென்ற காலத்தில் சில பல விருதுகளை ஏற்றுக் கொண்டவர்தான். இன்று விருதுகளை மறுப்பது வெறும் ஆணவமா? பொருளியல் ரீதியாக அவர் அடைந்துள்ள வெற்றி அவரது அகங்காரத்தை உசுப்பி விட்டிருக்கிறதா? கொடுக்கும் நிலையில் நான் இருக்கிறேன், பெற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை என்ற பெருமிதமா? இல்லை பாஜக ஆட்சியில் இருக்கும்போது விருதை ஏற்கமாட்டேன் என்பது அவரது அரசியல் நிலையின் பிரதிபலிப்பா, ஹிந்துத்துவ எதிர்ப்பா? நாளை நோபல் பரிசு கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ள மறுப்பாரா?

இது வெட்டி ஆராய்ச்சி என்பதை ஒத்துக் கொள்கிறேன். கறாராகப் பார்த்தால் விருதுகளை ஏற்பதும் மறுப்பதும் அவர் இஷ்டம், அவர் சவுகரியம். ஏன் மறுக்கிறேன் என்று கூட அவர் யாருக்கும் எந்த விளக்கமும் தர வேண்டிய அவசியம் இல்லைதான்.

இது வெறும் ஆணவமோ, பொருளியல் வெற்றியால் உண்டான அகங்காரமோ இல்லை என்பது என் உறுதியான கருத்து. இது தன் மேதமையை தானே நன்றாக உணர்ந்து அடையும் பெருமிதத்தின் விளைவு. பொருளியல் தேவைகள் இருந்திருந்தால் ஒரு வேளை சில விருதுகளை ஏற்றுக் கொண்டிருக்கலாம். அதுவும் இன்றில்லை. அரசியல் ஹிந்துத்துவத்தை எதிர்ப்பவர்தான், ஆனால் பத்மஸ்ரீ விருதை மறுக்க அது காரணமில்லை என்று கருதுகிறேன். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் நிராகரித்திருப்பார் என்று தோன்றுகிறது. ஏனென்றால் கணிசமான அளவில் இந்தப் விருதுகள் அரசியல் காரணங்களுக்காகத்தான் தரப்படுகின்றன. தரம் தெரியாமல் தரப்படும் பரிசிலை பாணன் நிராகரிப்பது போலத்தான். “மன்னவனும் நீயோ? வளநாடும் உன்னதோ?” என்று கேட்ட கம்பன் போலத்தான். நாமார்க்கும் குடியல்லோம்!

ஆனால் ஜெயமோகன் விருதுகளை ஏற்க மறுப்பது தவறு என்பதும் என் உறுதியான கருத்து. ஜெயமோகன் – அதுவும் சினிமா பிரபல ஜெயமோகன், சர்ச்சைக்குள்ளாகும் ஜெயமோகன் – இன்று தமிழ்நாடறிந்த ஒருவர். பத்துக்கு இரண்டு பேராவது அவர் பேரைக் கேள்விப்பட்டிருப்பார்கள். தமிழ்நாட்டுக்கு வெளியே? பத்து லட்சத்தில் இரண்டு பேர் அவரைப் பற்றி கேள்விப்பட்டிருந்தால் அதிகம். எப்படி தெரிந்து கொள்வார்கள்? விருதுகள் பெறாவிட்டால் தகழியும் பஷீரும், அனந்தமூர்த்தியும், கோபிநாத் மோஹந்தியும், மஹாஸ்வேதாதேவியும், அம்ரிதா ப்ரீதமும் நம் பிரக்ஞையில் இருப்பார்களா? ஜெயமோகனை மொழிபெயர்ப்பது சுலபமல்ல. ஆனால் வெளியே தெரிந்தால் இன்னும் நாலு பேர் முன்வருவார்கள் இல்லையா? அதனால்தான் அவர் கௌரவிக்கப்பட வேண்டும், அவரும் அந்த கௌரவங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றே விரும்புகிறேன்.

அவருக்கு மட்டுமல்ல, அசோகமித்திரனுக்கு பத்மபூஷன், பத்மஸ்ரீ ஏதாவது கிடைத்திருக்க வேண்டும். கி.ரா.வுக்கு சட்டுபுட்டென்று கொடுத்தே ஆக வேண்டும். நாஞ்சிலும் எஸ்ராவும் பூமணியும் எதிர்காலத்தில் இந்த விருதுகளைப் பெற வேண்டும்…

ஜெயமோகன் தான் காகிதத்தில் எழுதினால் போதும், அந்தக் காகிதப் பிரதியை நெருங்கிய நண்பர்கள் படித்தால் போதும் என்று கூட நினைக்கலாம். (அசோகவனம் என்னாச்சு சார்?) அது அவரது உரிமை. ஆனால் அதை புத்தகமாகப் போட்டால், இணையத்தில் பதிப்பித்தால், இன்னும் நாலு பேருக்கு இலக்கியத்தில் ஆர்வம் வரலாம். டாவின்சியும் மைக்கேலாஞ்சலோவும் தங்கள் வீட்டு சுவரில் மட்டும் ஓவியம் எழுதி திருப்திப்பட்டுக் கொள்வது அவர்கள் இஷ்டம்தான். ஆனால் மோனாலிசாவையும் சிஸ்டைன் ஆலயத்தையும் பார்த்து பரவசப்பட வேண்டும் என்றே நம்மில் அனேகர் விரும்புவோம். அந்த எண்ணத்தின் நீட்டிப்புதான் அவர் விருதுகளை ஏற்க வேண்டும் என்று நினைப்பதும்…

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம்

பிடித்த கவிதை – பாரதியின் ஊழிக்கூத்து

வெடிபடு மண்டத்திடி பல தாளம் போட – வெறும்
வெளியில் ரத்தக் களியொடு பூதம் பாட – பாட்டின்
அடிபடு பொருளின் அடிபடும் ஒலியிற் கூட – களித்து
ஆடுங்காளீ! சாமுண்டீ! கங்காளீ!
அன்னை! அன்னை! ஆடுங்கூத்தை
நாடச் செய்தாய் என்னை

ஐந்துறு பூதம் சிந்திப்போய் ஒன்றாக – பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக – அங்கே
முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத்தோடே
முடியா நடனம் புரிவாய்! அடுதீ சொரிவாய்!
அன்னை! அன்னை! ஆடுங்கூத்தை
நாடச் செய்தாய் என்னை

பாழாம் வெளியும் பதறிப்போய் மெய் குலைய – சலனம்
பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய – அங்கே
ஊழாம் பேய்தான் ஓஹோஹோவென்றலைய – வெறித்து
உறுமித் திரிவாய், செருவெங்கூத்தே புரிவாய்!
அன்னை! அன்னை! ஆடுங்கூத்தை
நாடச் செய்தாய் என்னை

சத்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டி – சட்டச்
சடசட சட்டென உடைபடு தாளங்கொட்டி – அங்கே
எத்திக்கினிலும் நின் விழி அனல் போய் எட்டி – தானே
எரியுங் கோலங் கண்டே சாகும் காலம்
அன்னை! அன்னை! ஆடுங்கூத்தை
நாடச் செய்தாய் என்னை

காலத்தொடு நிர்மூலம்படு மூவுலகும் – அங்கே
கடவுள் மோனத்தொளியே தனியாய் இலகும் – சிவன்
கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும் – கையை
கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக் கூத்திடுவாய்!
அன்னை! அன்னை! ஆடுங்கூத்தை
நாடச் செய்தாய் என்னை


இந்தக் கவிதையை மொழிபெயர்க்க முடியாது என்றுதான் தோன்றுகிறது…

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்

காளிதாசனைப் பற்றிய நாடகம் – ஆஷாட் கா ஏக் தின்

ஆஷாட் கா ஏக் தின் ஹிந்தியின் முதல் நவீன நாடகம் என கருதப்படுகிறது. மோஹன் ராகேஷ் 1958-இல் எழுதியது. சங்கீத நாடக் அகடமி அடுத்த வருஷமே அதை சிறந்த நாடகமாகத் தேர்ந்தெடுத்தது. 1971-இல் மணி கால் இயக்கத்தில் திரைப்படமாகவும் வெளிவந்தது. திரைப்படம் எங்காவது இணையத்தில் கிடைத்தால் எனக்கும் சொல்லுங்கள்!

ஆஷாட் கா ஏக் தின் நான் படித்த நல்ல நாடகங்களில் ஒன்று. ஆனால் இதை நாடகமாகப் பார்ப்பது இன்னும் சிறந்த அனுபவமாக இருக்கும் என்று தோன்றுகிறது. அதனால்தான் திரைப்படம் கிடைக்குமா என்று பார்க்கிறேன்.

ஏன் சிறந்த நாடகம்? காளிதாசனின் படைப்பூக்கம் எங்கிருந்து வந்தது என்று ஒரு நல்ல கற்பனையை முன்வைக்கிறது. ஆசாபாசங்கள் எப்படி படைப்பூக்கத்தை உருவாக்கலாம் என்று காட்டுகிறது. உலகியல் வெற்றி, படைப்பில் வெற்றி இரண்டுக்கும் நடுவில் இருக்கக் கூடிய இழுபறியை அருமையாக சித்தரிக்கிறது. உண்மையான மனிதர்களின் சித்தரிப்பு. எல்லாவற்றிற்கும் மேலாக நம் வேர்கள், அதிலும் இளமை அனுபவங்களின் தாக்கம் எப்படி நம் வாழ்வை என்றும் பாதிக்கின்றன என்று காட்டுகிறது.

நாடகத்தின் முதல் பகுதியில் காளிதாசன் இமயமலைச்சாரலில் ஒரு சிறு கிராமத்தில் வாழும் இளம் கவிஞன். மல்லிகாவை காதலிக்கிறான். அவனது புகழ் கொஞ்சம் வெளியே தெரிய ஆரம்பித்திருக்கிறது. ராஜா விக்ரமாதித்தன் தனது அரசவைக்கு வரும்படி அழைக்கிறான். போக வேண்டும் என்று ஆசை. போனால் காதல் பலவீனம் அடைந்துவிடும் என்பது ஆழ்மனதில் தெரிந்திருக்கிறது. ஆனால் மல்லிகாவே போகும்படி சொல்கிறாள். இத்தனைக்கும் காளிதாசனின் சுயநலத்தைப் பற்றி – சுயநலம் அல்ல, self-centeredness – பற்றி மல்லிகாவின் அம்மா அவளை எச்சரிக்கிறாள். மல்லிகாவின் பேரைக் கெடுத்துவிட்டு காளிதாசன் போவதைக் கண்டு இருவருக்கும் தெரிந்த விலோம் ஆத்திரப்பட்டு பேசுகிறான்.

இரண்டாவது பகுதியில் காளிதாசன் புகழின் உச்சியில் இருக்கிறான். அரச குலப் பெண்ணை மணந்து கொள்கிறான். காஷ்மீரத்தின் சிற்றரசனாகப் பொறுப்பேற்கப் போகும் வழியில் தன் கிராமத்தில் தங்குகிறான். ஆனால் மல்லிகாவை சந்திக்க வரவில்லை, தன் மனைவியை அனுப்புகிறான். மல்லிகா இப்போது உலகியல் ரீதியாக கொஞ்சம் சிரமத்தில் இருக்கிறாள். பேச்சுவாக்கில் மேகதூதம் இந்தக் கிராமத்து சூழ்நிலையை வைத்து எழுதப்பட்டது என்று மல்லிகாவிடம் அவள் சொல்கிறாள். அவன் மனைவி மல்லிகாவிடம் நீ தலைநகரத்தில் பணிப்பெண்ணாக வா என்று அழைக்கிறாள், மல்லிகா மறுத்துவிடுகிறாள்.

மூன்றாவது பகுதியில் மீண்டும் காளிதாசன் மல்லிகாவை சந்திக்க வருகிறான், தன்னுடன் வந்துவிடுமாறு அழைக்கிறான். மல்லிகாவுக்கு இப்போது விலோம் மூலமாக ஒரு குழந்தை இருக்கிறது என்று தெரிந்ததும் சென்றுவிடுகிறான்.

நாடகத்தின் பெரிய பலம் உண்மையான மனிதர்களின் சித்தரிப்பு. அதிலும் உண்மைகளை எதிர்கொள்ள விரும்பாத மனித மனத்தை பிரமாதமாகச் சித்தரிக்கிறார். காளிதாசனுக்குத் தெரியாதா தான் உஜ்ஜயினிக்கு சென்றால் மல்லிகாவின் கதி அதோகதிதான் என்று? ஆனாலும் செல்கிறான். மல்லிகாவுக்குத் தெரியாதா காளிதாசன் தன்னை கைவிட்டுவிடுவான் என்று? ஆனாலும் போகும்படி சொல்கிறாள். காளிதாசனால் குறைந்தபட்சம் மல்லிகாவை சந்தித்திருக்க முடியாதா? தன்னால் அவள் கண்களை எதிர்கொண்டிருக்க முடியாது என்று சாக்கு சொல்கிறான். காளிதாசனின் மனைவிக்கு உண்மையிலேயே மல்லிகாவுக்கும் காளிதாசனுக்கும் என்ன உறவு என்று புரியவில்லையா? சொல்லிக் கொண்டே போகலாம்.

மிகச் சிறந்த காட்சியாக நான் கருதுவது காளிதான் குமாரசம்பவத்தின் உமாவும் மேகதூதத்தின் யக்ஷிணியும் சகுந்தலையும் மல்லிகாவேதான், அவற்றின் சூழல் இந்த கிராமம்தான் என்று சொல்லும் இடம். வேர்கள் எத்தனை ஆழமானவை என்று காட்டும் இடம்.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். பார்ப்பது இன்னும் சிறப்பாக இருக்கும் என்று யூகிக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாடகங்கள்

அப்பா அன்புள்ள அப்பா

என் அப்பா இறந்தபோது என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே எனக்கு சரியாகத் தெரியவில்லை. புரோகிதர்களும் உறவினர்களும் பேசுவது சரியாகக் காதிலேயே விழாது. என்னவோ பண்ணிக் கொள்ளுங்கள், என்னை விட்டுவிடுங்கடா என்பது போலத்தான் மனநிலை இருந்தது. என்னவோ நடந்தது, மனம் எங்கேயோ இருந்தது. என்னென்னவோ குருட்டு யோசனைகள். ஆற்றிலே அடித்துக் கொண்டுபோகும் சுள்ளி போல நானும் அங்கே இருந்தேன், அவ்வளவுதான். உதட்டை இறுக்கிக் கொண்டே இருப்பேன், ஆனால் அழுகையே வரவில்லை. தனியாக இரண்டு நிமிஷம் இருந்தால் போதும் என்று தோன்றும். அரை மணி நேரம் தனியாக இருந்தாலும், தனிமை கிடைக்கவே இல்லை.

இறப்பதற்கு ஒரு வருஷம் முன்னால் என் அப்பா பெரிய விபத்தில் சிக்கிக் கொண்டார். பிழைப்பாரா மாட்டாரா என்பதே சந்தேகமாக இருந்தது. அம்மாவுக்குத்தான் பெரிய அடி என்று நினைத்தோம், அம்மா இரண்டு மூன்று நாளில் வீடு திரும்பிவிட அப்பாவுக்கு ஆறேழு வாரம் ஆயிற்று. விடுமுறை எடுத்துக் கொள்வதில் சிரமம், பணத்துக்கு கொஞ்சம் இழுபறி, ஆஸ்பத்திரி அலைச்சல், நிலைமை என்ன என்று தெளிவாகச் சொல்லாமல் இழுத்தடிக்கும் மருத்துவர்கள், பகல் வேளையில் ஆஸ்பத்திரி, இரவில் அமெரிக்க நேரத்தில் வேலை, அதனால் தூக்கமின்மை என்று நிறைய கஷ்டம். ஆனால் ஆஸ்பத்திரிக்குப் போய் குழாய்கள் மூலமே உயிரோடு இருக்கும் அப்பாவைப் பார்க்கும்போது நான் படுவதெல்லாம் ஒரு கஷ்டமா என்று தோன்றும். அப்போதும் இப்படித்தான், ஏதோ வெளியில் காட்டிக் கொள்ளாமல் பேசிக் கொண்டிருந்தாலும் மனதில் உளைச்சல், நிம்மதியின்மை, இழப்பு, பயம், துக்கம், துக்கத்தில் ஆழ்ந்துவிடக் கூடாது என்ற பிரக்ஞை என்று ஆயிரம் அழுத்தங்கள். தாங்கமுடியாத அழுத்தம் என்றில்லை; ஆனால் relentless, non-stop அழுத்தம்.

சுசித்ரா பட்டாசார்யா எழுதிய ஆத்மஜன் சிறுகதையின் நாயகனில் என்னையேதான் கண்டேன். சடங்குகள்; உறவினர்கள்; சின்னச் சின்ன லௌகீகப் பிரச்சினைகள்; அடுத்தடுத்து நடத்த வேண்டிய செயல்கள் – எல்லாவற்றிலும் அரைகுறை involvement.

இந்த மாதிரி கதைகளைப் படிக்கும்போது நான் தனியன் அல்லன் என்ற உணர்வு ஏற்படுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித குலம் அனுபவித்த துயரம்தானே என்று தெளிவாகத் தெரிகிறது.

எனக்கு கிரிக்கெட் பைத்தியம் உண்டு. என் அப்பாவிடமிருந்து வந்ததுதான். டிவியில் கிரிக்கெட்டை இப்போதெல்லாம் விடாமல் பார்க்கிறேன். அப்பாவின் நினவு மனதில் அடிநாதமாக ஓடிக் கொண்டே இருக்கும். அதற்காகவே சீக்கிரம் எழுந்து, இரவில் விழித்து கிரிக்கெட பார்க்கிறேன். (கிரிக்கெட்டும் – அதுவும் டெஸ்ட் கிரிக்கெட் – இப்போதெல்லாம் சுவாரசியமாக இருக்கிறது.) பார்க்கும்போது அவரை நினைத்து நினைத்து புன்னகைத்துக் கொள்கிறேன். அந்தப் புன்னகைதான் அப்பாவுடன் என்றும் தொடரும் பந்தம் என்று நினைக்கிறேன்…

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்தியப் புனைவுகள்

நானும் ஹிந்து மதமும்

ஜெயமோகன் “ஹிந்து என உணர்தல்” என்று சமீபத்தில் ஒரு பதிவு எழுதி இருக்கிறார்.

அவரது பதிவை இப்படி சுருக்கிக் கொள்கிறேன்.

  • அறிவியக்கத்தில் செயல்படுபவன் மரபு குறித்து அறிந்திருக்கவேண்டும், ஆராயவேண்டும், தன்னுணர்வுடன் அதைக் கையாள வேண்டும்.
  • மரபின் சிந்தனைகளின் பெரும் பகுதி மதத்திலேயே உள்ளது.
  • மதம் வெறும் நம்பிக்கையோ, ஆசாரங்களின் தொகுதியோ, சட்ட திட்டங்களோ மட்டும் அல்ல. அது ஒரு மாபெரும் அறிவுத்தொகை. எந்த மதமாக இருந்தாலும் சரி, அது குறைந்தது ஆயிரமாண்டுகளாக மானுடசிந்தனை செயல்பட்ட ஒரு பெருக்கின் பதிவாகவே நமக்கு கிடைக்கிறது.
  • அதிலும் இந்து மதம் மிகத் தொன்மையானது. அதன் ஒரு பகுதி வரலாற்றுக்கும் முந்தைய பழங்காலத்தில் உள்ளது.
  • இந்த பெரும்பெருக்கின் தொடர்ச்சியாக என்னை நான் உணரும்போது சிந்தனையில் பண்பாட்டில் ஒரு பெருஞ்செல்வத்தை அடைந்தவனாகிறேன். அதை என்னால் இழக்கமுடியாது. ஆகவேதான் நான் இந்து.
  • நான் அப்படி இந்து மதத்துடன் என்னை அடையாளப்படுத்திக் கொள்ளும்போது ஒரு மகத்தான மரபுடன் இணைகிறேன். என் அடையாளத்தை அவ்வாறு உருவாக்கிக் கொள்கிறேன். பெரும் கனவுகளைக் காண்கிறேன். அதை தவிர்த்துவிட்டு நான் எந்த அடையாளத்தைச் சூடிக்கொள்ளவேண்டும்?
  • எந்த மதத்தின், சிந்தனை மரபின் நடைமுறை உலகியலுக்கும் அதன் லட்சியவாதத்துக்கும் தூரம் இருக்கத்தான் செய்கிறது. தூரம் மதத்துக்கு மதம், மரபுக்கு மரபு வேறுபடுகிறது. அந்த தூரத்தை வைத்து ஒரு மரபை நிராகரிப்பதில் பொருளில்லை.
  • தனிப்பட்ட முறையில் வேதாந்தம் ஜெயமோகனின் தேடலுக்கான வழி.

என் பதின்ம வயதுகளில் மனிதன்தான் கடவுளை உருவாக்கினான், கடவுள் எல்லாம் சும்மா டுமீல், ஆனால் எதற்கும் கொஞ்சம் பக்தியோடு இருந்து கொள்வோம், தப்பித் தவறி உண்மையிலேயே கடவுள் இருந்து தொலைத்துவிடப் போகிறார் என்றெல்லாம் நானே சொந்தமாக புரட்சிகரமாக யோசித்து சில முடிவுகளை அடைந்திருந்தேன். வயது அதிகரிக்க அதிகரிக்க சில சமயம் ஆஸ்திகனாக, சில சமயம் நாஸ்திகனாக, சில சமயம் இரண்டும்கெட்டானாக எல்லாம் இருந்திருக்கிறேன்.

ஆனால் அன்று தோன்றியவைதான் அனேகமாக இன்றும்; நான் ஹிந்துவாகப் பிறந்தது ஒரு விபத்து. ஹிந்துவாகப் பிறந்தது மட்டுமல்ல, ஆணாகப் பிறந்ததும் விபத்துதான்; தமிழனாக, இந்தியனாக, மத்தியதர வர்க்க குடும்பத்தில், அய்யர் ஜாதியில் பிறந்தது எல்லாம் விபத்துதான். விபத்தைப் பற்றி பெருமை அடைய எதுவுமில்லை, அதனால் “உயர்ந்த” அய்யர் ஜாதிக்காரன் என்றோ, பல நூறு ஆண்டுகள் முன்னால் ஓதப்பட்ட யஜுர்வேத மரபினன் என்றோ, விஸ்வாமித்ரரும் கடவுளின் அவதாரம் என்றே கருதப்படும் பரசுராமரும் என் குல மூத்தவர்க்ள என்றோ, கல்லானாலும் கணவன் என்று மனைவியை விட ஒரு படி உயரத்தில் இருக்கிறேன் என்றோ, கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த தமிழ்க் குடியினன் என்றோ, இந்தியன் என்றோ, ஹிந்து என்றோ எந்தப் பெருமிதமும் இல்லை; அதே நேரத்தில் எந்தச் சிறுமையும் இல்லை. யாதும் ஊரே; யாவரும் கேளிர். யாரோ எப்போதோ போட்ட எல்லைக் கோடுகளில் எனக்கென்ன பெருமிதம்? தீதும் நன்றும் பிறர் தர வாரா, அந்தப் பிறரில் ராமனும் கிருஷ்ணனும் வியாசனும் காந்தியும் புதுமைப்பித்தனும் அசோகமித்ரனும் ஜெயமோகனும் இருந்தாலும் சரி; மாபெரும் மரபு ஒன்றின் தொடர்ச்சியான பல கோடி கண்ணிகளில் ஒருவனாக இருந்தாலும் சரி.

அதற்காக பெருமிதம் என்பதே இல்லையா? கொஞ்சூண்டு இருக்கிறது. ஒட்டுமொத்த மனித இனத்தின் சாதனைகளுக்காக. என் பெண் கலிஃபோர்னியாவில் சாண்டா பார்பரா என்ற இடத்தில் படித்தாள். நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து நான்கு மணி நேர கார் பயணம். ஒவ்வொரு முறையும் மலைகளை அகழ்ந்து ரோடு போட்டவர்களை நினைத்து வியந்திருக்கிறேன். சான் ஃப்ரான்சிஸ்கோவின் கோல்டன் கேட் பாலத்தைக் கண்டு பெருமிதம் கொண்டிருக்கிறேன். மகாபலிபுரத்தின் மகிஷாசுரன் புடைப்புச் சிற்பம் என் மனதை விம்மச் செய்கிறது. கைலாசநாதர் கோவிலைக் கண்டபோது என் மார்பு விரிந்ததை உணர்ந்தேன். கோடலின் தேற்றம், ரூதர்ஃபோர்டின் பரிசோதனைகள், Riemann’s hypothesis, NP vs P problems என்று மனித குலத்தின் சாதனைகளுக்காக பெருமிதம் கொள்கிறேன். தஞ்சை பெரிய கோவிலை வடிவமைத்த பெயரில்லாதவர்கள்; சிஸ்டைன் ஆலயத்தின் மேற்கூரையில் ஓவியம் தீட்டிய மைக்கலாஞ்சலோ; கோனிக்ஸ்பர்கின் ஏழு பாலங்களையும் ஒரே ரவுண்டில் கடக்க முடியுமா என்று சிந்தித்த ஆய்லர்; என்று பல ஆயிரம் சாதனையாளர்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். அந்தப் பெருமிதத்தில் “அவனே அறிவான்; ஒரு வேளை அறியானோ?” என்ற ரிக்வேதப் பாடலும் உண்டு; “அவரோ வாரார்; முல்லையும் பூத்தன” என்று குறுந்தொகைப் பாடலும் உண்டு; “உன்னித்தெழுந்த என் தடமுலைகள் மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழ்கிலேன்” என்ற ஆண்டாள் பாசுரமும் உண்டு; “It tolls for thee” என்ற ஜான் டோன் கவிதையும் உண்டு. “How Dark?” என்ற வோலே சோயிங்கா கவிதையும் உண்டு. மகாபாரதமும் உண்டு. கில்கமேஷும் உண்டு. அர்த்தசாஸ்திரத்தின் இரக்கமே அற்ற லாஜிக்கும் உண்டு. ஷேக்ஸ்பியரும் உண்டு. மோபி டிக்கும் உண்டு. தியாகராஜரும் உண்டு. பீத்தோவனும் உண்டு. பீட்டில்ஸும் உண்டு. இட்லி தோசையும் உண்டு. கும்பகோணம் டிகிரி காப்பியும் உண்டு. அய்யர் வீட்டு பருப்பு ரசம் பிடிக்கும் என்பதால் அய்யங்கார் வீட்டு புளியோதரையோ, செட்டிநாடு கோழியோ,  கேரள சக்கைப் பிரதமனோ வங்காளத்து ரசகுல்லாவோ இத்தாலிய ரவியோலியோ ஜப்பானிய சுஷியோ பாஸ்டனின் க்ளாம் சௌடரோ ஃப்ரான்சின் க்ரீம் ப்ரூலேயோ விலக்கல்ல. அந்தப் பெருமிதத்தில் ஹிந்து மரபு, கிறிஸ்துவப் மரபு, யஜூர்வேத மரபு, திருப்புகழ் மரபு என்பதெலாம் தகவல்தான். உலகின் எந்த மூலையிலிருந்து வந்தது என்பது பெரிய விஷயமாகத் தெரியவில்லை.

இது பெருமிதமா, வியப்பா, சாதனையாளர்கள் முன் தலை தாழ்த்துவதா? எல்லாம் சேர்ந்து கட்டி அடித்த ஒரு உணர்வு என்பதுதான் சரி.

மரபுத் தொடர்ச்சி மகா முக்கியம்தான். யூக்ளிட் இல்லையேல் நியூட்டன் இல்லை. கியோட்டோ இல்லையேல் டாவின்சி இல்லை. வியாசர் இல்லையேல் ஜெயமோகன் இல்லை. திருப்பதி மலை ஏறும்போது இது வரை எத்தனை கோடி பேர் ஏறிய மலை, எத்தனை ஆயிரம் ஆண்டு ஏறிய மலை, எத்தனை ஆண்டு காலம் தரிசித்த சிலை என்ற எண்ணம் பெருநிறைவை எனக்கும் ஏற்படுத்துகிறது. வைத்தீஸ்வரன்கோவிலில் என் குழந்தைகளுக்கு மொட்டை அடிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்திருக்கிறேன். ஆனால் நான் பிறந்த சூழலையும் தாண்டி இருப்பதும் என் மரபே. தாய்மொழியும், பாஸ்போர்ட்டும், (சில சமயம்) வணங்கும் தெய்வமும் என் மரபைக் குறுக்கி விடுவதில்லை.

ஜெயமோகனும் இதை கோடி காட்டுகிறார். அவருக்கு என் கருத்துகளில் ஆட்சேபணை எதுவும் இருக்காது என்று நினைக்கிறேன். அவர் சொல்ல வருவதை இப்படி புரிந்து கொள்கிறேன். ஹிந்து மதம் மாபெரும் அறிவுச் சிந்தனை தொடர்ச்சி. நம்முடைய விழுமியங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. ஒரு காலகட்டத்தில் நியாயமாகத் தெரிந்தது அநியாயம் என்று இன்று தெரியலாம். திருத்திக் கொள்வோம். அன்று உலகியல் ரீதியாக நடந்த அநியாயத்துக்காக இன்று ஹிந்து மதத்தை நிராகரிப்பதில் பொருளில்லை. அப்படி அவர் சொல்வதில் எனக்கு முழு சம்மதமே.

ஜெயமோகன் ஹிந்து மதத்துடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும்போது ஒரு மகத்தான மரபுடன் இணைகிறார், அவரது அடையாளத்தைக் உருவாக்கிக் கொள்கிறார்., பெரும் கனவுகளைக் காண்கிறார், அதை ஏன் தவிர்க்க வேண்டும், வேறு எந்த அடையாளத்தைச் சூடிக்கொள்ளவேண்டும் என்று கேட்கிறார். அவரோடு நான் வேறுபடுவது இந்த ஒரு இடத்தில்தான், அதிலும் ஒரு சிறிய புள்ளியில்தான். நான் ஹிந்து மதத்திற்கும் வெளியே உள்ளதும் என் மரபேதான், அப்படி மனித இனம் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும்போது இன்னும் மகத்தான மரபோடு இணைகிறேன், இன்னும் பெரும் கனவுகளைக் காண்கிறேன், அதை ஏன் தவிர்க்க வேண்டும் என்று கேட்கிறேன். அதாவது ஹிந்து என்று மட்டும் அடையாளப்படுத்திக் கூடாது என்பதல்ல, அது மட்டும் எனக்கு போதவில்லை, அதற்கு மேலும் அடையாளப்படுத்திக் கொள்ள விழைகிறேன்.

இப்படி சொல்கிறேனே! நான் அய்யர் ஜாதியில் பிறந்தவன். பொடி அடைத்த கத்திரிக்காய் கறியை சாப்பிடும்போது இதை எப்படிரா கண்டுபிடித்தார்கள் என்று மகிழ்ந்து கொள்கிறேன். நான் தமிழன்; “பெருங்களிறு வாங்க முரிந்து நிலம்படா நாருடை ஒசியலற்றே” என்று படிக்கும்போது இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாலேயே கவிதை எழுதிய என் முப்பாட்டனை நினைத்து பெருமை கொள்கிறேன். நான் இந்தியன். மகாபாரதத்தை விட உயர்ந்த இலக்கியம் உலகில் இல்லை என்று பெருமிதம் கொள்கிறேன். நான் மனிதன். டீகார்டஸ் வடிவ கணிதத்தை அல்ஜீப்ராவின் ஒரு பகுதியாக ஆக்கியதைப் பார்த்து ஆஹா! என்று வியக்கிறேன்.

ஆனால் ஹிந்துவாக இருப்பதில் பல சௌகரியங்கள் உண்டு. எதற்கு வேண்டுமானாலும் ஒரு முன் உதாரணம் கண்டுபிடித்துக் கொள்ளலாம். கடவுள் இல்லை என்று சொன்னாலும் ஹிந்துதான். மதநூல் , ஒரே குரு, என்று எதுவுமில்லை, அதனால் சிந்தனைகளுக்கு எந்தத் தடையும் இல்லை. அதனால் பதின்ம வயதிலிருந்தே – நான் சொந்தமாக மண்டையைக் குழப்பிக் கொள்ள ஆரம்பித்ததிலிருந்தே – நான் ஹிந்துவேதான். பைபிளில் அங்கங்கே தெரியும் லட்சியவாதம் என்னைக் கவர்ந்தாலும், யூத பார்சி மதங்களின் தொன்மை என்னைக் கவர்ந்தாலும் நான் ஹிந்துவேதான். எனக்கு வேண்டிய ஆன்மீகத் தேடலை நானேதான் முட்டி மோதி பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லும் ஒரே மதம்; எனக்கு ஆன்மீகத் தேடலே கிடையாதா, அது என் சொந்தப் பிரச்சினை என்று சொல்லும் ஒரே மதம் எனக்குத் தெரிந்த வரையில் ஹிந்து மதம் ஒன்றுதான். அதனால் நான் ஹிந்துவேதான். அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால்; அப்போதும் ஹிந்துவாகவேதான் பிறக்க விரும்புகிறேன். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதுதான் எனக்கு மதக் கோட்பாடு. (நாளை அதுவும் மாறலாம்.) கிருஷ்ணனும் அல்லாவும் ஏசுவும் ஜெஹோவாவும் கூட எனக்கு தீதையும் நன்றையும் தந்துவிட முடியாது என்றுதான் கருதுகிறேன். அந்தக் கோட்பாட்டை நான் ஹிந்து மதத்தில்தான் கடைப்பிடிக்க முடியும்.

நான் எழுதியதை மீண்டும் படித்தால் அறிவு, இலக்கிய, கலை சாதனைகள்தான் எனக்கு பெரிதாகத் தெரிகிறது என்பது எனக்கே தெளிவாகிறது. காந்தியைத் தவிர வேறு எந்த தலைவரும் எனக்கு முக்கியமாகப் படவில்லை. அலெக்சாண்டரும் சீசரும் ராஜராஜனும் ஜெங்கிஸ் கானும் பீட்டர் சக்ரவர்த்தியும் அக்பரும் சிவாஜியும் எனக்கு இரண்டாம்பட்சம்தான். ஒரு வேளை அறிவியல் சாதனைகள் என்று இந்திய மரபில் கொஞ்சம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டி இருப்பதால்தான் என் மனம் சுலபமாக இந்தியாவிற்கு வெளியே செல்கிறதோ என்னவோ. ஜெயமோகனுக்கு அறிவியல் எல்லாம் இரண்டாம் பட்சம்தான். அவருக்கு ஒரு பஞ்ச் டயலாக்! – “எனக்கு அழகியல்தான் முக்கியம், அறிவியல் அல்ல”

மறுபடியும் சொல்கிறேன். இதெல்லாம் கொஞ்சூண்டுதான். என் மரபு, என் குலம், என் இனம் இத்தனை சாதனைகள் புரிந்ததா என்ற வியப்புதான். (இதே மனித குலத்தின் சிறுமைகள் ஏன் எனக்கு பெரிதாகத் தெரியவில்லை, நான் ஏன் ஹிட்லரையும் ஔரங்கசீப்பையும் கோட்சேயையும் நினைத்து சோர்வடைவதில்லை என்பது எனக்கே இன்னும் தெளிவாகவில்லை.) நான் உண்மையில் பெருமிதம் கொள்வதும் சிறுமை கொள்வதும் என் செயல்களுக்காக மட்டுமே. அப்படி பெருமிதப்படும்படி இனி மேல்தான் ஏதாவது செய்ய வேண்டும் என்பதுதான் சோகம்…

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

முதல் ஒரிய மொழி நாவலும் சிறுகதையும்

ஃபகீர் மோகன் சேனாபதி ஒரிய இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுகிறார். ஒரிய மொழியின் முதல் நாவலான Chaa Maana Atha Guntha-வை (சரியான உச்சரிப்பு தெரியவில்லை. ஆங்கிலத்தில் Six Acres and a Third என்று தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.) எழுதியவர் இவரே.

ஒரிய மொழியின் முதல் சிறுகதையான “ரேபதி” (ரேபதி என்றால் ரேவதி – வங்காள, ஒரிய மொழிகளில் “வ” என்ற ஒலி “ப” என்று ஒலிக்கப்படுகிறது) இவர் எழுதியதே. சமீபத்தில் படிக்க முடிந்தது, அதனால்தான் இந்தப் பதிவை மீள்பதிக்கிறேன்.

ரேபதி நல்ல சிறுகதை. திறமை அற்ற எழுத்தாளர் எழுதி இருந்தால் செயற்கையான மெலோட்ராமா சிறுகதையாக வந்திருக்கும், இவர் மெய்நிகர் அனுபவத்தை, ஒரு காலகட்டத்தை, அருமையாகக் கொண்டு வந்திருக்கிறார். சிறுமி ரேபதிக்கும் கிராமத்து வாத்தியார் பாசுவுக்கும் நடுவில் ஏற்படும் ஈர்ப்பு, பெண்ணைப் படிக்க வைக்க நினைக்கும் அப்பா, படித்து என்ன கிழிக்கப் போகிறாய் என்று திட்டிக் கொண்டே இருக்கும் பாட்டி, ஓட்டைப் பாத்திரத்தை விற்று அரிசி பருப்பு வாங்கும் காட்சி, என்று மிகச் சிறப்பாக எழுதி இருக்கிறார். குளத்தங்கரை அரசமரம் சிறுகதையை படிக்கும் உணர்வு ஏற்பட்டது.

பதிவின் இறுதியில் சிறுகதையை தட்டச்சி இருக்கிறேன், தவறாமல் படியுங்கள்!


Chaamana Atha Guntha 1897, 98 வாக்கில் எழுதப்பட்டிருக்கிறது. ரொம்ப நாளாகத் தேடிக் கொண்டிருந்த புத்தகம். நாலு முறை தேனாம்பேட்டை சாஹித்ய அகாடெமி அலுவலகத்தில் தேடி இருக்கிறேன், எப்போதும் out of print-தான். இந்த வருஷம் படிக்க விரும்பும் புத்தகம் என்றும் குறிப்பிட்டிருந்தேன். அதிர்ஷ்டவசமாக சான் ஹோசே நூலகத்தில் கிடைத்தது. அவரது உறவினர்களே யாரோ மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

நாவல் ஒரு gem. மொழிபெயர்ப்பே இவ்வளவு அருமையாக இருந்தால் ஒரிய மொழியில் நிச்சயமாக வெகு பிரமாதமாக இருக்கும்.

கதை கிதை என்றெல்லாம் ஒன்றும் பிரமாதமில்லை. மங்கராஜ் எல்லாரையும் ஏமாற்றி ஜமீந்தார் ஆகிறான். ஒரிஜினல் ஜமீன்தாரை ஏமாற்றி நிலத்தை அபகரிக்கிறான். ஏழை நெசவாளி பகியா, அவன் மனைவி சரியா இருவரையும் ஏமாற்றி அவர்களுடைய 6.32 ஏக்கர் (நம்மூரில் காணி, குழி, மா என்றெல்லாம் இருந்தமாதிரி ஒரிஸ்ஸாவில் அவர்களுக்கான நில அளவுகோல்கள், அதை ஏக்கரில் மாற்றி புத்தகத்துக்கு பேர் வைத்திருக்கிறார்கள்.) நிலம், அவர்களுடைய பசு ஆகியவற்றை பிடுங்கிக் கொள்கிறான். அவனுடைய கூட்டாளி சம்பா மூலம் தன் விரோதி வீட்டில் தீ வைக்கிறான். ஆனால் சரியாவை கொலை செய்தான் என்று அவனை ஒரு கேசில் மாட்டிவிடுகிறார்கள். அவனுடைய வக்கீல் இவனிடமிருந்து நிலத்தைப் பிடுங்கிக் கொண்டு ஜமீந்தார் ஆகிவிடுகிறான். கொலை செய்யவில்லை என்று நீதிபதி சொன்னாலும் ஆறு மாதம் ஜெயில் தண்டனை கிடைக்கிறது. சம்பா இவன் பணத்தை எல்லாம் திருடிக் கொண்டு போகும்போது கொல்லப்படுகிறாள். கொலையாளியை முதலைகள் தின்கின்றன. மங்கராஜ் “Six Acres and a Third! Six Acres and a Third!” என்று புலம்பிக் கொண்டே இருக்கிறான்.

கதை சில இடங்களில் ஜம்ப் ஆகிறது. மங்கராஜ் ஏமாற்றுவது, சம்பா எதிரிகளின் வீட்டுக்குத் தீ வைப்பது, மங்கராஜ் கைது செய்யப்படுவது ஆகிய இடங்களுக்கு நடுவே கொஞ்சம் கோர்வையாக இல்லை. இது மொழிபெயர்ப்பாளரின் தவறா, இல்லை சேனாபதியே அப்படித்தான் எழுதினாரா என்று தெரியவில்லை.

சேனாபதி வெகு சுலபமாக அந்தக் கால சமூகத்தை நம் கண்ணெதிரே கொண்டுவருகிறார். ஒரிஜினல் ஜமீன்தாரின் ஊதாரித்தனம், ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் நமக்கு விதித்தது கஷ்ட வாழ்க்கைதான் என்று உழலும் கிராமத்தார்கள், தகராறுகள், போலீஸ்காரர்களின் அராஜகம், வாழ்க்கை முறை மாறும்போது போலீஸ், வக்கீல், ரெஜிஸ்ட்ரார் அலுவலகம் ஆகியவை பற்றி தெரிந்தவன் சுலபமாக எல்லாரையும் ஏமாற்றுவது என்று சின்ன சின்ன சித்திரங்களைக் காட்டுகிறார்.

நாவலை மிக உயர்ந்த இடத்துக்கு கொண்டு போவது அவர் வாசகர்களிடம் நேரடியாக பேசுவதுதான். நூறு பக்கம் கதை என்றால் அதில் ஐம்பது பக்கம் நம்மிடம் நேரடியாகப் பேசுகிறார். அதில் satire, irony, அங்கதம் எல்லாம் இருக்கிறது. நேரடியாகப் பேசுவதை நான் ரசிப்பேன் என்று இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு முன் நினைத்ததில்லை.

கட்டாயமாகப் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

ஹிந்து பத்திரிகையில் சில excerpts-களை பதித்திருக்கிறார்கள்.


Rebati – Fakirmohan Senapati

Translated by Kishori Charan Das

Source: Oriya Stories, edited by Vidya Das

Patpur was a village in the Hariharpur pargana in the district of Cuttack. At almost the end of the village stood a house. Four rooms, back and front, a walled courtyard with a well in the middle and a thatched shed that housed the dhenki, and a frontage. There was a sitting room at the entrance, which was also meant to receive people who came to pay the rent they owed to the Zamindar. Shyambandhu Mohanty, the owner of the house, represented the Zamindar as his scribe on a salary of two rupees per month apart from the extra he could get for doing some odd incidental work for the tenants. The average monthly total came to not less than four rupees, which was good enough for running the household. No, it was more than that. Sufficient, one would say. So there were hardly any complaints from the family about things that were wanting, or had remained undone. Vegetables were grown in the backyard, which also had two drumstick trees. Two cows provided them with a regular supply of milk and curd to go with their meals. The old woman prepared cowdung cakes mixed with husk that served as fuel, and so they did not have to spend much on firewood. The Zamindar had allowed Shyambandhu to till about three and a half acres of land for himself, and the yield was just enough to serve their requirements.

Shyambandhu was a simple and straightforward man, well liked by the tenants. He went around personally to their houses to collect rent. But while he coaxed them to pay their dues, he never asked for a single paisa more. The tenants didn’t bother asking him for rent receipts. He would himself scribble something on a palm-leaf and tuck it into the thatched roof of their houses.

There were four mouths to feed in Shyambandhu’s house. Husband and wife, the old mother, and a daughter aged ten. The daughter’s name was Rebati. Shyambandhu would sit on the verandah in the evenings and sing bhajans like Krupasindhu Badana or read the Bhagabata, with the light of an earthen lamp, while Rebati, sitting by his side, would listen to him. She had been able to memorise quite a few of those songs and it was so pleasing to hear them in her childish voice. Some people from the village would come at times just to listen to her singing by the side of her father. Rebati had learnt one particular song from her father, which gave him immense joy. He would ask her to sing that one for him everyday, which she would gladly do.

Two years back, the Deputy Inspector of Schools had stayed overnight at Patpur on his way to the countryside on an official tour. At the request of some prominent men of the village, he had set up an Upper Primary School there after his recommendations to that effect were accepted by the Inspector of the Orissa Division. The teacher was one Basudev, who had graduated from the training school at Cuttack. He was truly a Basudev. Handsome in every way. Never raised his head to look at anyone while walking through the village. About twenty years of age. And very good looking. Epileptic fits in his childhood had left a scar on his face, the imprint of the mouth of a heated bottle pressed on his forehead by his mother to ward off the evil spirits. But the scar seemed to suit him, setting off his handsome looks. Basudev had been brought up in the house of his maternal uncle, having lost both his parents when he was a child.

Basudev was a karan by caste. Shyambandhu also belonged to that caste. Shyambandhu would visit him at the school on festive days, when pitha and other specialities were prepared in his house, and say, “Basu dear, please come to our house this evening, your mausi remembers you.” These visits built up a pleasant and affectionate relationship between them. The mother of Rebati would often say when she saw him, “Ah, the poor orphan boy, who is there to look after his welfare!” Basu would spend about an hour almost every evening at their house. And Rebati would shout in joy on seeing him at a distance, “Basubhai is coming! Basubhai is coming!” Rebati would sing the old bhajans she had learnt by the side of her father to him, but to Basudev they seemed new every time.

Once, while talking about things in general, Shyambandhu came to know from him that there was a school for girls at Cuttack, where they could study and also learn household arts like sewing and stitching. It was from that day that he developed a desire to give some education to Rebati, and made it known one day to Basudev. Basu, who regarded Shyambandhu as his father, responded promptly to say, “Sir, I have been thinking of asking you about it for a long time.” So, it was settled between the two that Rebati would do some studies. Rebati overheard it all and ran excitedly to her mother and grandmother to announce, “I’ll study! I’ll study!” Her mother said, “Okay, okay, you will.” But the grandmother said, “Study? What’s that? She is a girl, what’ll she do with studies? Learn how to cook, prepare sweets and special dishes, paint the floor with jhoti, churn the Curd. What is studies?”

Shyambandhu was having his meal one day, seated on a low stool in the verandah. Rebati was also eating by his side. The old woman was seated in front and serving orders to her daughter-in-law, asking her to bring another fistful of rice, some more dal, another pinch of salt, for her son. Then she started saying in the course of their casual talk, “Well, Shyam, what is this I hear? Rebi is going to study? She is a girl, what will she do with studies?” To which Shyambandhu said, “Let it be. Let her study if she wants to.” Rebati was furious with her grandmother and said, “Get going, you old woman!” And then turned beseechingly to her father, “No Bapa, I’ll study.” “Yes, you will” said Shyambandhu, and the matter ended there on that day.

The next afternoon Rebati was overjoyed to get a copy of Sitanath babu’s Pratham Path from Basudev and kept turning the pages from the beginning to the end. The pictures of elephants, horses and cattle excited her. Princes are happy to be owners of elephants and horses, some are happy just riding horses, but merely the pictures were enough to gladden the heart of our Rebati. She was quick to show the pictures to her mother and then to her grandmother. “Okay, go away,” said the grandmother in a vexed tone. But Rebati talked back to her, mo gestures than words, to suggest that she couldn’t care less.

It was an auspicious day – Sri Panchami. The day meant for the worship of Saraswati. Rebati had taken a morning bath, and was hovering about, in and out of the house, waiting for Basubhai who would teach her how to read the book. Formal arrangements for the ceremony of Vidyarambha, the inauguration of learning, had not been made for fear of what the old woman would say. However, that was the idea. So Basu came in due time to teach her the first lessons, starting with the alphabets. And the teaching continued every evening from that day onwards. Rebati progressed fast with her studies in the next two years. So much so that she could read Madhu babu’s Chhandamala fluently, without a pause.

One night, during dinner time, a certain topic came to be discussed between mother and son. It seemed as if it had been rai earlier, and they were set to conclude it that day. “What do you say, Ma, wouldn’t it be a good thing?” asked Shyambandhu. To which the old woman said, “Yes, it will… but have you enquired about the caste?”

“What else was I enquiring about till now? Yes, he is a good karan. A poor boy, but high caste.”

Rebati was also eating her meal nearby, and the words reached her ears. And God knows what she understood of what was said, but there was a noticeable change in her behaviour from that day onwards. She was visibly embarrassed when Basubhai taught her in the presence of her father. And was prone to giggle at times, for no good reason, though she would try to suppress it by putting her head down and pressing her lips together. She would read silently and just say “yes” when some response was called for. And run away laughingly at the end of the session, trying in vain to close her lips.

Every evening she would be at the front door, looking outside, as if she was waiting for somebody. But she would promptly get inside at the sight of Basu, and would not reappear till after repeated calls. The old woman got furious though, if she found Rebati setting foot outside the house.

About two years had passed since that Sri Panchami day. But the days are never smooth and even all the time for anyone. Such are the ways of Providence. It was a spring day of Phalgun when the village was suddenly struck by a cholera epidemic. And the news spread in the morning that Shyambandhu Mohanty was one of the victims. It was usual for all doors to be closed when the epidemic was on. As the story goes, the dread disease, in the form of an old woman, would then be picking up dead bodies to put in the basket held in her arms. So, no one was expected to come to Shyambandhu’s house during that time. The two women were helpless, not knowing what to do. The child Rebati was crying her heart out, and pacing up and down. But Basudev lost no time in going over, regardless of the consequences, when he got the news. He sat at the feet of Shyambandhu and stroked them gently, and put drops of water in his mouth from time to time. It was afternoon when Shyambandhu looked at Basu’s face, and stammered a few words in a choked voice. Words that seemed to implore Basu to take charge. Basu burst out crying. Rebati was rolling disconsolate on the floor. The house was all noise and confusion. And it was all over by the evening.

What to do now? Basu was an immature boy after all, for matters such as these, and the others were womenfolk. The village dhobi Bana Sethi, about sixty years of age or more, was a man of experience. He was ready to oblige on occasions such as this, apart from the lure of a new pair of clothes. He presented himself for duty immediately.

But that was the only karan house in the village, and so they somehow or the other managed the obsequies, between the three of them – the mother, the widow, and Basudev. The morning star had appeared on the horizon by the time they returned from the cremation ground. Rebati’s mother felt the urge, immediately after, to go out and ease herself. And the news was all over the village, by the afternoon, that Rebati’s mother was no more.

Time and tide wait for no one. Though there are those whose thrones acquire a canopy over them, some others are whipped even as they remain handcuffed. Three months had passed since Shyambandhu’s death, and quite a few things had happened to the family during that time. There were two cows in his cowshed. The Zamindar’s agents took them away by force, towards the arrears of land revenue due from him. It was a well known fact that Shyambandhu regarded the money payable to the Zamindar as sacrosanct. Even as one rupee was collected, he would not rest in peace till that was delivered at the Zamindar’s office. Nevertheless, the question of arrears due from Shyambandhu was of little relevance. The important fact was that the cows yielded large amounts of milk, and that was known to the Zamindar. He had also taken back the three and half acres of land that he had allowed Shyambandhu to cultivate for himself. The field-labourer who was staying with the family to help them out, also left the house on the Dol Purnima day. There was no use for him anymore when the land was gone. The two bullocks had been sold for seventeen and a half rupees to meet the expenses of the funeral rites, and that left a margin for household expenses for about a month. They could carry on for another month, somehow, by selling or pawning a pot today and a pan tomorrow.

Basu visited them everyday and stayed till late evening, when Rebati and her grandmother were ready to go to bed. But neither of them would accept the money he offered them. He noticed that if he insisted they take some money, it would just lie on an open rack, untouched. So, he gave up trying to help them in that way. He would take a few copper coins from the old woman and buy them vegetables, which would last them for about eight to ten days. The gaping roof was badly in need of re-thatching, and Basu had stacked two rupees worth of straw for the purpose in the backyard. But the job was yet to be done because the period was not considered propitious.

The old woman was not seen crying all day long, as she used to. She would now do so only in the evening. Eventually she would throw herself down on the floor and fall asleep in the process of crying. She was not able to see well anymore, and seemed to have almost lost her senses. And though she was crying less, she had started abusing Rebati. She had concluded that all their sorrows and misfortune were due to Rebati. Because she had dared to study. That was why the son had to die, and then the daughter-in-law, why the field hand had left them, and the bullocks had to be sold,and why the Zamindar’s men took away the cows by force. Rebati was an accursed girl of ill omen and evil ways. She had also lost her own eyesight because of Rebati’s studies. Tears would stream from Rebati’s eyes when she was reviled by her grandmother. She dreaded then to stand by her side. She would go to the backyard or to some corner of the house and keep sitting there, as though petrified, covering her face with both hands.

Basu was also found guilty by the old woman because it was he who had taught Rebati the first lessons. But she was not in a position to tell him anything, as the household would get totally paralysed without him. More so, when the demands of the Zamindar had not yet ceased.

Rebati was not a child anymore. No one had heard her speaking nor seen her moving outside the house, since the day she had lost her parents. For some days she had been crying loudly, but now there was only a silent and incessant flow of tears. That tiny little heart of hers, and the soft and delicate mind that went with it, had suffered a breakdown. Now there was little difference for her between day and night. She could not make herself believe that her father and mother were indeed dead and would never come back. She had lost her appetite, and spent sleepless nights with the image of her parents always in her mind. She sat down to eat, only for fear of her grandmother. She would hardly ever get up from the floor, and had been reduced to skin and bones. It was only when Basu came to the house that she would fix her large eyes on him, but would lower them instantly, with a sigh, when he looked at her.

Five months had passed since Shyambandhu’s death. It was the summer month of Jyestha at midday, when Basu visited them. He hardly ever came at that time of the day. The old woman opened the door for him, grudgingly. Then Basu said, “Grandmother, the Deputy Inspector will be talking to children of primary schools in this area about their studies at the Hariharpur police station. The children of all the schools will have to be there. I have also been informed. I have to take our children there tomorrow morning. I’ll be away for five days.”

Rebati, who was standing behind a door and listening to him, felt like she was struck down. She saved herself from falling, and managed to sit down on the floor, holding on to the door. Basu bought rice, salt, cooking oil, and brinjals which would last them for about five days, unloaded it all in the courtyard, bowed down to the grandmother, and bade them goodbye the next Saturday, just before the evening had set in. “Look my son, don’t go wandering about in the sun, take care of your health, and don’t forget to eat something in due time” said the old woman and heaved a sigh. Rebati kept staring at Basu. It was different from the way she used to look at him earlier, when she would lower her eyes as Basu looked back at her. But she was not inclined to do so now. Basu’s eyes were also not behaving the same as before. When he wanted to keep looking at her, and still more, but couldn’t. There was no pulling back now. Their eyes met, and it was not possible for either to withdraw them. However, Basu left eventually, and the evening grew dark. But Rebati was still there, looking unblinkingly at the void. She gave a start when she heard her grandmother calling her. And then she realised that it was darkness all over, both inside and outside.

Rebati was counting the days. It was the sixth day since the departure of Basu. She had not stepped out of the house since the death of her parents, but she had already been twice around the front door, going out and coming in, within the morning hours of that day. It was about six in the evening when the school boys had started to come back from Hariharpur that the news came that the teacher was struck by the dread disease on his way back, at the foot of a banyan tree, near Gopalpur. He had to go out four times, successively, to ease himself, and passed away towards midnight. The villagers were vocal in condoling his untimely death, while the children and womenfolk could not help crying aloud. Some said, “Ah! How handsome he was!” while some others said, “Such a sweet and gentle soul, wouldn’t even hurt a fly!”

Rebati heard about it, and so did the grandmother. The old woman kept crying till she choked and could not cry any more. And she said, “Poor boy, did you have to lose your life like this in a foreign land, and due to your own fault?” Which meant that he had committed the sinful act of teaching Rebati and that is why he had to go. Rebati was lying prostrate somewhere in the house after getting the news, with not a sound from her lips. The day passed, and the next day the grandmother shouted when she could not find her anywhere – “You Rebati! You Rebi, you rotten miserable wretch!” Not being able to see well, she was groping around for Rebati. But when she found her and felt her body, she realised that the girl had a high fever and had lost consciousness. She pondered over the situation for a long time. About what she could do, and whom she could ask for help. But she could not think of a way out. So she flew into a rage and said, “You have brought all this on yourself and so what’s the remedy?” Rebati had fallen ill because of her studies, so what could she do?

Rebati seemed to have sunk into the earth. Eyes closed and no response when you called her, not even a whimper. So it went on for six days. The next day Rebati called out a few times, when the old woman heard her. When she found her and felt the body, it was cold to the touch. The girl would give a grunt when called. She also fixed her eyes on her grandmother, and then started saying things that did not make sense. Any kaviraj would then have said, citing a sloka or two, that this was truly the last stage. Given to terrible thirst and delirium. But the old woman thought that there was reason to be happy. Rebati was now speaking after all, while she was totally silent earlier. She had opened her eyes, and was asking for water. The body was also not hot any more. She thought that the poor girl had not had even a drop of water in the last six days, and should get well with some food inside her. So she went out saying, “You keep sleeping, I’ll get something for you to eat.” But she could not lay her hands on even a few grains of rice in all the pots, pans, bags, and baskets she ransacked frantically. She sat down for a long while with a long-drawn sigh, not knowing what to do. She could perhaps have understood, if her eyesight had not been affected, the mystery of how the groceries that were meant for five days had already lasted them for about ten. Anyway, she sat thinking about it, and eventually, a leaking pot, used normally for carrying water, came to her hands, all the rest having already been disposed of. She set out with that one to the grocery shop of Hari Sa, to see if she could get something for it in exchange.

Hari Sa could very well guess the situation when he saw the pot in her hands. And when she told him about her intentions, he took the pot in his own, examined it all over, and
said, “No, no, there is no rice left in my house. That apart, who’ll give you any rice for this leaking pot?” It was not as if he had no rice to spare. He was only trying to drive a hard bargain. But the old woman was thunderstruck when she was told that she couldn’t get any rice. She kept sitting inert and speechless. How do I feed the girl, now that her fever is gone and she is ready to eat? she wondered. It was getting dark. She looked again at Hari twice over, and got up to leave with the pot in her hands, saying, “Well, let me go and see what the girl is doing.” That was when Hari said, “Give it to me, let me see what is there.” He gave her four measures of rice, half a measure of pulses and some salt in exchange for the pot. The old woman came rushing back to the house. She had not applied even a twig to her mouth in the morning to clean her teeth, and so you can imagine the state she was in. She called Rebati the moment she reached the house. She thought that the girl would have recovered from her illness by now, and would be in a position to draw water and cook the rice. So she got terribly angry when there was no response from the girl, and started shouting again – “You Rebati, you Rebi, you rotten miserable wretch!”

Meanwhile, Rebati was getting deeper into a state of unconsciousness. She felt an intense pain all over her body, which was getting more and more cold, and a terrible thirst seemed to thrust her tongue inwards. She felt like going to some cooler place. She came rolling along from inside the house to the front verandah. But it did not relieve her. She moved back all the way to the verandah that over-looked the backyard. The day had passed. Strong winds were blowing. Rebati surveyed the backyard – This is where Bapa had planted the plantain tree, the flower stalks have started coming up, and soon it will bear fruit. Some two years back Ma had planted a guava tree, and how I had run instantly to the well to fetch water for the plant! The tree has grown and has started flowering too… Then she remembered her mother.

Darkness had covered all the trees and plants by now, and she could not make them out any more. But she could see the sky, and found the evening star twinkling with an incessant glow. Rebati could not take her eyes off from the star. It seemed the star was growing in shape, it was like a disc now, and was getting brighter and brighter… Ah! What a beautiful image in there! It was her dear mother, all love and joy and peace, who stretched out her hands, to take her in her arms. She was touched by the two outstretched hands, rays of silver light, in her eyes, and on to her heart. No more sounds could be heard in the darkness, except for the intake of her breath. The breath grew intense and then a prolonged sigh, and two indistinct sounds – “Ma! Ma!” And then it was still and silent.

The old woman had, by now, dragged herself to the place where Rebati had been sleeping, but she could not find her there. Nor did she find her anywhere else — inside the rooms, in the courtyard, outside the house and not even in the shed used for husking rice. She thought that Rebati was cured of the fever by now, and must be loitering about in the backyard. And she screamed again those same words — “You Rebati, you Rebi, you rotten miserable wretch!” She scoured the backyard, and then raised herself onto the verandah which was higher than ground level by about three feet and was only about one and a half foot deep. There she found her, and said, “Well, you were sitting here all the time!” But she was shocked when she touched her. She touched her all over, from top to toe, and made a terrible sound with a hand at her nose. And then there was the sound of a mighty crash, of something falling off the verandah, to the ground below.

No one who belonged to the household of Shyambandhu was seen again by anyone in the world. But in the deepening night of that day those last words had been heard by neighbours — “You Rebati, you Rebi, you rotten miserable wretch!”


தொகுக்கப்பட்ட பக்கம்: இந்தியப் புனைவுகள்

நான் பார்த்த முதல் நாடகம்: காஷிராம் கொத்வால்

22-23 வயதுக்கு முன் எனக்கு நாடகம் என்றால் என்ன என்று சரியான புரிதல் இருந்ததில்லை. என் சிறு வயதில் பார்த்த மகா போர் தெருக்கூத்துக்களோ, கிரேசி மோகன், எஸ்.வி. சேகரின் ஜோக் தோரணங்களோ எனக்கு நாடக வடிவத்தை புரியவைக்கவில்லை. பெர்னார்ட் ஷா, இப்சன், ஆர்தர் மில்லர், டென்னசி வில்லியம்ஸ், பெர்டோல்ட் ப்ரெக்ட் போன்றவர்களின் எழுத்து பிடித்திருந்தது. ஆனால் நாடகத்தின் வடிவம் பிடிபடவில்லை. வடிவம் பிடிபடவில்லை என்று புரிந்து கொள்ளும் அறிவு கூட அப்போது இல்லை.

அப்போதுதான் காஷிராம் கொத்வால் நாடகத்தைப் பார்த்தேன். நாடகம் என்றால் என்ன அரை மணி நேரம் நாடகம் பார்த்தவுடன் சடாரென்று புரிந்துவிட்டது. ஷா, இப்சன், மில்லர், டென்னசி வில்லியம்ஸ் – குறிப்பாக ப்ரெக்டை – வேறு லெவலில் புரிந்து கொள்ள முடிந்தது. கிரேக்க நாடகங்களின் கோரசைக் காணும்போதெல்லாம் ஏண்டா உயிரை வாங்குகிறீர்கள் என்று அலுப்பு முதல் பத்து நிமிஷத்திலேயே மறைந்து கோரஸின் பங்களிப்பு என்ன என்று புரிந்தது. நாடகத்தின் லாஜிஸ்டிக் குறைகளை – பெரிய பெரிய செட் போட முடியாது, வெளிப்புறப் படப்பிடிப்பு கிடையாது இத்யாதி – எத்தனை அழகான கலையாக மாற்ற முடியும், எத்தனை சுலபமாக அதைக் கடக்க முடியும் என்று புரிந்தது. பாட்டையும், நடனத்தையும் எவ்வளவு சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என்று தெரிந்தது. நாடகம் எத்தனை அற்புதமான மீடியம் என்று முதன்முதலாகப் புரிந்தது.

சிறந்த நாடகம் என்பதைப் பார்க்கத்தான் வேண்டும். ஷேக்ஸ்பியராகவே இருந்தாலும் சரி, நல்ல நடிகர்கள் கொண்ட ஒரு நாடகத்தைப் பார்க்கும் அனுபவமே தனி. எத்தனை சிறப்பான எழுத்தாக இருந்தாலும் சரி, நாடகமாகப் பார்ப்பது அதை இன்னும் உயர்த்தக் கூடியது. (மோசமான நடிப்பு கொடுமைப்படுத்திவிடும் என்பதும் உண்மைதான்.) பல முறை சுமாரான எழுத்தைக் கூட நாடகமாகப் பார்ப்பது இன்னும் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது.

சமீபத்தில் காஷிராம் கொத்வால் நாடகத்தை மீண்டும் படித்தேன். விஜய் டெண்டுல்கர் அருமையாக எழுதி இருக்கிறார்தான். ஆனால் நாடகம் எழுத்தை விட மிகச் சிறப்பானது. யூட்யூபில் கிடைக்கிறது. கட்டாயம் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

கதையை வெகு சுருக்கமாக எழுதிவிடலாம். 18-ஆம் நூற்றாண்டின் புனே. ராஜா, பேஷ்வா எல்லாரும் இருந்தாலும் அதிகாரம் செலுத்துவது மந்திரி நானா ஃபட்னவிஸ்தான். பிராமணர்களின் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது. பிராமணர்கள் தாசிகளின் பின்னால் அலைகிறார்கள், இரவில் வீடு தங்குவதில்லை. நானாவும் பெண் பித்தர். கன்னோசி பிராமணன் – வெளியூர்க்காரன் – அநியாயமாக திருட்டுப் பட்டம் கட்டப்பட்டு அவமானப்படுத்தப்படுகிறான். புனே மக்களைப் பழி வாங்குகிறேன் என்று சபதம் எடுத்து தன் மகளையே நானாவுக்குக் கூட்டிக் கொடுக்கிறான். அதற்குப் பரிசாக புனேவின் காவல்துறை அதிகாரி பதவி – கொத்வால் பதவி – கிடைக்கிறது. அடக்குமுறை ராஜ்யம் செய்கிறான். அவன் மகள் இறந்து போகிறாள். அது காஷிராமின் கொடுமைகளை இன்னும் அதிகரிக்கிறது. காஷிராமின் கோபத்தைக் கண்டு அஞ்சும் நானா அவன் என்ன செய்தாலும் கண்டுகொள்வதில்லை. மாங்காய் திருடிய குற்றத்துக்காக சின்ன சிறை அறையில் பலரையும் திணிக்க, 22 பேர் இறந்து போகிறார்கள். புனே நகரம் கொதித்து எழுகிறது. நானா தனக்கு காஷிராமால் இனி மேல் பெரிய பயன் இல்லை என்பதால் படு கூலாக காஷிராமை கொல்ல உத்தரவு தருகிறார்.

சிறப்பான எழுத்து. அன்றைய புனே நகரத்தை சில கோடுகளை வரைந்தே வெளிப்படுத்திவிடுகிறார். குறிப்பாக அன்றைய பிராமணர்களின் அதிகார நிலை, decadence (சரியான தமிழ் வார்த்தை என்ன?) பிரமாதமாக காட்டப்படுகிறது. எனக்கு மிகவும் பிடித்த காட்சி – பிராமண ஆண்கள் தாசிகளின் நடனத்தைப் பார்த்துவிட்டு, அவர்களோடு சுகித்துவிட்டு வீடு திரும்புகிறார்கள். பிராமண மனைவிகளோடு தொடர்பு கொண்டுள்ள மராட்டிய சர்தார்கள் அவர்கள் வீட்டிலிருந்து திரும்புகிறார்கள். இரண்டு குழுவும் ஒருவரை ஒருவர் பார்த்து ஹோஹோ என்று நகைத்துக் கொள்கிறார்கள். மிக அருமையான காட்சி!

நாடகமாகப் பார்ப்பதில் என்ன லாபம்? முதலாவதாக காட்சி அமைப்புகள். கோரஸ் – பத்து பனிரண்டு நடிகர்கள் – அவ்வப்போது தன்னை வீடாக, கதவாக, கோவிலாக எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்கிறது. மிக அழகான, கலை அம்சம் நிறைந்த காட்சி அமைப்பு. இரண்டாவதாக, பாட்டும் நடனமும் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதம். மராத்திய மண்ணின் லாவணிகளும் அபங்கங்களும் நாடகத்தில் அருமையாக பின்னிப் பிணைந்திருக்கின்றன. மூன்றாவதாக நாட்டார் கூறுகள். மஹாராஷ்டிராவின் தமாஷா வடிவத்தை செவ்வியல்படுத்தியது போல இருக்கிறது. லாவணி என்றால் என்ன, தமாஷா என்றால் என்ன என்று தெரியாவிட்டால் கூட ரசிக்க முடியும். நான்காவதாக, நல்ல நடிகர்கள் பிய்த்து உதறக் கூடிய பாத்திரங்கள். மோகன் அகாஷேவைப் பற்றி மராத்திய நாடக உலகுக்கு வெளியே தெரியவில்லை, ஆனால் அவர் இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர். ஓம் பூரியை காஷிராமாகப் பார்த்த நினைவிருக்கிறது, ஆனால் திரைப்படத்தில் பார்த்ததை நாடகத்தோடு குழப்பிக் கொள்கிறேனோ என்று சந்தேகம்.

நானா ஃபட்னவிஸ் உண்மை மனிதர். மூன்றாம் பானிபட் போருக்குப் பின் அவர்தான் மராத்திய அரசை நடத்தி இருக்கிறார். நவீன சாணக்கியர் என்றே கருதப்படுகிறார். அவர் பெண்பித்தர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். காஷிராம் கொத்வாலும் உண்மை மனிதர். கிட்டத்தட்ட 15 வருஷம் கொத்வாலாக இருந்திருக்கிறார். புனே மீது அடக்குமுறை ராஜ்ஜியம் நடத்தினாராம். மொரோபா கனோபா 1863-இல் எழுதிய ஒரு கதையை அடிப்படையாக வைத்து விஜய் டெண்டுல்கர் இந்த நாடகத்தை எழுதி இருக்கிறார்.

நாடகம் வந்த காலத்தில் பிராமணர்களை இழிவுபடுத்துகிறது என்றும், நானாவை இழிவுபடுத்துகிறது என்றும் சிவசேனா போராட்டங்களை நடத்தி இருக்கிறது.

விஜய் டெண்டுல்கர் இந்தியாவின் தலைசிறந்த நாடக ஆசிரியர்களில் ஒருவர். அவர் எழுதிய “ஷாந்ததா! கோர்ட் சாலு ஆஹே!” நாடகத்தையும் பரிந்துரைக்கிறேன். பாதல் சர்க்காரையும் இவரையும்தான் நான் முதல் இடத்தில் வைக்கிறேன். கிரீஷ் கார்னாட், மோகன் ராகேஷ் போன்றவர்களுக்கு அடுத்த இடம்.

நல்ல நாடகங்களைப் பார்க்கும் அதிருஷ்டம் எனக்கு அபூர்வமாகத்தான் கிடைக்கிறது. அதனால்தானோ என்னவோ காஷிராம் கொத்வால் இன்னும் என் மனதில் ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறது. அதுவும் மோகன் அகாஷே போன்ற சிறந்த நடிகர்கள் நடித்துப் பார்த்தது பெரிய அதிருஷ்டம். ஓம் பூரி நாயகனாக நடித்து திரைப்படமாகவும் வந்திருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாடகங்கள்

கணேஷ்-வசந்த்: ஒருத்தி நினைக்கையிலே

கேள்விப்பட்டே இராத கதை. இத்தனைக்கும் சுஜாதா அவரது புகழின் உச்சத்தில் இருந்தபோது – 1981-இல் – தொடர்கதையாக வந்திருக்கிறது. ஆனால் குமுதம்-விகடன்-கல்கியில் வரவில்லை. ராணியில் வந்திருக்கிறது! சுஜாதா ராணி பத்திரிகையைக் கூட விடவில்லை. யாராவது கதை வந்தபோதோ இல்லை பிறகோ படித்திருக்கிறீர்களா?

நான் படித்தது பத்திரிகையில் இருந்து கிழித்து பைண்ட் செய்யப்பட்ட தொடர்கதை. கதை போர். சுஜாதாவின் டச் எதுவுமே இல்லை. பத்திரிகையில் அங்கங்கே வந்திருந்த துணுக்குகள்தான் – வெற்றி சித்திர நடிகை பற்றிய கிசுகிசு மாதிரி பல – கதையை விட சுவாரசியமாக இருந்தன.

கிராமத்து பெண்ணும் அவள் அண்ணனும் சென்னைக்கு வரும்போது பெண்ணை கடத்திப்போய் பம்பாய் விபச்சார விடுதியில் வில்லன்கள் விற்றுவிடுகிறார்கள். (ஆஹா என்ன ஒரு எதுகை மொகனை!). அண்ணன்காரன் தேடப்படும் ஒரு குற்றவாளியின் ஜாடையில் இருப்பதால் அவனை கைது செய்கிறார்கள். வசந்த் எம்ஜிஆர் பட ஸ்டைலில் பம்பாய் போய் பெண்ணைக் காப்பாற்றுகிறார். கணேஷோ ஒரு படி மேலே போய் அதே எம்ஜிஆர் படத்தில் தேங்காய் சீனிவாசன் காரக்டர் மாதிரி அண்ணனை காப்பாற்றுகிறார்.

சுஜாதா ஒரு முறை என் லாண்டிரிக் கணக்கைக் கூட தமிழ் பத்திரிகைகள் பிரசுரிக்கத் தயாராக இருக்கின்றன என்று சொல்லி இருந்தார். (அடுத்த ஓரிரு வாரத்தில் சாவி அவரது லாண்டிரிக் கணக்கை உண்மையிலேயே பிரசுரித்தார்.) ராணி பத்திரிகை ஆசிரியர் சுஜாதா என்ற பேர் இருந்தால் போதும் என்று நினைத்திருக்க வேண்டும். குமுதம் எஸ்.ஏ.பி. மாதிரி, விகடன் பாலசுப்ரமணியன் மாதிரி தரக் கட்டுப்பாடு எதுவும் இல்லை, ஆசிரியர் ஏதாவது சொல்லிவிடப் போகிறார் என்று சுஜாதாவுக்கு எந்த பயமும் இல்லை என்று நினைக்கிறேன். அந்தக் காலத்தில் சுஜாதா உண்மையிலேயே ஒரு phenomenon-தான்.

இதெல்லாம் கணேஷ்-வசந்த் கதைகளின் தீவிர ரசிகர்களுக்கு மட்டும்தான். கணேஷ்-வசந்த் இல்லாவிட்டால் நானும் இதைப் பற்றி எல்லாம் எழுதி இருக்கமாட்டேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கணேஷ்-வசந்த் பக்கம்