கல்கி: சிவகாமியின் சபதம்

சிவகாமியின் சபதம் தமிழ் கூறும் நல்லுலகுக்கு நன்றாகத் தெரிந்த நாவல். கல்கி மறைந்த பிறகும் கல்கியின் பழைய தொடர்கதைகளில் ஏதோ ஒன்று – பார்த்திபன் கனவு, சி. சபதம், பொன்னியின் செல்வன், அலை ஓசை – கல்கி பத்திரிகையில் மாற்றி மாற்றி வந்து கொண்டே இருக்கும். நான்கும் மீண்டும் மீண்டும் விரும்பிப் படிக்கப்பட்டன, கல்கி பத்திரிகை விற்றது. அந்த அளவுக்கு பிரபலமான நாவல்.

கதையின் பலம் பாத்திரங்கள் – குறிப்பாக நாகநந்தி. நாகநந்தி கற்பனைப் பாத்திரம். புலிகேசியின் இரட்டை சகோதரர். அதே உருவம். புத்த பிக்ஷுவாக சாளுக்கிய அரசுக்கு ஒற்று வேலை பார்ப்பவர். நாகநந்தியின் பாத்திரம்தான் கதையை ஒருங்கிணைக்கிறது, கதையின் சுவாரசியம் குறையாமல் பார்த்துக் கொள்கிறது. இரண்டாவதாக மகேந்திரவர்மர். புலிகேசியின் படையெடுப்பை தடுக்க மகேந்திரவர்மர் செய்யும் தந்திரங்கள் சுவாரசியமானவை. சிவகாமி, நரசிம்மவர்மர், நரசிம்மவர்மரின் படைத்தளபதியாக பரிணமிக்கும் பரஞ்சோதி, சிவகாமியின் அப்பா ஆயனச் சிற்பி எல்லாருமே பலமான பாத்திரங்கள்.

இரண்டாவது பலம் கதைப்பின்னல். அதிசயத் தற்செயல் நிகழ்ச்சிகள் குறைவு. ஒரு சம்பத்திலிருந்து இன்னொரு சம்பவத்துக்கு சரளமாகச் செல்லும் கதை. என் கண்ணில் வெகு சில தமிழ் சரித்திர நாவல்களே இப்படி கட்டுக்கோப்புடன் எழுதப்பட்டிருக்கின்றன.

பலவீனம்? இது பொழுதுபோக்கு நாவல்தான், வணிக நாவல்தான், இலக்கியம் அல்ல. கல்கியே அப்படித்தான் எழுத விரும்பி இருப்பார். பெரிய மானுட தரிசனங்களை எதிர்பார்க்க முடியாது. நல்ல அரண்மனைச் சதி நாவல், அவ்வளவுதான். பாத்திரங்கள் – நாகநந்தி உட்பட – caricatures மட்டுமே. வாசகர்கள் விரும்பிப் படிக்க வேண்டும், அடுத்த அத்தியாயம் எப்போது வரும் என்று வாசகர்கள் காத்திருந்து படிக்க வேண்டும் என்று எண்ணியே கல்கி இதை எழுதி இருப்பார். கட்டுக்கோப்பான கதை, முடிச்சு, சாகசம், ஒரு “பயங்கர” வில்லன், மாமல்லபுரம் பற்றிய பெருமிதம், ஆகியவையே இவற்றின் பலம். 10-11 வயதில் படித்தால் மனதில் நீங்காத இடம் பெறும்.

சி. சபதத்தை விரும்பிப் படித்த தலைமுறைக்கு வயதாகிவிட்டதால் கதை சுருக்கமாக: சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி பல்லவ அரசர் மகேந்திரவர்மர் மீது படையெடுத்து வந்ததும், ஆரம்பத்தில் வெற்றி பெற்றதும் மகேந்திரவர்மர் புலிகேசியை வென்று தன் ராஜ்யத்துக்கு திரும்பச் செய்ததும், பின்னாளில் மகேந்திரவர்மரின் மகனான நரசிம்மவர்மர் புலிகேசி மீது படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றி சாளுக்கியத் தலைநகரான வாதாபியை அழித்ததும் வரலாறு. இந்தப் பின்புலத்தில் இளைஞரான நரசிம்மவர்மர் – நடனப் பெண் சிவகாமி காதல், புலிகேசி திரும்பிச் செல்லும்போது சிவகாமியைக் கடத்திச் செல்லுதல், சிவகாமி வாதாபி அழிக்கப்பட்டாலொழிய காஞ்சி திரும்பமாட்டேன் என்று சபதம் செய்தல், காதல் முறிவு, நாகநந்திக்கு சிவகாமி மீது ஏற்படும் காதல் – obsession, சபதப்படி வாதாபி அழிக்கப்படல் என்று கதை.

கல்கி போட்ட கோட்டில்தான் ஓரிரண்டு தலைமுறைக்கு தமிழ் சரித்திர நாவல்கள் எழுதப்பட்டன – அரண்மனைச் சதிகள். அது அவரது தவறு இல்லைதான். ஆனால் அப்படி சரித்திர நாவல்கள் வெறும் அரண்மனைச் சதி நாவல்களாக குறுகிவிட்டது பா. கனவு, சி. சபதம், பொ. செல்வன் நாவல்களின் துரதிருஷ்டமான விளைவு என்று கருதுகிறேன்.

ஜெயமோகன் இந்த நாவலை சிறந்த சரித்திர பொழுதுபோக்கு நாவல்கள் பட்டியலில் சேர்க்கிறார். எஸ்ரா பட்டியலில் இந்த நாவல் இடம் பெறவில்லை.

ஆயிரம் நொட்டை சொன்னால் என்ன, படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கல்கி பக்கம்

2 thoughts on “கல்கி: சிவகாமியின் சபதம்

  1. பொன்னியின் செல்வன் பாரதச்சாயல் இது ராமயணச்சாயல். நீங்கள் கூறுவது போல கல்கியின் பலமே அந்த பாத்திரங்கள்தான். அதைவைத்து உருவாக்கும் சம்பவங்களும், உரையாடல்கள், மெலிதான நகைச்சுவை தடங்கல் இல்லாமல் படிக்க வைத்துவிடும். சரித்திர உண்மைகளையும் நாவலுக்கு ஏற்றவாறு பயன்படுத்தி கொண்டுள்ளார். எங்கோ இருக்கும் மண்டபப்பட்டு சிற்பங்களை மாமல்லபுர சிற்பிகளுடன் தொடர்பு படுத்தும் உத்தி, மாமல்லபுர சிற்பங்களுக்கு ஒரு கதை. முதல் முறை மாமல்லபுரம் சென்ற போது கல்கியின் நினைவுதான் வந்தது, காவிரியை காணும் போது எல்லாம் பொன்னியின் செல்வன் நினைவு வரும். பொன்னியின் செல்வன் மாதிரி அடிக்கடி படிக்க கூடிய நாவல் இல்லை இது என்றாலும், இரண்டு மூன்று வருடங்கள் விட்டு படித்தாலும் திரும்ப படிக்க முடிகின்றது. நான் காசு கொடுத்து வாங்கிய முதல் நாவல் என்ற பெருமையும் இதற்கு உண்டு.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.