என் சிறு வயதில் இந்த வசனம் மிகவும் பிரபலம். திரைப்படங்களில், நாடகங்களில் கேட்கும் வசனம். முக்கியமாக தெருக்கூத்துகளில் ராஜா அறிமுகம் ஆகும் காட்சியில் மந்திரியைப் பார்த்து “மந்திரி, மாதம் மும்மாரி மழை பொழிகிறதா” என்று கேட்டே தீருவார். ஆண்டாள் திருப்பாவையில் கூட தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து என்று வருகிறது.
அது என்ன மாதம் மும்மாரி மழை? சமீபத்தில் தூக்குத்தூக்கி நாடகத்தின் வரி வடிவத்தைப் படிக்கும்போதுதான் தெரிந்து கொண்டேன்.
வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை
நீதி மன்னர் நெறியினுக்கோர் மழை
மாதர் கற்புடை மங்கையர்க்கோர் மழை
மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே
எல்லாவற்றுக்கும் ஏதாவது விளக்கம் இருக்கிறது, நமக்குத்தான் தெரிவதில்லை. விளக்கம் காலாவதி ஆன ஒன்றா இல்லையா என்ற வாதத்தின் பக்கம் நான் போகப் போவதில்லை. 🙂
தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்